Wednesday, 19 January 2011

அனுபவ அலைகள்

சகோதரி ஆசியா தன் வலைப்பூவில் 2010 டைரியின் முக்கிய நிகழ்வுகளையும் 2011-ன் எதிர்பார்ப்புகள் பற்றியும் எழுதி, இந்த தொடர்பதிவிற்கு என்னையும் அழைத்திருந்தார். அவரின் அழைப்பிற்கிணங்க இத்தொடர் பதிவை எழுத ஆரம்பிக்கிறேன்.
2010 டைரி:

பிப்ரவரி மாதம்:

என் கணவரின் பிறந்த நாளிற்காக மைசூர் பயணத்தை என் மகன் ஏற்பாடு செய்திருந்தார். வழக்கம்போல மைசூர் அரண்மனை, பிருந்தாவன் கார்டன்ஸ் இவற்றைப்பார்த்த பிறகு, நானாகவே இரண்டு இடங்களைத் தேர்வு செய்திருந்தேன். ஒன்று மைசூரிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சோம்நாத்பூர் என்ற ஊரிலுள்ள ஆலயம். ஹொய்சாள அரசன் மூன்றாம் நரசிம்ஹனின் ஆட்சியில் அவனது கமாண்டரால் கி.பி.1268-ல் கட்டப்பட்ட ஆலயம்.


காவிரிக்கரை ஓரமாக அமைந்த இந்த ஊர் மிகச் சிறிய கிராமம். அமைதியான ஒரு இடத்தில் தனித்து நிற்கிறது இந்த ஆலயம். ஹொய்ஸாளர்கள் ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட கேசவப் பெருமாள் ஆலயம் இது. பல்லவர் காலத்து சிற்பக்கலையை நினைவூட்டும் விதமாய் பிரமிக்க வைத்தது இந்தக்கோவிலின் சிற்பங்கள். நுணுக்கமாக செதுக்கப்பட்ட அழகான சிற்பங்கள் கோவிலைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் நட்சத்திர வடிவ பிரகாரம் முழுக்க நம்மை அசர வைக்கின்றன. ஒரு இஞ்ச் இடம்கூட இடைவெளி இல்லாமல் எங்கு பார்த்தாலும் குட்டி குட்டியாக அழகு சிற்பங்கள்தான்! கருவறைக்கு உள்ளேயும் விதானங்களிலும் ராமாயணத்திலிருந்து பல காட்சிகள் சிற்பங்களாய் உருவெடுத்து நம்மை மயக்க வைக்கின்றன.

தங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ சரியான வசதிகள் இல்லாத மிகச் சிறிய கிராமம் இது. மைசூரில்தான் அதற்கான வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக நாங்கள் சென்ற இடம் 'பைலாகுப்பே' என்ற உள்ளடங்கிய சிறு கிராமம். இது குடகு மாவட்டத்தில் இருக்கின்றது. மைசூரிலிருந்து கிட்டத்தட்ட 2 மணி நேர கார்ப்பயணம். உள்ளடங்கிய சாலையில் போகும்போதே பலவிதமான வாகனங்களில் திபேத்தியர்கள் தென்படுகிறார்கள்.

ரொம்ப வருடங்களுக்கு முன் இங்கு வந்து நிரந்தரமாகத் தங்கி விட்ட திபேத்தியர்கள் [refugees] கட்டிய கோவில்கள் மற்றும் அவர்கள் தங்குமிடங்கள் இருக்கின்றன. இந்தத் தங்கக் கோவிலின் வளாகத்தினுள்ளே சென்றதுமே சப்தங்கள் மலிந்த நம் தென்னிந்தியா நம் கண்முன்னே மறைந்து விடுகிறது. முற்றிலும் புதிய, அமைதியான உலகத்திற்குள் நுழைவது போன்ற ஒரு உணர்வை தவிர்க்க முடியவில்லை. காவி உடை அணிந்த புத்த சன்னியாசிகள் சுற்றிலும் அமைதியாக நடந்து கொன்டிருக்கிறார்கள். அழகிய கலை வேலைப்பாடுகளும், ஓவியங்களும் நிறைந்த நாலைந்து கோவில்கள் நம்மை வரவேற்கின்றன. 40 உயரமுள்ள, தங்கத்தினாலான புத்தர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறார். இது போல தங்கத்தினாலான புத்தர் சிலைகள் நிறைய அங்கே இருக்கின்றன. தாய்லாந்து கோவில்களின் கட்டிடக்கலை அந்தக் கோவில்களில் மிளிர்கின்றது. சுற்றிலும் பசுமையான இலைகளும் மரங்களும் மலர்களுமாக வெளியில் சூழ்ந்திருக்கும் அந்த அமைதி மனதிலும் நுழைந்து விட்டதை உணர முடிந்தது. வெளி நாடுகளுக்குச் செல்லும்போது, எங்காவது தமிழர்களைப்பார்த்து விட்டால், அந்தப் புதிய உலகம் திடீரென சந்தோஷத்தை அதிகரித்து விடும். ஆனல், நம் இந்தியாவில், திடீரென ஒரு திபேத்திய உலகைப்பார்த்தபோது, நாம் இந்தியாவில்தான் இருக்கின்றோமா என்று சந்தேகமே தோன்றி விட்டது!

