Thursday, 9 April 2015

எதைத்தான் சாப்பிடுவது?

வர வர எந்தெந்த உணவுப்பொருள்கள் சாப்பிடுவது நல்லது, எப்படி சாப்பிட்டால் நல்லது, எப்படி சாப்பிட்டால் கெடுதலானது என்பதை எத்தனை படித்தாலும் குழப்பமே மிஞ்சுகிறது!
ரொம்ப நாளாக இதைப்பற்றி எழுத நினைத்திருந்தேன். சமீபத்திய சில அனுபவங்கள் இந்தப் பதிவை இப்போதே எழுத வேன்டுமென்ற முனைப்பை அதிகரித்து விட்டன.



சமீபத்தில் ஒரு மருத்துவர் சொன்னார், ' ஆப்பிள் அதிகமாக உண்ணுங்கள், அனால் கவனம் இருக்கட்டும். தோலை நீக்கி உண்ணுங்கள். ஆப்பிள் பழங்களின் பளபளப்பு அதிகரிக்க ஒரு வித மெழுகு தடவுகிறார்கள்' என்று!! முன்பெல்லாம் மருத்துவர்கள் தோலோடு ஆப்பிளை சாப்பிட வேண்டுமென்று சொன்னது போய்  இன்று இப்படி! இன்னொரு மருத்துவர் சொன்னார், ' வாழைப்பழங்களில் மலைப்பழம் தவிர எதையும் உண்ண வேண்டாம், மற்ற பழங்கள் சூடு வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன, அவை உடம்புக்கு கேடு ' என்று! மாம்பழங்களில் ஏற்கனவே இந்த பிரச்சினைகள் இருக்கிறது! சமீபத்தில் ஒரு தகவல் அதிர்ச்சியைத்தந்தது. தர்பூசணி பழத்தில் எரித்ரோசின் பி என்னும் ஒரு சிகப்பு நிறமியை ஊசி மூலம் ஏற்றினால் பழத்தின் உட்புறம் நல்ல சிவப்பாக மாறுகிறதாம். வட இந்தியாவில் இப்படி தற்பூசணியை விற்கிறார்கள். இந்த பழத்தை சாப்பிடுவது புற்று நோயை உண்டாக்கும் என்று சமூக உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தமிழகத்திலோ ஊசி மூலம் நிறமிகளை ஏற்றுவதில்லை. அதற்கு பதிலாக பழத்தை வெட்டி அதன் மேல் நிறமிகளை தடவுகிறார்கள். இனி தர்பூசணியை தைரியமாக வாங்கி சாப்பிட முடியாது. இன்னும் அன்னாசி, மாதுளை பற்றி ஒரு தகவலும் வரவில்லை.



முன்பெல்லாம் முட்டை வாங்கி வரும்போது அதில் சிறிய விரிசல்கள் இருந்தாலும் அதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. கவனமாக அந்த முட்டையைக் கழுவி வேக வைத்து சாப்பிட்டு விடுவோம். ஆனால் இப்போதோ முட்டை வாங்கும்போது மயிரிழை போன்ற சிறு விரிசல் தென்பட்டால் அந்த முட்டையை வாங்கி உபயோகித்து விட வேண்டாம் என்று படித்தேன். காரணம் டைஃபாயிட் முதலிய நோய்களை உண்டாக்கும் 'சல்மோனெல்லா' என்ற பாக்டீரியா அந்த வெடிப்பில் இருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறதாம்!

இறைச்சியிலும் ' ஈகொலி' என்ற பாக்டீரியா இருக்கிரதாம். நல்ல கொதி நிலையில் அவை சமைக்கப்படாவிடில் அவை உடலுக்குள் ந்ழைந்து கெடுதி செய்யும் வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம். இதைப்பற்றி சகோதரர் சாமானியனும் எழுதியிருந்தார்.  நானும் ஒரு விருந்தினர் இல்லத்தில் இதை சாப்பிடப்போய் வயிற்றுப்போக்கும் வலியுமாக உடல் நலம் கெட்டு விட்டது. ப்ரிசோதனையில் ஈ கொலி  பாக்டீரியாவின் பாதிப்பு என்றார்கள். 15 நாட்களுக்கு மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.



