Tuesday, 16 June 2015

சர்க்கரை நோய் -பாகம் 2

சர்க்கரை நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளுவதற்கும் மற்ற‌வர்களைப்போல மகிழ்வாக வாழ்வதற்கும் முக்கியமான மூன்று விஷயங்களை பின்பற்றுதல் அவசியம்.

அவை

சரியான உணவு, உடற்பயிற்சி, தகுந்த மருந்துகளும் மருத்துவமும்.

சரியான உணவு:

பெரும்பாலும் இது நடுத்தர வயதில் தாம் மக்களைத்தாக்குகிறது. அதுவரை நாம் சாப்பிடாத உணவு வகைகளா? ருசிக்காத பலகாரங்களா? ரசிக்காத இனிப்பு வகைகளா? இப்படியெல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொண்டாலும் எல்லாவற்றையும் ஏறக்கட்டுவது என்பது சுலபமான விஷயமில்லை! நாக்கும் மனசும் போராட்டம் நடத்தும். அந்தப்போராட்டத்திலிருந்து மீண்டு வர மிகுந்த சுயக்கட்டுப்பாடும் மன உறுதியும் தேவை.

நீரழிவு நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்று சொல்லப்படுவதை சரியாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். அடிப்படையை புரிந்து கொண்டால் உங்கள் உணவு வகைகளை நீங்களே அமைத்துக் கொள்ளலாம்.

நீரழிவு நோயாளிகள் உண்ணும் உணவு மெதுவாக சர்க்கரையை சேமிக்கக் கூடிய  தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். விரைவாகச் சர்க்கரையை சேமிக்கும் உணவு, இரத்ததின் சர்க்கரையின் அளவை விரைவாக ஏற்றிவிடும். ஆகவே நார்ப்பொருட்கள் அடங்கிய உணவு ஏற்றதாகும்.

கேழ்வரகில் நார்ப்பொருள்(தவிடு) கலந்திருப்பதால் மெல்லச் சீரணம் ஆகும். எனவே அதைச் சேர்த்துக் கோள்ளலாம். அரிசி, கோதுமை இவற்றில் சம அளவே (70%) மாவுப் பொருள் இருக்கிறது.
மேலும் எந்த வகை உணவு உண்கிறோம் என்பதும் எவ்வளவு உண்கிறோம் என்பதும் தான் இதில் முக்கியம். பொதுவாக கிழங்கு வகைகளைத்தவிர்ப்பது அவசியம் என்று அன்று சொல்லப்பட்டது. இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. 20 வருடங்களுக்கு முன்னரே ஒரு சினேகிதி சொன்னார், அவரின் கணவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் மருத்துவர் உருளைக்கிழங்கையெல்லாம் இனி உண்ணுதல் கூடாது என்று அறிவிக்க, உணவில் உருளைக்கிழங்கை தினமும் சாப்பிட்டு பழக்கமான அவர் அழுது விட்டாராம். உடனேயே மருத்துவர் ' தினமும் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 2 மேசைக்கரண்டி சாப்பிடலாம்' என்று அனுமதித்ததால் அவரும் தினமும் அப்படியே சாப்பிட்டு வருகிறாராம். சர்க்கரை அளவு ஏறவில்லை என்று என் சினேகிதி சொன்னார். முன்பு தவிர்க்கப்பட்ட காரட்டும் இன்று மருத்துவர்களால் பரிந்துரை செய்யப் படுகிறது.நமக்குப்பிடித்த உணவைக்கூட இப்படி அளவோடு சாப்பிட நம்மால் முடியும். ஆனால் ஒன்று, இதில் சர்க்கரை கலந்த உணவுகளோ, இனிப்பு வகைகளோ சேர்க்கப்படவில்லை.

ஒரு நாள் உணவை ஐந்து பாகங்களாகப் பிரித்துண்பது நல்லது. இதனால் குளுக்கோஸ் அளவு உடனே கூடிவிடாமலும் அளவுக்குக் கீழே குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாம்.