மார்ச் மாதம்:

நானும் ஒரு பதிவராக வலையுலகில் நுழைந்தேன். எத்தனை எத்தனை பேர்களுக்கு இந்த வலையுலகம் வடிகாலாயிருக்கிறது! வெளியுலகம் அறியாத, வெளியுலகில் புகழ்பெற்ற எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்களை விடவும் சிறந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும் இங்கே அசத்திக்கொண்டிருக்கிறார்கள்! அடக்கி வைக்கப்பட்ட மனப்பிரவாகங்கள் வலையுலகமெங்கும் பூஞ்சிதறல்களாய் தெறித்துக்கொன்டிருக்கின்றன.

மார்ச் இறுதியில் என் மருமகள் தான் பெற்ற குழந்தையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து எங்கள் உலகமே மாறி விட்டது! ஒவ்வொருத்தருக்கும் தான் பெற்ற குழந்தைகளை வளர்க்கும்போது, அதன் இனிமையை முழுமையாக அனுபவிக்க முடியாது வாழ்க்கைப்பிரச்சினைகள் அழுத்திக்கொண்டிருக்கும். நின்று நிதானித்து எதையும் ரசிக்க நேரமில்லாது நாட்கள் பறக்கும். ஒரு வழியாய் சுமைகள் இறங்கி நிமிர்ந்து பார்க்கையில் காலம் பல ஓடி மறைந்திருக்கும். வளர்ந்த குழந்தைகள் இறக்கை முளைத்துப் பறக்கத் துடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களின் படிப்பு, கடமைகள் என்று மறுபடியும் ஓடத்துவங்கி, அனைத்தும் முடியும்போது மூப்பு தொடங்கி, மனசின் ஆரவாரங்கள் அடங்கி அசந்து அமரும்போது, சோர்ந்து போன இதயத்தில் சில்லென்று மழைத்துளிகளைத் தூவுவதும் இளந்தென்றலாய் மனதை இதமாய்த் தடவுவதும் தன் கள்ளமற்ற புன்சிரிப்பில் உலகையே மறக்க வைப்பதுவும் ஒரு பச்சிளங்குழந்தையால் அனாசயமாக செய்ய முடிகிறது!

'பால் மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்!
பட்டாடைத் தொட்டிலிலே உன்னைப்போல் படுத்திருந்தேன்!
அந் நாளை நினைக்கையிலே என் வயதும் மாறுதடா!'

என்ற கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளின் அர்த்தம் இப்போதுதான் முழுமையாகப் புரிகிறது!

டிசம்பர் மாதம்:

சென்ற வருடத்தின் இறுதியில் என்னை ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்து பரிசுகளை அள்ளி வழங்கி கணவரும் மகனும் மருமகளும் என் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். உண்மையான அன்பையும்விட வேறு உயர்ந்த பரிசு எதுவும் உள்ளதா என்ன?

2011 எப்படி இருக்க வேன்டும்? இந்த வருடம் மட்டுமல்ல, எப்போதுமே பாரதியாரின் பாடல்போல வாழ்க்கை இருக்க வேண்டும்!

