Monday, 7 January 2013

முத்துக்குவியல்-17!!

பாதித்த முத்து:
சமீபத்தில் படித்த செய்தி இது. பொதுவாய் பிறருக்கு நல்லது செய்வதைப்பற்றி ஆதி காலத்து செய்யுள்கள் முதல் இன்றைய காலத்து நூல்கள் வரை எத்தனையோ பேர் பாடியும் சொல்லியும் இருக்கிறார்கள். நாமெல்லோரும் செய்ய நினைப்பதும் விரும்புவதும் செய்வதும் செய்து பின் சுட்டுக்கொள்வதும் அதே தான். எத்தனை எதிர்மறை பாதிப்புகள் வந்தடைந்தாலும் நல்லன செய்வதை மறக்க வேண்டாம் என்று சான்றோரும் கூறியிருக்கிறார்கள் தான். ஆனால் ரொம்பவும் நல்லவராயிருப்பது சரி தானா என்று வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகள் அடிக்கடி யோசிக்க வைக்கிறது. இந்த நிகழ்வும் [ உண்மைக்கதை] மனதைத் தாக்கி மிகவும் யோசிக்க வைக்கிறது.
எழுதியவரின் நண்பர் இளம் வயதில் தந்தையை இழந்து தாயின் உழைப்பினால் கீழிருந்து மேலுக்கு வந்தவர். ஒரு சமயம் தாய் படும் கஷ்டங்களைப்பார்த்து சகிக்க முடியாமல் ‘ ஏனம்மா நீங்கள் மறுமணம் செய்திருக்கக்கூடாது?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தத் தாய் ‘ இந்த நாட்டில் கணவனை இழந்தவளை யாருப்பா திருமணம் செய்து கொள்ள முன் வருவார்கள்?’ என்று பதில் சொன்னது அவரின் மனதைத் தாக்கியிருக்கிறது. கணவனை இழந்த ஒரு பெண்னைத்தான் திருமனம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அது போலவே பரந்த மனதுடன் திருமணம் ஆகி மூன்றே மாதங்களில் கணவனை இழந்த ஒரு பெண்னை தன் அம்மாவின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்.  
ஒரு வருடம் கழிந்த பிறகு ஒரு குழந்தைக்கும் தாயான நிலையில் எதற்காகவோ நடந்த இரத்தப்பரிசோதனையில் அவர் மனைவிக்கும் குழந்தைக்கும் எய்ட்ஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் மனைவியும் அவர் வீட்டாரும் இதை ம‌றைத்துத்தான் திருமணம் செய்திருக்கிறார்கள். முதல் கணவனிடமிருந்து வந்த பரிசு இது. அவர் இறந்ததும் அதனால் தான் என்பதையும் மறைத்து விட்டார்கள். நொந்து போய் விட்டார் இவர். இது வரை இத்தனை பெரிய விஷயத்தை மறைத்த தன் மனைவியிடம் கூட அவருக்கு அதிகம் வருத்தம் வரவில்லை. இந்த விஷயம் முன்னாலேயே தெரிந்திருந்தால் அந்தக் குழ்னதையையாவது இந்த பூவுலகில் பிறக்காமல் தவிர்த்திருக்கலாமே என்பது தான்! எத்தனை நல்லவர் பாருங்கள். அவர் நண்பர் இறுதியில் சொல்லுகிறார் ’ புத்திசாலித்தனம் எல்லோருக்கும் தேவையானது தான் என்றாலும் நல்லவர்களுக்குத்தான் அது அதிகம் தேவைப்படுகிறது சீக்கிரம் ஏமாறாமலிருக்க!’
தகவல் முத்து:
குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள், முதியவர்களுக்காக இலவச முதியோர் சேவையை வழங்கி வருகிறார்கள் ‘ ஹெல்பேஜ் இந்தியா அமைப்பு ’! இது தவிர சாலையோர முதியவர்களின் நிலையைப்பற்றி இந்த நிறுவனத்துக்கு தெரியபடுடுத்தினால் சம்பந்தப்பட்ட முதியோருக்கு உதவிகள் கிடைக்கும். தொடர்புக்கு:
ஹெல்பேஜ் இந்தியா, கீழப்பாக்கம், சென்னை-10. தொலைபேசி: 044-2532 2149/1800-180-1253
மருத்துவ முத்து

குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களைப் பொடியாக்கி தேனுடன் க‌லந்து நாக்கில் தடவினால் போதும், வாந்தி நின்று விடும்.

அருமையான முத்துக்கள்!!

ஒரு புத்தகத்தில் ரசித்த வாசகங்கள்!!

இருக்க வேண்டியது மூன்று:        தூய்மை, நேர்மை, நீதி.
அடக்க வேண்டியது மூன்று:         நாக்கு, நடத்தை, கோபம்
பெற வேண்டியது மூன்று:              தைரியம், அன்பு, மென்மை.
கொடுக்க வேண்டியது மூன்று:    ஆறுதல், ஈதல், பாராட்டு
அடைய வேண்டியது மூன்று:      ஆன்ம சுத்தம், முனைவு, மகிழ்வு
தவிர்க்க வேணியது மூன்று:         இன்னா செய்தல், நன்றியில்லாமை, 

                                                                    முரட்டுத்தன்மை  
 நேசிக்க வேண்டியது மூன்று:       கற்பு, அறிவு, மாசின்மை.
 
அசத்திய முத்து
SPARE-1
மொபைல் ஃபோன் வைத்திருக்கும் பலருக்கும் அதை சார்ஜ் செய்வதில் தான் பிரச்சினையே. அதை ஆஃப் செய்து வைத்திருந்தாலும் கூட சார்ஜ் போய் விடுகிறது! நான் அதிகம் மொபைல் உபயோகிப்பதில்லை. அடிக்கடி அதை உபயோகிக்கும் என் கணவரிடமும் மகனிடமும் ‘ சும்மா சும்மா சார்ஜ் செய்வதில் இந்த மொபைல் வசதியே போர் அடிக்கிறது. சார்ஜ் செய்யத் தேவையில்லாத மொபைலாக இருந்தால் அல்லவா தேவலாம்?’ என்று கூறுவேன். நான் நினைத்த மாதிரியே ஒரு மொபைல் வசதி வ‌ந்திருக்கிறது. அமெரிக்காவின் எக்ஸ்பால் நிறுவனம் கண்டு பிடித்துள்ள SPARE-1 என்ற இந்த கைபேசியை ஒரு முறை சார்ஜ் செய்து விட்டால் போதும், 15 வருடங்களுக்கு சார்ஜ் தீராது இருக்கும். இந்த கைபேசியில் தொடர்ந்து 10 மணி நேரம் பேச முடியும். இந்த ஃபோனை உபயோகப்படுத்தாமல் வைத்திருந்தாலும் 15 வருடங்களுக்கு சார்ஜ் தீராமல் இருக்கும். வெறும் 50 டாலர்களே விலையுள்ள‌ இந்த மொபைல் விரைவில் விற்பனைக்கு வ‌ருகிறது!
 
 
 
 
 
 

 

40 comments:

  1. முதல் சம்பவம் வாசித்ததும் பகீர் என்றிருக்கு அக்கா .சிறு வயதில் மனதில் ஆழமாய் பதிந்த சம்பவம் அவரை எங்கு கொண்டு சென்று விட்டது ..ஆனாலும் அக்கா அந்த நபர் உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவர் .அவர்மனைவி குடும்பத்தினர் செய்த காரியம் மிக மோசம் .உதவும் மனப்பான்மை மற்றும் நற்குணங்கள் அழிந்தே போகும் இப்படிப்பட்ட செயல்களால் .ஹெல்பெஜ் இந்தியா //நான் பல வருடங்கள் முன்பு போயிருக்கேன் அமைதியான சூழலில் இருக்கும் .புத்தகத்தில் ரசித்த வாசகங்கள்!!...superb .

    ReplyDelete
  2. முதல் முத்து கலங்க வைத்துவிட்டது. நல்லவர்களுக்கு தான் எல்லா கஷ்டமும் வரும் என்பார்களே அது இதுதான் போல இருக்கு.

    முத்தான தகவல்களும் அருமை.

    ReplyDelete
  3. நல்லது செய்றதுக்கு கூட எதையும் யோசிச்சுதான் செய்யணும் போல.. பாவம் அந்த பிஞ்சு குழந்தை.

    ReplyDelete
  4. அசத்திய முத்து..

    அசத்தியது ....

    ReplyDelete
  5. முதல் முத்து படித்ததும் கஷ்டமாகிவிட்டது...நீங்கள் ரசித்த வாசகங்கள் அருமை!!

    ReplyDelete
  6. எல்லாமுத்துக்களுமே சுவாரசியம்தான்.

    ReplyDelete
  7. பாதித்த முத்து: ஐயையோ...
    தகவல் முத்து: ஓ..அப்படியா....
    மருத்துவ முத்து: நல்ல உதவி...
    அருமையான முத்துக்கள்: அருமை அருமை...
    அசத்திய முத்து: அட அப்படியா..

    எல்லாமே சூப்பர் அக்கா...:)
    நல்ல பகிர்வு...மிக்கநன்றி!

    ReplyDelete
  8. அத்தனை முத்துக்களும் மனதில் நின்றது அம்மா...

    ReplyDelete
  9. அத்தனை முத்துக்களும் நல்வாழ்வுக்கு சொத்துக்கள் அருமை.

    ReplyDelete
  10. //புத்திசாலித்தனம் எல்லோருக்கும் தேவையானது தான் என்றாலும் நல்லவர்களுக்குத்தான் அது அதிகம் தேவைப்படுகிறது சீக்கிரம் ஏமாறாமலிருக்க!//

    அனுபவித்து எழுதியுள்ள அவசியமான முத்து.

    ReplyDelete
  11. //இந்த கைபேசியை ஒரு முறை சார்ஜ் செய்து விட்டால் போதும், 15 வருடங்களுக்கு சார்ஜ் தீராது இருக்கும். இந்த கைபேசியில் தொடர்ந்து 10 மணி நேரம் பேச முடியும். இந்த ஃபோனை உபயோகப்படுத்தாமல் வைத்திருந்தாலும் 15 வருடங்களுக்கு சார்ஜ் தீராமல் இருக்கும். வெறும் 50 டாலர்களே விலையுள்ள‌ இந்த மொபைல் விரைவில் விற்பனைக்கு வ‌ருகிறது!//

    நல்லதொரு சந்தோஷமான தகவல்.

    அசத்திய முத்து மனதுக்கு ஆறுதல் அளிக்கும் முத்தே.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. முத்துக்கள் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. சமீபத்தில் பார்க்கும் நீர்ப்பறவை சினிமா டெய்லரில் ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருது, “ரொம்ப நல்லவனா இருக்காதடா? ஏமாத்திருவாய்ங்க” !!!

    ReplyDelete
  14. முத்துக்கள் அத்தனையும் அருமைங்க. மிக ரசித்துப் படித்தேன். அதென்னது... வெறும 50 டாலர்கள்ன்னு அசால்ட்டா சொல்லியிருக்கீங்க... எனக்குல்லாம் அது பெரிய்ய்ய அமவுண்ட்டாச்சே... சரி.. சரி... மொபைல் ரிலீசானதும் மனோ மேடத்தைப் பார்த்து மொபைல் வாங்கிக்கலாம்னு சொல்லுங்க, ஹி... ஹி...

    ReplyDelete
  15. நல்லவர்களுக்குத்தான் அதிகம் புத்திசாலித்தனம் வேண்டும்.

