Saturday, 9 October 2010
நல்லதோர் வீணை செய்தே.. .. ..
இது நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருந்தாலும் நினைக்கும்போதெல்லாம் ‘ நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற பாரதியின் பாடல் நினைவில் எழாமல் இருப்பதில்லை.
சில முக்கிய வேலைகள் காரணமாக நான் என் மகனுடன் சில மாதங்கள் ஒரு பெரு நகரத்தில் வசிக்க வேண்டி வந்தது. சிறந்த பள்ளி இருப்பதாலும் உதவுவதற்கு எங்களின் நெருங்கிய குடும்ப நண்பர் இருந்ததாலும் நாங்கள் அந்த நகரத்தில் விரைவிலேயே குடியேறினோம். புற நகர்ப்பகுதியில் ஒரு அழகான வீடு பார்த்துக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது அருகில் வசித்த அவரது நண்பரையும் அறிமுகம் செய்து வைத்தார் எங்கள் நண்பர்.
நகரில் பெரியதொரு வணிகத்தில் ஈடுபட்டிருந்தார் அந்தக் குடும்பத்தலைவர். அவர் வீட்டுக்குப்போகும்போதெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டு ‘ வாங்கம்மா’ என்று சொல்லும்போது நாமும் அவரைக் கையெடுத்துக் கும்பிடலாம் போன்ற தோற்றம். வெள்ளை நிற வேட்டியிலும் சட்டையிலும் சிகப்பாக கம்பீரமான அழகுடன் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். அவர் மனைவி இந்த விஷயங்களில் அவருக்கு பொருத்தமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சாதாரண தோற்றம். ஆனால் மிகவும் தன்மையுடன் பழக ஆரம்பித்தார். எனக்கு எது வேண்டுமானாலும் எங்கள் குடும்ப நண்பருக்கு ஃபோன் செய்ய அனுமதிக்காமல் தானே எல்லாவற்றையும் வாங்கிக் கொடுப்பார். பெயர் லட்சுமி. மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண் சாதாரண தோற்றம். ஒரு கால் சற்றே ஊனம். இரண்டாவது நல்ல நிறமும் அழகுமாக இருக்கும். மூன்றாவது அப்போதுதான் பிறந்த சில மாதங்களான கைக்குழந்தை. மகன் இல்லையென்பதால் என்னிடம் சொல்லாமலேயே சில சமயங்களில் என் மகனைத் தூக்கிக்கொண்டு சென்று விடுவார். எங்களுக்கிடையே பிரியமும் நட்பும் வளர ஆரம்பித்தது.
ஒரு நாள் காலை தன் குழந்தைகளுடன் என் வீட்டுக்கு வந்தார். என்னைப்பார்த்ததுமே அழ ஆரம்பித்தார். கண்ணீருடன் அவர் சொன்ன விஷயங்கள் என்னை உறைய வைத்தன. அவர் கணவருக்கு குடிப்பழக்கம் அதிகம் என்றும் அடிக்கடி இந்தப் பழக்கத்தைத் திருத்தும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது வழக்கம் என்று சொன்னபோது, என் மனக்கண் முன் அவரின் தோற்றம் எழுந்து இதையெல்லாம் நம்பக்கூட முடியாமல் என்னை பிரமிக்க வைத்தது. கழுத்திலும் தோள்பட்டையிலும் இரத்தக் காயங்கள். அவர் அடித்த காயங்கள் என்று அழுதார். கூடவே அந்தப் பெண் குழந்தைகளும் அழுதன. அவர்களை அணைத்து ஆறுதல் சொல்லி சாப்பிட வைத்தேன். அவ்வப்போது இந்த நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டபோதெல்லாம் குழந்தைகள் மிரட்சியுடன் என் வீட்டுக்கு ஓடி வந்து விடும். நான் சாப்பிட வைப்பதும் ஆறுதல் சொல்வதும் அவ்வபோது நடக்கும்.
