Wednesday, 31 October 2018

துபாயில் ஒரு விருந்து!!!


கடந்த 28ந்தேதி எங்களின் நாற்பத்தி நாலாவது திருமண நாள்!

பேரன், பெயர்த்தியுடன் நாங்கள்!
மகன் இங்குள்ள ' நஸிம்மா ராயல் ' என்ற ஐந்து நட்சத்திர விடுதிக்கு மதியம் உணவிற்கு அழைத்துச்சென்றார். இதுவரை இங்கிருக்கும் எத்தனையோ ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளுக்கு உணவருந்த சென்றிருக்கிறோம். ஆனால் இப்படியொரு சுவையை, பரிமாறப்பட்ட அத்தனை உணவுகளிலும் நான் ருசித்த‌தில்லை.
நஸிம்மா ராயல் ஹோட்டல்
பொதுவாய் ஒவ்வொரு உணவு விடுதிக்கும் ஒர் தனிப்பட்ட சிறப்பு அடையாளம் உண்டு. என் மகன் கல்லூரியில் படிக்கும் பருவத்தில் இந்த நாட்டின் தலைநகரான அபுதாபியில் 'ஹில்டன் ஹோட்டலில்' வந்து 

ice tea
நுழையும் அனைவரும் அருந்தும் விதத்தில் ஒரு பெரிய தங்க நிற குடுவையில் தெளிவான டீ இருக்கும். சர்க்கரை, புதினா இலைகள், எலுமிச்சம்பழ சாறு, இஞ்சி துருவல்கள் கலந்து ஐஸ் கட்டிகளுடன் ஐஸ் டீ நம்மை வரவேற்கும். அந்த சுவையை நான் எந்த ஐஸ் டீயிலும் ருசித்ததில்லை.

சார்ஜாவில் ரயின்போ ஸ்டீக் ஹெளஸ் என்ற ஒரு உணவு விடுதி இருக்கிறது. அங்கு வழங்கப்படும் சாலட் வகைகளை நான் எந்த ஐந்து நட்சத்திர உணவு விடுதியிலும் பார்த்ததில்லை. 

MUTHABAL SALAD
அதிலும் அரேபிய சாலட் 'முத்தபல்' என்ற ஒன்று அத்தனை சுவையுடன் இருக்கும். அது வேறு ஒன்றுமில்லை. சுட்ட கத்தரிக்காய் விழுதுடன் அரைத்த எள் விழுதை ஒரு குறிப்பிட்ட அளவில் கலக்க வேண்டும். கடந்த 40 வருடங்களாக நான் இதன் அடிமை!

இப்படி ஒவ்வொரு உணவு விடுதியிலும் ஒரு குறிப்பிட்ட உணவு வகை மற்ற எல்லா உணவு வகைகளையும் தூக்கி அடிக்கும். ஆனால் இந்த உணவு விடுதியில் அனைத்து உணவு வகைகளும் அபுதமான சுவையுடன் இருந்தன. அதோடு வகை FUSION உணவு வகைகள் அதாவது பழைய உணவுக்குறிப்புடன் புதிய சில மாற்றங்கள் செய்வது., உதாரணத்திற்கு பால்கோவாவுடன் சோன் பப்டியைக்கலப்பது, சோளே பட்டூராவை குட்டி குட்டி பட்டூராக்களாக, அதுவும் கீரை கலந்து, மசாலா கலந்து செய்வது இப்படி செய்யும் மாற்ற்ங்களை அதிக ருசியுடன் வழங்குவது இந்த உணவு விடுதியின் சிறப்பு.

உணவு விடுதியின் பெயர் த்ரேசிந்த். இந்திய உணவு விடுதி. உலகின் மிக உயர்ந்த கட்டிடமான பூர்ஜ் கலிஃபா இருக்கும் சாலையில் இந்த நஸ்ஸிம்மா ஹோட்டல் அமைந்துள்ளது. 


பல வகை மெனு இருக்கின்ற்ன. நாம் விரும்பினவற்றை தருவிக்கலாம். அல்லது குறிப்பிட்ட செட் மெனுக்களை ஆர்டர் பண்ணலாம். அசைவம் அல்லது சைவம், complimentary starters, starters from the chef, juices, main course,  desserts  என்ற வகையை அடக்கியது ஒருவருக்கு 2500ரூ. 16 வகைகளை கொண்ட இன்னொரு செட் மெனு ரூ 4500லும் 7500லும் இருந்தது. நான் முதலாம் வகையையே தேர்வு செய்தேன். முக்கிய காரணம் உணவு ஹெவியாக வேண்டாம் என்பது.

ஆர்டர் செய்ததும் முதலில் ஒரு மண் குடுவையை நடுவில் வைத்து அதில் சில ஐஸ் கட்டிகளைப்போட்டு சில திரவங்களை ஊற்றினார் பரிமாறுபவர். 


உடனேயே நுரையுடன் வாசனையுடன் உள்ளிருந்து வழிந்தது புகை! இது வாசனை தெரபியாம். வரவேற்கும் விதமும் கூட! முகம், கைகள் துடைக்க குளிர்விக்கப்பட்ட துண்டுகள் வந்தன.

