Monday, 15 August 2011

இட்லி மாவில் பாக்டீரியா!!!

சில மாதங்களுக்கு முன் தினசரியிலும் மாத இதழ்களிலும் சில விழிப்புணர்வுச் செய்திகளைப் படிக்க நேர்ந்தது. எல்லாமே அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் தாம். இவை அனைவருக்கும் பயன் தர வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

முதலாவது முத்து:
 
சமீப காலத்தில் ரெடிமேட் தோசை, இட்லி மாவு சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன ஜோராக விற்பனையாகி வருகிறது. அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அவசரத்தேவைக்கு இது வரப்பிரசாதமாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் படித்த ஒரு செய்தி மனதை அப்படியே கலக்கியது. பெண்களுக்கு இந்த அவசர யுகத்தில் பல விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம் தேவைப்படுகின்றது. ஆனால் இட்லி மாவு விஷயத்தில்கூட விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்பதை நம்பவே முடியவில்லை. 

இன்று சில வகை ரெடிமேட் தோசைமாவு உயிருக்கே உலை வைக்கக்கூடிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

சிலர் மாவு தயாரிக்கும்போது ஏரி, குளம் போன்ற பொது இடத்தில் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்களாம். சுத்தமில்லாத அந்த நீரில் விலங்குகளின் கழிவுகள் அதிக அளவில் கலந்திருக்கும். இந்தக் கழிவுகள் ஹைட்ரஜன் சல்பைடு தன்மை உள்ள பாக்டீரியாவை உண்டாக்குகின்றன. இந்த பாக்டீரியாக்க்களால் தீவிர வயிற்று வலி, வாந்தி, குமட்டல், கடும் வயிற்றுப்போக்கு போன்றவை தொடர்கதையாகி, அதோடு வேறு ஏதேனும் நோயும் சேரும்போது உயிரே போகக்கூடிய விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த விபரங்களைக் கூறிய கன்ஸ்யூமர் அமைப்பைச் சேர்ந்த திரு.தேசிகன், சமீபத்தில அவர்கள் சென்னையில் நடத்திய சோதனையில் கடைகளில் விற்கும் 55 சதவிகித இட்லி, தோசைமாவில் இந்த பாக்டீரியாக்கள் கலந்திருப்பதைக் கண்டுபிடித்ததாகச் சொல்லுகிறார்.

இரண்டாவது முத்து:


குன்னூரில் உள்ல தேயிலை வாரியம் தேயிலையின் தரத்தைப் பெருக்கவும் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்பட்டு வருகின்றது. இவர்கள் சமீபத்தில் நடத்திய பரிசோதனைகளில் ஆந்திரா, தமிழகத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்களில் தேயிலையில் கலப்படம் செய்து விற்று வருவதாக கண்டுபிடித்திருக்கின்றனர். புற்று நோயை உண்டாக்கும் ஜிலேபி பவுடரை அதில் கலக்கி விற்கிறார்கள். ஒரு ஸ்பூன் கலப்பட தேயிலையில் 4 கப் தேனீர் தயாரிக்க முடியுமென்பதால் இந்தக் கலப்பட தேயிலை அமோகமாக விற்பனை ஆகிறது. பல பெரிய நிறுவனங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளன. இந்த வாரியம் சட்ட உதவியுடன் தேயிலை வியாபாரத்தில் இந்த மாதிரி நிறுவனங்கள் கலந்து கொள்ள முடியாதபடி செய்து விட்டாலும் அவர்கள் ஹைகோர்ட்டில் தடை வாங்கி தொடர்ந்து இந்த வியாபாரத்தை செய்து வருகின்றார்களாம்.

நல்ல தேயிலையை எப்படி கண்டு பிடிப்பது என்பதையும் அவர்களே சொல்லித் தருகிறார்கள். தேயிலையை சாதாரண நீரில் போட்டால் உடனேயே சிவந்த கலர் வந்தால் அது கலப்பட தேயிலை. நல்ல தேயிலையை சாதாரண நீரில் கலந்தால் கலர் மாறாது. வெந்நீரில் போட்டால் மட்டுமே நல்ல தேயிலை சிவந்த கலருக்கு மாறும்.

மூன்றாவது முத்து:

இதுவும் ஒரு மாத இதழ் செய்தி தான்! சமையல் செய்யும்போது ஸ்டவ் அருகே ஓடிய கரப்பான் பூச்சியைக் கொல்ல ஸ்ப்ரே செய்ததால் உடனேயே காஸ் சிலிண்டர் வெடித்து அந்த வீட்டுப் பெண்மணி பலத்த காயமடந்து உயிருக்குப் போராடி வருவதாக தகவல். இந்தத் தகவலையொட்டி இந்த இதழ் ரிப்போர்ட்டர் தீயணைப்பு அதிகாரியிடம் விபரம் கேட்ட போது ‘கரப்பான் பூச்சிக்கான ஸ்ப்ரே என்றில்லை, செண்ட், பாடி ஸ்ப்ரே, நக பாலிஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருள்களை சமையலறையில் பயன்படுத்தவே கூடாதென்றும், அனைத்து ஸ்ப்ரேக்களுமே 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்திலேயே வெடிக்ககூடியவை என்றும் அவர் தெரிவித்தாராம்.

