Wednesday, 27 July 2016

துபாய் ஏர்போர்ட்!!





அன்னிய தேசங்களிலிருந்து அதிக அளவில் இன்றைக்கு வருகை தரும் விமான நிலையம் துபாய் பன்னாட்டு விமான நிலையம். 1937ல் மிகச்சிறிய அளவில் இங்கிலாந்திற்கும் கராச்சிக்கு மட்டும் இயங்கி வந்த விமானப் போக்குவரத்து

1960ல் மிகச் சிறிய விமான நிலையத்தைக்கட்டி சிட்னிக்கும் ஆப்பிரிக்காவிற்கும் போக்குவரத்தை ஆரம்பித்தது



1960களில் முறையான கட்டிடங்கள், பொறியியல் வல்லுனர்கள் கொண்டு, நல்லதொரு ஓடுதளத்துடன் துபாய் விமான நிலையம் இயங்க ஆரம்பித்தது.

1970களில் கட்டிய இந்த ஏர்போர்ட் நவீனமயமாக்கப்பட்டு இப்போது டெர்மினல் 1 என்ற பெயருடன் இயங்கி வருகிறது.
 50 வருடங்களுக்குப்பிறகு, இன்றைக்கு பணத்தால் ஒவ்வொரு சதுர அடியும் இழைக்கப்பட்டு அனைவரையும் எப்போது போனாலும் பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கிறது! ஒவ்வொரு முறையும் அசத்தலான ஏதேனுமொரு மாற்றத்தைப்பார்க்கிறேன் இப்போதெல்லாம்

2015 ஆம் ஆண்டு மட்டும் இந்த விமான நிலையம் 78 மில்லியன் பயணிகளை பார்த்திருக்கிறது. துபாய் அரசுக்குச் சொந்தமான எமிரேட்ஸ் விமானங்கள் கிட்டத்தட்ட துபாய் ஏர்ப்போர்ட்டிலிருந்து பாதியளவு பயணங்களை மேற்கொள்கின்றன. துபாய் ஏர்ப்போர்டில் மூன்று டெர்மினல்கள் உள்ளன. டெர்மினல் 1 1970களிலிருந்து உள்ளது. இப்போது நவீன மயமாக்கப்படிருக்கிறது. பெரும்பாலும் உலகின் பல நாடுகளுக்கு இங்கிருந்து தான் விமானக்கள் செல்கின்றன. டெர்மினல் 2 பட்ஜெட் விமானக்களை அதிகமாக கையாளுகிறது. டெர்மினல் 3 உலகின் மிகப்பெரிய தளம் உள்ளகட்டிடத்தைக் கொண்டிருக்கிறது.உலகிலேயே அதிக பரப்பளவு கொண்ட டெர்மினலும் இதுவே. முன்னால் எமிரேட்ஸ் விமானக்களுக்காக மட்டும் இயங்கி வந்த இந்த டெர்மினல் தற்போது 'காண்டாஸ் விமானங்களை இங்கிருந்து இயங்க ஒப்பந்தம் மூலம் அனுமதித்துள்ளது. இந்த வருட ஆரம்பத்திலிருந்து வாரம் 7000க்கும் அதிகமான விமானங்களை இயக்கி வருகிறது


துபாய் விமான நிலையத்தின் அத்தனை அழகையும் காமிராவிற்குள் அடக்கி விட முடியாது. ஒரு சில படங்கள் உங்களுக்காக

கடைகளும் இளைப்பாறும் இடங்களும்
பயணிகள் விமானம் ஏறு முன் காத்திருக்கும் இடம்!




வெளியிலிருந்து வந்திறங்கும் விமானப்பயணிகள் இமிக்ரேஷன் செல்வதற்காக மெட்ரோ ரயிலில் ஏறக்காத்திருக்கிறார்கள். முன்பு நீண்ட நடைப்பயணம் இருந்தது. இப்போது இந்த சொகுசு வசதியை ஏற்படுத்தி அந்த சிரமத்தை அகற்றி விட்டார்கள்!
உள்ளே கடைகள்!


அவரவர் விமானம் நிற்கும் இடத்திற்கு நடந்து செல்லாமல் இந்த 'டிராவலேட்டரில்' பயணம் செய்யலாம்!
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு துபாய் வழியே செல்லும்போது துபாயில் சில ம‌ணி நேரங்கள் தங்க நேரிடும். அதுவே மறு நாள் தான் மறுபடியும் செல்லும் விமானம் கிளம்புமென்றால் ட்ரான்ஸிட் பயணிகள் தங்க வசதியாக ஏர்போர்ட்டிலேயே இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்!
சில ம‌ணிநேரங்கள் தங்கும் டிரான்ஸிட் பயணிகள் தூங்குவதற்கு வசதியான அறை!
டிரான்ஸிட் பயணிகள் தங்கள் பொழுதைக்கழிப்பதற்கு ஏர்போர்ட்டிலேயே ஒரு பசுமையான தோட்டம்!
குழந்தைகள் விளையாட ஒரு இடம்!
ஏர்போர்ட் உள்ளே இருக்கும் ஒரு நகைக்கடை!

24 comments:

  1. அழகிய புகைப்படங்களுடன் விரிவான செய்திகள் நன்று
    நான் நிறைய புகைப்படங்கள் வைத்திருக்கின்றேன் பதிவுக்காக...

    ReplyDelete
  2. குவைத்திலிருந்து இரண்டு முறை துபாய் வழியாக சென்னைக்குப் பறந்திருக்கின்றேன்..

    பிரம்மாண்டம் என்றாலும் - அவசரத்துக்கு ஆகாது..

    ஒரு முறை திடீரென டெர்மினலை மாற்றி விட்டார்கள்..