"மனதில் உறுதி வேண்டும்.
வாக்கினிலே இனிமை வேன்டும்.
நினைவு நல்லது வேண்டும்.
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
கனவு மெய்ப்பட வேண்டும்.
கைவசமாவது விரைவில் வேண்டும்.
தனமும் இன்பமும் வேண்டும்.
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்.
காரியத்தில் உறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்.
மண் பயனுற வேண்டும்.
வானகமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்"

52 comments:

  1. //மனதில் உறுதி வேண்டும்.
    வாக்கினிலே இனிமை வேன்டும்.
    நினைவு நல்லது வேண்டும்.
    நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
    கனவு மெய்ப்பட வேண்டும்.
    கைவசமாவது விரைவில் வேண்டும்.
    தனமும் இன்பமும் வேண்டும்.
    தரணியிலே பெருமை வேண்டும்.
    கண் திறந்திட வேண்டும்.
    காரியத்தில் உறுதி வேண்டும்.
    பெண் விடுதலை வேண்டும்.
    பெரிய கடவுள் காக்க வேண்டும்.
    மண் பயனுற வேண்டும்.
    வானகமிங்கு தென்பட வேண்டும்.//

    உங்கள் எண்ணம் போலவே இந்த வருடம் அமையட்டும் அம்மா.
    குட்டிக்கு சுத்திப் போடுங்க.

    ReplyDelete
  2. //வளர்ந்த குழந்தைகள் இறக்கை முளைத்துப் பறக்கத் துடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களின் படிப்பு, கடமைகள் என்று மறுபடியும் ஓடத்துவங்கி, அனைத்தும் முடியும்போது மூப்பு தொடங்கி, மனசின் ஆரவாரங்கள் அடங்கி அசந்து அமரும்போது, சோர்ந்து போன இதயத்தில் சில்லென்று மழைத்துளிகளைத் தூவுவதும் இளந்தென்றலாய் மனதை இதமாய்த் தடவுவதும் தன் கள்ளமற்ற புன்சிரிப்பில் உலைகையே மறக்க வைப்பதுவும் ஒரு பச்சிளங்குழந்தையால் அனாசயமாக செய்ய முடிகிறது! //அழகாக சொல்லி இருக்கின்றீர்கள் அக்கா.நிதர்சனமான உண்மையும் கூட.

    ReplyDelete
  3. இரத்தின சுருக்கமாக, முக்கிய நிகழ்வுகளை அருமையாக சொல்லி இருக்கீங்க.... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. உங்கள் எண்ணம் போலவே இந்த வருடமும்
    இருக்கட்டும் அம்மா...............
    குட்டி க்கு திருஷ்டி சுத்தி போடுங்க

    ReplyDelete
  5. உங்கள் ஆசைகள் 2011-ல் நிறைவேறட்டும் சகோ. நல்ல பகிர்வுக்கு நன்றி.

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  6. குட்டிப் பாப்பா கொள்ளை அழகு


    பாரதியார் பாடல் போல் வாழ்க்கை அமைய ப்ரார்த்திக்கின்றேன்

    ReplyDelete
  7. மனோ அக்கா, மைசூர் அனுபவங்கள், இடங்கள், தெரியாத இடத்தை தெரிந்து கொண்டேன்.
    உங்கள் செல்ல பேரன் கொள்ளை அழகு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்த்தை எப்பவேண்டுமானாலும் சொல்லலாம் இல்லையா?
    அழகான பளிச் டைரி

    ReplyDelete
  8. ஆமாக்கா, என் பெற்றோர் எங்கள் பிள்ளைகளோடு விளையாடும்போது நம்மிடம் இப்படியெல்லாம் இருந்ததில்லையே என்று பொறாமையா இருக்கும். அவர்களுக்கு அச்சமயத்தில் இருந்த பிரச்னைகள்தான் அதுக்குக் காரணம்.

    குழந்தை அழகு; சுத்திப் போடுங்க.

    ReplyDelete
  9. அழகா அருமையா சொல்லி இருக்கீங்க அக்கா...ரசித்து படித்தேன்...இறுதியில் பாரதியின் பாடலுடன் முடித்தது பொருத்தமாக இருந்தது.

    super sutti...