ஒரு நாள் இரவு குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு என்னிடம் வந்து பேசிக்கொண்டு இருந்தார். அவருடைய வீட்டு அருகில் ஒரு சிறிய ஆழமான நீர்த்தேக்கம் இருக்கும். அதைச் சுட்டிக் காண்பித்து, ‘நேற்று கூட இதில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாமென்று முடிவு செதேன் அக்கா. அந்த நேரம் சின்னக் குழந்தை விழித்து விட்டதால் அதைச் செய்ய முடியாமல் போய் விட்டது’ என்றார். மனம் முழுவதும் நிரம்பிய வேதனையுடன் அவருக்கு ஆறுதலும் புத்திமதியும் சொல்லி ‘அப்படி எதுவும் பண்ணினால் இந்த மூன்று பெண் குழந்தைகளின் கதி என்னாகிறது? அதை நினைத்துப் பார்க்கவில்லையா நீங்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் வெறிச்சிட்ட கண்களுடன் ‘ மரணத்துக்குப்பிறகு நமக்கு என்ன தெரியும் அக்கா? குழந்தைகளைத் தெரியுமா அல்லது புருஷனைத்தான் தெரியுமா? ஆனால் ஒன்று நிச்சயம், எனக்கு அதால்தான் நீண்ட அமைதி கிடைக்கும்’ என்று சொன்னபோது என்னால் ஒன்றுமே பேச முடியவில்லை.
அதற்குப்பிறகும்கூட எதேச்சையாய் அவர் வீடு சென்றபோது Gas-ஐத் திறந்து வைத்திருந்ததைப்பார்த்து சப்தம் போட்டிருக்கிறேன். நான் இருந்தவரை ஆறுதல் சொல்லியும் திட்டியும் உரிமையுடன் கடிந்து கொண்டும் தற்கொலை முயற்சிகளிலிருந்து அவரை மீட்டிருக்கிறேன்.
அதற்கப்புறம் நான் முழு ஆண்டுத் தேர்வு என் மகனுக்கு முடிந்ததும் இங்கு வந்து விட்டேன். வந்து இரு மாதங்களுக்குள்ளேயே அவரது மரணச்செய்தி என் சினேகிதங்கள் மூலம் வந்து விட்டது. மனம் முழுவதும் வேதனையாகி அன்று முழுவதும் அமைதியாக இருக்க முடியவில்லை.
பிறகு விஷயங்கள் தெரிய வந்தன. குளியலறையில் அவர் கருகிக் கிடந்ததாகவும் அது தற்கொலையா அல்லது கொலையா என்று தெரியவில்லை என்றும் செய்திகள் வந்தன. அவர் மரணத்தருவாயில் தன் கணவர்தான் தன்னைக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சொந்தங்கள் எல்லாம் ‘ மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன. அப்பா ஜெயிலுக்குப் போனால் குழந்தைகளின் வாழ்வு மாறி விடும். இப்படி வாக்குமூலம் கொடுக்காதே’ என்றெல்லாம் சொல்லியும் ‘ நான் இப்படி சொல்லவில்லையென்றால் அவர் நான் போனதும் உடனேயே மறு கல்யாணம் செய்து கொள்வார்’ என்று சொல்லி மறுத்தாராம்.
ஆனால் அவர் இறந்த பின் சிறைக்குச்சென்ற அவர் கணவர் ஜாமீனில் வந்து அவர் கூறியபடியேதான் செய்தார்-ஒரு சின்னப் பெண்னைத் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் நான் தஞ்சை சென்ற போது அவர் சகோதரி வீட்டு மேலாளர் வீட்டுக்கு வந்து அந்தக் குழந்தைகள் என்னை பார்க்க ஆசைப்படுவதாககூறி வீட்டுக்கு அழைத்தார். லட்சுமியின் சகோதரி வீடு சென்று அந்தக் குழந்தைகளைப் பார்த்தபோது மனசு அப்படியே கனத்துப் போயிற்று.
இரண்டு குழந்தைகளும் என்னருகில் வந்து நின்று அழுதபோது, பெற்றவர்களிடையே ஏற்பட்ட போராட்டத்திற்கு இந்த பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் என்று ஆத்திரம்தான் பொங்கியது. ஒரு அருமையான வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து போய்விட்டது? பணம் இருக்கலாம், சொந்தங்கள் இருக்கலாம், ஆனால் இந்தக்குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு எதுவுமன்றி, மனக்காயங்களுடன் இந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
பாரதியாரின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன.
“ நல்லதோர் வீணை செய்தே-அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?”.. .. .. .. ..



மனம் வலிக்கின்றது!
ReplyDeleteபடிக்கும் போதே மனம் கனக்கிரது.. எத்தனையே விஷயத்திற்கு பேச்சிவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும் ..மரனம் , தற்கொலை ஒரு தீர்வாகாது..!! :(
ReplyDeleteபிளாகில் Blog Archive என்ற கெஜட்டை சேர்தால் விட்டுப்போன மற்றும் உங்கள் தொடர்ந்த பதிவுகள் ( தேட ) பார்க்க வசதியாக இருக்கும் .இது உங்கள் டேஷ்போர் -செட்டிங்- ஆட் கெட்ஜட்டில் இருக்கும் .:-)
ReplyDeleteமிகவும் கொடுமை...
ReplyDeleteமனம் பதற வைக்கும் பகிர்வு.
ReplyDeleteஅந்த குழந்தைகள் இப்பொழுது வளர்ந்து எப்படி இருக்கின்றன? மன அமைதியுடன், பத்திரமாக - சந்தோஷமாக எங்கு இருந்தாலும் இருக்க வேண்டும், இறைவா!
ReplyDeleteNALLA PATHIVU,
ReplyDeleteSATRE SINTHIKKA VAITHA PATHU,
ELLORUKKUM NALLA BUTHI KODU ISHA!!!
மிகவும் வருத்தமாக இருக்கிறது....!
ReplyDeleteஇன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்
ReplyDeletemanathu valikirathu
ReplyDeleteanbudan
Nellai P.Nadesan
Dubai
பதற வைக்கிறது..
ReplyDeleteதவிக்கும் உளங்களை
காப்பாற்று இறைவா!!
மனோ அக்கா தோற்றத்தை வைத்து ஆட்களை மதிப்பிடக்கூடாது என்பதை உணர்த்தியது இந்த இடுகை,பாவம் அந்தக்குழந்தைகள்.எப்படிபட்ட மன உளைச்சல்களுக்கு ஆளானால் அந்த தாய் பிள்ளைகளை விட்டு விட்டு இப்படி முடிவு எடுத்திருப்பாள்.கொலையோ தற்கொலையோ பாதிக்கப்பட்டது அந்த குழந்தைகள் தானே.
ReplyDeleteமனம் வலிக்கிறது....
ReplyDelete“ நல்லதோர் வீணை செய்தே-அதை
ReplyDeleteநலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?”..
உண்மைதான் அம்மா...
உங்கள் பகிர்வு மனதை பிழிகிறது...
sorry to hear about this incident, may god give a very happy life to those children
ReplyDeleteஅம்மா
ReplyDeleteபதினாறு வயதுவரை
பெற்ற பிள்ளைக்காக
பதினேழு வயதுமுதல்
பெற்றோருக்காக
தற்கொலை
மாண்டு போகும்
கலியுகம்,,,,,,,,,,,,
கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது பதிவு..அந்த குழந்தைகள் இனியாவது சந்தோஷமாக இருக்கட்டும்...
ReplyDeleteவாழ்க வளமுடன்.
வேலன்.