கண்ட கண்ட எண்ணெயில் பொரித்த பண்டங்களை கடைகளில் வாங்கி சாப்பிடுவதைத் தவிருங்கள்.
வயிற்றுப்பாதிப்பு இருப்பவர்கள் காலை காப்பிக்கு பதிலாக கஞ்சி குடிக்கலாம். கஞ்சியில் மாவுச் சத்து அதிகமிருக்கக்கூடாது. மிகச் சிறிய அளவில் சிகப்பு அரிசியும் பெரிய அளவுகளில் புரதப்பொருள்களும் கலந்து மாவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

விபரம் தெரியாத சமயத்தில் காதியில் கிடைக்கும் கம்பு கஞ்சி பவுடர் வாங்கி வந்து கஞ்சி தயாரித்து குடித்தேன். சர்க்கரை ஏறியிருந்தது சில மாதங்களுக்குப்பிறகு தான் தெரிந்தது. பின் விபரம் தெரிந்த சினேகிதி ஒருவரிடம் செய்யும் முறை அறிந்து கஞ்சிப்பொடி தயாரித்து அதையே காலை வேலைகளில் காப்பிக்கு பதிலாக குடிக்கிறேன். சர்க்கரை ஏறுவதில்லை என்பதுடன் வயிறு பாதிப்புகள் இல்லாது இருக்கின்றது. திரவ உணவு உடனேயே ஜீரணம் ஆகி உடலில் சர்க்கரை ஏறும் என்பதால் இந்தக் கஞ்சியையே சற்று கெட்டியாக கூழை விட கெட்டியாக காய்ச்சி சிறிது மோரும் சிட்டிகை உப்பும் கலந்து சாப்பிடலாம்.

நிச்சயமாக தவிர்க்க வேண்டியவை:

உப்பு உணவில் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்கவும். அதனால் ஊறுகாய், வற்றல் வகைகள் கடையில் வாங்கி உபயோகிப்பதைத் தவிருங்கள். இனிப்புகள், இனிப்பு சார்ந்த பொருள்கள், வெல்ல்ம், சர்க்கரை, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், தேங்காய்ச் சட்னி, ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்றவை, கோக்கோ கோலா, பெப்ஸி போன்ற பானங்கள், டின், புட்டிகளில் விற்கும் பழச்சாறு, அதிக இனிப்புள்ள பழங்கள் முதலியவை.

நம் உடலின் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருந்தால் பழங்கள் ஒன்றிரண்டு துண்டுகள் மட்டும் உண்ணலாம். மிருக புரதங்களைக்காட்டிலும் காய்கறிகளிலுள்ள புரதம் நன்மை பயக்கும் என்பது தற்கால கன்டு பிடிப்பு.

நாம் உணவைத்தேர்ந்தெடுக்கும்போது அதன் கலோரி அளவு, நார்ச்சத்து இவற்றை கவனித்து நமக்கு நாமே ஒரு அட்டவணை போட்டுக்கொண்டால் நிச்சயம் சுவையான உணவுகளை உண்ண நம்மால் முடியும். தினமும் ஒரு வேளையாவது அரிசி உணவைக் குறைத்து வந்தாலே சர்க்கரையின் அளவு குறையும்.

இதன்படி ஒரு மாதிரி உணவுப்பட்டியல் தயார் செய்யலாம்.

காலை 6.30 மணி:

ஒரு கப் காப்பி அல்லது டீ சர்க்கரை சேர்க்காமல். இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் அநேகர் சாப்பிடுவது மெட்ஃபோர்மின் என்ற சக்தியை அடக்கிய மாத்திரைகள் தான். இதில் பல வகை மெட்ஃபோர்மின்கள் வயிற்றுப்பிரச்சினைகள் சிறிதளவாவது கொடுத்துக்கொண்டிருக்கும் என்பது உண்மை. சில வகை மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு காப்பி ஒத்துக்கொள்ளாது. அவர்கள் ஆடை நீக்கப்பட்ட கெட்டி மோர் ஒரு தம்ளர் குடிக்கலாம். அல்லது நான் ஏற்க்னவே குறிப்பிட்ட கூழ் அரை கப் சாப்பிடலாம். உங்களுக்கு சர்க்கரை அதிகமாக ஏறும் தன்மை இல்லையென்றால் அல்லது காலை உணவு சாப்பிடும் நேரம் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது என்றால் ஒரு கப் கூழ் கூட சாப்பிடலாம். டீ சாப்பிடுவது நல்லதில்லை உடலுக்கு என்று என் சித்த மருத்துவர் கூறியிருக்கிறார். உங்களுக்கு நல்லதொரு குடும்ப மருத்துவர் இருந்தால் அவரிடம் பேசி உங்கள் உணவு பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள்.