    ReplyDelete
  10. மனோ அக்கா அழகான நினைவுகளை உணர்வுகளை உங்களைப் போல அருமையாக வெளிப்படுத்த யாரால் முடியும்.எல்லாவற்றிலுமே நிச்சயம் ஒரு படிப்பினையை உணர்த்துவது உங்கள் சிறப்பு.உங்களிடம் இருந்து நிறைய கற்று கொள்ள வேண்டியது இருக்கு அக்கா.தொடரை எழுதி சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  11. பேரனை அறிமுகப்படுத்தியதும் மிக்க மகிழ்ச்சி.எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அனுபவ அலைகளை அழகாக சொல்லியுள்ளீர்கள்..

    // மனசின் ஆரவாரங்கள் அடங்கி அசந்து அமரும்போது, சோர்ந்து போன இதயத்தில் சில்லென்று மழைத்துளிகளைத் தூவுவதும் இளந்தென்றலாய் மனதை இதமாய்த் தடவுவதும் தன் கள்ளமற்ற புன்சிரிப்பில் உலகையே மறக்க வைப்பதுவும் ஒரு பச்சிளங்குழந்தையால் அனாசயமாக செய்ய முடிகிறது!// உண்மையான வார்த்தைகள்

    பாரதியின் பாடலை எடுத்து காட்டியது சிறப்பாக இருந்தது..

    ReplyDelete
  13. Paappaa...romba azhaghu.... eazhthukkal asathuthu.
    Reva

    ReplyDelete
  14. அழகான பதிவு,அழகான பேரன்,அழகான அர்த்தமுள்ள பாரதியார்பாடல்.அருமை.
    நீங்க எழுதிய பைலாகுப்பே என்ற இடதிற்கு நாங்களும் போயிருந்தோம்.அந்த இடம் போனதும் மனதில் இனம்புரியாத அமைதி ஏற்பட்டதை மறுக்கமுடியாது.சூப்பர் இடம்.
    2011ல் எல்லா வளமும், நலமும் பெற்று நீங்களும், உங்க குடும்பத்தவர்களும் வாழ பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  15. அருமையா சொல்லி இருக்கீங்க அக்கா..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. உங்கள் எண்ணங்கள் போல இந்த வருடமும் சிறப்பாய் இருக்க வாழ்த்துகள். குட்டி பாப்பா அழகா இருக்கு.

    ReplyDelete
  17. 'பைலாகுப்பே' பற்றி புதிதாகத் தெரிந்து கொண்டேன். நன்றி

    உங்கள் 2010 பதிவு அருமை. 2011-ம் அருமையாக அமைய வாழ்த்துகள்

    ReplyDelete
  18. குட்டி பாப்பா ரொம்ப அழகா இருக்காங்க,உங்கள் எண்ணம் போலவே இந்த வருடமும் அமைய வாழ்த்துக்கள் அம்மா!!

    ReplyDelete
  19. சோம்நாத்பூர் மாதிரி நிறைய கோயில்கள் கர்நாடகாவில் உண்டு. மூன்று நாளாகும் சுற்றிப்பார்க்க!

    குழந்தை அழகு. சுத்திப் போடுங்க

    ReplyDelete
  20. அருமையாக சொல்லி இருக்கீங்க.வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. உங்க அனுபவங்களைச்சுருக்கமாக முடித்துக்கொண்டுவிட்டீர்களே. வரும் வருடமும் நீங்க ஆசைப்பட்டபடியே அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. எதிர்காலத்தில் நல்ல பயணக்கட்டுரை நூலாக வெளியிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. அருமையான பதிவு மனோ. உங்கள் பெறக குழந்தையைப் பார்த்தபோது சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் எனக்கும் பாட்டி பிரமோஷன் கிடைத்து விடும். இன்னும் சில மாதங்களுக்கு வலை பக்கம் வர இயலாது

    ReplyDelete
  24. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  25. கருத்துக்கு அன்பு நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  26. Happy birthday to you madam, cute little baby, may god bless him with all the happiness, nice write up about karnataka temples

    ReplyDelete
  27. பதிந்த அனைத்துமே அழகு தான், தங்கள் பேரக் குழந்தையைப் போலவே !

    ReplyDelete
  28. பாராட்டிற்கு அன்பு நன்றி சித்ரா!

    ReplyDelete
  29. முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ம‌ஹாராஜன்!

    ReplyDelete
  30. வாழ்த்துக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  31. உங்களின் பிரார்த்தனைக்கும் அன்பிற்கும் அக்கறைக்கும் இதயங்கனிந்த நன்றி ராஜி!