பொதுவாக இந்த மூன்று விஷயங்களிலுமே பெண்கள் கவனமாக இருப்பது மிக நல்லது.







37 comments:

  1. பயனுள்ள பதிவு.

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  2. தெரிந்த விடயங்கள்தான் என்றாலும் அடிக்கடி இப்படி நினைவூட்டப் படுவது அவசியம்தான்.
    உபயோகமான பதிவு அக்கா.

    ReplyDelete
  3. தோசைமாவு மிக அதிர்ச்சியூட்டு கிறது மனோக்கா.
    முன்றுமே அருமையான விழிப்புணவு தரும் சிந்தனை முத்துக்கள்.

    ReplyDelete
  4. முத்தான மூன்று முத்துக்கள்.அனைவரும் டெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். நல்ல பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. முதல் முத்து : உவ்வ்வ்வ்வே...
    இரண்டாம் முத்து: அட!
    மூன்றாம் முத்து : அப்படியா!!(என் இல்லத்தரசி ஓடுகிற கரப்பை துரத்தி, காலால் நசுக்கியே கொல்லும் ’வீரம்’ படைத்தவள்)

    ReplyDelete
  6. மிகவும் ப்யனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
  7. மூன்று தகவல்களும் முத்தான தகவல்கள்
    எங்களுக்கு தெரியாத் தகவல்கள்தான்
    அறியத் தந்தமைக்கு நன்றி
    சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள பதிவு.இது போன்ற பல விஷயங்களில் விழிப்புணர்வு தேவை.பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  9. தோசை மாவு - ஐந்தாறு வருடங்களுக்கு முன், பாக்கெட் மாவுகள் இங்கே அபுதாபியில் கிடைக்காத காலம் அது. செய்தித்தாளில் ஒரு இந்தியத் தம்பதியரின் இரு (பெண்) குழந்தைகளும் தோசையினால் ஏற்பட்ட ஃபுட் பாய்ஸனால் இறந்துவிட்டதாகச் செய்தித்தாளில் ஒரு சிறு பத்திச் செய்தி பார்த்தேன். மிகவும் அதிர்ந்து போனேன்!! மேல் விவரங்களுக்குச் செய்தித்தாளுக்குக் கடிதம் எழுதியும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

    வீட்டில் தயாரித்த தோசை மாவு, அம்மா சுட்டுக் கொடுத்தத் தோசை - எனும்போதே இப்படியென்றால், பாக்கெட் மாவுகள்?? அதுவும் இந்தியாவில்?? இங்கே சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப் படுபவைகள்தான் என நினைக்கிறேன்.

    அந்தச் செய்தியின் அதிர்ச்சி எனக்கு இன்னும் இருக்கிறது. அதேபோல இன்னொன்று, பத்து வருடங்கள் இருக்குமென நினைக்கிறேன். கேரளாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதியர் - ஷார்ஜாவில், தம் வீட்டில் தயாரித்த பழ ஜூஸை மறுநாள் அருந்தியதில், இருவருமே வாந்தியெடுத்தே இறந்துவிட்டனர். அந்தச் சம்பவத்தின் விவரிப்பும் என்னால் மறக்கவே முடியாது.

    வீட்டில் தயாரித்த பொருட்களே இப்படியெனும்போது, கடைகளில் வாங்கும் raw பொருட்களின் தரமும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். அதேபோல, சிலர், மட்டன்/சிக்கன்/மீன் ஆகியவற்றை ஃப்ரீஸரிலிருந்து எடுத்து மணிக்கணக்கில் வெளியே போட்டிருப்பார்கள். ஐஸ் போகட்டும் என்று. மிகவும் தவறானது இது!!

    ReplyDelete
  10. மூன்றுமே முத்தான முத்தல்லவோ...

    நிறைய விஷயங்கள் இப்படித்தான் அதிர்ச்சியூட்டுகின்றன. வேலை நிமித்தமாய் இப்படி ரெடிமேட் மோகம் பிடித்து விடுகிறது. இட்லி-தோசை மாவிலிருந்து, ”ரெடி டு ஈட்” பொருட்கள் வரை அனைத்திலும் பிரச்சனைதான். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் நாமே தயாரித்து செய்யும் பதார்த்தங்களுக்கும் இது போன்றவற்றிற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்.

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. மூன்றுமே மிகவும் பயனுள்ள டிப்ஸ்...

    ReplyDelete
  12. பெண்கள் மட்டுமா? சமையல் செய்யும் ஆண்களும் தான்!