காலை 8 -9 மணி:

காலை உணவாக இட்லி அல்லது தோசை அல்லது பொங்கல், உப்புமா என்று சாப்பிடலாம். பொதுவாய் இட்லி நான்கு சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். அது பஞ்சு போல் இருக்கும் சின்ன சின்ன இட்லிகளுக்குப் பொருந்தும். சிறிது கடினமான, பெரிதான இட்லி என்றால் 3 இட்லிகளே போதும். ஹோட்டல் இட்லி என்றால் நிச்சயம் இரண்டு இட்லிகள் போதுமானது. இந்த அளவிற்கு மேல் சாப்பிட்டால் சர்க்கரை அதிகம் ஏறும். அவற்றிற்கு பக்க உணவைப்பொருத்தும் சர்க்கரை ஏறுவதும் இறங்குவதும் நடக்கிறது. தேங்காய் சட்னிக்கு சர்க்கரை ஏறும். அளவோடு சாப்பிட வேண்டும். சாம்பாரும் அப்படித்தான். வெள்ளமாக ஊற்றி சாப்பிடக்கூடாது. தக்காளி சட்னி, காய்கறி சட்னி சரியானது. அதேபோல தோசை என்றால் இரண்டே அதிகம். என் சித்த மருத்துவர் தோசையைத் தவிருங்கள் என்று தான் கூறுகிறார். ' தோசைக்கல்லைப் பழுக்க காய வைத்தாலொழிய தோசை சுட முடியாது. அப்படியென்றால் என்ன அர்த்தம். மாவை எண்ணெயில் பொரிப்பதற்கு சமம். சீக்கிரம் அதனால் ஜீரணமாகாது. அதனால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை ரொம்ப நேரத்திற்கு அதிகமாகவே இருக்கும் ' என்கிறார். அதற்கு பதிலாக கேழ்வரகு அல்லது கோதுமை தோசை பிரச்சினைகளைக் குறைக்கும் என்றும் சொன்னார். இப்போதெல்லாம் சிறு தானியக்குறிப்புகள் சோள இட்லி, திணை உப்புமா, கோதுமை இட்லி போன்ற விஷயங்களெல்லாம் வந்து விட்டன. அவை இன்னும் அதிகமான நார்ச்சத்து கொண்டிருப்பதால் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

காலை 11 மணி:

2 மேரி பிஸ்கட், தக்காளி அல்லது எலுமிச்சை ஜூஸ் அல்லது மோர் குடிக்கலாம்.

மதியம் 12- 1 மணி

மதியம் சாப்பாட்டிலும் அரிசி சாதம் ஒரு கப் எடுத்தால் காய்கறிகள் இரண்டு மடங்கு சாப்பிடுவது வயிற்றை நிரப்பும்.
சாதத்திற்கு பதில் கோதுமை சதம் அல்லது கைக்குத்தல் அரிசி சாதம் அல்லது சிகப்பரிசி சாதம் மிகவும் நல்லது. சப்பாத்தி என்றால் மெதுவான சிறிய சப்பாத்திக்கள் மூன்று வரை சாப்பிடலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எண்ணெயில் வறுத்த அசைவ உணவுகளைத் தவிர்த்து வேக வைத்த அசைவ உணவுகளை உண்பது நல்லது.

மாலை ஐந்து மணி:

காப்பி அல்லது டீயுடன் மேரி பிஸ்கட் அல்லது வேக வைத்த சுண்டல் அல்லது அவித்த கடலை ஒரு  கைப்பிடி சாப்பிடலாம்.

இரவு 8 மணி:

எளிதில் ஜீரணமாகும் இட்லி அல்லது இடியாப்பம் சாப்பிடுவது நல்லது. ஜீரணம் எளிதிலாகாத சப்பாத்தியைத் தவிர்ப்பது நல்லது. இதயப் படபடப்பு இருப்பவர்களுக்கு பரோட்டா, சப்பாத்தி சாப்பிடுவது எளிதில் ஜீரணமாகாது சில சமயங்களில் படபடப்பு அதிகமாகும்.

