Sunday, 22 March 2015

புதிய இல்லம்!!

கிட்டத்தட்ட 15 நாட்களாக இணையத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. கட்டப்பட்டிருந்த புதிய இல்லத்திற்கு குடி பெய‌ர்ந்து இணையத்தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இத்தனை நாட்கள் பிடித்தது. கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக்கட்டிப்பார் என்ற பழமொழியின் அர்த்தத்தை அனுபவப்பூர்வமாக இத்தனை நாட்கள் உணர்ந்தோம். அதற்குத்தனியே பதிவு போடுவதற்கு வேண்டிய அனுபவங்கள் ஏராளமாக இருக்கின்றன. இடையே ஏற்பட்ட தவிர்க்க முடியாத அயல்நாட்டு பயணங்கள், உற்ற உறவுகளின் மறைவுகள் புதிய இல்லத்திற்கு குடி பெயர்வதைத் தள்ளிப்போட்டபடியே இருந்தன. இடையிடையே அமீரகம் விரைவில் திரும்புமாறு பேரனின் அழைப்பு வேறு! புதிய இல்லத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் சரிப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன் நடந்த புதுமனை புகுவிழாவிற்கு பதிவுலகச் சகோதரர்கள் தமிழ் இளங்கோ, கரந்தை ஜெயக்குமார், அவரின் இல்லத்தரசி, சகோதரி கிருஷ்ணப்ரியா வருகையும் அன்பளிப்பும்  தந்து சிறப்பித்தார்கள். சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் சகோதரர் தமிழ் இளங்கோ மூலம் பரிசுப் பொருள் அனுப்பியிருந்தார்கள். புதிய இல்லத்தின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!



சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களுடன்!
சகோதரர் ஜெயக்குமாருடனும் அவர் தம் துணைவியாருடனும்!
மேல் கூரையில் சுதை அலங்காரம்!
என் சமையலறை என் ரசனையில்!
வரவேற்பறையின் ஒரு பகுதி!
முகப்பில் கதவின் மேல் மரவேலைப்பாடுகள்!
 
மயில் வடிவில் கதவின் கைப்பிடி!
 

48 comments:

  1. வாழ்த்துக்கள் அம்மா..இல்லம் மிக அழகாக இருக்கு..

    ReplyDelete
  2. வணக்கம்

    புதுமனை புகு விழா பற்றிய தகவலை அறிந்தோம் வீடு மிக அழகாக உள்ளது... வாழ்க வளமுடன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நல்வாழ்த்துக்கள் அன்பின் மனோ அக்கா.வீடு நல்ல வண்ண மயமாய் தஞ்சை மண்வாசனையுடன் அருமை. வேலைப்பாடுகளை ரசித்தேன்.அழகு.

    ReplyDelete
  4. ’மதுரம்’ இல்லத்தின் ஒட்டுமொத்த அமைப்பினைக்காண மதுரம் போன்றே இனிமையாக உள்ளது.

    ரசனையான கட்டடம் இன்று படத்தில் பார்க்கவே மிக அழகாக உள்ளது. நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  5. மேற்கூரை சுதை அலங்காரம் இல்லத்தைக் கோயில் போல மாற்றியுள்ளது ... பார்க்க மிகவும் கலை நுணுக்கத்துடன் வெகு அழகாக உள்ளது. ரசித்து மகிழ்ந்தேன்.


    >>>>>

    ReplyDelete
  6. தங்களின் தனி ரசனையில் சமையல் அறை, வரவேற்பறையின் ஒரு பகுதி, முகப்புக்கதவின் மேல் செய்துள்ள மரவேலைப்பாடுகள், மயில் வடிவத்தில் கதவின் கைப்பிடி என ஒவ்வொன்றும் அழகோ அழகு.

    பேரக்குழந்தை அதைவிட அழகு !

    பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. ஹைய்யோ!!!!!

    அருமையோ அருமை. எதைச் சொல்ல எதை விடன்னு இருக்கு!

    மயில் கைப்பிடி சூப்பரு!
    எல்லாத்தையும்விட மதுரம் என்ற பெயர் இனிக்குதேப்பா!!!

    இனிய வாழ்த்துகளும், உங்கள் ரசனைக்குப் பாராட்டுகளும்!

    எல்லா நலன்களும் பெற்று மன நிம்மதியான வாழ்க்கைக்கு பெருமாள் அனுகிரஹிக்கட்டும்!.

    ரொம்ப களைப்பா இருக்கு உங்கள் முகம். அசையாம வேலை வாங்குவதில் வீட்டை மிஞ்சமுடியாது:-)

    நல்லா இருங்க!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்!
    போட்டோக்கு சிரிச்சிகிட்டு போஸ் குடுக்குற புள்ளய இப்பதான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. வீடு மிக அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  10. பார்த்து பார்த்து கட்டிய தங்கள் கனவு இல்லமாம் “மதுரம்” குடி வந்த சகோதரி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். அன்றைய மதுரமான நிகழ்வுகளை மதுரமான வார்த்தைகளால் சொன்னீர்கள்.

    ReplyDelete
  11. அனைத்தும் அழகு. நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. புதுமனை புகுவிழா பற்றிய தகவலை அறிந்தேன்.

    வீடு மிக அழகாக வண்ண மயமாக உள்ளது.

    வளமும் நலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகின்றேன்..

    ReplyDelete
  13. மதுரம் என்றலே இனிமை என்று பொருள் கூறுவார்கள்
    புதிய இல்லத்தில் இனிமை பொங்க வாழ்த்துக்கள் சகோதரியாரே
    புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட,அந்த இனிமையான தருணங்கள் மனதில் படம் போல் ஓடுகின்றன
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  14. மிகவும் அழகான இல்லம்.. வாழ்த்துக்கள் மேம்..