முன்பொருமுறை ஒரு அதிர்ச்சியான தகவல் படித்தேன். ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் எழுதியிருந்தார். திடீரென்று உடல் நலம் குன்றிய ஒரு மூதாட்டியை சோதனை செய்ததில் அவர் கண்களிலும் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் புழுக்கள் தென்பட்டதாம். அந்த மூதாட்டியிடம் விசாரித்ததிலும் ஆராய்ச்சி செய்ததிலும் பன்றியின் கழிவுகள் கிடந்த இடத்தில் விளைந்த கத்தரிக்காயை அவர் சமைத்து சாப்பிட்டதாகத் தெரிந்தது. நல்ல கொதிநிலையில் கத்தரிக்காய் சமைக்கப்பட்டிருந்த போதிலும் அந்த புழுக்களின் முட்டைகள் அழியவில்லை. அவை நம் உடலில் வளர்ந்து இப்படியெல்லாம் பரவுகிறது. ஒரு பெரிய அறுவை சிகிச்சை மூல்ம் அந்த பாட்டியின் உயிரைக் காப்பாற்றிய அந்த மருத்துவர், ' பெண்களே, காய்கறிகளை சமைக்குமுன் ஒரு தடவைக்கு நான்கு தடவைகள் நன்கு அலசி கழுவி சமையுங்கள் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நல்லெண்ணையில் பாமாயில் கலப்பதாக முன்பு செய்தித்தாள்களில் படித்தேன். முன்பு இட்லிமாவு விற்பனையில் கலக்கப்படும் நீர் சுகாதாரமற்றதாக இருப்பதால் விரைவில் பாக்டீரியா அதில் பரவுகிறது என்று மாத இதக்ழில் வெளிவந்த செய்தியை என் பதிவில் நான் பகிர்ந்திருந்தேன். ஒரு முறை என் வீட்டில் தங்கியிருந்த உறவுப்பெண்மணியின் குழந்தைக்காக பசும்பால் விற்பனை செய்கிறவரை தேடிப்பிடித்து விலை கேட்டபோது, கொஞ்சம் தண்ணீர் விட்ட பால் அதிகக விலை என்றும் அதிக நீர் கலந்த பால் சகாய விலைக்குக் கிடைக்கும் என்றும் கூசாமல் சொன்னார்.



மரத்தூள், குதிரைச்சாணம், புளியங்கொட்டை என்றெல்லாம் டீத்தூளில் கலப்படம் செய்யப்படுகிறது! பெட்ரோல் தயாரிக்கப்படும்போது கடைசியாக திரவம் போல மீதமாகும் மினரல் ஆயில் மற்ற சமையல் எண்ணெய்களுடன் கலக்கப்படுகிறது!

அரிசி வகைகளில் ருசியில்லை. பொன்னி பச்சரிசி கிலோ 54 ரூபாய்க்கு விற்கிறது. வாங்கி சமைத்தால் ருசியேயில்லை. முன்பெல்லாம் சீரகச் சம்பாவில் பிரியாணி செய்தால் வீடே மணக்கும். இப்போதோ அதில் எந்த ருசியுமில்லை. கேட்டால் உரம் போட்டு வளர்ப்பதால் அப்படி என்கிறார்கள். இலங்கையிலிருந்து இங்கு [ துபாய்] இறக்குமதியாகும் சிகப்பரிசியைத்தான் இப்போது சமைத்து உண்கிறோம். ருசியில் குறைவில்லை என்பதோடு வயிற்று பிரச்சினைகள் எதுவும் இருப்பதில்லை!
இப்படி காய்கறிகள், அரிசி, பழங்கள், இறைச்சி, மளிகை சாமான்கள் எல்லாவற்றையுமே இப்போதெல்லாம் தைரியமாக உபயோகிக்க முடியவில்லை! எதைத்தான் சாப்பிடுவது என்று பல சமயங்களில் புரிவதில்லை!!






