Sunday, 12 August 2012

உயிர் காக்கும் மருத்துவம்


பகுதி-1
சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது, என் நெருங்கிய சினேகிதி பல மாதங்கள் இடைவெளிக்குப்பிறகு என் வீடு வந்து சில வாரங்கள் தங்குவதாக இருந்தது. இருவருமே மறுபடியும் ஏற்படப்போகும் அந்த சந்திப்பை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, என் சினேகிதி ஃபோன் செய்து, நெஞ்சில் அதிக கனமும் அழுத்தமும் அடிக்கடி ஏற்படுவதாகவும் வலது கையில் வலி அவ்வப்போது ஏற்படுவதாகவும் சொன்னார். நான் உடனேயே அவரின் குடும்ப டாக்டரிடம் சென்று வரச்சொன்னேன். கிலம்புவதற்கு முன் அந்த வேலையையும் முடித்து விட்டால் நிம்மதியாக வரலாம் என்ற எண்ணத்தில் என் சினேகிதியும் அவரின் குடும்ப மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் பல பரிசோதனைகள் செய்து, முடிவில் ECGயில் ஒரு சிறு வித்தியாசம் தென்படுவதாகச் சொல்லி, ஒரு இதய மருத்துவரிடம் செல்லச் சொல்ல, அன்று முழுவதும் என் சினேகிதி திட்டமிட்டவாறு வர இயலவில்லையே என்று அழுது தீர்த்தார். அவரை சமாதானப்படுத்தி, இதய மருத்துவரிடம் உடனேயே போகச் சொன்னேன். அங்கும் எல்லா சோதனைகளை மேற்கொண்ட பிறகு, stress Test  [ Treadmill] -ல் ஒரு சிறு வித்தியாசம் தெரிவதாகச் சொல்லி ஆஞ்சியோகிராம் செய்யச் சொல்லி ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார்கள். அதைப்பற்றிச் சொன்னதும் எனக்கும் மிகக் கவலையாகப் போனது.
என் சினேகிதி அதிக மனக்கஷ்டங்களுக்காளானவர். அதோடு, பொருளாதார ரீதியில் அடித்தட்டில் இருப்பவர். இன்றைய நிலவரப்படி, இதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளுக்கு மாற்றுப்பாதை [ by pass surgery] அமைக்க சில லட்சங்கள் செலவாகின்றன. அதை உறுதிப்படுத்தும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய 8000 ரூபாயிலிருந்து 20000 ரூபாய் வரை மருத்துவ மனைகள் நிர்ணயிக்கின்றன. அதிக செலவில்லாமல் இதய அறுவை சிகிச்சை செய்ய ஏதாவது வழிகள் இருக்கின்றனவா என்று நண்பர்கள், மருத்துவர்களுடன் ஆராய்ந்ததில் சில உயிர்காக்கும் மருத்துவ முறைகள் பற்றி அறிய நேரிட்டது. நோயால் அவதிப்படுபவர்கள் உடல் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு நான் அறிந்து கொண்ட இந்த மருத்துவ முறைகளை இந்தப்பதிவு மூலம் பகிர்ந்து கொள்கிறேன். 

இதய அறுவை சிகிச்சை இன்றி இரத்தக்குழாய்களின் அடைப்புகளள நீக்குதல்: 

நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவ மனையில் மருந்துகள் மூலம் மட்டுமே இரத்தக்குழாய்களிலுள்ள அடைப்புக்களை நீக்குகிறார்கள். இதய அறுவை சிகிச்சையின்றி அங்கே மருத்துவ சிகிச்சை எடுத்து குணம் அடைந்த நண்பரின் தகவல் இது. ஆனால் இதய அறுவை சிகிச்சையை விட சற்று கூட செலவாகும் என்பதும் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது அதன் வீரியம் அதிகமாயிருக்குமென்றும் சொல்கிறார்கள்.




விபரங்களுக்கு கீழ்க்கண்ட LINK-ஐப் பார்க்கவும்.  


செலவின்றி இதய அறுவை சிகிச்சை செய்ய:

பொருளாதார நிலையில் மிகத்தாழ்ந்திருப்பவர்களுக்கு பெங்களூரிலுள்ள SATHYA SAI MEDICAL INSTITUTE-ல் இலவசமாக இதய அறுவை சிகிச்சை உள்பட அனைத்து மருத்துவ சிகிச்சைகள் செய்கிறார்கள்.

அதன் LINK இதோ! 
இரத்தத்தின் சர்க்கரை அளவைத் துல்லியமாகக்கண்டறிய:
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் 60 லட்சத்துக்கு மேலானோர் இந்த சர்க்கரை நோயின் பாதிப்பில் உள்ளார்கள். இந்த நோயின் தாக்கத்தை, இரத்தத்தில் அதன் வீரியத்தைக் கண்டுபிடிக்க பல மருத்துவக் கண்டு பிடிப்புகள் அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் ‘ ஐ ப்ரோ 2 சிஜி எம்’ என்ற பதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த நேரத்தில் ஒரு நோயாளிக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்படி எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்தக் கருவி உதவி செய்கிறது.:
சர்க்கரை நோயாளிகளின் வயிற்றுப்பகுதியில் இந்தக் கருவி 72 மணி நேரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தக் கருவி உடலின் சர்க்கரை அளவைப் பதிவு செய்யும். ஒரு நாளைக்கு சுமார் 288 முறைகள் அது போல பதிவு செய்யும். இதன் மூலம் ஒரு நோயாளியின் உடலில் எந்தெந்த நேரத்தில் சர்க்கரையின் அளவு கூடுகிறது, எந்தெந்த நேரத்தில் சர்க்கரையின் அளவு சரியாக உள்ளது என்பதை ஆய்வு செய்ய முடியும். அதற்கேற்ப ஒரு மருத்துவரால் சரியான மருத்துவம் அளிக்க முடிகிறது. 72 மணி நேரங்கள் கழித்து அந்தக் கருவியை அகற்றி அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை கணினியில் ஏற்றி, பின் பேப்பரில் ப்ரிண்ட் செய்து அந்த அறிக்கையை மருத்துவரிடம் காண்பித்து நாமே ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும். மிகவும் லகுவான இந்தக் கருவியைப் பொருத்தியிருப்பதே ஒரு நோயாளிக்கு சுமையாகத் தெரியாது என்பது இந்தக்கருவியின் சிறப்பு. இதைப்பொருத்திக்கொண்டே நம்து வழக்கமான எல்லா வேலைகளையும் நாம் செய்து கொள்ள முடியும். இதை உடலில் பொருத்துவது மட்டும் ஒரு மருத்துவர்தான் செய்ய வேண்டும்.

தொடரும்:





32 comments:

  1. உபயோகமான தகவல்கள். உங்கள் தோழி சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள். பை பாஸ் சர்ஜரி இல்லாமல் மருந்துகள் மூலம் மட்டுமே குணம் என்பது எத்தனை பேருக்கு வெற்றியளிக்கும் ன்று தெரியவில்லை. நான் கூட சமீபத்தில் இது போன்றதொரு விளம்பரம் நாளிதழ்களில் கண்டேன். திருச்சியிலோ வேறெங்கோ ஒரு மருத்துவமனையைக் குறிப்பிட்டு, விளம்பரம். சரியாக நினைவில்லை.

    ReplyDelete
  2. பயனுள்ள ஆரோக்கிய தகவல்கள்...

    ReplyDelete
  3. ஆஞ்சியோகிராமில் ரத்த குழாய் அடைப்பின் சதவீதத்தை பொறுத்து சிகிச்சை தேவைப்படும். எனக்கு தெரிந்தவர் இதே சிம்டம்ஸ் தெரிந்து மருத்துவரிடம் சென்றார்.சிகிச்சையில் முதலில் அட்டாக் வராமல் இருக்க ஒரு இன்ஜெக்சன் போட்டு அவசர சிகிச்சைக்கு அனுமதித்து ஒரு இன்ஜெக்சன் 1500 ரூபாய் வீதம் தினமும் காலை,மாலை, என இரண்டு இன்ஜெக்சன் தொப்புள் பகுதியில் போட்டு 10 நாள் சிகிச்சை அளித்தனர்.அடுத்த நாள் ஆஞ்சியோ பார்க்கும் போது ரத்தகுழாய் அடைப்பு எதுவும் இல்லை..இனி மாத்திரையை எடுத்து கொண்டு டயட்டில் இருங்கள் பிரச்சினை எதுவும் இல்லை என்றனர் .அன்று பை-பாஸ் சர்ஜரி செய்திருந்தால் நண்பருக்கு பண செலவுடன் உடல் உபாதையும் சேர்ந்திருக்கும்..உங்க பதிவை படித்த உடன் ரத்தகுழாய் அடைப்பை இன்ஜெக்சன் மூலமாக சரி செய்து வீடு திரும்பிய இந்த நண்பரின் ஞாபகம் வந்து விட்டது...உபயோகமான நல்ல பதிவு மேடம்.

    ReplyDelete
  4. பயனுள்ள பகிர்விற்கு நன்றி !

    ReplyDelete
  5. மிகவும் உபயோகமான தகவல்கள் எனக்கும் ஹார்ட் ப்ராப்லம் இருக்கு மைல்ட் மாஸிவ் ரெண்டு அட்டாக்கும் ஒரே நாளில் வந்தது. ஆஞியோ பைபாஸ் எதுவும் வேண்டாம்னு பிடிவாதமா மறுத்துட்டேன். மருந்துகளிலே தான் வண்டி ஓடுது.

    ReplyDelete
  6. அவசியமான தகவல்கள்.பர்வுக்கு நன்றியக்கா.

    ReplyDelete
  7. நல்ல தகவல் தொடருங்கள் சகோ!

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  9. உயிர் காக்கும் மருத்துவம்"பயன் மிக்க பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. மிகவும் சிறப்பான தகவல்கள்...
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி... பாராட்டுக்கள்...

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    ReplyDelete
  11. கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்! நானும் உங்களைப்போல பத்திரிகைகளில் அறுவை சிகிச்சையின்றி இருதயக் குழாய்களின் அடைப்புக்களை நீக்கலாம் என்று பல முறைகள் படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அதை என்னால் நம்ப முடியவில்லை. தெரிந்தவர் ஒருத்தர் அது போல அறுவை சிகிச்சை செய்து குணம் அடைந்திருப்பது தெரிந்ததும்தான் நம்ப முடிந்தது. அறுவை சிகிச்சை செய்து, அதன் பக்க விளைவுகளையும் சந்திக்க விரும்பாதவர்கள் இது போன்ற வேறு வழி முறைகளை நாடுகிறார்கள்.

    ReplyDelete
  12. பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜனா!

    ReplyDelete
  13. உபயோகமான தகவலுக்கும் நீண்ட கருத்துரைக்கும் அன்பு நன்றி ராதா! முடிந்தால் அந்த நண்பர் அந்த சிகிச்சையை எங்கு மேற்கொண்டார் என்பதை எழுதுங்கள். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  14. கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரவாணி!

    ReplyDelete
  15. ஆனாலும் உங்களுக்கு அசாத்திய தைரியம் லக்ஷ்மிம்மா! சமீபத்தில் ஒரு நண்பர் சாப்பிட்ட மருந்தினால் அடைப்புகள் நீங்கி மருத்துவர் அறுவை சிகிச்சைக்கான பரிந்துரையை ரத்து செய்ததாக நண்பர் சொன்னார். அதைப்பற்றி அடுத்த பதிவில் எழுதவுள்ளேன். நீங்கள் அதையாவது சாப்பிட்டு நலம் அடைய வேன்டும்!

    ReplyDelete
  16. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  17. பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி வரலாற்றுச் சுவடுகள்!!

    ReplyDelete
  18. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  19. இனிய பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  20. பாராட்டுக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் தனபாலன்!

    ReplyDelete
  21. பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றிம்மா..தங்கள் தோழி விரைவில் குணமடைய ப்ரார்த்தனைகள்!!

    ReplyDelete
  22. பலருக்கும் பயனுள்ள பகிர்வு இது. மிகவும் நன்றி மனோ மேடம். தங்கள் தோழி விரைவில் குணமடைந்து மீள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  23. மிகப் பயனுள்ள தகவல்கள்.நன்றி

    ReplyDelete
  24. அருமையான பயனுள்ள தகவல் மிக்க நன்றி பகிர்வுக்கு .உங்கள் தேடல் மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  25. அவசியமான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.

    ReplyDelete
  26. http://kovaikkavi.wordpress.com/2010/09/17/78-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/
    நல்ல பதிவு சகோதரி. எனக்கும் அஞ்சியோகிராம் செய்யப்பட்டது.
    இதயம் நின்று விட்டது. (எனக்குத் தூங்கியெழுந்தது போல இருந்தது.)
    கையால் அழுத்தி(பம்ப் பண்ணி) சுவாசம் வந்தது.
    பதிவு பலருக்குப் பயன் படட்டும். நல்வாழ்த்து.
    அந்த அனுபவக் கவிதை லிங்க் தந்துள்ளேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  27. கருத்துரைக்கும் என் தோழிக்கான பிரார்த்தனைக்கும் அன்பு நன்றி மேனகா! என் தோழியைப்பற்றி அடுத்த பதிவில் எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  28. கருத்துரைக்கும் என் தோழிக்கான பிரார்த்தனைக்கும் அன்பு நன்றி கீதா! என் தோழியைப்பற்றி அடுத்த பதிவில் எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  29. சகோதரர் சென்னை பித்தன் அவர்களுக்கு,
    கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி !

    ReplyDelete
  30. கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி அம்பாளடியாள்!!

    ReplyDelete
  31. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!!

    ReplyDelete
  32. பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வேதா! உங்கள் அனுபவம் சிலீரென இருக்கிறது எனக்கு! செய்த நல்லவை தங்களைக் காத்திருக்கிறது! உங்கள் கவிதையைப்பற்றிய குறிப்பைப் படிக்க இயலவில்லை.

    ReplyDelete