ஒவ்வொரு தற்கொலை செய்தியையும் வாசிக்கும்போது, அவர்களின் குழந்தைகள் நிலைதான் கண்முன் வரும்!! இன்னும் சொல்லப்போனால், குழந்தைகளுக்காகத்தான் உலகில் பலரும் துயரங்களுக்கு நடுவேயும் உயிரைப் பிடித்துவைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ReplyDeleteஇதயத்தை பிழிந்த இடுகை அக்கா!
ReplyDeleteநினைக்கும்போதெல்லாம் மனம் வலிக்கத்தான் செய்கிறது சகோதரர் எஸ்.கே! இப்போது அந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாயிருக்கலாம். ஆனால் நிச்சயம் அவர்கள் கடந்து வந்த பாதை பல ரணங்கள் கொண்டதாகத்தான் இருந்திருக்கும்!
ReplyDeleteஅன்புச் சகோதரர் ஜெய்லானி!
ReplyDeleteநான் இந்த blog ஆரம்பித்தபோது blog archive வைத்திருந்தேன். அப்புறம் ரொம்பவும் அடைசலாக இருப்பதுபோல் தோன்றியதால் எடுத்து விட்டேன். இப்போது தங்களது ஆலோசனைப்படி திரும்பவும் வைத்து விட்டேன்.
எந்த பிரச்சினைக்கும் சோகத்திற்கும் மரணம் ஒரு தீர்வு கிடையாதுதான். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நிறைய பேர் இந்தத் தவறான அணுகுமுறையைத்தான் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கிறார்கள்.
இதைப்படித்து விமர்சித்ததற்கு என் அன்பு நன்றி கீதா!!
ReplyDeleteஅன்பான விமர்சனத்திற்கு மனமார்ந்த நன்றி ராமலக்ஷ்மி!
ReplyDeleteதெரியவில்லை சித்ரா! அவர்களின் சகோதரிக்கு என் சொந்த ஊரில் ஒரு ஹோட்டல் இருந்தது. அப்படித்தான் அந்தக்குழந்தைகளை நான் என் சொந்த ஊரில் சந்தித்தேன். அப்புறம் அடுத்த வருடம் ஊருக்குப் போன போது அந்த ஹோட்டலை மூடி வேறு ஒரு கடை அங்கு வந்திருந்தது. அதற்கப்புறம் அந்தக் குழந்தைகளைப்பற்றி தகவலே இல்லை. அவர்களின் அப்பா மட்டும் 2, 3 வருடங்களிலேயே இறந்து போனதாகக் கேள்விப்பட்டேன்.
ReplyDeleteகருத்துக்களுக்கு அன்பு நன்றி வயாமா!
ReplyDeleteகருத்துப்பகிர்விற்கு அன்பு நன்றி கெளசல்யா!
ReplyDeleteஅன்பான பகிர்விற்கும் முதல் வருகைக்கும் நன்றி சகோதரர் நடேசன்!!
ReplyDeleteபகிர்வுக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி கீதா!
ReplyDeleteஆமாம் ஆசியா! தற்கொலையோ, கொலையோ, இறந்தவர் அப்புறம் ஒரு நினைவாகி விடுகிறார். உயிருடனிருக்கும் குழந்தைகளுக்கு தாயின் அன்பு இல்லாமல் எத்தனை எத்தனை கஷ்டங்கள்!!
ReplyDeleteகருத்துக்கு அன்பு நன்றி மேனகா!!
ReplyDeleteThanks a lot for the nice comment!!
ReplyDeleteகருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி தினேஷ்குமார்!
ReplyDeleteநெகிழ்வான விமர்சனத்திற்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!
ReplyDeleteதங்களின் அன்பான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரர் வேலன்!
ReplyDeleteஉண்மைதான் ஹுஸைனம்மா! எத்தனைப் பெரிய துன்பங்களையும் தன் குழந்தைகளுக்காகத் தாங்குவதுதான் நம் பெண்களின் தனிப்பெரும் மகத்துவம்! ஆனால் நியாங்களையெல்லாம் தாண்டிய வலியில் இந்த மாதிரி விதிவிலக்குகளும் இருக்கத்தானே செய்கின்றன!!
ReplyDeleteகருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி ஸாதிகா!!
ReplyDeleteஉங்கள் வலைப்பக்கத்திற்கு வருவது இதுதான் முதல் முறை அக்கா. மனதை தொட்ட விஷயம். புரிதலில்லாத வாழ்க்கையை போராடிதான் கடக்க வேண்டும். இப்படி குழந்தைகளை நட்டாற்ற்றில் விட்டல்ல. மனம் கனக்கிறது அந்த குழந்தைகளை நினைத்து...ப்ச்...தவறு செய்யாமலே தண்டனையில் வாழ்பவர்கள்...
ReplyDeleteகவலையாக இருக்கு. இப்படிக் கூட மனிதர்களா? அந்தப் பெண் குழந்தைகள் வாழ்க்கையாவது சிறப்பாக இருக்க வேண்டும்.
ReplyDeleteரொம்பக் கொடுமை மனோ..
ReplyDeleteஎன்னோட பதிவை பாருங்க..
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு உங்க படைப்புகளை இன்றோ நாளையோ அனுப்புங்க..
அன்பின் மனோ எனக்கு உங்க ஈமெயில் ஐடி வேணும்.. என் ஈமெயில் ஐடி.. thenulakshman@gmail.com. அடுத்த மாத ப்லாக்கர் அறிமுகத்துக்கு உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கேன்..
ReplyDeleteமிகவும் வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteஎன் வேண்டுகோளை ஏற்று திரும்பவும் blog archiveவைத்ததுக்கு நன்றி. மொத்த பதிவுகள், விட்டுப்போனதும் தேட ஈஸியா இருக்கும் :-)
ReplyDelete“ நல்லதோர் வீணை செய்தே-அதை
ReplyDeleteநலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?”.. .. .. .
//
வருத்தமாக இருக்கிறது.
படிக்கும் போதே மனம் ரொம்பக் கவலையாக இருக்கு
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி அன்னு!
ReplyDelete“புரிதலில்லாத வாழ்க்கையை போராடிதான் கடக்க வேண்டும்.”
அருமையான வரிகள்!!
நிறைய குடும்பங்களில் கணவன் -மனைவி இப்படித்தான் இருக்கிறார்கள் வானதி. அதன் எல்லா பாதிப்பும் குழந்தைகள் மீதுதான் விழுகிறது!!
ReplyDeleteஅடுத்த மாத ப்ளாகராக ‘லேடீஸ் ஸ்பெஷல்’ இதழுக்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கும் அன்பான பதிவிற்கும் மகிழ்வான நன்றி தேனம்மை!!
ReplyDeleteஅன்பான கருத்துக்கு மிக்க நன்றி காஞ்சனா!
ReplyDeleteஅன்புச் சகோதரர் ஜெய்லானி!
ReplyDeleteஅவ்வப்போது நல்ல ஆலோசனைகள் சொல்வதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி கூறவேண்டும்!
அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றி தியா!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி ஜிஜி!!
ReplyDeleteஓட்டளித்து இண்ட்லியில் இணைத்த சகோதரர் ஜெய்லானிக்கு அன்பு நன்றி! இணைந்து ஓட்டளித்த தோழமைகள் pirasha, kaarthikVk, Elango, Ramalakshmi, Chithra, Sukku,Manikkam, prem, Balak, Kousalya, Vilambi, swasam, V.Gopi, Sudhir, Jollyjegan, Tamilz, Kiruban, Ambuli, Subam, Muthu, Dev, Guru, Asiya, Abdul kadhar, sriramananandhaguruji, Mamathi, paniththuLi sankar, jayanthi, Husainamma, Thenammai அனைவருக்கும் என் அன்பு நன்றி!!
ReplyDelete