Sunday, 30 October 2011

ரசனைக்கு எல்லையில்லை!!!

சமீபத்தில் நான் ரசித்த சிலவற்றை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் முத்து ஒரு குட்டிக்கதை.

எந்த ஒரு விஷயத்திற்கும் பல கோணங்கள் உண்டு. தேர்ந்தெடுக்கும் கோணத்தைப்பொறுத்தே வாழ்க்கை வெற்றியாகவும் தோல்வியாகவும் அமைகிறது. ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பழங்கால மொழி தான் ஞாபகம் வருகிறது இந்தக்குட்டிக்கதையை படிக்கும்போது. இனி கதை.. .. ..


மிகப்பெரிய ஷூ கம்பெனி ஒரு கிராமத்திற்கு தன் ஆட்கள் இரண்டு பேரை அனுப்பி, அங்கே ஷூ விற்பனை செய்வதற்கான வாய்ப்பு எப்படி இருக்கின்றன என்பதை அறிந்து வருமாறு சொல்லி அனுப்பியது.

சில நாட்கள் கழித்து, முதலாம் ஆள் ‘ இங்கே இருப்பவர்கள் யாரும் ஷூ அணிவதில்லை. இங்கே நம் ஷூக்கள் விற்பனையாவது கஷ்டம்’ என்று கம்பெனிக்குத் தகவல் அனுப்பியிருந்தான்.

இரண்டாவது ஆள், ‘ இங்கே யாருமே ஷூ அணிவதில்லை. அனைவருக்கும் காலணியின் முக்கியத்துவத்தை உனர்த்தினால் அனைவரையுமே நம் வாடிக்கையாளர்களாக ஆக்கி விடலாம்’ என்று தகவல் அனுப்பியிருந்தான்.

நம் கண்ணோட்டத்தைப் பொறுத்தே வாழ்க்கை எளிதாகவும் கடினமாகவும் தெரிகிறது’!

இந்த இரண்டாவது முத்து ஒரு மாத இதழில் படித்து வியந்த செய்தி. இதனால் கோழியின் விலையும் எதிர்காலத்தில் உயர்ந்து விடுமோ?


பெட்ரோல், டீசல் இவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அவற்றால் வெளிப்படும் புகையால் சுற்றுப்புறச் சூழலும் மாசு படுகிறது. இதற்கு மாற்று எரிபொருளைக் குறித்த ஆய்வும் ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டே வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கோழி மற்றும் மாட்டு இறைச்சியிலுள்ள கொழுப்பிலிருந்து சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான, விமானத்திற்கான எரிபொருளைக் கண்டு பிடித்துள்ளனர். முதற்கட்ட சோதனையில் எரிபொருளின் தரம், இயந்திரங்களின் செயல் திறன், பாதுகாப்பு, அதன் நச்சுத்தனமை என்று எல்லா சோதனைகளிலும் கோழி எரிபொருள் வெற்றி பெற்றுள்ளது. விரைவில் கோழி எரிபொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

மூன்றாவது முத்து நான் ஒரு வார இதழில். மிகவும் ரசித்துப் படித்த ஒரு வாசகம். எத்தனை தன்னம்பிக்கையான வாசகம்!

இது ஒரு ஆட்டோவின் பின்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம்:

நம்மால் முடியாதது யாராலும் முடியாது.

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!




37 comments:

  1. தாங்கள் ரசித்த முத்துக்கள் மூன்றுமே அருமை தான். முதல் முத்து மட்டும் நானும் படித்து ஏற்கனவே ரசித்தேன்.

    ரசனைக்கு எல்லையில்லை என்பது உண்மை தான். நல்ல தலைப்பு.

    பகிர்வுக்கு நன்றிகள்.vgk

    ReplyDelete
  2. முதல் முத்து குட்டிக்கதை அருமை.படிப்பினை ஊட்டக்கூடியது.

    //விரைவில் கோழி எரிபொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.//அப்போ அசைவப்பிரியர்கள் கதி அதோ கதியா?


    நம்மால் முடியாதது யாராலும் முடியாது.

    யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!’’
    அடடா..அருமையான வாசகமாக இருக்கின்றதே!அக்கா!இந்த பதிவைப்பாருங்கள்.உங்களைகண்டிப்பாக கவரும்.http://shadiqah.blogspot.com/2011/10/blog-post_30.html

    ReplyDelete
  3. தன்னம்பிக்கை ஊட்டிப்போகும் முதல் மற்றும்
    மூன்றாம் முத்துக்கள் மிக மிக் அருமை
    கோழி உயிரோடு இருக்கும்போதை விட
    இல்லாதபோது மிக வேகமாக ஓடப்போகிறது
    செத்தும் கொடுக்கும் சீதக்காதி பட்டியலில்
    இனி கோழியும் சேர்ந்துவிடும்
    புதிய தகவலை பதிவாக்கித் தந்தமைக்குனன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நம்மால் முடியாதது யாராலும் முடியாது.

    யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!

    எத்தனை தன்னம்பிக்கையான வாசகம்!

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. மூன்று முத்துகளுமே அருமை... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. //நம் கண்ணோட்டத்தைப் பொறுத்தே வாழ்க்கை எளிதாகவும் கடினமாகவும் தெரிகிறது’!//

    ஆம் மேடம், அருமையாக சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
  7. முத்துக்கள் மூன்றுமே நல்ல பகிர்வு...

    ReplyDelete
  8. அம்மா...
    முத்துக்கள் மூன்றும் அருமை.
    கடைசி முத்து அருமையிலும் அருமை.

    ReplyDelete
  9. //நம் கண்ணோட்டத்தைப் பொறுத்தே வாழ்க்கை எளிதாகவும் கடினமாகவும் தெரிகிறது’!//
    முத்துக்கள் மூன்றும் அருமை.

    ReplyDelete
  10. நம்மால் முடியாதது யாராலும் முடியாது.

    யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!//

    அடடே சூப்பரா இருக்கே...!!!

    ReplyDelete
  11. //யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்//

    தன்னம்பிக்கையை ஊட்டும் வாசகம் .
    மூன்று முத்துக்களும் அருமை

    ReplyDelete
  12. முதல் முத்து ஏற்கெனவே படித்து ரசித்தது.
    இரண்டாவது முத்து ஆச்சர்யம்.
    மூன்றாவது முத்து பிரமாதம்.

    ReplyDelete
  13. முத்துக்கள் மூன்றுமே நல்லா இருக்கு.

    ReplyDelete
  14. விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  15. ரசித்துப் படித்து, ஒவ்வொன்றுக்கும் அழகான கருத்துரை எழுதியத‌ற்கு அன்பு நன்றி ஸாதிகா!

    உங்கள் பதிவை நான் ஏற்கனவே படித்து பின்னூட்டமும் கொடுத்து விட்டேன்.

    ReplyDelete
  16. இனிய கருத்துரைகள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  17. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  18. பாராட்டிற்கு அன்பு நன்றி ராம்வி!

    ReplyDelete
  19. இனிய கருத்துக்கு அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  20. எனக்கும் அந்த கடைசி முத்து மிகவும் பிடித்திருந்தது. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  21. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்!

    ReplyDelete
  22. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் நாஞ்சில் மனோ!

    ReplyDelete
  23. பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பார்ந்த நன்றி ஏஞ்சலின்!!

    ReplyDelete
  24. இனிய கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    ReplyDelete
  25. இனிய பாராட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி லக்ஷ்மி!!

    ReplyDelete
  26. அசத்தல், ஆச்சர்யம், அற்புதம். முத்துக்கள் மூன்றும் வெகு அருமை. பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  27. முத்தான மூன்று முத்துகள் அருமை! நமது உன்னிப்பாக கவனிப்பில் கருத்துகள் பல மாற்றங்கள் கொள்ளுகின்றன. எதையும் எப்படி எடுக்கிறோம் என்பதில் தான் அத்தனையும் அடங்குகிறது. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  28. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  29. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. மூன்றுமே நல்ல பகிர்வு.

    ReplyDelete
  31. நம்மால் முடியாதது யாராலும் முடியாது.

    யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்:)

    ReplyDelete
  32. விரிவான பாராட்டுரைக்கு அன்பு நன்றி கீதா!

    ReplyDelete
  33. அருமையான கருத்துக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி வேதா!

    ReplyDelete
  34. பாராட்டிற்கும் அன்பான வாழ்த்திற்கும் இனிய நன்றி மதன்மணி!!

    ReplyDelete
  35. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  36. வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் மழை!!

    ReplyDelete
  37. முத்துக்கள் மூன்றும் மிகவும் அருமை. அடிக்கடி உங்கள் வலை பதிவை பார்க்கிறேன், படிக்கிறேன் என்றாலும் உடனே என்னால் பின்னூட்டங்கள் போட முடிவதிலை. நீங்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு என் (மிகவும் ) தாமதமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேடம். உங்கள் வாழ்த்திலும், ஆசியிலும் இன்னும் வளர்வேன்.....நன்றிகள் பல.....

    ReplyDelete