    எத்தனை சத்யமான வரி.
    அந்தக் கதை உண்மைக்கதை என்று போட்டிருக்கிறீர்கள்.அந்தக் கணவனை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

    recharge தேவையில்லாத தொலைபேசி தகவல் அருமை.

    ராஜி

    ReplyDelete
  16. பகிர்ந்த முத்துக்கள் அருமை..ஆனால்
    பாதித்த முத்து என்னையும் மிகவும் பாதித்தது.

    குழந்தை டிப்ஸ், வாசித்த முத்துக்களும் சூப்பர் பகிர்வு அக்கா.

    ReplyDelete
  17. ’ புத்திசாலித்தனம் எல்லோருக்கும் தேவையானது தான் என்றாலும் நல்லவர்களுக்குத்தான் அது அதிகம் தேவைப்படுகிறது சீக்கிரம் ஏமாறாமலிருக்க!’

    'நச்'சுன்னு சொல்லிட்டிங்க!

    இப்பதிவு முழுவதுமே ஒன்றையொன்று விஞ்சும் கனம்!

    ReplyDelete
  18. விரிவான பின்னூட்டம் கொடுத்ததற்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!
    நல்லது செய்த ஒரே காரண‌த்துக்காக சரி செய்யவே முடியாத தீமை கிடைத்தால் பிறகு நல்லது செய்ய எப்படி மனம் வரும்?

    ReplyDelete
  19. ரொம்ப நாட்களுக்குப்பிறகு வந்து பின்னூட்டம் கொடுத்ததற்கு அன்பு நன்றி ராம்வி!

    ReplyDelete

  20. முதல் முத்தைப் படித்ததும் மனம் வெறுத்துத்தான் போகிறது. இப்படியும் மனிதர்கள். 15 வருஷத்துக்கு சார்ஜ் தீராத மொபைல் ஆச்சர்யம்.

    ReplyDelete
  21. சுவாரஸ்யமான முத்துகக்ள்.

    ReplyDelete
  22. ஆமாம் ராதா, நல்லது செய்யும்போது கூட யோசிச்சுத்தான் பல சமயம் செய்ய‌ வேண்டியிருக்கிற‌து நடைமுறை வாழ்க்கையில்!

    கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  23. அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  24. பாராட்டுக்கும் க‌ருத்துரைக்கும் அன்பு ந‌ன்றி மேன‌கா!

    ReplyDelete
  25. பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி இளமதி!

    ReplyDelete
  26. இனிய கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி மகேந்திரன்!

    ReplyDelete
  27. வருகைக்கும் க‌ருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் கண்ண‌தாசன்!

    ReplyDelete
  28. க‌ருத்துரைக்கு அன்பு ந‌ன்றி சகோதரர் கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  29. பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  30. க‌ருத்துரைக்கு அன்பு ந‌ன்றி பூந்த‌‌ளிர்!

    ReplyDelete
  31. சரியான வசனத்தை சரியான சமயத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள் புதுகைத்தென்றல்! அன்பு நன்றி!

    ReplyDelete
  32. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் பாலகணேஷ்! மொபைல் ரிலீஸானதும் கட்டாயம் வாங்கித்தருகிறேன்!

    ReplyDelete
  33. கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி ராஜி!

    ReplyDelete
  34. பாராட்டுக்கு மகிழ்வான நன்றி ஆசியா!

    ReplyDelete
  35. இனிய கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி நிலாமகள்!

    ReplyDelete
  36. எனக்கும் மனம் வெறுத்துத்தான் போனது SRIRAM!! வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  37. கருத்துரைக்கு அன்பு நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  38. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  39. உங்கள் முத்துச் சிதறல்கள் சிறப்பாய் இருக்கிறது. தொடர்ந்து வருவேன் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. //அந்தக் குழ்னதையையாவது இந்த பூவுலகில் பிறக்காமல் தவிர்த்திருக்கலாமே என்பது தான்! //

    நெகிழ வைத்த வரிகள்....

    ReplyDelete