 

59 comments:

  1. இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டும் வாசித்துக் கொண்டும்டான் இருக்கின்றோம் சகோதரி. க்ரீன் டீ நல்லது என்று சொல்லிக் குடிக்கையில் திடீரென்ரு செய்தி. டீ இலைகளில் பூச்சி மருந்து தெளிக்கின்றார்கள் என்று. நம்மூரில் ஆர்கானிக் என்று விற்றாலும் அது சில சமயங்களில் உண்மை அல்ல. ஏமாற்றுகின்றார்கள் என்று சொல்லுகின்றார்கள். பச்சைக் காய்கறிகள் சாலட் நல்லது ஆனால் அதில் சில சமயம் புழுக்களின் முட்டைகள் இருந்தால் அது நமது மூளையில் ரத்த ஓட்டத்தில் கலந்து சென்றிட வாய்ப்புண்டு. உங்கள் கேள்வியே தான்...

    இப்போது காய்களை நன்றாக கழுவி விட்டு அதை உப்பு நீரில் இட்டு சிறிது நேரம் வைத்து விட்டு பின்னர் அதை உபயோகிக்கின்றோம். மாம்பழங்கள் வாங்கினால் தண்ணீரில் போட்டு வைத்துவிட்டு காலையில் எடுத்துக் கட் செய்து உண்ணுங்கள் என்று சொல்லப்பட்டு அப்படிச் செய்து வருகின்றோம். நாம் நம் வீட்டில் வளர்க்கலாம் என்று சொல்லுவோம். ஆனால் நம் வீட்டு மண்ணில் ப்ளாஸ்டிக் கலந்திருந்தால் என்ன செய்வது....மண் நன்றாக இல்லை என்றால்...

    போகிற போக்கைப் பார்த்தால் உங்கள் கேள்விகள்தான் எங்களுக்கும் தொக்கி நின்று பயமுறுத்துகின்றன.

    ReplyDelete
  2. அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன பல தகவல்கள். காய்கறிகளை நன்கு கழுவி சமைக்கலாம், பழங்களைத் தோல் நீக்கி உண்ணலாம். ஆனால் ஊசி மூலம் வண்ணம் ஏற்றுவதெல்லாம்..
    :(.

    ReplyDelete
  3. உண்மைதான். தினம் ஒரு தகவல் வருகிறது..எதை சாப்பிடுவதற்கும் பயமாகத்தான் இருக்கு.

    ReplyDelete
  4. அம்மா,

    நான் சமீபகாலமாக அடிக்கடி யோசிக்கும் ஒன்றை பதிந்துள்ளீர்கள்...

    லாபம் மட்டுமே குறிக்கோளாய் கொண்ட வியாபாரதந்திரிகளால் இளநீர் கூட மாசுபட்ட காலத்தில் வாழ்கிறோம் நாம் ! உங்கள் கேள்விக்கு பதிலாய் " இதை உண்ணுங்கள் " என சொல்லும்படியான, நம்பிக்கையான உணவு இன்னும் உள்ளதா என்பதே அச்சம் எற்படுத்தும் கேள்வி !

    காய்கறி, பழங்கள் என்றால் நன்றாக குளிர்நீரில் கழுவுவதன் மூலம் பூச்ச்சிக்கொள்ளிகளின் இருப்பை குறைக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை வாங்குவதன் முன்னர் அவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மூலப்பொருட்களை அறிந்து வாங்குவது நலம்...

    மற்றபடி இறைவன் மீதோ அல்லது இயற்கை மீதோ நம்பிக்கை வைக்க வேண்டியதுதான் !!!

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  5. உண்மைதான் மேம். நானும் ரெண்டு நாளா தீவிரமா இதத்தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன் ஒரு போஸ்ட் போடணும்னு வெள்ளையா இருக்கதெல்லாமே விசமாமே.. இன் அடிஷனல்.. ஹ்ம்ம்.

    ReplyDelete
  6. அதிக பயமும் விழிப்புணர்வும் தரும் பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  7. உலகில் வாழ்வது மிகவும் கடினமாகிக்கொண்டு வருகிறது.

    ReplyDelete
  8. உண்மை தான் அம்மா. எதைத் தான் சாப்பிடுவது என்ற நிலை தான்...