அதன் பின் முதல் வகை ஸ்டார்ட்டர் பிளேட் வந்தது. உணவு வகைகளை விளக்கிச் சொல்லி சென்றார்கள். 


வெண்டைக்காய் சிப்ஸ், பானி பூரி, வெள்ளரி ரோல்ஸ், தக்காளி சாலட், சில மாறுதல்களுடன் குஜராத்தின் டோக்ளா அதில் இருந்தன.


அதன் பின் அசைவம், சைவம் அடங்கிய அடுத்த ஸ்டார்ட்டர் பிளேட் வந்தது. வறுத்த ரால், பனீர் கோப்ஃதா, காலிஃபிளவர் 65, கறி மசாலா வந்தன.

சாப்பிட்டு முடிந்ததும் ஒரு முறை மேசையை சுத்தம் செய்தார்கள். ஒரு செயற்கையான குட்டி மரத்தைக் கொண்டு வைத்தார்கள். 



மறுபடியும் வாசனையும் புகையுமாக இருந்தது. 

எலுமிச்சம்பழ மூடியில் உறைய வைக்கப்பட்ட பெரி பழச்சாறு!
அதனடியில் எலுமிச்சை மூடியில் பெரி பழங்களின் சாறை ஊற்றி உறைய வைத்திருந்தார்கள். இது வாயை சுத்தம் செய்வதற்காக என்று விளக்கம் கொடுத்தார்கள்!


அதன் பின் மெயின் கோர்ஸ் வந்தன. பட்டர் சிக்கன், சோளே பட்டூரா, மட்டன் தேங்காய் வறுவல், ரொட்டிகள், நான்கள், சாதம் அவற்றில் அடக்கம்.

உண்டு முடித்ததும் மறுபடியும் கைகளைத்துடைக்க சூடான துண்டுகள் கொண்டு வந்து தந்தார்கள்.

கடைசியாக இனிப்பு வகைகள். சின்னச் சின்ன சாக்கலேட் உருண்டைகளின் மீது COFEE DESSERT சோழி வடிவத்தில் வந்தன.


இன்னொரு மரப்பெட்டியில் ஏலக்காய்கள் படுக்கை மீது புகழ் பெற்ற குஜராத் இனிப்பான பேதா’ [ PETHA] வந்தன. கூடவே பழங்கள் கலந்த 




புட்டிங். இணையாக ஒரு பெரிய தட்டில் பால்கோவா போன்ற இனிப்பின் மீது தூவப்பட்ட சோன்பப்டி!

இதில் அனைத்து உணவு வகைகளும் அதிக ருசியுடன் இருந்தன என்பது தான் இந்த விடுதியின் ஸ்பெஷாலிட்டி. அதன் பின் வீட்டிற்கு வந்து இந்த விடுதியைப்பற்றி படித்துப் பார்த்தால் அப்படி புகழுரைகள்! இங்கே ஒரு முறை வந்து சாப்பிட்டிருக்காவிட்டால் நீங்கள் துபாயில் இருப்பதில் அர்த்தமேயில்லை என்று கூட ரசிகர் கூட்டம் சொல்லியிருந்தது! ஆனால் அந்த புகழுரையை இந்த விடுதி நிரூபித்துக்கொண்டிருக்கிறது!!
 

28 comments:

  1. தங்களது திருமணநாள் விழாவிற்கு எமது வணக்கங்கள்.

    "முத்தபல்" இதை விரும்பாதவர் உண்டோ ?
    ஆனாலும் இதை அறியாத இந்தியர்களும் உண்டு. தாங்கள் உணவுத்துறையில் இருப்பதால் இவ்வழிகள் முழுமையாக தெரியும் என்று நினைக்கிறேன்.
    வாழ்க நலம்.

    ReplyDelete
  2. அருமை
    அருமை
    தட்டில் உள்ள உணவு வகைகளைப் பார்த்ததும் பசியே வந்துவிட்டது

    ReplyDelete
  3. வணக்கங்களுடன் இனிய திருமணநாள் வாழ்த்துகள். சுவையான பதிவு.

    ReplyDelete
  4. // ஞானி:) அதிரானா மியாவ்ச்காவ் :) said

    அனைத்தும் அருமை கோமதி அக்கா. //

    அஹாங்....

    ReplyDelete
  5. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
    பேரக்குழந்தைகளுடன் படம் அழகு.
    கத்திரிக்காய் உணவு அருமை.
    படங்களும், செய்திகளும் அருமை.

    ReplyDelete
  6. அதிரா எனக்கு பல பின்னூட்டங்கள் போட்டு இருந்தார் . அதே நினைப்பில் இங்கு வந்து விட்டதால் வாழ்த்து எனக்கு சொல்லி இருக்கிறார் போலும்.

    ReplyDelete
  7. மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...

    அபிராமவல்லியின் நல்லருளால் நலமெலாம் பெற்று நீடூழி வாழ்க!..

    ReplyDelete
  8. முத்தாபல் இல்லாத அரபு விருந்துகளே இல்லை...

    தாங்கள் பதிவில் ஏனைய உணவு வகைகளைப் பற்றி விவரித்திருந்த விதம் அருமை..

    வாழ்க நலம்!...

    ReplyDelete
  9. அனைத்துமே அருமை அம்மா...

    ReplyDelete
  10. அனைத்தும் அருமை மனோ அக்கா. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.. அழகிய ஹோட்டலில் அருமையான விருந்து.

    [ கோமதி அக்காவுக்கு கொமெண்ட்ஸ் போட்ட கையோடு இங்கு வந்தமையாலபெயர் மாறிப் போட்டு விட்டேன் போன தடவை ஹா ஹா ஹா]

    ReplyDelete
  11. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா.
    பார்க்கவே உணவுவகைகள் அழகாக இருக்கு.

    ReplyDelete
  12. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் மா..


    உணவுகளின் படங்கள் வாவ்...ஆசையை தூண்டுகிறது ..

    அவ்வளோ அழகு...பார்க்கவே ..

    ReplyDelete
  13. நானும் பல நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றிருக்கிறேன் (எமிரேட்ஸ், பஹ்ரைன், ஓமன், கத்தார் போன்று). எப்போது சாப்பிடச் சென்றாலும் நேராக பழங்கள், சில இனிப்பு வகைகள் என்றுதான் ஆரம்பித்து முடிப்பேன். வேறு எதையும் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. ரொம்ப அபூர்வமாக சாதம், தால் கேட்டு இருந்தால் எடுத்துக்கொள்வேன். இப்படியே 25 வருடத்தை ஓட்டிவிட்டேன். இதற்கு மெயின் காரணம் வேறு உணவை சாப்பிட்டுப்பார்ப்போம் என்ற எண்ணம் இல்லாததுதான்.

    நீங்கள் விவரித்த விதம் அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. திருமண வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
    முத்தபல் சாலட் எங்கள் வீட்டில் எனக்கு மட்டுமே பிடித்த ஒன்று. வேறு யாரும் சாப்பிட மாட்டார்கள். எனவே எப்போதுமே நான் மட்டுமே இதை வாங்கி சாப்பிடுவேன்!

    எனக்குத் தெரிந்து சில‌ பேருக்கு கத்தரிக்காயை சுட்டால் அதன் வாசம் பிடிப்பதில்லை!

    ReplyDelete
  15. தங்கள் பாராட்டுரைக்கு இனிய நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!

    ReplyDelete
  16. இனிய வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    ReplyDelete
  17. இனிய வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  18. தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு இதயங்கனிந்த அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

    இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  19. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  20. வாழ்த்துக்களுக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி அதிரா!

    ReplyDelete
  21. நல்வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி பிரியசகி!

    ReplyDelete
  22. மகிழ்ச்சி, மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. இனிய வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி அனுராதா!

    ReplyDelete
  24. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி நெல்லை தமிழன்!

    அடிப்படையில் இந்த வயதிலும் நான் சமையலில் மிகவும் ரசனையுடனும் ஆர்வத்துடனும் சிறிது கூட அலுப்புமில்லாமலும் உற்சாகத்துடனும் ஈடுபடுபவ‌ள். எங்கு சென்றாலும் பாராட்டுதலுக்குரிய ஏதேனுமொரு சமையல் பாகத்தை ருசிக்க நேர்ந்தால் அதைப்பற்றி விசாரிப்பதும் சமையல்காரரை வரவழைத்து அவரை பாராட்டுவதும் அதைக்கற்றுக்கொள்வதும் என் வழக்கம்.

    ஆனால் இங்கே மட்டுமே நான் எதைப்பராட்டுவது என்று புரியாமலிருந்தேன்.

    ReplyDelete
  25. வாழ்த்துக்க‌ளுக்கும் அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!

    ReplyDelete
  26. மனோ அக்கா தாமதமான திருமண நாள் நல் வாழ்த்துகள்.

    உணவு எல்லாம் அப்படியே யம்மி என்று சொல்ல வைக்கிறது.

    எனக்கும் சமையல் செய்வது (வெஜிட்டேரியன்) மிகவும் பிடிக்கும். அதுவும் விதம் விதமாக முயற்சி செய்வதிலும் ஆர்வம் உண்டு. உங்களைப் போல வெளியில் யார் வீட்டிலேனும் அல்லது ஹோட்டலில் வித்தியாசமான மெனு இருந்தால் அதை முயற்சி செய்து அதைப் பாராட்டி விட்டு வீட்டில் செய்து பார்க்க நினைப்பது என்று ஆர்வம். புதிது புதிதாய் செய்யக் செய்ய புத்துணர்ச்சியாக இருக்கும் சமையல் என்றில்லை எதுவானாலும்...

    நீங்கள் சுவைத்திருப்பது எல்லாமே அருமை என்று புரிந்தது. எலுமிச்சை மூடியில் பெர்ரி சாறு உறைய வைத்து என்பது புதிதாக இருந்தது...எல்லாமே நன்றாக இருக்கு அக்கா

    கீதா

    ReplyDelete
  27. மிகவும் அருமையான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கீதா!

    ReplyDelete