Saturday, 9 May 2015

முத்துக்குவியல்-36!!

மருத்துவ முத்து:

உடம்பில் தோன்றும் மருக்களை நீக்க:

கட்டிப்பெருங்காயத்தை நீரில் ஊறவைத்து அது பசை போல ஆனதும் தினமு அதை மருவில் தடவி வந்தால் சிறிது நாட்களில் அந்த மரு மறையும்.



குறிப்பு முத்து:

முன்பெல்லாம் குளிர்ந்த நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்றும் சூடான நீரில் தேன் கலந்து சாப்பிட்டால்  உடல் மெலியும் என்றும் கூறுவதுன்டு. உண்மையில் சூடான பொருள் எதிலுமே தேனைக்கலந்து சாப்பிடுவது விஷத்தை சாப்பிடுவதற்கு சமம் என்று ஆயுர்வேதக்கல்லூரி முதல்வர் கூறுகிறார். தேனை சாதாரண வெப்ப நிலையில் சாப்பிடுவதே சிறந்தது என்று சொல்லும் இவ்ர் க்ரீன் டீயில் தேனைக்கலப்பது, மெலிய வேண்டும் என்று வெந்நீரில் தேனைக் கலப்பது என்கிற பழக்கலாம் அழித்தொழிய வேண்டிய பழக்கங்கள் என்று அறிவிறுத்துகிறார்!



பப்பாளி:

ஸ்லீ எனப்படும் அரிய வகை நோயையும் நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றையும் வராமல் காக்கும் தன்மையுடையது. சக்தி மிக்க ஆன்டி ஆக்ஸிடென்ட்களான விட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கெரோட்டீன் போன்ற்வைகளையும் த‌ன்னுள் அடக்கிய பழம் இது! இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்தினைத் தருகிறது. பப்பாளியிலுள்ள‌ ஒரு வித என்ஸைம்கள் ம‌லச்சிக்கல் முதல் குடல் புண் வரை வயிற்றுப்பிரச்சினைகளை உடனயடியாகக் குறைத்து விடும் ஆற்றல் கொண்டவை இவை. பப்பாளியில் உள்ள‌ நார்ச்சத்து ' கோலன்' பகுதியிலுள்ள புற்றுநோய் உருவாக்கும் செல்களை கட்டுப்படுத்துகிறது. பழம் மட்டுமல்லாது, கொட்டைகளையும் கடித்து மென்று உமிழ்நீரை சேர்த்து விழுங்கினால் உடலில் உள்ள கெட்ட‌ நீர் வடிந்து விடும்.  பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். பப்பாளியிலுள்ல' கார்பின்' இருதயத்திற்கும் 'ஃபைப்ரின்' ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன. குழந்தைகளுக்கு அடிக்க்டி கொடுத்து வர, உடல், எலும்பு, பற்கள் வலிமையுடன் வளர்ச்சி பெறும். கல்லீரல் நோய்களை பப்பாளி சரி செய்ய வல்லது.



அசத்தல் முத்து:

சமீபத்தில் படித்தது. எலுமிச்சம்பழத்தை குறுக்காக வெட்டி அதில் ஐந்தாறு கிராம்புகளை சொருகி கொசுக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் வைத்தால் கொசு திரும்ப அந்த இடத்திற்க்கு வ‌ரவே வராதாம்!

புன்னகைக்க வைத்த முத்து:

அந்தமானில் உள்ள ஒரு பழங்குடியினரில் உள்ள ஒரு விசித்திரமான பழக்கம்! அவர்களில் யாராவது மறுமணம் செய்து கொள்ள விரும்பினால் அது இடுகாட்டில் தான் நடத்தப்படுமாம்! காரணம் இறந்து போன முதல் மனைவியின் ஆசி அங்கு தான் கிடைக்குமாம்!




அசர வைத்த முத்து:

யதேச்சையாக நடிகர் திலகத்தின் ஓவியத்தை கூகிள் தேடுதலின் போது பார்த்து அசந்து போனேன். வரைந்த ஓவியர் பற்றி ஜீவா என்ற பெயர் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. வண்னங்களின் கலவை எத்தனை அற்புதம். முகத்தில் உயிரோட்டம் ததும்புகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே இப்படி அனாசயமான வண்ண‌த்தீற்றல் கைவரப்பெறும். ஜீவாவுக்கு என் வாழ்த்துக்கள்!

31 comments:


  1. அந்தமான் மக்களின் எண்ணம்கூட ஒருவகையிஸ் சரிதானோ ?
    ஓவியம் அருமை ஜீவாவிற்க்கு எமது வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. தங்களது தளத்தில் இன்றுதான் இணைத்துக்கொள்ள முடிந்தது நன்றி.