    மாதுளையிலும் தான் ஊசி மூலம் நிறமிகளை ஏற்றுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    முடிந்த அளவு சுத்தம் செய்து விட்டு பின்பு கடவுளின் மேல் பாரத்தை போட்டு இருக்க வேண்டியது தான்.

    ReplyDelete
  9. பயமாய்த்தான் இருக்கிறது. கடுகிலும் மிளகிலும், காபிப் பொடியிலும் மிளகாய்த் தூளிலும் என்று எல்லாவற்றிலும் என்னென்னவோ கலக்கிறார்கள்.

    ReplyDelete
  10. இதை எல்லாம் படிக்கும்போது வெறுமனே கேழ்வரகு தோசை சுட்டு சாப்பிடலாம்னு தோன்றது மனோம்மா..

    பயனுள்ள பகிர்வு...

    ReplyDelete
  11. அனைத்துமே செயற்கையாகிவிட்ட நிலையில் உணவும் அவ்வாறாகி விட்டது. தங்களது கேள்விக்கு விடை காண்பது என்பது சிரமமே.

    ReplyDelete

  12. உண்மைதான் பயனுள்ள பதிவு எல்லாவற்றிலுமே கலப்படம் பயமாகத்தான் இருக்கிறது அதேநேரம் சாப்பிடாமலும் இருக்க முடியாதே,,,

    ReplyDelete
  13. நடுங்க வைக்கும் பதிவு. என்னிடம் ஒரு புத்தகம் இருந்தது நூற்றிருபது வருடங்களுக்கு முன் தமிழில் வந்தது... மதிமோச விளக்கம் என்று பெயர். அந்த காலத்திலேயே எந்த பொருளில் எதை வைத்து கலப்படம் செய்வார்கள் என்று நீண்ட பட்டியல்..

    அண்மையில் பாநிபூரிக்கான சிறுசிறு பூரிகளுக்கான மாவை அழுக்கான தரையில் கொட்டி,தரையை விட அழுக்கான நான்கு ஆட்கள் கால்களால் மிதித்து மாவைப் பிசைகிறார்கள். அந்த கிளிப்பிங்கை பார்த்து விட்டு 'உவ்வே' தான். அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு இந்த விஷயங்களைக் கண்காணிக்க வேண்டும்.

    ReplyDelete
  14. பயமாகத்தான் இருக்கிறது. எதை சாப்பிடுவது என்று தெரியவில்லை. எதோ ஒரு நம்பிக்கையில் சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அருமையான பதிவு அக்கா.

    ReplyDelete
  15. உண்மைதானக்கா ..நானும் கவுசல்யாவும் இதைப்பற்றி அடிக்கடி பதிவுகள் எழுதறோம் ..நேற்று ஒரு fb பக்கம் பார்த்தா ஆர்கானிக் கம்போஸ்ட் ..இண்டஸ்ட்ரியல் கழிவு சேரும் இடத்து மண் கொண்டு தயாரிக்கிறாங்கன்னு படிச்சேன் ..
    காய் வகைகளா நாம் வீட்டில் வளர்க்கலாம் ..அரிசிக்கு ?என்ன செய்வோம் :(


    ஒரு புழுங்கல் அரிசி இங்கே வாங்கி சமைத்தேன் ..இரண்டு நாள் தலை வலி அரிப்பு என்று படுத்தி விட்டது ,வேகும்போதே ஒரு வினோத வாசனை ..உரத்தில் முக்கி எடுத்திருப்பாங்க ..பத்து கிலோவையும் வீசினேன்:(

    நானும் கேரளா மாட்டா அரிசி அல்லது இலங்கை ALM /நரேஷ் பிராண்ட் தான் யூஸ் செய்றேன் ..


    நாடா புழு போஸ்ட் ஒன்றும் ஆப்பிள் பழம் க்ளீனிங் பற்றியும் இன்று ஒரு பதிவு பகிர்வேன் என் ப்ளாகில் ..

    ReplyDelete
  16. வணக்கம்
    அம்மா

    எல்லாத்திலும் நன்மையும் உள்ளது தீமையும் உள்ளது .. எல்லாம் யாவரும் அறிய வேண்டிய முத்துக்கள்.. விடைகாண்பது சிரமம்...பகிர்வுக்கு நன்றி..த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. பயனுள்ள தகவல்கள்.. சிந்தனைக்குரிய செய்திகள்..