    மேலிருந்து கீழே இறங்கி மெட்ரோவில் ஏறி எங்கேயோ கடந்து மறுபடியும் மேலே ஏறி கீழே இறங்கி ... அப்பாடா..

    தவித்துப் போய் விட்டோம்..

    பரபரப்பில் படம் ஏதும் எடுக்க இயலாமல் போனது தான் மிச்சம்!..

    வண்ணமயமான படங்களுடன் அழகிய பதிவு..

    ReplyDelete
  3. சந்தோஷம் அளிக்கும் மிகவும் அருமையான தகவல்கள்.

    கண்களுக்கு இனிமையான அற்புதமான படங்கள்.

    சமீபத்தில் மீண்டும் ஒருமுறை நேரில் பார்த்துவிட்டு வந்துள்ளதால் மேலும் கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி.

    மொத்தத்தில் அதெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு சுவர்க்க லோகம்தான்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா

    அறிய முடியாத தகவலை மிக அழகிய படங்களுடன் விளக்கியமைக்கு வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. பிரம்மாண்டம். அருமை. அழகு.

    ReplyDelete
  6. படங்களுடன் பதிவு
    மிக மிக அருமை
    நேரடியாகப் பார்க்கிற அனுபவத்தைத்
    தருகிறது

    அங்கு ஏற்கென்வே வரும்
    உத்தேசமிருக்கிறது
    இப்பதிவு அதற்கு மேலும்
    உரமூட்டுகிறது

    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஆகா
    அருமையான கண்கவர் காட்சிகள் சகோதரியாரே

    ReplyDelete
  8. இது நம்ம ஏர்போர்ட்..அருமையான புகைப்படங்கள்.

    ReplyDelete
  9. அமர்க்களமான படங்களுடன் அட்டகாசமான பதிவு! கண்களையும் மனதையும் கவர்ந்தது. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  10. பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  11. சரியாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரர் துரை.செல்வராஜ்! விரிவாக்கம் நடந்து கொண்டேயிருப்பதால் முன்பெல்லாம் இது போன்ற குளறுபடிகள் நிறைய நடந்தன. இப்போது பரவாயில்லை. நானும் ஒரு முறை போர்டிங் கார்டில் குறிக்கப்பட்டிருந்த‌ கேட் அருகே காத்திருந்து அப்புற‌ம் பயணிகள் யாருமேயில்லாதலால் விசாரித்து வேறொரு கேட் செல்ல அவசரமாக ஓடியிருக்கிறேன்! நான் மூன்று மாதங்களுக்கொரு முறை செல்வதால் ஒவ்வொரு முறையும் ஏதாவது புதிய மாற்ற‌ம் அங்கே காத்திருப்பதைப் பார்க்கிறேன். இந்த முறை உணவக‌ங்கள் மிக அழகிய பகுதிக்கு மாறி விட்டது!

    ReplyDelete
  12. அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  13. வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி ரூபன்!

    ReplyDelete
  14. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  15. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி! எப்போது வருவதாக முடிவு செய்திருக்கிறீர்கள்? நான் முன்பேயே சொன்ன மாதிரி அக்டோபர் இறுதியில் தான் குளோபல் வில்லேஜில் கண்காட்சி ஆரம்பிக்கும். நானும் நவம்பர் முதல் அங்கிருப்பேன். அப்போது பயணம் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  16. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  17. நீங்கள் துபாயில் இருக்கிறீர்களா அருள்மொழிவர்மன்? பாராட்டிற்கு இனிய நன்றி!

    ReplyDelete
  18. இனிய பாராட்டிற்கும் நெடுநாள் கழித்து வ‌ருகை தந்ததற்கும் அன்பு நன்றி செந்தில்குமார்!

    ReplyDelete
  19. நான் தற்சமயம் நியூ செர்சியில் பெண் வீட்டில்...டிசம்பரில் இந்தியா ...எப்படியும் மார்ச் ஏப்ரலில்வரும் எண்ணமிருக்கிறது...அது வரை கண்காட்சி இருக்கச் சாத்தியமா எனத்தெரியவில்லை்ஏன் தங்கள் கைமணம் பார்க்க முடியவில்லை..லிங்க் கிடைத்தால்மகிழ்வோம்...வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  20. நீங்கள் எழுதியிருந்ததைப்படித்தேன் சகோதரர் ரமணி! மார்ச் இறுதி வரை நிச்சயம் கண்காட்சி இருக்கும். அதற்கப்புறமும் சில நாட்கள் அவர்கள் வசதிக்கேற்ப நீடிக்கிறார்கள். அந்த சமயத்தில் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். எனது சமையல் தளம்
    www.manoskitchen.blogspot.com
    இதில் தான் எப்போதும் சமையல்குறிப்புகள் எழுதுகிறேன். உடல் நலப்பிரச்சினைகள், அலைச்சல்கள் இவற்றால் தொடர்ச்சியாக எழுத முடியவில்லை.

    ReplyDelete
  21. விமான நிலையம் தான் எத்தனை அழகு. எங்கும் பளிச் பளிச்!

    படங்கள் மூலம் பார்த்து நாங்களும் ரசித்தோம்.

    ReplyDelete
  22. மிக அழகான புகைப்படங்கள். அண்மையில் மஸ்கட் விமான நிலையத்தில் இருந்தேன்.எனக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் நினைவுக்கு வந்தது!

    ReplyDelete
  23. ரசித்து பாராட்டி எழுதியதற்கு அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  24. ரசித்ததற்கு அன்பு நன்றி மோகன்ஜி! மஸ்கட் விமான நிலையம் பல வருடங்களுக்கு முன் பார்த்தது. சுமாராகத்தானிருக்கும்!

    ReplyDelete