    ReplyDelete

  15. புது வீட்டுக்குக் குடிபோனதற்கு வாழ்த்துகள். மேற்கூரை அலங்காரம், சமையலறை எல்லாம் அழகாய் இருக்கின்றன. தஞ்சையில் எந்தப் பகுதியில் வீடு? ஈஸ்வரி நகர்?

    ReplyDelete
  16. வாழ்த்துகள் அம்மா. வீடு மிகவும் அழகாக உள்ளது. வேலைப்பாடுகளும், சமையலறையும் வெகு அழகு. மனநிம்மதியும், சந்தோஷமும் என்றும் நிலைத்திருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.

    இனி தஞ்சை வாசம் தானா அம்மா?

    ReplyDelete
  17. வீடு மிகவும் அழகாக இருக்கிறது அக்கா ! வேலைப்பாடுகள் மிக அழகு.வாழ்த்துக்கள் அக்கா !

    ReplyDelete
  18. மிக அழகிய இல்லம்.ரசனையாக இருக்கிறது.

    ReplyDelete
  19. அழகான வேலைப்பாடுகள் கொண்ட இல்லம்.இனிமையும்,சந்தோஷமும் நிறைந்திருக்க வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  20. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  21. வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி ரூபன்!

    ReplyDelete
  22. ரசித்ததற்கும் வீட்டினைப் பாராட்டியதற்கும் நல்வாழ்த்துக்கள் சொன்னதற்கும் அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  23. எல்லாவற்ரையும் விட பேரக்குழந்தையின் அழகு தான் மிக அழகு என்று சொல்லி ஒரு நல்ல தாத்தா என்பதை நிரூபித்து விட்டீர்கள்! வாழ்த்துக்களுக்கும் ரசித்துப் பாராட்டியதற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  24. சரியாகச் சொல்லி விட்டீர்கள் துளசி! நான் அன்று மிகவும் களைப்பாகத்தான் இருந்தேன். 40 நாட்களுக்கு முன் சம்பந்தி இறந்த துக்கம் வேறு!

    என் மகனின் பெயர் மதன் மோகன். மது என்றழைப்போம். மதுரம் என்றால் இனிமை என்று பொருள் ஆதலால் அதிலேயே என் மகனின் பெயர் இருப்பதால் 'மதுரம்' என்று பெயர் வைத்தோம்!

    ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  25. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் பழனி கந்தசாமி

    ReplyDelete
  26. மதுரமான பின்னூட்டத்திற்கு இனிய நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

    ReplyDelete
  27. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  28. பாராட்டிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  29. வருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

    ReplyDelete
  30. நீங்கள் கூறியிருப்பது போல, மதுரம் என்றால் இனிமை என்பதற்காகவும் அதில் என் மகனின் பெயர் வருவதாலும் தான் மதுரம் என்று இல்லத்திற்குப் பெயர் வைத்தோம். அன்பு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  31. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராம்வி!

    ReplyDelete
  32. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்! வீடு மெடிக்கல் காலேஜின் மூன்று வாசல்களையும் கடந்து அடுத்து வரும் ரஹ்மான் நகரில் உள்ளது. தற்போதைய எம்.பி இங்கு தான் ஐந்தாவது கிராஸில் இருக்கிறார். எங்கள் இல்லம் முதல் கிராஸில் உள்ளது.

    ReplyDelete
  33. வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஆதி! இனி தஞ்சை வாசம் தான் என்று சொல்வதற்கில்லை. அடுத்த வாரம் ஷார்ஜா செல்கிறோம். ஷார்ஜாவிலும் தஞ்சையிலும் மாறி மாறி தான் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  34. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சாரதா!

    ReplyDelete
  35. பாராட்டிற்கு அன்பு நன்றி அனிதா சிவா!

    ReplyDelete
  36. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி பிரியசகி!

    ReplyDelete
  37. மிகவும் ரசனையான மனை....வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  38. மதுரம் மதுரமாயிருக்கறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள். தங்க்ளின் ரசனையினை நன்கு ரசித்தோம்.

    ReplyDelete
  40. கோயில் போல அழகும் அமைதியும் குடிகொண்டிருக்கும் மதுர இல்லம் மனம் வசீகரிக்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள் மனோ மேடம்.

    ReplyDelete
  41. மதுரம்" இதைப் பார்த்ததும் எம் எஸ் அவர்களின் மதுரம் மதுரம்....என்ற அழகான பாட்டு நினைவுக்கு வந்தது....(கீதா)

    மதுரம் இல்லம் மிக அழகாக இருக்கின்றது. ரசனை மிக்க வேலைப்பாடுகள்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  42. மேற்கூரை அந்த டிசைன் கோயிலில் / ராஜா அரண்மனைகளில் இருப்பது போன்று உள்ளது...அழகு...மிகவும் ரசித்தோம் அதே போன்று அந்த மயில் கைப்பிடி...அழகு!

    ReplyDelete
  43. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி அனுராதா!

    ReplyDelete
  44. மதுரமான வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி எழில்!

    ReplyDelete
  45. ரசித்ததற்கும் வாழ்த்துக்கள் அளித்ததற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  46. உங்களின் இனிய, ரசனையான வாழ்த்துக்களுக்கு என் மகிழ்வான நன்றி கீதமஞ்சரி!

    ReplyDelete
  47. மிகவும் ரசித்து, வாழ்த்துக்கள் சொன்னதற்கு கீதாவிற்கும் சகோதரர் துளசிதரனுக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete