மறக்க முடியாத பயண அனுபவம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே அமையும். அது மகிழ்வான அனுபவமாக அமைந்து விட்டால் மனதுக்கு எப்போது நினைத்தாலும் நிம்மதியையும் மலர்ச்சியையும் தருவதாக அமைந்து விடும். அதுவே மோசமானதாக, பல வித பிரச்சினைகளும் சமாளிக்க முடியாத இடர்ப்பாடுகளையும் கொண்டதாக அமைந்து விட்டால் எப்போது நினைத்தாலும் சஞ்சலமடைய வைத்து விடும். சில சமயம் அதுவே பல படிப்பினைகளுக்கு காரணமானதாக அமைந்து விடும்.
1994ஆம் ஆண்டு நாங்கள் தாய்லாந்து, ஹாங்காங், மலேஷியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து, முதலில் தாய்லாந்து சென்றடைந்தோம். துபாயில் உள்ள நண்பர், தனக்கு மிகவும் நெந்ருங்கிய உறவினரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தார். தாய்லாந்து சென்றடைந்த்துமே அவருக்கு ஃபோன் செய்து பேசினோம். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கி அனைத்தும் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தோம். பாங்காக்கில் எங்கள் சுற்றுலா முடிந்து மறு நாள் ஹாங்காங் கிளம்ப வேண்டும். முதல் நாளிரவு அந்த நண்பரும் அவருடைய நண்பர்களுமாக எங்களை வந்து பார்த்து, அவர்கள் இருப்பிடத்திற்கு வந்து சாப்பிட வரவேண்டுமென்று அழைத்தார்கள். மறு நாள் காலையே நாங்கள் ஹாங்காங் செல்ல வேண்டுமென்பதால் அந்த அழைப்பை ஏற்க முடியாததற்காக வருந்தினோம்.
மறு நாள் விமான நிலையம் செல்ல பஸ் தயாராக நின்று கொண்டிருந்த வேளையில் எங்கள் வழிகாட்டியுடன் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொள்ள விரும்பவே கையில் உள்ள பொருள்கள், கைப்பை எல்லாவற்றையும் அவரவர் காலடியில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொன்டோம். அதை முடித்து, கீழே குனிந்த போது தான் தெரிந்தது, என் கைப்பை அங்கே இல்லாதது! ஒரு நிமிடம் உலகமே சுற்றுவது போல இருந்தது. அதில் தான் எங்கள் மூவருடைய பாஸ்போர்ட்டுகள், மேற்கொண்டு செல்வதற்கான பயணச்சீட்டுகள், சில லட்சங்கள் பெருமானமுள்ள டாலர்கள், காமிராக்கள் இருந்தன! விபரம் தெரிந்ததும் ஒரே கூக்குரல்கள், விசாரிப்புகள் என்று அந்த இடமே அதகளமாகியது. நேரம் நேரம் செல்ல செல்ல, எங்களுடன் பயணித்தவர்கள் எங்களை விட்டுக் கிளம்பினார்கள். நாங்கள் அந்த நண்பருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க, அவர் ஓடோடி வந்தார். அவர் பெயர் காமில்.
வந்ததும் எங்களுக்கு முதலில் ஆறுதல் சொன்னார். பாங்காக் நகரம் பாஸ்போ ர்ட்டுகள் திருட்டுக்குப் பெயர் போனது என்றும், உடனடியாக காவல் நிலையம் சென்று இந்த திருட்டை பதிவு செய்ய வேண்டுமென்றும் கூறினார். அப்போதே வேறொன்றும் கூறினார். 'இப்படி பதிவு செய்வதால் உங்களுக்கு உடனேயே திருட்டுப்போன பாஸ்போர்ட்டுகள் கிடைத்து விடுமென்று நினைத்து விட வேன்டாம். அவர்கள் தரும் ரசீதை வைத்துக்கொன்டு தான் நாம் புதிய தற்காலிக பாஸ்போர்ட்டுகளுக்கு முயற்சி செய்ய வேண்டும்.'!
காவல் நிலையத்தில் வேலைகள் முடியும்போது மதியம் ஆகி விட்டிருந்தது. இன்னும் அதிச்சி நீங்காமல் சோர்வுடன் நின்று கொண்டிருந்த எங்களை அவரின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். அவருடைய நண்பர்கள் அத்தனை பேரும் எங்களுக்கு ஆறுதல் கூறி அமர வைத்து, பிரமாதமாக தயார் செய்து வைத்திருந்த உணவைப் பரிமாறி அன்புடன் கவனித்தார்கள். சாப்பிட்டு முடித்ததும் காமில் ஒரு நடுத்தரமான தமிழ் விடுதியில் எங்களைத் தங்க வைத்தார். இருபதாயிரம் பாட்டுகள்[ தாய்லாந்து நாட்டு நாணயம்] கையில் தந்தார். கூடவே மறு நாள் இந்தியன் எம்பஸி சென்று பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிக்க வந்து அழைத்துச் செல்வதாகக்கூறிச் சென்றார்.
தாய்நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல்கற்கள் தொலைவில் அனைத்தையும் இழந்து நின்ற அந்த நேரத்தில் அந்த தமிழ் நண்பர் செய்த உதவி மகத்தானது. முகம் தெரியாத அந்த நண்பர் பசியறிந்து உணவளித்து, மனச்சோர்விற்கு ஆறுதல் கூறி, கையிலிருந்த பணத்தை செலவுக்கும் கொடுத்து, மேன்மேலும் உதவிகள் செய்து வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாவண்ணம் செய்து விட்டார்!!
அடுத்த நாளிலிருந்து தான் சோதனைகள் ஆரம்பமாயின. பாங்காக்கில் உள்ள இந்தியன் எம்பஸியின் தலைவர் மருந்துக்குக்கூட கனிவு வார்த்தைகளைப் பேச வில்லை.
தினமும் இந்தியன் எம்பஸி சென்று வருவது வாடிக்கையானது. எங்களின் பழைய பாஸ்போர்ட்டுகளின் காப்பிகளை எம்பஸி கேட்டது. அவை துபாயிலிருந்து வர தாமதம் ஆன போது, காமில் ' இனி இழக்க உங்களிடம் ஒன்றும் இல்லை. அறையிலேயே அடைந்து கிடக்க வேண்டாம். விட்டவற்றையெல்லாம் சுற்றிப்பாருங்கள். மனதுக்கு நிச்சயம் மாறுதலாக இருக்கும். மகனின் முகம் மிகவும் மிகவும் வாடிப்போய் விட்டது' என்றார். அவர் சொன்னது போலவே சில இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். ஒரு வழியாக பதினைந்து நாட்கள் கழித்து எங்களுக்கு தற்காலிக பாஸ்போர்ட்டுகள் கிடைத்தன!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொலைந்து போன பயணச்சீட்டுகளுக்காக புதிய பயணச்சீட்டுகள் கொடுத்தன. கிரெடிட் கார்டுகள் மூலம் காமில் கொடுத்த பணத்தையெல்லாம் திரும்பத் தந்தோம்.
ஒரு வழியாக விமானம் துபாய் நோக்கி மேலே பறக்க ஆரம்பித்த போது, அனுபவித்த அத்தனை சோகங்களையும் மீறி, அந்த முகமறியாத நண்பரின் அன்பும் அக்கறையுமே மனதில் நிறைந்து நின்றன!!
பயணங்கள் என்றுமே முடிவதில்லை!
இப்படி பலதரப்பட்ட பயண அனுபவங்கள் அனைவருடைய வாழ்விலும் நடந்திருக்கும்! அவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள, பயணங்களைத் தொடர்பதிவாக்கி, இந்த தொடர்பதிவில் கலந்து கொள்ள,
சகோதரி ஆசியா,
சகோதரி இளமதி,
சகோதரி வேதா,
சகோதர் தனபாலன்,
சகோதரர் தமிழ் இளங்கோ,
சகோதரர் பாலகணேஷ்
ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன்!!
படங்கள்: கூகிளுக்கு நன்றி!!


ஓடோடி வந்தார் காமில். முன் அறிமுகம் இல்லாவிட்டாலும்கூட தக்க நேரத்தில் உதவிடும் நண்பர்கள் இப்படி ஒரு சிலர் எங்குமே இருப்பார்கள் போலும்.
ReplyDeleteபடித்து முடித்டஹ்தும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது..தாங்கள் எவ்வளவு வேதனை அடைந்திருப்பிர்கள் என்று புரிகிறது அம்மா..இதுவும் ஒரு விழிப்புணர்வுதான்....
ReplyDeleteஉங்களின் இந்த சோக அனுபவம் கேட்க மிகவும் மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
ReplyDeleteநல்ல வேளையாக அந்த நண்பர் காமில் என்பவர் உதவி புரிந்துள்ளார்.
இல்லாவிட்டால் இன்னும் என்னென்ன கஷ்டங்களை சந்தித்திருக்க வேண்டியிருக்குமோ.
அனைவருக்கும் விழிப்புணர்வு தரும் பதிவுக்குப் பாராட்டுக்கள்ம் நன்றிகள்.
"பகீர்" பயணங்கள்..
ReplyDeleteஒரு வழியாக விமானம் துபாய் நோக்கி மேலே பறக்க ஆரம்பித்த போது, அனுபவித்த அத்தனை சோகங்களையும் மீறி, அந்த முகமறியாத நண்பரின் அன்பும் அக்கறையுமே மனதில் நிறைந்து நின்றன!!//
ReplyDeleteநண்பர் வாழ்க! வளர்க!
உதவும் நல்ல உள்ளங்கள் இருக்கவே செய்கிறார்கள்.
நல்ல பயண அனுபவம்.
அதிர்ச்சியான அனுபவங்கள் அம்மா..
ReplyDeleteநல்ல மனங்களுக்கு எங்கும்
உதவும் கரங்கள் கிட்டும்...
ஒவ்வொரு வரிகளையும் படிக்க படிக்க நெஞ்சு பட பட வென்று அடித்துக்கொண்டது.இதெல்லாம் பகிர்வது மற்ற்வர்களுக்கு நலதொரு விழிப்புணரவுதான்.மிகவும் உச்ச பட்ச திகிலை அனுபவித்து மீண்டு வந்து இருக்கீங்க அக்கா.
ReplyDeleteநினைத்துப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது. நல்ல நண்பர் கிடைத்தது இறைவன் செயல்.
ReplyDeleteஅந்த நேரத்தை நினைத்துப் பார்த்தால் 'திக்' என்று இருக்கிறது... உதவின நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்....
ReplyDeleteதக்க சமயத்தில் தேவையான உதவிகளை செய்து முக்கியமாக ஆறுதலையும் தந்த நண்பருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteசில நேரம் பயணங்கள் இப்படிப்பட்ட மறக்க இயலா அனுபவங்களையும் தருகிறது.
உங்கள் அனுபவத்தை வாசித்த பொழுது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னமும் பக்கென்று இருக்கு..இருக்கு அக்கா. அக்கா தெரியாத தேசத்தில் இப்படி உதவி செய்பவர்களை எப்படி மறக்க முடியும்.. எல்லோரையும் உஷார் படுத்தும் பகிர்வு..
ReplyDeleteதொடர் அழைப்பிற்கு மிக்க நன்றி அக்கா.
விழிப்புணர்வு தரும் பதிவு. நன்றி.