முக்கியமான விஷயம், இனிப்பை அறவே தவிர்க்க வேண்டும். சில சமயம் விருந்தினர் வீட்டுக்குச் செல்லும்போதோ அல்ல‌து திருமணம் போன்ற விசேடங்களின் போதோ இனிப்புகளைத்தவிர்ப்பது தயக்கமாக இருக்கும். அல்லது உங்கள் விருந்தினர் தப்பாக நினைத்துக்கொள்ள்க்கூடாது என்ற எண்ணமாக இருக்கும் அந்த தயக்கத்தை அறவே விட்டொழியுங்கள். உங்களை இனிப்பு எடுத்துக்கொள்ளச் சொல்லும் விருந்தினரிடம் கண்டிப்புடன் மறுத்து விடுங்கள். என் இதய மருத்துவர் கூட ஒரு முறை சொன்னார், 'இத்தனை கண்டிப்பு தேவையில்லை. அவ்வப்போது ஒரு ஜாங்கிரி, ஒரு மாம்பழம் என்று சாப்பிடலாம், தவறில்லை' என்று! அப்படி எப்போதாவது இனிப்பை சாப்பிட ஆரம்பித்தால் நம் சபலமும் நாக்கும் நம்மை சுலபமாக பள்ளத்தில் தள்ளி விடுகிறது. அவ்வப்போது உடம்பு வலி, கால் வலி, வயிற்றுப்பிரச்சனைகள் என்று சிறு சிறு தொந்தரவுகளும் கூடவே நம்மை பின் தொடரும். இனிப்பை அறவே தவிர்த்தால் இந்த சிறு சிறு பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை விட்டு விலகுவதை நீங்கள் உணர முடியும். சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்கனவே கோளாறான கணையம் இன்னும் பாதிப்பை அடையும். பீடா செல்கள் அதிகம் அழற்சி அடையும்.
காப்பி, டீ இவற்றில் செயற்கை இனிப்பூட்டியைச் சேர்ப்பது பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அதனால் உங்கள் ம்ருத்துவரிடம் கேட்டுக்கொண்டு அதை உபயோகிப்பது நல்லது.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சிகள் எல்லோராலும் செய்ய இயலாது. அதனால் தினமும் ஓரளவு வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுவது நல்லது. சில வகை யோகா பயிற்சிகள் சர்க்கரை நோய்க்கும் இரத்த அழுத்தத்திற்கும் மிக அருமையாகக் கை கொடுக்கின்றன. தகுந்த ஆசிரியர் மூலம் இந்த யோகாசங்களிளை செய்யலாம். தனுராசனம் என்ற யோகாசனம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் குறைய மிக எளிமையான பயிற்சியை நான் ஏற்கனவே என் பதிவில் விவரித்துள்ளேன். அதன் இணைப்பை இத்துடன் கொடுத்திருக்கிறேன்.

http://muthusidharal.blogspot.ae/2012/08/blog-post_19.html

தொடரும்
 

34 comments:

  1. Any info on Healer Baskar techniques?


    https://www.youtube.com/watch?v=5eRlmSCvKJE

    ReplyDelete
  2. அனைவருக்கும் பயன்படும்
    அருமையான பதிவு
    அதீத அக்கறையுடன் விரிவானப் பதிவாகத்
    தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உபயோகமான பதிவு சகோதரி. நன்றி

    ReplyDelete
  4. உணவுப்பட்டியல் உட்பட அனைத்தும் பயனுள்ள தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  5. சர்க்கரை குறைப்பாடு உடையவர்களுக்கு பயன் தரும் குறிப்புக்கள் தந்தமைக்கு நன்றி !
    #சேமிக்கக் கூடிய தன்மை #இது செரிக்கக்கூடிய தன்மை என்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன் ,சரிதானே மேடம் ?

    ReplyDelete
  6. சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு நல்ல பயனுள்ள குறிப்பு அக்கா.

    எனது பதிவு கூழ் வத்தலை நேரம் கிடைக்கும் போது பார்வையிட வாருங்கள்.

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள செய்திகள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள். தங்களின் ஆலோசனைகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. மிக அருமை மனோ மேம். எனக்கு சர்க்கரை இல்லை. ஆனா காலையில் காஃபி குடிக்கும்போது ஒரு மாதிரி எதிர்க்கும். ஏனென்று தெரியவில்லை. ஒரு வேளை சர்க்கரை இருக்கோ என்னவோ டெஸ்ட் செய்யணும்

    ReplyDelete

  9. பயனுள்ள விடயங்களுக்கு நன்றி

    ReplyDelete
  10. சக்கரை நோய் பற்றிய மிகசிறந்த விழிப்புணர்வு ஆக்கம் பாராட்டுகள்

    ReplyDelete
  11. பயனுள்ள இடுகை...

