Wednesday, 2 February 2011

அலைகடலும் வயிற்றுப்பசியும்!

சமீபத்தில் வரைந்த வாட்டர் கலர் ஓவியம் இது. அதிக வண்னங்கள் உபயோகிக்கவில்லை. கறுப்பும் வெள்ளையும்தான் பிரதான வண்ண‌ங்கள். மற்றும் பலவித நீல நிற தீற்றல்கள் அதிகம்.


"அலைகடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக்கொடுப்பவர் இங்கே!" என்ற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது!

47 comments:

  1. ஆஹா மனோ அக்கா பிரமாதம்,இப்ப உள்ள சூழ்நிலைக்கு தகுந்த ஓவியம்,வாசகம் அருமையக்கா.

    ReplyDelete
  2. பகிர்விற்கு நன்றி மேடம்

    ReplyDelete
  3. அருமையான ஓவியம். வலியையும், அவர்கள் வாழ்க்கை நிலையையும் சொல்கிறதே.

    ReplyDelete
  4. //என்ற பழைய பாடல் //

    சித்திரம் பேசுகிறது மீனவரின் வேதனையை. நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  5. ரொம்ப இயல்பா இயற்கையா அருமையா இருக்கு அக்கா...பாடல் வரிகள் மீனவரின் துயரத்தை நினைவு படுத்துகிறது

    ReplyDelete
  6. ஓவியத்தை ஒரு பக்கம் வியக்க, மறு புறம் மனதில் சோகம் கவிகிறது

    ReplyDelete
  7. அருமையான ஓவியம். மீனவரின் வேதனையை பேசுகிறது ஓவியம்.

    ReplyDelete
  8. மிகப் ப்ரமாதமான ஓவியம்
    சமீபத்தில் வரைந்தது இது எனில்
    இன்னும் சிறப்பானவைகள்
    கைவசம் இருக்கக் கூடும்
    பார்க்க ஆவலாக உள்ளோம்...
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  9. கவிதை வடிவங்களையும் எழுத்து வடிவங்களையும் விட
    ஓவியம் சிறப்பான பரிமாற்ற தன்மை உடையது.
    எழுத படிக்க தெரியாதவர்கள் கூட ஓவியத்தின்
    உள் கருத்தையும் உணர்வையும் புரிந்து கொள்ள இயலும்,
    இதற்கு மொழி அறிவு அவசியமில்லை
    அந்த ஓவிய திறமை தங்களுக்கு அற்புத திறமையாக இறைவனால்
    பரிசளிக்க பட்டுள்ளது.அந்த பரிசையும் எங்களுக்கு விருந்தாக அளித்து
    பகிர்ந்தமைக்கு நன்றி

    கை வண்ணம் அருமை

    ReplyDelete
  10. மிகவும் அழகான ஓவியம் மேடம்.வெறும் வார்த்தைகளால் விபரிக்கமுடியவில்லை.கதைசொல்லும் காவியமாக இருக்கிறது.நன்றி.

    ReplyDelete
  11. அருமையான ஒவியம்.தகுந்த வாசகங்களும் அதைவிட அருமை.

    ReplyDelete
  12. சூப்பர் மனோ அக்கா, கடல் அப்படியே ஆடுவதுபோலவே கண்ணுக்குத் தெரியுது.

    ReplyDelete
  13. அருமையான படம் அவர்களின் மொத்த வலியும் ஒரே போட்டோவில் காட்டி விட்டீர்கள் அருமை...

    ReplyDelete
  14. அருமையான ஓவியம். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எதிர்கொள்வேன் எனச் சொல்வது போல இருக்கிறது இந்த மீனவரின் வலை! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. தங்கள் ’ஓவியத்தில்’ தெரிகிறதே; மிகப்பெரியதோர்
    ’காவியம்’ !

    என் மனமார்ந்த பாராட்டுக்கள்

    வரைந்த தங்கள் விரல்களுக்கும் !
    வழங்கிய இந்த பதிவிற்கும் !!

    ReplyDelete
  16. அருமையா இருக்கும்மா ஓவியம். இப்போ இருக்கும் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரியும், சொல்லும் அர்த்தங்களும் மனதை சங்கடப் படுத்துகின்றன.

    ReplyDelete
  17. அருமையான ஒவியம்,மிக அருமை வாசகம்.

    ReplyDelete
  18. ஆஹா அருமை அருமை..நீங்கள் எக்சிபிஷன் எதுவும் வைத்தால் சொல்லுங்கள் கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்

    ReplyDelete
  19. ஒரே ஓவியத்தில் மிக அருமையாக சித்தரித்து விட்டீர்கள் மனொ

    ReplyDelete
  20. மிகவும் அழகான ஒவியம்...

    ReplyDelete
  21. கண்கள் ஓவியத்தைப் பார்க்கின்றன,கண்ணீருடன்!!!