    இங்கே குவைத்தில் - கேட்டரிங் நிறுவனத்தில் பணி செய்வதால் - நிறைந்த அனுபவங்கள்..

    உணவுப் பொருட்களைக் கையாளுவதிலும் ஏகப்பட்ட நெறிமுறைகள்(கெடுபிடிகள்)..

    விரைவில் கெட்டுப் போகும் உணவுகளையே விரும்பி உண்டு கொண்டிருக்கின்றான் - அரபி!..

    பலவழிகளிலும் - மேலை நாகரிகம் மேலே சென்று சேர்த்து விடவே - ஆகின்றது.

    ReplyDelete
  18. நீங்கள் சொல்வது உண்மை தான் துளசிதரன்! ஆர்கானிக் பொருள்களிலும் கலப்படம் இருப்பதாக நானும் படித்தேன். அது மட்டும் அல்ல. நம் வீட்டில் ஆர்கானிக் பொருள்களை ச்மைத்து சாப்பிட பழகி விட்டால் பின் அடுத்தவர் வீட்டில் சாதாரண சாப்பாடு சாப்பிட்டாலும் நிறையெ பேருக்கு ஒத்துக்கொள்ளுவதில்லை! மாம்பழங்களை உபயோகிப்பதில் உங்கள் ஐடியாவை நானும் இனி பின்பற்றுகிறேன்! கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  19. இந்தத் தகவல்க‌ள் எல்லாமே அதிர்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கிறது ராமலக்ஷ்மி! தர்பூசணியைப் பார்த்தாலே இப்போது பயமாக இருக்கிறது! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  20. வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் அன்பு நன்றி சாமானியன்! உங்களின் பின்னூட்டம் படித்த பிறகு தான் ரெடி மிக்ஸ் உணவு வகைகளைப்பற்றி எழுத மறந்து விட்டது நினவுக்கு வந்தது. சமீபத்தில் ரெடிமிக்ஸ் உணவு வகைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாத இதழில் எழுதியிருந்தார்க்ள். உடலுக்கு ஒவ்வாத பல கெமிக்கல் பொருள்களை சேர்ப்பதனாலேயே ரெடிமிக்ஸ் குறிப்பிட்ட காலம் வரை வீணாகாமல் இருக்கின்றனவாம்! அன்றிலிருந்து சில ரெடிமிக்ஸ் பொருள்களை வாங்குவதை நிறுத்தி விட்டேன்!

    ReplyDelete
  21. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தேனம்மை!

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  23. உண்மை தான், இத்தகைய உலகில் வாழ்வது கடினமாகத்தான் ஆகிக் கொன்டு தான் வருகிரது! கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!

    ReplyDelete
  24. உண்மையில் ரொம்பவும் பயமாகத்தான் இருக்கிறது...

    ReplyDelete
  25. பயனுள்ள பதிவு..

    ReplyDelete
  26. இனிவரும் காலங்களில் என்ன தான் சாப்பிடுறது என்று தெரியவில்லை..... எல்லா உணவுகளுமே பயமுறுத்துகின்றன... தகவல்களுக்கு நன்றி ! -chudachuda.com

    ReplyDelete
  27. தினம் தினம் ஒரு தகவலாய் வரூகிறது
    ஒரு நாள் நல்லது என்பது
    அடுத்தநாள் கெடுதல் என்று தகவல்வருகிறது
    புரியவில்லைதான் சகோதரியாரே

    ReplyDelete
  28. படிக்கப் படிக்க நா உலருது... என்னதான் செய்வது? தெரியவில்லை.

    ReplyDelete
  29. அனைத்திலும் கலப்படம்....... எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  30. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்!

    ReplyDelete
  31. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்!