    ReplyDelete
  12. அனைவருக்கும் பயனுள்ள பதிவாக, யோசித்து பல விவரங்களைத் திரட்டித் தந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  13. அவசியமான தகவலை அருமையாகத் தொகுத்து அளித்துள்ளீர்கள். அனைத்தும் பயனுள்ளவை. மிக்க நன்றி பதிவுக்கு வ்லதுக்கள் தொடர!

    ReplyDelete
  14. மிக அருமையான பகிர்வு மனோ அக்கா
    எப்படி இருக்கீங்க நல்ல இருக்கிறீர்களா?

    ReplyDelete
  15. மிக அருமையான விளக்கப்பகிர்வு.

    ReplyDelete
  16. மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  17. Blogger N said...
    //Any info on Healer Baskar techniques?//

    Thank you very much for the U Tube link. I have heard much about the healing treatment. In fact, one of my relative is practicing this. I have learned more about it through your link. Thanks again!

    ReplyDelete
  18. இனிய பாராட்டிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  19. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி கிரேஸ்!

    ReplyDelete
  20. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete

  21. Blogger Bagawanjee KA said...
    //சர்க்கரை குறைப்பாடு உடையவர்களுக்கு பயன் தரும் குறிப்புக்கள் தந்தமைக்கு நன்றி !
    #சேமிக்கக் கூடிய தன்மை #இது செரிக்கக்கூடிய தன்மை என்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன் ,சரிதானே மேடம் ?//

    '' சர்க்கரையை சேமிக்கக் கூடிய தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.'' என்று நான் எழுதியிருக வேண்டும். 'சர்க்கரையை' என்ற வார்த்தையை விட்டு விட்டேன். அதனால் தவறுதலாக புரிந்து கொள்ள‌ப்பட்டு விட்டது. இப்போது பிழையை சரி செய்து விட்டேன்.

    வருகைக்கும் கருத்துரைக்கும் என் பிழையை சுட்டிக்காண்பித்ததற்கும் இனிய நன்றி!


    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சாரதா!
    தஞ்சைக்குக் கிளம்பிக்கொண்டிருப்பதால் உங்கள் வலைத்தளம் உட்பட மற்ற‌ வலைத்தளங்களுக்கும் செல்ல முடியவில்லை. விரைவில் வருகிறேன்.


    ReplyDelete
  23. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தேனம்மை! காலையில் காப்பி குடிப்பது ஒத்துக்கொள்ள‌வில்லையெனில் அது காஸ் பிரச்சினையாகத்தான் அநேகமாக இருக்கும். சர்க்கரையாக இருக்காது என்று தான் தோன்றுகிறது.

    ReplyDelete
  24. பாராட்டுக்களுக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  25. பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி மாலதி!

    ReplyDelete
  26. கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  27. இனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்! நீங்கள் சொல்லியுள்ள‌து உண்மை தான்! இந்த பதிவிற்காக நான் நிறைய நேரத்தை செலவழித்திருக்கிறேன். காரணம் அனைவருக்கும் இந்தப் பதிவு பயனுள்ள‌தாக இருக்க வேண்டுமென்ற ஒரே நோக்கம் தான்!

    ReplyDelete
  28. பாராட்டிற்கு அன்பு நன்றி ஜனா!

    ReplyDelete
  29. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி இனியா!

    ReplyDelete
  30. வாருங்கள் ஜலீலா! நான் நலமே. நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? ரொம்ப‌ நாட்களுக்குப்பிறகு வந்த உங்கள் பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியைக்கொடுத்தது!



    ReplyDelete
  31. இனிய பாரட்டிற்கு அன்பு நன்றி தனிமரம்!

    ReplyDelete
  32. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  33. அருமையான பதிவு

    ReplyDelete
  34. நல்ல அருமையான பதிவு. அருமையான பதிவு. இங்கும் ஒரு தரமான பதிவு உள்ளது. சர்க்கரை வியாதியை ஓட ஓட விரட்டலாம் !

    ReplyDelete