ReplyDeleteபிரமாதமாக தயார் செய்து வைத்திருந்த உணவைப் பரிமாறி அன்புடன் கவனித்தார்கள். சாப்பிட்டு முடித்ததும் காமில் ஒரு நடுத்தரமான தமிழ் விடுதியில் எங்களைத் தங்க வைத்தார். இருபதாயிரம் பாட்டுகள்[ தாய்லாந்து நாட்டு நாணயம்] கையில் தந்தார். கூடவே மறு நாள் இந்தியன் எம்பஸி சென்று பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிக்க வந்து அழைத்துச் செல்வதாகக்கூறிச் சென்றார்.
ReplyDeleteஅந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துகின்றது மனம் எதையும் நினைக்கும் முன்னரே !..பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா .
வெளி நாடு செல்லும்போது எவ்வளவு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதையும், எங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையும் உங்கள் பதிவு உணர்த்தியது.
ReplyDeleteபகீர் அனுபவம் தான்.
ReplyDeleteபயணங்கள் நமக்கு எப்போதும் ஏதாவது படிப்பினை தந்து விடுகிறது.....
படிக்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. புதிய இடத்தில் அந்த நண்பரின் உதவி மகத்தானது.
ReplyDeleteவாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் விதவிதமான அனுபவங்கள் இருப்பதோடு இப்படித் திகில் பயண அனுபவங்கள் மறக்கவே முடியாததுதான்.
ReplyDeleteஉண்மையில் ஐயோன்னு மனதை பதைக்கவைத்த்து உங்கள் அனுபவம்.
ஆபத்பாந்தவராக வந்த அந்த நண்பர் காமில் உண்மையில் அத்தனை உன்னதமான ஒருவர்தான்.
அவதானம் எந்த நிமிடமும் எம்முடன் வாழ்க்கையில் இருத்தல் அவசியமென உணர்த்திய அருமையான பகிர்வு அக்கா. பகிர்வுக்கு மிக்க நன்றி!
முத்தாய்ப்பாக என்னையும் இங்கு இழுத்துவிட்டிருக்கிறீர்களே...அவ்வ்வ்... எங்கே போவேன் நான் இப்போ அனுபவம் எழுதுவதற்காக...:)))
முதலில் பயணம் போகணும்... போய்வந்தபின் எழுதுகிறேன் அக்கா...;)
பயணங்கள் என்றுமே முடிவதில்லை!
ReplyDeleteமிகவும் சோகமான அனுபவங்கள்.
ReplyDelete//பயணங்கள் என்றுமே முடிவதில்லை!//
ஆம் பயணங்கள் முடிவதில்லைதான் ஆனால் அவை சோகமாக இல்லாமல் சுகமாக அமைந்தால் சிறப்பு.
மனோஅக்கா,அழைப்பினை ஏற்று தொடரனா இந்த அனுபவத்தை நானும் பகிர்ந்துள்ளேன்.இதோ லின்க்.
ReplyDeletehttp://asiya-omar.blogspot.ae/2013/03/blog-post_11.html
//அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொள்ள விரும்பவே கையில் உள்ள பொருள்கள், கைப்பை எல்லாவற்றையும் அவரவர் காலடியில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொன்டோம். அதை முடித்து, கீழே குனிந்த போது தான் தெரிந்தது, என் கைப்பை அங்கே இல்லாதது!//
ReplyDeleteகாலடியில் உள்ள ஹேண்ட் பேக்கைக் கூட களவாடுகிறார்களா..?!! ஒவ்வொரு பயணத்திலும் எவ்வளவு உஷாராக இருக்கவேண்டியுள்ளது :( இதேபோன்று தவித்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பயணத்தில் அல்ல, ஊரிலேயே ஒரு கடையில்தான்! லோக்கலில் நடந்ததாக இருந்தாலும்கூட வீடு வந்து சேரமுடியாமல் தவித்த அந்த அனுபவத்தை இன்று நினைத்தாலும் 'பகீர்' என்று இருக்கும் :( உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போது ரொம்ப கஷ்டமாக உள்ளது.
உங்களின் அனுபவம் அனைவருக்கும் தேவையான ஒரு படிப்பினை. பகிர்வுக்கு நன்றி மனோ மேடம். உங்களுக்கு உதவிய சகோதரர் காமில் அவர்களுக்கு இறைவன் எல்லா வளமும் கொடுப்பானாக!
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி நிஜாமுதீன்!
ReplyDeleteஎன் மனம் அன்று பட்ட வேதனையைப்புரிந்து எழுதியிருந்தது நெகிழ்வாக இருந்தது மேனகா! உண்மையில் அந்த 15 நாட்களும் நாங்கள் பட்ட துயரம் எழுத்தில் வடிக்க முடியாத சோகங்கள்!!
ReplyDeleteநெகிழ்ச்சியுடன் கூடிய உங்கள் பின்னூட்டத்திற்கு என் அன்பார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!
ReplyDeleteஉண்மையில் இது பகீர் பயணம் தான்! கருத்துரைக்கு அன்பு நன்றி கோவை ஆவி!
ReplyDeleteஅன்பான பின்னூட்டத்திற்கு மகிழ்வான நன்றி கோமதி!
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி மகேந்திரன்!
ReplyDeleteநீங்கள் சொல்வது சரி தான் ஸாதிகா! உச்சக்கட்ட சோதனைக்காலம் அது!
ReplyDeleteநெகிழ்வான பின்னூட்டத்திற்கு அன்பான நன்றி ஹுஸைனம்மா!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்!!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்!!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்!!
ReplyDeleteபாராட்டுக்களுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் மகிழ்வான நன்றி ஆதி!!
ReplyDeleteஅன்பான நெகிழ்வான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி ஆசியா!
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி காஞ்சனா!
ReplyDeleteவிரிவான, நெகிழ்வான பின்னூட்டத்திற்கு மகிழ்வான நன்றி அம்பாளடியாள்!
ReplyDeleteஅழகாய் கருத்துரை சொன்ன உங்களுக்கு என் மகிழ்வான நன்றி எழில்!
ReplyDeleteஅன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!
ReplyDeleteநெகிழ்வுடன் எழுதிய கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் ஜனா!
ReplyDeleteவிரிவான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி இளமதி!
ReplyDeleteவருகைக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!
ReplyDeleteஅன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ரமா!
ReplyDeleteவிரிவான, நெகிழ்வான, அருமையான பின்னூட்டத்திற்கு அன்பார்ந்த நன்றி அஸ்மா!
ReplyDeleteவிரிவான, நெகிழ்வான, அருமையான பின்னூட்டத்திற்கு அன்பார்ந்த நன்றி அஸ்மா!
ReplyDeleteNanbar Nizamudeen moolam intha katturaiyai padikka nernthathu. Ithanaal Mrs.Mano Saminathan Avargalin kudumbatthai neril santhittha unarvai petrean.Naan Tharpothu Nagai Mavattam Punganuril vasitthu varugiraen.Ammaa Avargalum Avargalathu kudumbamum Thanjavur vanthaal engal Illatthirku varumaru kettu kolgiraen. Tel : 95854 50001
ReplyDeleteஉற்சாகமான புத்துணர்வு ஊட்டும் பயனங்களுக்கிடையில் இப்படியான கொடூர அனுபவங்களும்... காருண்யம் நிறைந்த காமில் அவர்களை பாராட்டத்தான் வேண்டும். உன்னத நண்பர்.
ReplyDeleteநீங்க கொடுத்த லிங்கை இன்றுதான் படிக்க முடிந்தது.
ReplyDeleteபேங்காக்கில் இறங்கியதும் அங்கே இருந்த கைட் எங்களுக்கு சொன்ன வாக்கியம், உங்கள் உடமைகள் பத்திரம். எல்லா இடத்துக்கும் பாஸ்போர்ட்டை தூக்கிகொண்டு அலையாதீர்கள் (கடைகளில் ஏதும் பர்ச்சேஸ் செய்யும்போது மட்டுமே அவசியம்) என்பதுதான்.
ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க.