Sunday, 7 November 2010

“மனிதன் என்பவன் தெய்வமாகலாம்”!

இன்றைய முத்துக்குவியலில் என்னை நெகிழ வைத்த மூன்று மனித முத்துக்களைப்பற்றி எழுதியிருக்கிறேன். இவர்களைப்பற்றி நினைக்கையில் பழைய பாடலின் ஒரு அருமையான வரி நினைவில் எழுகிறது.

“மனிதன் என்பவன் தெய்வமாகலாம்”!

அடுத்தவருக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டுமென்று தன்னை வருத்திக்கொண்டு தொடர்ந்து வரும் இடர்களை சமாளித்து தன்னலம் கருதாது தன்னுடைய முயற்சியிலேயே ஊக்கத்துடன் ஈடுப்பட்டு வருபவர்களை வேறெந்தப்பெயர் சொல்லி அழைப்பது?

முதலாம் முத்து:

கோவையில் ' தோழர் அறக்கட்டளை' என்ற பெயரில் சில நல்ல உள்ளங்கள் செய்து வரும் மகத்தான தொண்டு. சாந்த குமார், அண்ணாத்துரை, ஜீவானந்தம், இப்ராஹீம், சம்பத்குமார் என்ற பூ வியாபாரிகள் பல வ‌ருடங்களுக்கு முன்னர் இரத்த தானம் செய்ய அரசு மருத்துவமனைக்குச் சென்ற போது அங்கே சவக்கிடங்கில் அடக்கம் செய்யாத பல அனாதைச் சடலங்கள் துர்நாற்றம் வீசக் கிடந்ததைக் கண்டு அன்றே 'நாமெல்லாம் இருக்கும்போது யாரும் இங்கே அனாதை இல்லை. நாய்கள், பூனைகளுக்குக்கூட இன்று ப்ளூ கிராஸ் அமைப்புகள் வந்து விட்டன, 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்று நாமெல்லாம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதப் பிறவிக்கு இப்படி ஒரு நிலை வருவதை இனியும் அனுமதிக்கக்கூடாது ' என்ற சபதம் எடுத்துக்கொண்டார்கள். மார்ச் 22ந்தேதி 2004ஆம் வருடம் நான்கு அனாதை சடலங்களை அடக்கம் செய்ய ஆரம்பித்த இவர்கள் சமீபத்தில் 1000 சடலங்களை அடக்கம் செய்து முடித்திருக்கிறார்கள். மருத்துவமனையிலிருந்து இவர்கள் தங்களது சொந்த செலவில் உடல்களை பெற்று எந்த வித சாதி, மத சடங்குகளுமில்லாது தூய்மையான வெள்ளைத்துணி போர்த்தி மலர்கள் தூவி நல்லடக்கம் செய்கிறார்கள். ஆயிரமாவது உடலை, ' இத்தனை நாள் நம்முடன் வாழ்ந்து இறந்த இந்த உடலுக்கு நாம் அனைவருமே உறவினர். இந்த உலகத்தில் யாருமே அனாதை இல்லை. ஒருவருக்கொருவர் உறவினர்தான்' என்ற விழிப்புணர்வை உலகுக்கு ஏற்படுத்த மானவர்கள், முதியோர், பெண்டிர், திருநங்கைகள், ஆட்டோ ஓட்டுனர்கள் என்று ஆயிரம் பேரை அழைத்து அவர்கள் பின்தொடர அந்த உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்திருக்கின்றனர். தற்சமயம் மனித நேயம் உள்ள பல அமைப்புகள் அவர்களுக்கு உதவி வருகிறார்கள். இவர்களின் மனித நேயத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

இரண்டாவது முத்து:

2008ஆம் ஆன்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வின் முடிவின்படி, தெற்காசியாவிலேயே அதிகமாக 73 சதவிகிதம் சாலை விபத்துக்கள் இந்தியாவில்தான் நடந்து வருகின்றன. அந்த ஆண்டு மட்டும் சாலை விபத்துக்களில் இரண்டு லட்சத்து பத்தாயிரம் பேர் இந்தியாவில் இறந்து போயிருக்கின்றனர் என்பதை அறியும்போது பிரமிப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது.


இந்த சாலை விபத்துக்களை கூடியவரை குறைக்க வேண்டுமென்ற நல்ல எண்னத்துடன் சுரேஷ் என்ற தனி மனிதர் ' சாலை பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்புக்களை கோவையிலும் சென்னையிலும் ஏற்படுத்தி சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்த வேன்டுமென்பதையே தன் முழுநேரப்பணியாக செய்து வருகிறார். கணினி பொறியாளரான இவர் தொலைக்காட்சித் தொடர்கள் சிலவற்றிலும் சில வருடங்களுக்கு முன் நடித்திருக்கிறார்.

