Tuesday, 4 March 2014

POSH- PAW!!

ஷார்ஜாவில் ஒரு சிறிய மிருகக்காட்சி சாலை இருக்கிறது. அதை முன்பேயே இங்கே பதிவிட்டிருக்கிறேன். மறுபடியும் மறுபடியும் மிருகக்காட்சி சாலை செல்லவேண்டுமென்று என் பேரன் அரிக்க ஆரம்பிக்க இரண்டு மூன்று தடவைகள் அழைத்துச்சென்ற என் மகனுக்கு மறுபடியும் அதே இடத்திற்குச் செல்ல போரடித்து விட்டது! வேறு எங்காவது மிருகக்காட்சி சாலை இருந்தால் அழைத்துச் செல்லலாம் என்றெண்ணம் தோன்ற அப்படி ஆராய்ந்து அழைத்துச் சென்றது தான் இந்த‌ POSH-PAW!

வான்கோழியின் அழகு நடை!
முதலில் அதைப்பற்றி அதிகம் தெரியாமல் தான் இந்த இடம் சென்றோம். ஆரம்பமே சுவாரஸ்யம். எல்லா மிருககாட்சிசாலைகள் போல இல்லாமல் இதன் கதவு இறுக சாத்தியிருந்தது. கதவை நாமே திறந்து கொண்டு நுழைந்தால் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. கோழிகளும் வான்கோழிகளும் ஆடுகளும் சர்வ சுதந்திரமாக அங்கே சுற்றிப்பார்க்க வந்திருந்தவர்களோடு உலாவிக்கொன்டிருந்தன. [ அவை தானாக வெளியே சென்று விடக்கூடாது என்று தான் கதவை மூடவில்லை!!]

புன்னகையுடன் ரசிக்கும் மகனும் மருமகளும் பேரனும்!
ஒரு பக்கம் அவை சாப்பிடும் உலர்ந்த புல் வகைகள் அடுக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் கையோடு கொண்டு வந்திருந்த காரட், தழைகள், சோளக்கதிர்கள் என்று ஆட்டுக்குட்டிகளுக்கு ஊட்டிக்கொண்டிருந்தார்கள் சிலர்! நம் ஊரில் வைக்கோல் போர்கள் அருகே, வாய்க்கால் ஓரங்கள் என்று நாம் பார்த்த வளர்ப்புப்பிராணிகள் எல்லாம் இங்கிருந்தன. செயற்கைக்குளங்கள், மரங்கள் என்று சுற்றிலும் வித்தியாசமாய் இருந்தது!!

இளம் குதிரை மேல் ஆரோகணித்து வரும் இள‌ம் குருத்து!!
இவை எல்லாம் உறங்க குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அறைகள் இருந்தன. வளர்ப்புப்பிராணிகளை தங்கள் வீட்டில் வளர்ப்பவர்கள் எங்காவது ஊருக்கு செல்லும்போது இங்கே கொண்டு வந்து விட்டு விட்டுச் செல்லலாம். அதற்கு இந்த நிர்வாகம் வாடகை வசூலிக்கிறது. அதே போல இங்கிருக்கும் வளர்ப்புப்பிராணிகளை தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று சில தினங்கள் வைத்துக்கொண்டிருந்து விட்டு திரும்ப கொண்டு வந்து விடலாம். அதற்கு குறைந்த பட்சம் நம் பணத்திற்கு ஒரு இரவிற்கு 1000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.


முகப்பில் நம் ஊர் கட்டை வண்டி அல‌ங்காரம்!
உலகெங்கும் இவர்கள் இது போல வளர்ப்புப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். உலகம் முழுவதும் எந்த வீட்டிற்கும் எந்த பிராணியையும் பத்திரமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறார்கள்.

நம்ம ஊர்க்கோழி!
பஞ்சவர்ணக்கிளி!

போந்தாக்கோழி!!
செம்மறியாட்டுக்கு உணவூட்டும் ஐரோப்பிய பெண்மணி!!
இந்த வித்தியாசமான ஐடியா நம் ஊர்க்காரர்கள் யாருக்கும் இது வரை வந்திருக்கிறதா என்று தெரியவில்லை!!
 

22 comments:

  1. படங்கள் யாவும் அழகு !

    நம்ம ஊரு கட்டை வண்டி ஆஹா ஆஹா....!

    ReplyDelete
  2. அழகான படங்களுடன் அசத்தலான பகிர்வு. நம் நினைவுகளை எங்கோ அந்தக்கால நம்மூர் கிராமப்பக்கம் கொண்டு செல்கிறது.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. நம்ம ஊர் சேவல் மிக அழகு. பேரன் என்னமா ரசித்து பார்க்கிறார்.. அனைத்து படங்களும் அருமை.

    ReplyDelete
  4. கோழிகளும் ஆடுகளும் கட்டை வண்டியுமாக கொள்ளை அழகு!

    ReplyDelete
  5. வித்தியாசமான சிந்தனை..படங்கள் அருமை..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  6. பேரனுக்காக எல்லோரும் குழந்தைகளாக மாறி ஆனந்தம் அடைந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. படங்கள் அருமை
    சகோதரியாரே
    மிருகக் காட்சி சாலையாக மட்டுமல்லாமல்.
    வீட்டில் வளர்க்கப்படும்,விலங்குகளின் காப்பகமாகவும் செயல் படுவது காலத்திற்கேற்ற செயல் என்று தோன்றுகிறது.
    மிருகக் கர்ட்சி சாலையில் உள்ள விலங்குகளை , ஓரிரு நாட்களுக்கு, வாடகை கொடுத்துவிட்டு, வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்பது வியக்க வைக்கிறது.
    எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்.

    ReplyDelete
  8. நம்மூரில் ரோட்டில் சுதந்திரமாக சுத்தித் திரியும், ஆடு,மாடு கோழிகள் தான் வெளிநாடுகளில் கூண்டுக்குள் இருந்து நமக்கு காட்சிகள் தருகின்றன.

    அருமையான படங்களுடன்,மிருகக்காட்சி சாலையைப் பற்றி பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  9. அழகான படங்கள்.....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி....

    ReplyDelete
  10. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் மனோ!

    ReplyDelete
  11. பாராட்டிற்கு இனிய நன்றி சீனி!

    ReplyDelete
  12. இனிய பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  13. பாராட்டிற்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  14. அன்பான பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர் ஜனா!

    ReplyDelete
  15. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் இளங்கோ!

    ReplyDelete
  16. வருகைக்கும் விரிவான க‌ருத்துரைக்கும் இதயம் நிறந்த நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  17. விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சொக்கன் சுப்ரமண்யம்!

    ReplyDelete
  18. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட்!

    ReplyDelete
  19. இனிய பாராட்டிற்கும் அன்பு கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ராதாராணி!

    ReplyDelete
  20. போந்தாகோழி....போண்டா கோழி யானது காலத்தின் கோலம். நம்மூரில் வளர்ப்பு பிராணிகள் வாடகைக்கு என்பது இல்லை என்று நினைக்கிறேன் நல்ல காண்சப்ட், இங்கு அப்படிப் பட்ட பார்க் ஆரம்பித்தால் வாங்கி செல்வார்கள் வளர்க்க அல்ல ருசி பார்க்க...ஹ..ஹா

    ReplyDelete
  21. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/06/blog-post_6.html?showComment=1402066899274#c3308107344037492304

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete