கொடைக்கானலில் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காடுகளிடையே PILLAR ROCKS எனபப்டும் 3 செங்குத்தான பாறைகள் கம்பீரமாக நின்று கொன்டிருக்கின்றன. தூண் பாறை என்று தமிழில் அழைக்கப்படுகிறது. நாங்கள் செப்டம்பர் மாதம் சென்றதால் ஒரு விநாடி கூட இந்தப்பாறைகளை முழுமையாக காண முடியவில்லை. மேக மூட்டங்கள் அவற்றை மூடுவதும் விலகுவதுமாக இருந்தன. சுற்றிலும் அத்தனை முகங்களும் கையில் மொபைல் ஃபோனுடனும் காமிராவுடனும் மேகங்கள் அந்த மலைகளை விட்டு விலகி மலைகள் கண்ணுக்குப் புலப்படும் அந்த அழகான காட்சிக்காக காத்திருந்தது பார்க்க அற்புதமாக இருந்தது!!
லிமோசின் கார்களை எல்லா கார் நிறுவனங்களும் உற்பத்தி செய்கின்றன. கிட்டத்தட்ட 17 பேர்கள் இந்த நீளமான கார்களில் பயணம் செய்யலாம். ஓட்டுனருக்கும் பின்புற இருக்கைக்கும் இடையே தடுப்பு உண்டு. மினி பார் வசதிகள், பிளாஸ்மா டிவி என்று பல வசதிகள் இந்தக் காரில் இணைக்கப்பட்டிருக்கின்றன. பென்ஸ் நிறுவனம் புல்லட் ஃப்ரூஃப் லிமோசின் கார்களை தயாரித்திருக்கிறது. இதன் மதிப்பு 6 கோடி ரூபாய். கஜகஸ்தான் இளவரசிக்காக தயாரித்துள்ள மினி கூப்பர் லிமோசின் காரில் ஒரு லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கற்கள் வெளிப்புறத்தில் இணைக்கப்பட்டுள்ளன. 20 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்தக் காரின் விலை எட்டரை கோடி! அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது அவருக்காக வாங்கப்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய லிமோசின் காரின் விலை 18 கோடி. ப்ரூனே சுல்தானிடம் தான் உலகின் விலையுயர்ந்த காரை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வடிவமைத்துக்கொடுத்திருக்கிறது. 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டிருக்கும் இந்தக்காரின் விலை 48 கோடி!!!
கோடீஸ்வரர்கள் உபயோகிக்கும் இந்தக்கார்களை பல பயண நிறுவனங்கள் வாடகைக்கும் விடுகின்றன.
சென்ற வருடம் எங்களின் திருமண நாளில் எங்கள் மகன் துபாய்க்கு ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். அதன் வாசலில் ஒரு லிமோசின் கார் நின்று கொண்டிருந்தது. 'அட, இதோ ஒரு லிமோசின் கார்!' என்றேன். ' இது தான் ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் உங்களுக்கு' என்றார் என் மகன். இதில் துபாயை சுற்றிப்பார்க்கப்போகிறோம் என்று சொன்னதும் மிகவும் மகிழ்வாக இருந்தது. அதன் ஒரு மணி நேர வாடகை நம் பணத்திற்கு 18000 ரூபாய். அதைத்தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள்!
என் அம்மாவின் 95 ஆவது பிறந்த நாள் புகைப்படம் இது. [ அம்மாவிற்கு இப்போது 98 வயது] அம்மாவிற்கு அருகில் இருப்பவர் என் மூத்த சகோதரியும் அவரின் பேரனும். பின்னால் என் இடப்பக்கம் இருப்பவர் என் தங்கை மகள். கண் அறுவை சிகிச்சை நிபுணர். வலப்பக்கம் என் தங்கை. அவரின் அருகில் என் அக்காவின் மருமகள். முதுகலைப்பட்டப்படிப்பு படித்தாலும் பள்ளி ஆசிரியையாக இருக்கிறார்.
என் பெயரன் தன் தங்கையை ஆசையுடன் மடியில் வைத்திருக்கிறார்.
மும்பையில் prince of wales museum
என்று பழங்காலத்திலும் தற்போது Chhatrapati Shivaji Maharaj
Vastu Sangrahalaya என்றும் அழைக்கப்பட்டு வரும் புகழ் பெற்ற மியூசியத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.



ஆஹா அற்புதமான படங்களும், அருமையான விசயங்களும்.
ReplyDeleteவாழ்த்துகள் சகோ.