' 18 வயதுப்பையனுக்கு கார் வாங்கிக்கொடுத்து அழகு பார்க்கும் பெற்றோர் இருக்கும்வரை சாலை விபத்துக்கள் அதிகரிக்கவே செய்யும்' என்று சொல்லும் இவர் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் இவர்களுக்காக விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார். ஸ்லைடுகள், குறும்படங்கள்., கவிதைகள், கலந்துரையாடல்கள் மூலம் அவர்கள் சிந்தனையைத் தூண்டி விட்டு அறிவு நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி,பின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் அவரது பணியாக குறிப்பிடுகிறார். இவரது முயற்சியும் அருமையான தொண்டாக மக்களுக்குப் பயன் தருகிறது! தனி மனிதனாக, இளைஞர்களுக்கு விழிப்புணர்வைத்தூண்டும் இவரது முயற்சிகள் வேறெந்த சேவைக்கும் குறைந்ததில்லை!

மூன்றாவது முத்து:


சென்னையில் வசிக்கும் 65 வயதான சர்புதின் என்பவர். தொடர்ந்த புகைப்பழக்கத்தால் தொண்டையில் புற்று நோய் பாதித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குரலையும் இழந்தவர். தொண்டையில் ஒரு ஓட்டை போடப்பட்டு அதன் மூலம் சுவாசிக்கிறார். மூன்று வேளைகளும் திரவ உணவுதான் இன்று வரை. வாழ்நாள் முழுவதும் குனிந்த நிலையிலேயே குளிக்க வேண்டிய சூழ்நிலை. ‘வேவ்ரிங்ஸ்’ என்ற அதி நவீன சாதனத்தை கழுத்தின் இடது ஓரத்தில் வைத்தபடி கம்ப்யூட்டர் குரலுடன் பேசி வருகிறார். அதாவது தொண்டை நரம்புகளின் அதிர்வுகளை, சர்புதினின் குரலாக உருமாற்றித் தருகிறது இது!

‘ நான் புகைப்பிடித்தபோது வெளியான புகையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்களோ? அதற்காகக் கிடைத்த தண்டனைதான் இது” என்று வேதனைப்படுகிறார் இவர். தன்னை மாதிரி மற்றவர்கள் துன்பப்பட்டுவிடக்கூடாது, அடுத்தவர்களுக்கு எப்படியாவது உதவமுடியாதா என்று யோசித்தவருக்கு ஒரு நல்ல வழி கிடைத்தது.

சென்னையில் புகைப்ப்பிடிக்கும் பழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்காக ‘ SMOKE-FREE CHEENAI’ என்ற அமைப்பு தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனருடன் கலந்து பேசி சென்னையில் நடத்தப்படும் புகை ஒழிப்பு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு உருக்கமாகப் பேசி வருகிறார்.

“ சிகிரெட் புகையில் 4000ற்கும் மேற்பட்ட நச்சுப்பொருள்கள் உள்ளன. இதில் 50 வேதிப்பொருள்கள் புற்று நோயின் தொற்று. பீடி, சிகிரெட் பிடித்து வெளியிடும் புகைக்கு அப்பாவிகளும் ஆஸ்துமா, பக்கவாதம், மாரடைப்பு, நுரையீரல் புற்று நோய், மூச்சுக்குழல் நோய், மூளைக்கட்டி, இன்னும் பலவித புற்று நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் புகை பிடிக்கும் பழக்கத்தால் பலியாகும் லட்சக்கணக்கானவர்களில் கணிசமானவர்கள் அடுத்தவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்கள் என்பது தாங்க முடியாத துன்பம்! குரல் வளம் இல்லாத நான் உங்களுக்காக குரல் கொடுக்கிறேன். தயவு செய்து புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவீர்களா?” என்று கருத்தரங்கம் தோறும் உருகிப் பேசுகிறார்.

நோயின் கடும் துன்பத்தால் முடங்கிக் கிடக்காமல் தன் பாதிப்பு மாதிரி யாருக்கும் வந்து விடக்கூடாதென்ற அக்கறையுடன் பாடுபடும் இவருடைய மனித நேயத்தைப் பாராட்ட வார்த்தைகளில்லை!

35 comments:

  1. முத்துக்குவியல் அனைத்தும் அருமையான முத்துக்கள் ... சுரேசுக்கு ஒரு சல்யுட் ..

    ReplyDelete
  2. நலம் பயம் நம்பிக்கை கட்டுரை.

    ReplyDelete
  3. முன்று முத்துகளும் அருமை, மனோ அக்கா
    இப்படி நீங்கள் எழுதியதன் மூலம், தகவல் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  4. அம்மா...
    முத்துக் குவியலில் முதலாவது முத்து மனதை நனைத்தது. உண்மையில் மனிதர்கள் அவர்கள்தான்... நம்மில் எத்தனை பேருக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றும். அந்த நல்ல உள்ளங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
    இரண்டாவது முத்தும் மூன்றாவது முத்தும் அருமை.
    தீபாவளி முடிந்தாலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இதில மூனுமே நல்ல முத்துக்களே..!! இருக்கும் போது அதன் அருமை புரிவதில்லை.. போனபின் கவலைப்படும் நாம் இனியாவது கொஞ்சம் விழிப்புடன் இருப்போம் ..!! :-)

    ReplyDelete
  6. முத்தான பதிவு. அருமை.

    ReplyDelete
  7. முத்துக்கள் மூன்றும் அருமை.

    ReplyDelete
  8. அக்கா மிகவும் நல்ல பகிர்வு தந்தமைக்கு முதலில் உங்களுக்கு நன்றி.

    //கோவையில் ' தோழர் அறக்கட்டளை' என்ற பெயரில் சில நல்ல உள்ளங்கள் செய்து வரும் மகத்தான தொண்டு.//


    அவர்களின் தொண்டு உண்மையில் நெகிழ செய்து விட்டது....மனித நேயம் மக்களிடம் குறைந்து விட்டது என்று வருந்துவதை விட இந்த மாதிரி தொண்டுகளை விளம்பரம் இல்லாமல் செய்து வருபவர்களை பாராட்ட வேண்டும் அக்கா...

    ReplyDelete
  9. முத்துக்கள் மூன்றும் அருமை.


    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மூன்று முத்துக்களும் அருமையாக உள்ளன! மிகச் சிறப்பான கட்டுரை!

    ReplyDelete
  11. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் எல்.கே!

    ReplyDelete
  12. அன்பு நன்றி சகோதரர் தமிழ் உதயம்!

    ReplyDelete
  13. வாங்க ஜலீலா! ரொம்ப நாளாயிற்று உங்கள் பதிவு பார்த்து!
    பாராட்டுக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  14. தீபாவளி வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் குமார்!
    நீங்கள் சொல்வதுபோல நம்மில் எத்தனை பேருக்கு இத்தகைய ஆக்கப்பூர்வமான எழுச்சி தோன்றும்? அடுத்தவர் சடலங்களுக்கு இத்தகைய மரியாதை செய்பவர்கள் மிகவும் உன்னதமானவர்கள்!

    ReplyDelete
  15. இனிய பாராட்டிற்கு அன்பான நன்றி சகோதரர் ஜெய்லானி!

    ReplyDelete
  16. அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் கலாநேசன்!

    ReplyDelete
  17. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி புவனேஸ்வரி!

    ReplyDelete
  18. பகிர்வுக்கும் கருத்துக்களுக்கும் அன்பு நன்றி கெளசல்யா!
    இந்த மாதிரி தன்னலமில்லாமல் நல்லன செய்பவர்கள் நமக்கும் பல நல்ல விஷயங்களில் ஈடுபட உந்துதல் சக்தியாக விளங்குகிறார்கள்!

    ReplyDelete
  19. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி தினேஷ் குமார்!
    உங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  20. அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி சகோதரர் எஸ்.கே!

    ReplyDelete
  21. தலை வணங்க வேண்டிய மூவர்!
    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  22. முத்துக்கள் அருமை.

    ReplyDelete
  23. மூன்றுமே நல்முத்துக்கள்தாம். அநாதைப் பிணமாகச் சாவது என்பது பெருங்கொடுமையக்கா. நல்வாழ்வு வேண்டுவதோடு, நல்ல மரணமும் வேண்டவேண்டும் இறைவனிடம்.

    ReplyDelete
  24. http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_08.html

    ReplyDelete
  25. சவம் சிவத்திற்கு ஒப்பாகும். இந்த நல்ல மனிதர்களின் சேவை சிவனுக்கு செய்யும் தொண்டு

    ReplyDelete
  26. முத்துக்கள் எல்லாமே அருமை. கடைசி படித்ததும் கஷ்டமாகி விட்டது. இவரைப் பார்த்தாவது ஆண்கள் திருந்தினால் நலம்.

    ReplyDelete
  27. மூன்று முத்துக்களுமே நன் முத்துக்கள்! இவர்களைப் பற்றி அறியச் செய்ததற்கு நன்றி மனோம்மா!

    ReplyDelete
  28. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சகோதரர் யோஹன்

    ReplyDelete
  29. பாராட்டிற்கு அன்பு நன்றி காஞ்சனா!

    ReplyDelete
  30. உண்மைதான் ஹுசைனம்மா! நாம் சாதாரணமாகவே மரணம் என்பது அமைதியாக, எந்த கஷ்டமுமில்லாது இருக்க வேண்டுமென்றுதான் விரும்புவோம். ஆனால் யாருமே அக்கறை எடுக்காது அனாதைகளாய் இறப்பது எத்தனை கொடுமை! இந்த நிலையை மாற்ற முயற்சி எடுக்கும் இவர்களைப் பாராட்டத்தான் வார்த்தைகள் இல்லை! இது மனித நேயம் என்பதற்கும் அப்பாற்பட்ட விஷயம்!

    ReplyDelete
  31. நன்றி சகோதரர் கோபி ராமமூர்த்தி!

    ReplyDelete
  32. அன்பு நன்றி சகோதரர் தமிழமுதன்!

    ReplyDelete
  33. பாராட்டுக்கு அன்பு நன்றி வானதி!

    ReplyDelete
  34. கருத்துக்களுக்கு அன்பு நன்றி கவிசிவா!

    ReplyDelete