    ReplyDelete
  13. படித்த தகவல்கள் ஆயினும் தேவைகள் சில சமயம் எச்சரிக்கைகளைப் புறம் தள்ளுகின்றன. தேயிலையா, தேயிலைப் பொடியா....எதைத் தண்ணீரில் விட்டு டெஸ்ட் செய்வது? கேஸ் பற்றிய விஷயம் கொடுமையானது. கேஸ் லீக் ஆகும் சமயங்களில் மின் விளக்கு சுவிட்ச்சை உபயோகிப்பதே உயிருக்குக் கேடு விளைவிக்கும் செயலாகி விடும்.

    ReplyDelete
  14. அந்த காலத்தில் வீட்டில் இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் போது இதுப்போல ஆரோக்கிய குறைப்பாடு , பயம் எல்லாம் இல்லை .
    இப்போது சோம்பல் , அவரகதியில் இருப்பதால் இலவசமா வியாதியும் கூடவே வருகிறது :-(

    ஒவ்வொரு முறையும் பயந்துகிட்டு டீ குடிப்பதை விட கம்பங்கூழ் வீட்டிலேயே செஞ்சி குடிப்பது எவ்வளவோ மேல் .
    கரப்பான் பூச்சி ...அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. மிகவும் பயனுள்ள செய்திகள். நல்ல பதிவு. பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  16. பயனுள்ள பதிவு.

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  17. சில மாதங்களுக்கு முன் மீடியாக்களில் பரபரப்பாக உலா வந்த செய்தி.சோம்பலைப்பார்க்காமல் வீட்டிலேயே அரைத்துக்கொண்டால் சுகாதரத்துக்கும் சுகாதாரம்.சேமிப்புக்கும் சேமிப்பு,

    ReplyDelete
  18. அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு அம்மா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  19. பயனுள்ள தகவல்கள்!

    ReplyDelete
  20. வரவேற்க்கப்படவேண்டிய பதிவு, அதிலும் அந்த ஸ்ப்ரே பற்றிய செய்தி உபயோகமானது,,,,

    ReplyDelete
  21. ஸ்ப்ரே ..திகிலா இருக்குங்க..

    ReplyDelete
  22. பயனுள்ள முத்துக்கள் மூன்று.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  23. முத்துக்கள் மூன்றும் தேவையான
    பதிவுகள்
    அருமை அனைவருக்கும்
    பயனபடும்
    என் வலைக் கண்டுவந்ததற்கு
    வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. விழிப்புணர்வு உண்டாக்கும் பதிவுகளுக்கு நன்றியும் பாராட்டும். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் இருந்தால் பல விபத்துகளைத் தவிர்க்க இயலும் என்பதை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  25. உங்களுக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோதரர் கலாநேசன்!
    கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  26. அன்பான பின்னூட்டத்திற்கு இனிய நன்றி இமா!

    ReplyDelete
  27. ஆமாம் ஜலீலா, தோசை மாவு பற்றி அறிந்ததும் எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஊரிலிருக்கும் என் சினேகிதிகளிடமும் தெரிவித்து விட்டேன்.

    ReplyDelete
  28. பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி சகோதரி லக்ஷ்மி!

    ReplyDelete
  29. உங்கள் இல்லத்தரசிக்கு உண்மையிலேயே மனம் நிறைந்த பாராட்டுக்கள் சகோதரர் லக்ஷ்மிநாராயணன்!

    ReplyDelete
  30. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  31. கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!
    உங்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. பாராட்டிற்கும் கருத்துக்கும் அன்பு நன்றி ராம்வி!!

    ReplyDelete
  33. நிறைய விஷயங்கள் எழுதியத‌ற்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!
    நீங்கள் எழுதியுள்ள விஷயங்களைப்பற்றி நானும் கேள்விப்பட்டு மனம் கலங்கியிருக்கிறேன். தற்போது துபாய், ஷார்ஜாவில் கிடைக்கும் மாவு வ‌கைகள் எல்லாமே அங்கேயே தான் தயாராகின்றன. பெரும்பாலான மாவு வகைகள் எங்களுக்குத் தெரிந்த தமிழ் நண்பர்கள் தயார் செய்வது தான். ஐக்கிய அரபுக் குடியரசில் மாவு தயார் செய்ய பெரும் சட்ட திட்டங்கள், பரிசோதனைகள் எல்லாமே உண்டு. எல்லாவற்றையுமே பாஸ் செய்த பின் தான் லைசென்ஸே தருவார்கள். அப்படியும் மாதம் சில முறைகள் திடீர் பரிசோதனைகளும் உண்டு.

    ReplyDelete
  34. மூன்று முத்தான தகவல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் .
    உங்கள் வரவுக்காக என் தளம் காத்துக்கிடக்கின்றது.நன்றி அம்மா
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  35. விரிவான பின்னூட்டத்திற்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்! நீங்கள் சொல்வது உன்மைதான். இருந்தாலும் இந்த ரெடிமேட் இட்லி மாவு பல பெண்களுக்கு அவசர தேவைகளுக்கு உதவியாய் இருந்ததைப்பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் படித்த பின், இனிமேல் வாங்க தைரியம் வராது.

    ReplyDelete
  36. மூன்று முத்துக்களும் சத்துக்கள் அருமை

    ReplyDelete