Tuesday, 10 April 2018

வித்தியாசமான புகைப்படங்கள்!!



துபாய் நகரில் 1979ல் கட்டப்பட்ட 39 தளங்கள் கொண்ட கட்டிடம் இது [மஞ்சள் கட்டிடம்]. 40 வருடங்களுக்கு முன் நாங்கள் பார்த்து வியந்த கட்டிடம் இது. ஐக்கிய அமீரகத்தின் 100 ரூபாய்த்தாளில் [ அங்கே பணத்திற்கு திரஹம் என்று பெயர்] இது அச்சிடப்பட்டிருக்கிறது

இப்போது உலகிலேயே உயரமான கட்டிடமும் அதனருகேயே பல உயரமான அழகிய கட்டிடங்கள் வந்து விட்டாலும் இதன் புகழ் அப்படியே தானிருக்கிறது.
2.

ஜெயங்கொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோவிலின் நந்தி இது.
நந்தி லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி 

  


3. கன்யாகுமரியில் விடியற்காலையில் கதிரவன் கீழ்த்திசையில் எழுந்து வரும் காட்சியைக்காண குவிந்திருக்கும் மக்கள்!!

4.

செட்டிநாட்டு அரண்மனை ஒன்றின் முகப்பு தோற்றம்!

5. 
                   

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா  ராஜாமடம் அருகே  வங்கக் கடலோரம் ,அமைந்துள்ளது மனோரா என்ற எழில் கோபுரம் .
அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள் கொண்ட கலங்கரை விளக்க கோபுரம் போல் விளங்கும் இந்த மனோராவை 1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி  நினைவுச்சின்னமாக நிறுவினார். . மனோரா கோட்டையில் தமிழ் , தெலுங்கு , மராட்டி , உருது , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 5 கல்வெட்டுக்கள் உள்ளன

அறுகோண வடிவமும் 8 அடுக்குள்ள இந்தக் கோபுரத்தின் உயரம் 120 அடி, உச்சியை அடைய 120 படிகள் உள்ளன.மனோரா கோட்டையில் 3 வாயில்கள் உள்ளன. பழங்காலமரபின்படி வாயிற்காப்போன் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

6. 

   வாட்ஸ் அப்பில் வந்த ஒரு புகைப்படம்! இது                                       ஆண்களுக்காக!!                                                                                                                              

22 comments:

  1. அனைத்தும் நன்றாக இருக்கிறது சகோதரி/ மனோ அக்கா..

    ReplyDelete
  2. வாட்சப்பில் அந்தப் படம் எனக்கும் வந்தது மனோ அக்கா...

    கீதா

    ReplyDelete
  3. துபாயின் பழைய படத்தை முதன்முறையாக காண்கிறேன்.

    மனாரா அருமையாக இருக்கிறதே பைசா கோபுரம் போலவே...

    ReplyDelete
  4. புகைப்படங்கள் அழகு. கங்கை கொண்ட சோழபுரம் சென்றபொழுது உச்சிப்பொழுது ஆகிவிட்டதால் சாத்தி விட்டார்கள். கோவிலுக்குள் போகமுடியவில்லை. அனைத்தும் அருமை.

    ReplyDelete
  5. புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
    செய்திகள் அருமை.

    ReplyDelete
  6. தகவல்களுடன் பகிர்ந்திருக்கும் அனைத்துப் படங்களும் அருமை. நன்றி.

    ReplyDelete
  7. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி துளசிதரன்/கீதா!

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!
    இது பழைய புகைப்படம் இல்லை. சென்ற வருடம் எடுத்தது தான்! அருகே நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் 20ஆவது மாடியிலிருந்து எடுத்தது!

    ReplyDelete
  9. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  10. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  11. இனிய பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  12. அனைத்தும் மிக அருமை.

    ReplyDelete
  13. படங்களும் தந்து, கூடவே தகவல்களும் தந்ததற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  14. படங்கள் ஒவ்வொன்றும் அழகு

    ReplyDelete
  15. நல்லா இருக்கு அனைத்தும். அதிலும் துபாய் டிரேட் செண்டர்தான் நான் துபாய் 93ல் போனபோது பெரிய கட்டிடம். அங்கெல்லாம் போன நினைவு வந்துவிட்டது. அப்போல்லாம் துபாய்க்கும் ஷார்ஜாவுக்கும் இடையில் பாலைவனம் இருபுறமும்.

    மற்றவற்றையும் ரசித்தேன்.

    ReplyDelete
  16. அருமையான புகைப்படங்கள்!

    ReplyDelete
  17. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete
  18. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா!

    ReplyDelete
  19. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!

    ReplyDelete
  20. பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் த‌மிழ் இளங்கோ!

    ReplyDelete
  21. ரசித்து, பாராட்டி எழுதியதற்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!!

    ஷார்ஜாவிற்கும் துபாய்க்கும் இப்போது அவ்வளவாக இடைவெளி இல்லை! வானுயர்ந்த கட்டிடங்க்ள் தான் இரு மருங்கும்!! 1993ற்குப்பிறகு, 20 வருடங்களுக்கு மேலாகி விட்டனவே!

    ReplyDelete