Tuesday, 10 June 2014

தேவை- வருகையும் வாழ்த்துக்களும்!!

ரொம்ப நாட்களாகவே நம் ரசனைப்படி ஒரு வீட்டைக்கட்ட வேண்டுமென்ற கனவு அடி மனதில் இருந்து கொண்டே இருந்தது. அதற்கு சமீபத்தில் தான் உருவம் கொடுக்க ஆரம்பித்தோம்.


அதனாலேயே வலைத்தளத்தில் பதிவேற்றுவதும் நண்பர்களின் வலைத்தளங்களில் பின்னூட்டமிடுவதும் தொடர்ச்சியாக செய்ய முடியாதிருந்தது. நம் உணர்வுகளைப்பகிர்வதும் நண்பர்களின் உணர்வுகளில் பங்கெடுத்துக்கொள்வதுமான இனிமையை சில நாட்களாக இழந்திருப்பதால் மனதில் ஒரு வெற்றிடம் இருப்பது கூட உண்மை!

வெளிநாட்டு வாழ்க்கையிலிருந்து சற்று விலகி, தஞ்சை மண்ணை சுவாசித்துக்கொண்டே கடந்த டிசம்பரிலிருந்து வீட்டை கட்ட ஆரம்பித்தோம். வீடு எண்பது சதவிகிதம் முடிந்த நிலையில்
வருகிற 12ந்தேதி வியாழனன்று 
தஞ்சை, ரஹ்மான் நகர் முதலாம் குறுக்குத்தெருவில்
புதிய இல்லத்திறப்பு விழா நடைபெறுகிறது.

எந்த நல்ல விசேடங்களுக்கும் முதன்மையான இனிமையான நிகழ்வு என்பது  நல்லுள்ள‌ங்களின் அன்பு வருகைகளும் இனிய வாழ்த்துக்களும் தான்!!



வருகை தாருங்கள்! மனம் மகிழ்வோம்!
வாழ்த்துக்களில் உள்ளம் குளிர்வோம்!!

அன்பு சகோதரி

மனோ சாமிநாதன்
தஞ்சை.

15 comments:

  1. மிகவும் சந்தோஷமான செய்தி.

    மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.

    விழா வெகு சிறப்பாக நடைபெறட்டும்.

    நேரில் வருகைதர இன்னும் முயற்சித்துத்தான் வருகிறேன்.

    அன்புடன் VGK + FAMILY

    ReplyDelete
  2. என் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும் அக்கா.

    படத்தில் இருப்பது வீட்டின் முன்பக்கத் தோற்றமா அக்கா?

    ReplyDelete
  3. இல்லம் சிறக்க இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. உங்கள் கனவு இல்லத்திறப்பு விழா இனிதே நடைபெற என்னோட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மனோ அக்கா.

    ReplyDelete
  5. புதிய இல்லத்திறப்பு விழாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உள்ளத்திலும் , இல்லத்திலும் என்றும் மகிழ்ச்சி நிறையட்டும் .

    ReplyDelete
  7. தஞ்சையில் தங்கள் கனவு இல்லம்! அழைப்பிற்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  9. விழா இனிதே நடைபெறவும், மகிழ்ச்சி பெருகவும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வணக்கம் மனோ அக்கா!

    மகிழ்வான செய்தி!
    மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா!
    எல்லாம் சிறப்பாக அமைந்திருக்கும்...

    அக்கா! இன்று நான் உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு அழைத்துள்ளேன்!
    வருகை தாருங்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  12. என் இல்லத்து புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்தும் நேரிலும் இந்த வலைத்தளத்திலும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்துக்கள் கூறி சிறப்பு செய்த அனைத்து நட்புள்லங்களுக்கும் அன்பு நன்றி!!!

    ReplyDelete
  13. இறைவன் அருளால் புதுமனைபுகுவிழா சிற்ப்பாக நடந்துஇருக்கும் என நினைக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்.
    நான் ஊரில் இல்லாத காரணத்தால் இப்போது தான் பார்த்தேன்.

    ReplyDelete
  14. வணக்கம் திருமதி.மனோ !
    தாங்கள் இல்ல திறப்பு விழா இனிதே நிறைவடைந்திருக்க வாழ்த்துக்கள். தங்கள் நேரம் அனுமதித்தால் இனிய இல்லத்தின் புகைப்படங்கள் போஸ்ட் செய்வீர்களா?முடிந்தால் தாங்கள் பரிமாறிய சிறப்பு உணவின் போட்டோ- வும் ☺
    ஆவலுடன்,
    சித்ரா.

    ReplyDelete