    ReplyDelete
  3. ஜீவா அவர்கள் வரைந்துள்ள சிவாஜி கணேசன் ஓவியத்தில் ஜீவன் உள்ளது.
    இன்றைய அனைத்து முத்துக்களும் அருமை. பயனுள்ள முத்துக்களுக்குப் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா
    ஒவ்வொரு முத்துக்களும் மிக அருமையாக உள்ளது யாவருக்கும் பயன்பெறும் பகிர்வுக்கு நன்றி த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. முத்துச் சிதறல் முப்பத்தி ஆறு – அனைத்தும் நல்ல சுவாரஸ்யமான தகவல்கள். கொசுவை விரட்ட எலுமிச்சையும் கிராம்பும் பயன்படும் விஷயம் புதிய தகவல். செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  6. அசத்தல் முத்துக்கள்! சிவாஜியின் ஓவியம் மிக அருமை! நன்றி!

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்கள் அனைத்தும் பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  8. இயல்பு நிலையில் தேனைப் பாவிப்பதே சிறந்தது.
    கட்டித் தேனைப் பருகினால் வயிற்றோட்டம் நின்றுவிடுமாம்.
    நீருடன் தேனைக் கலந்து பருகினால் வயிற்றோட்டம் ஏற்படுமாம்
    எங்க வீட்டு உண்மைச் செய்தி இது.

    ReplyDelete
  9. பயனுள்ள முத்துக்கள்! தேன் பற்றிய தகவல் தெரிந்து கொள்ள வேண்டியது.

    ReplyDelete

  10. முதல் முத்து பரீட்சித்துப் பார்க்கவேண்டும். எரியுமோ?

    இரண்டாவது முத்து நானும் அவ்வண்ணமேதான் கேள்விப்பட்டிருந்தேன். தவறா? ஐயோ!

    பப்பாளியால்தான் எத்தனை உபயோகங்கள்?

    அசத்தல் முத்து : எங்கள் வீட்டில் அது வேலை செய்யவில்லை!!! :)))

    ஓவியத்தின் சிறப்பை ஓவியர்தானே அறிய முடியும்?

    ReplyDelete
  11. அனைத்திற்கும் நன்றி... முக்கியமாக அசத்தல் முத்து...!

    ReplyDelete
  12. எல்லா முத்துக்களும் அருமை. தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  13. பயனுள்ளபதிவு சகோதரியாரே
    சிவாஜியின் படம் அற்புதம்
    தரவிறக்கம் செய்து கொண்டேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  14. மிக பயனுள்ள தகவல்கள் எல்லாமே. தேன் தகவல் அறியவேண்டியதொன்று.

    ReplyDelete
  15. //சூடான பொருள் எதிலுமே தேனைக்கலந்து சாப்பிடுவது விஷத்தை சாப்பிடுவதற்கு சமம்//

    நானும் இவ்வாறுதான் ஆரம்பத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பிற்காலங்களில் பலரும் மருத்துவக் குறிப்புகளில் தேனை சுட வைத்து பயன்படுத்தச் சொல்லியபோது, முதலில் கேள்விப்பட்ட தகவலதான் தவறு போல என்று நினைத்துக் கொண்டேன். உதாரணமாக, சளிக்கு இஞ்சிச் சாறும் தேனும் கலந்து சூடாக்கிக் கொடுக்கச் சொன்னார் ஒருவர். எனது உறவினர், தேன் வாங்கினால், உடனே நன்கு சூடாக்கிய பாத்திரத்தில் தேனை ஊற்றி கலக்கி விட்டுத்தான் பாட்டிலில் ஊற்றி வைப்பார்.

    இப்படிப் பலதும் கேள்விப்பட்ட சமயத்தில் , ஓல்ட் இஸ் கோல்ட் என்பதாக, நான் முதன்முதல் அறிந்த விஷயமே மீண்டும் அறிய வருகீறது. :-)))))

    ReplyDelete
  16. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  17. தளத்தில் இணைந்ததற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  18. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  19. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி ரூபன்!

    ReplyDelete
  20. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் தமிழ் இள‌ங்கோ!

    ReplyDelete
  21. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  22. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி இனியா!

    ReplyDelete
  23. வருகைக்கும் அருமையான தகவலுக்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

    ReplyDelete
  24. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி நிலாமகள்!

    ReplyDelete
  25. அருமையான, விரிவான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  26. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  27. இனிய கருத்துரைக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சாரதா! தாமதமானாலும், உங்களுக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி பிரியசகி!

    ReplyDelete
  29. பாராட்டிற்கு அன்பு நன்றி காஞ்சனா!

    ReplyDelete
  30. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஹுஸைனம்மா! தேனைப்பற்றிய இந்தக் கருத்து சென்னையிலிருக்கும் ஆயுர்வேதக்கல்லூரியின் முதல்வர் திரு.சுவாமிநாதன் ஒரு பத்திரிக்கையில் எழுதியது. அதனால் இந்தக் கருத்து உண்மையானது என்று தான் எடுத்துக்கொள்ள‌ வேண்டும்.


    ReplyDelete