Wednesday, 16 March 2016

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

எப்போதோ எங்கோ படித்தேன் ' நாமெல்லாம் எந்த அளவிற்கு அதிர்ஷ்டசாலி' என்ற இந்த கட்டுரையை! மண்டையில் அடிப்பது போலிருந்தது இதிலிருக்கும் உண்மைகள்! கிட்டத்தட்ட
 ' உனக்கும் கீழே உள்ள‌வன் கோடி, நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு' என்ற கண்ண‌தாசனின் உரைநடை உருவாக்கம் என்று கூட சொல்லலாம்! இதைப்படிப்பதால் உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில்கூட மாறுதல்கள் ஏற்படலாம்!

இனி இது உங்கள் பார்வைக்கு!

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

உண்ண உணவும் உடுத்த உடையும் வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள‌ 75 சதவிகித‌ மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்!

வங்கியில் பண‌மிருந்தால் அவ்வாறு உள்ள‌ 8 சதவிகித மக்களில் நீயும் ஒருவ‌ர். ஏனெனில் உலகில் உள்ள‌ 80 சதவிகித மக்களுக்கு வங்கிக்கணக்கே இல்லை!

உன்னிடம் கணிப்பொறி இருந்தால் அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மக்களில் நீயும் ஒருவர்.

நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் உன்னால் மொபைலில் பேச முடிந்தால், அவ்வாறு வாய்ப்பே இல்லாமலிருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்!

நோயின்றி புத்துணர்வுடன் காலையில் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி!

பார்வையும் செவித்திறன், வாய் பேசாமை போன்ற எந்தக்குறைபாடும் இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உலகில் உள்ள‌ 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை உனக்கு அமைந்துள்ள‌து என்பதை அறிந்து கொள்!!

உன் பெற்றோரைப்பிரியாமல் அவர்களுடன் நீ இருந்தால் துன்பத்தை அறியாதவன் நீ என்பதைப்புரிந்து கொள்.

தாகம் எடுத்தால் குடிப்தற்கு உனக்கு தண்ணீர் கிடைக்கிறதா? உலகம் முழுமையும் சுமார் 100 கோடி மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் கிடைப்பதில்லை என்பதை நீ அறிவாயா?

உலக அறிவு பெற்று இந்த செய்தியை உன்னால் படிக்க முடிகிறபோது, உலக முழுமையும் எழுழுதப்படிக்கத்தெரியாத 80 கோடி மக்களுக்குக்கிடைக்காத கல்வி உனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்!

இணையத்தில் இதை உன்னால் படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களையும் விட நீ மேலானவன்!!

நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும் தொழில் நுட்பங்களையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அதைப்பற்றிய அறிவு கூட இல்லாமல், கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, இந்த அளவு நல்லவைகளை கைவரப்பெற்றிருக்கும் நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி!

வீண் கவலைகளை விட்டு விட்டு, அந்தக் கவலைகளை காரணம் காட்டி குமைந்து நிற்பதை அடியோடு விட்டு, நான் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலி என்ற உணர்வோடு இயன்றவரை அடுத்தவர்களுக்கு உதவுங்கள்!!
 

18 comments:

  1. திருப்தி இல்லையேல் என்றும் திண்டாட்டம் தான்...

    ReplyDelete
  2. இதனை ஏற்கனவே எங்கோ எதிலோ படித்ததுபோல எனக்கும் ஞாபகம் வந்தது. யோசிக்க யோசிக்க அத்தனையும் உண்மையே. நாம் நிச்சயம் இன்றைய தேதியில் ஓரளவுக்காவது அதிர்ஷ்டசாலிகள் என்பதை நினைக்க மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு ..நானும் அதிர்ஷ்டசாலித்தான்

    ReplyDelete
  4. உண்மையான வார்த்தைகள். நானும் கொடுத்து வைத்தவள் தான்.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு...உண்மை தான்

    ReplyDelete
  6. 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' நினைவுக்கு வருகிறது! அருமை. இதைப் படித்ததும் மனதுக்குள் ஒரு உற்சாகம் வருகிறது! நாம் தேவலாம் என்ற எண்ணம் வருகிறது.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு ..நானும் அதிர்ஷ்டசாலித்தான்.

    மாலி

    ReplyDelete
  8. உண்மை தான் தனபாலன்! வாழ்க்கையில் நாம் பெற்றவைகளில் நிச்சயம் மன‌ நிறைவு தேவை! கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  9. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  10. இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அனுராதா!

    ReplyDelete
  11. வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் இனிய நன்றி வல்லி சிம்ஹன்!

    ReplyDelete
  12. வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் இனிய நன்றி வல்லி சிம்ஹன்!

    ReplyDelete
  13. கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி உமையாள் காயத்ரி!

    ReplyDelete
  14. உங்கள் வார்த்தைகளைப்படித்ததும் இந்தப்பதிவின் நோக்கம் நிறைவேறி விட்ட மன நிறைவு கிடைக்கிறது சகோதரர் ஸ்ரீராம்! கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  15. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் மாலி!

    ReplyDelete
  16. அருமையான தன்னம்பிக்கை தர கூடிய பகிர்வு. நன்றி.
    இதை படித்தபின் மனதில் நாம் இந்த அளவுக்கு இருப்பத்ற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  17. நல்ல கருத்துரைகள் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  18. என் அப்பா அடிக்கடி சொல்லும் பாடல் வரிகள்! நல்ல கருத்துக்கள். நாம் எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் அதிர்ஷ்டசாலிகள் தான்.

    ReplyDelete