    ReplyDelete


  32. வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  33. அன்பு சகோதரி
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  34. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  35. பார்த்துப் பார்த்து வாங்கினாலும் சமைத்தாலும் விளையும்போதே சரியில்லை என்றால் என்னதான் செய்யமுடியும்? பல தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. திராட்சைகளைக் கூட அரை மணி நேரமோ ஒருமணி நேரமோ நல்ல தண்ணீரில் ஊறவைத்துப் பிறகு கழுவி உண்ணவேண்டும். அப்போதுதான் அதில் படிந்துள்ள பூச்சிமருந்து ஓரளவு நீங்கும்.

    ReplyDelete
  36. வார இதழ் ஒன்றில் தாவர எண்ணெய் பற்றிய செய்தியை படித்து விட்டு செக்கில் ஆட்டிய நல்லெண்ணையில் தான் இப்போ சமைக்கிறேன்...
    நாளுக்கு நாள் ஒவ்வொரு உணவுப்பொருளிலும் கலப்படம் பெருகிவிட்டது ...
    ஒரு நம்பிக்கையில் தான் சாப்பிடுவது போல ஆகிவிட்டது...

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  37. எதை சாப்பிடுவது என்பது கேள்விக் குறியாகிவிட்டது ஏல்லோர் வீட்டிலும் ம்..ம்..ம் குடிக்கிற நீரில் இருந்து எல்லாமே நஞ்சு போலவே உள்ளது. விதியே என வாழவேண்டியது தான்.
    பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  38. மாதுளையில் தான் நிறமேற்றுவதைப்பற்றி கேள்விப்படவில்லை என்று நான் குறிப்பிட்டிருந்தேன் ஆதி! இப்போது அதிலும் நிரமேற்றுவதாக எழுதி விட்டீர்கள் ! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  39. வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  40. ரொம்ப நாளைக்குப்பிறகு வந்து கருத்திட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி மஞ்சுபாஷ்ணி!

    ReplyDelete
  41. வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  42. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் கில்லர்ஜி!

    ReplyDelete
  43. உங்கள் பின்னூட்டம் மூலம் அந்த காலத்திலேயே எப்படியெல்லாம் கலப்படம் நடந்திருக்கிறது என்பது புரிகிறது மோகன்ஜி! இத்தனை வருடங்களீல் கலப்படத்தின் தரமும் வகைகளும் மின்வேகமாக உயர்ந்திருக்கிறது போலும்! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  44. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சாரதா!

    ReplyDelete
  45. புழுங்கலரிசி கூட இத்தனை கஷ்டப்படுத்துகிறதா? அதிர்ச்சியாக இருக்கிறது ஏஞ்சலின்! அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  46. கருத்துரைக்கு அன்பு நன்றி ரூபன்!

    ReplyDelete
  47. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

    ReplyDelete
  48. வருகைக்கு அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  49. முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஷாமீ!

    ReplyDelete
  50. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  51. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஜனா!

    ReplyDelete
  52. கருத்திட்டமைக்கு அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  53. தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதர் ஆறுமுகம் அய்யாசாமி! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  54. இனிய புத்தாண்டுக்கவிதைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி புதுவை வேலு! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  55. சித்திரைத்திருநாள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி தேனம்மை! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  56. திராட்சை பற்றிய பயனுள்ள‌ குறிப்பிற்கு அன்பு நன்றி கீதமஞ்ச்ரி!

    ReplyDelete
  57. நீங்கள் சொல்வது ச‌ரி தான் சரிதா! நிறைய பேர் ஊரில் இப்போது செக்கில் ஆட்டிய எண்ணெயைத்தான் வாங்கி சமைக்கிறார்க்ள்!

    புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ! உங்களுக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  58. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி இனியா!

    ReplyDelete
  59. சரியான நேரத்தில சரியான பதிவு...நேத்துதான் மனைவியிடம் உணவு கலப்படத்தைப் பத்தி பேசிட்டுடிருந்தேன்.

    அப்பா கேக்கவே பயமா இருக்கு.

    உணவே மருந்துன்னு சொன்ன காலம்போய் உணவாலதான் பிரச்சனைன்னு வந்திருச்சு. அன்று உப்பில்லா பண்டம் குப்பையிலேன்னு சொல்லுவாங்க, இன்று உணவே குப்பையா இருக்கு. கலப்படமில்லாதது ஏதாவதிருக்கா?

    ReplyDelete