    ReplyDelete
  22. ரெம்ப நாளாச்சு மனோ அக்கா, இப்பத்தான் எல்லார் வலையிலும் படித்துக்கொண்டுள்ளேன். இந்த பதிவு மனதை சங்கடப்படுத்துகிறது. அவர்களின் துயரங்கள் என்ரு தீருமோ?? ட்விட்டர் மூலம் நடக்கும் போராட்டமும் தேய்ந்து கொண்டே வருகிறது :(

    ReplyDelete
  23. உங்களின் ஓவியம் வரையும் திறமைக்கு ஒரு சபாஷ்!! :)

    ReplyDelete
  24. மனோ மேடம்....

    மிக பிரமாதமாக உள்ளது இந்த வாட்டர் கலர் ஓவியம்.

    நேரில் பார்ப்பது போன்றே உள்ளது...

    உங்களின் ஓவியத்திறமைக்கு என் சல்யூட் இதோ... பெற்றுக்கொள்ளுங்கள்....

    வாழ்த்துக்கள் மனோ மேடம்...

    ***********

    நான் அனுப்பியுள்ள குறும்படத்தை பார்த்து கருத்து பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன்...

    ReplyDelete
  25. தாங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
    http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_05.html

    ReplyDelete
  26. அருமையான் ஓவியம் மனோ அக்கா

    ReplyDelete
  27. இது ஒரு நீரோவியம்....நீரால், நீரை, நீர் வரைந்த அற்புத ஓவியம்....!

    ReplyDelete
  28. பாராட்டுக்கு அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  29. அன்புள்ள‌ சகோதரர்கள் கோபி, மோகன் குமார்!
    பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  30. அன்புள்ள‌ கெள்சல்யா!
    அன்பு ராமலக்ஷ்மி!
    அன்பு ராஜி!
    உங்கள் பாராட்டும் கருத்தும் முத்துக்களாய் என் ஓவியத்திற்கு அணி சேர்க்கின்றன!
    உங்களுக்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  31. அன்புள்ள‌ திரு.ரமணி அவர்களுக்கு!
    தங்களின் பாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி!
    நான் ஏற்கனவே சில ஓவியங்களை இங்கு வெளியிட்டுள்ளேன்.
    இனியும் நேரம் கிடைக்கும்போது வரைந்து இங்கு வெளியிடுவேன்.
    தங்கள் ஊக்கத்திற்கும் நன்றி!!

    ReplyDelete
  32. அன்புச் சகோதரிகள் சித்ரா, ஆதிரா, லக்ஷ்மி, ரமா!
    தங்கள் யாவருடைய பாராட்டிற்கும் அன்பான நன்றிகள் பல!!

    ReplyDelete
  33. அன்புள்ள‌ குறிஞ்சி!
    அன்புச் சகோதரர்கள் வெங்கட் நாகராஜ், குமார்!!
    தங்களுடைய கருத்துக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி!!

    ReplyDelete
  34. அன்புச் சகோதரர் நாஞ்சில் மனோ!
    தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி!!

    ReplyDelete
  35. அன்புச் சகோதரர்கள் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி, வை.கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி நாராயண‌ன்!
    தங்கள் அனைவரின் இனிய பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றி!!

    ReplyDelete
  36. அன்புச் சகோதரிகள் ஆதி, ஆயிஷா, மேனகா, தளிகா, தேனம்மை!
    தங்கள் அனைவரின் இனிய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி!!

    ReplyDelete
  37. அன்புச் சகோதரிகள் ஜலீலா, காஞ்சனா!
    தங்களின் இனிய பாராட்டுக்களுக்கு உளம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  38. அன்புச் சகோதரர் கோபி!
    தங்களின் உள‌மார்ந்த பாராட்டிற்கு என் மகிழ்வும் அன்பும் கலந்த நன்றி!!

    ReplyDelete
  39. அன்புச் சகோதரி அன்னு!

    உங்கள் பாராட்டும் வருகையும் என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது!
    அன்பு நன்றி உங்களுக்கு!!

    ReplyDelete
  40. அக்கா,தாமதமாக வ்ந்திருக்கிறேன்.அருமை.உயிரோட்டமாக உள்ளது.

    ReplyDelete
  41. beautiful, you are a great allrounder madam

    ReplyDelete
  42. மனோ அக்கா உங்கள் கைவண்ணமா இது...?
    மிகவும் நன்றாக இருக்குக்கா... உயிரோட்டாம் உள்ள ஓவியம்.பார்த்து கொண்டே இருக்கணும் போல் உள்ளது.
    வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  43. மிகவும் அழகான ஓவியம் மேடம்!

    ReplyDelete
  44. அன்பு தமிழ் உறவே!
    வணக்கம்!

    இன்றைய வலைச் சரத்தின்,
    திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களின்
    வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை.


    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!

    வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
    உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
    உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
    தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

    ReplyDelete