    ReplyDelete
  32. பிறந்த நாளுக்கு வாழ்த்தளித்ததற்கு அன்பு நன்றி ஜலீலா! உண்மைதான்! பிறந்த நாளுக்கு எப்போது வேண்டுமானாலும் வாழ்த்தலாம்! நீங்கள் அன்புடன் வாழ்த்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது!!

    ReplyDelete
  33. அன்பான கருத்துக்கு நன்றி ஹுஸைனம்மா!
    கால வெள்ள‌த்தில் ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ இழப்புகள். அந்த இழப்புகளின் காயங்களுக்கு இதமான மருந்துதான் பச்சிள‌ங்குழந்தையின் அருகாமை!

    ReplyDelete
  34. இதமான பாராட்டு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது கெள்சல்யா! என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  35. அருமையான பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஆசியா!!

    ReplyDelete
  36. மனந்திறந்த பாராட்டு மகிழ்வைக் கொடுத்தது சகோதரர் பத்மநாபன்! தங்களுக்கு என் அன்பு நன்றி!

    ReplyDelete
  37. அன்பான பாராட்டுக்கு இதயங்கனிந்த நன்றி ரேவா!!

    ReplyDelete
  38. நீங்களும் 'பைலாகுப்பே' சென்றதும் ரசித்ததும் அறிய மிக்க மகிழ்வாக இருந்தது ரமா! உங்களின் மனந்திறந்த பாராட்டு மகிழ்ச்சியை இன்னும் கூட்டியது. உங்களுக்கு என் மனமார்ந்த அன்பு நன்றி!!

    ReplyDelete
  39. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  40. குட்டிப்பாப்பாவிற்கு உங்கள் வாழ்த்தைச் சொல்கிறேன் மேனகா! எனக்கான வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  41. தெரியும் சகோதரர் கோபி!பேலூர் முதலிய இடங்களையும் பயணத்திட்டத்தில் வைத்திருந்தோம். கடைசி நேரத்தில் சில முக்கிய காரணங்களால் அவற்றை நீக்கி விட்டோம். அடுத்த பயணத்தின்போதுதான் அங்கே செல்ல வேண்டும்!!
    அவசியம் குட்டிப்பாப்பாவிற்கு சுத்திப்போடுகிறேன்!

    ReplyDelete
  42. கம்பீரம் மிளிர்கிறது.. பதிவில்.
    குழந்தையின் அழகும் மனசைக் கட்டிப் போட்டது.
    பாரதி வரிகள் மெய்ப்பட வேண்டும்..

    ReplyDelete
  43. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி காஞ்சனா!

    ReplyDelete
  44. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரி ல‌ட்சுமி!
    நீளமாக எழுதினால் படிப்பவர்களுக்கு போர் அடிக்கும். அதனால்தான் சுவாரஸ்யமான சில நிகழ்வுகளை மட்டும் எழுதினேன்!

    ReplyDelete
  45. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி வித்யா சுப்ரமண்யம்! பாட்டியாகப்போவதற்கு இனிய‌ வாழ்த்துக்களும் கூட!
    முற்றிலும் புதிய இனிமையான அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கிறது! அதன் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கக் காத்திருங்கள்!!

    ReplyDelete
  46. Dear krishnaveni!

    Thanks a lot for the nice warm greetings!

    ReplyDelete
  47. அன்பு நன்றி சமுத்ரா!

    ReplyDelete
  48. அன்பான பாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  49. அருமையான பாராட்டிற்கு மனங்கனிந்த நன்றி சகோதரர் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி!

    ReplyDelete
  50. மனமார்ந்த பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி சகோதரர் ரிஷபன்!

    ReplyDelete
  51. இப்பதிவிற்கு ஓட்டளித்து உற்சாகமூட்டிய அன்புத்தோழமைகள் Sriramanandhaguruji, koovaitodelhi, Janavin,karthikVk, Aji, maharajan, Vany,Idnkarthik, jegdheesh, Ganpath, Swasam, Mounakavi, JNtube, Gopi, Subam, Rajesh, Ashok, Kosu, Vino, Bhoopathy, Rishaban

    அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி!!

    ReplyDelete