முதல் படம் கண்ணைக் கவர்கிறது. லிமோசின் கார் விவரங்கள் கண்ணைக்கட்டுகின்றன. லிமோசின் பயணத்துக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துகள். (இந்த மாதம்தானே!)
அருமையான படங்கள்
ReplyDeleteதங்களின் குடும்பத்தினரையும்,
தங்களின் அன்புத் தாயினைக் கண்டு மகிழ்ந்தேன்.
தங்களின் பெயரனுக்கும் பெயர்த்திக்கும் அன்பு வாழ்த்துக்கள்
புகைப்படங்களின் தெரிவு அருமை. நீங்கள்குறிப்பிட்டுள்ள இந்த மும்பை அருங்காட்சியகத்திலிருந்து என் பௌத்த ஆய்விற்காக அங்குள்ள நாகப்பட்டின புத்தரின் செப்புத் திருமேனிகளின் புகைப்படங்களைப் (Nagapattinam Buddha bronzes)பெற்று என் முனைவர் பட்ட ஆய்வேட்டில் இணைத்துள்ளேன்.
ReplyDeleteஅழகான புகைப்படங்கள். சிறப்பான தகவல்களும்....
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அருமையான தொகுப்பு.
ReplyDeleteஅம்மாவுக்கு வணக்கங்கள். நல்லதொரு குடும்பம்!
பேரக் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!
லிமோஸின் பயண அனுபவம் சுவாரஸ்யமாக இருந்திருக்குமென நம்புகிறேன்.
அழகான படங்கள்.. மனதைக் கவர்கின்றன..
ReplyDeleteதங்கள் பேத்திக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..
வணக்கம் !
ReplyDeleteஎல்லாம் அருமை ஆனால் லிமோசன் காரில் சுற்றிய அனுபவம் பற்றிச் சொல்லவில்லையே......
படங்களையும் அது குறித்தான தகவல்களையும் ரசித்தேன் அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு இனிய நன்றி கில்லர்ஜி!
ReplyDeleteநிறைய வாழ்த்துக்களைச் சொல்லி விட்டீர்கள் ஸ்ரீராம்! அன்பு நன்றி!! திருமன நாள் அக்டோபர் 28ல் வரும்.
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
ReplyDeleteஅன்புச் சகோதரர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு
ReplyDeleteதாங்கள் சொன்ன விபரம் ஆச்சரியமளிக்கிறது. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!
ReplyDeleteஇனிய பாராட்டிற்கும் அன்பு வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ராமலக்ஷ்மி! ஆமாம்! லிமோசின் பயணம் மிகவும் இனிமையாக அமைந்தது அன்று!
ReplyDeleteதங்களின் அன்பான நல்வாழ்த்துக்களுக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!
ReplyDeleteபாராட்டிற்கு அன்பு நன்றி சீராளன்! லிமோசின் பயணம் பற்றி தனியொரு பதிவில் எழுத நினைத்தேன். தினசரி அழுத்தங்களின் காரணமாக மறந்து போய் விட்டது. ஆனால் அன்றைய பயணம் என் கணவர், மகன், மருமகள், பேரனுடன் மிக இனிமையாக கழிந்தது.
ReplyDeleteரசித்து எழுதியதற்கு மனம் நிறைந்த நன்றி குமார்!!
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteதன்வினை அறுத்துத் தூய
..தளிரென வாழும் வண்ணம்
முன்வினைப் பயனைப் போக்கும்
..மூலிகை மருந்தும் சொல்லி
மன்பதை வளர்க்கும் உங்கள்
..வருகையால் என்வ லைப்பூ
புன்னகை பூத்த தின்று
புண்ணியம் பெற்ற தென்று !
அன்பின் நன்றிகள் என்வலைப்பூவுக்கு வந்து என்னை வாழ்த்தியமைக்கு
வாழ்க நூறாண்டு வளத்துடனும் நலத்துடனும் !
முதலாவது புகைப்படம் மிக அருமை.. லெமோ கார்கள்தான் இப்போ இங்கெல்லாம் திருமணங்களுக்குப் பிடிக்கப்படுகின்றன.. நானும் பலதடவைகள் ஏறிவிட்டேன் அதில்.
ReplyDeleteகுடும்பப் புகைப்படம்.. இனிமையான நினைவுகள்.
பேரன் பத்திரமாக வைத்திருக்கிறார் தங்கையை..
காத்திருந்து காத்திருந்து எடுத்த முதல் புகைப்படம் சிறப்பாக உள்ளது. அம்மாவின் ஆசீர்வாதம். பேரக் குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சிதான். அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான படங்கள்!
ReplyDelete