Monday, 31 March 2014

உரப்படை!!

சமையல் குறிப்பு எழுதி நிறைய நாட்களாயிற்று. இந்த தடவை ருசியாக நொறுக்குத்தீனிக்கு இணையாக ஒரு கார பலகாரத்தைப்போடலாமென்று நினைத்தேன். உரப்படை தான் நினைவுக்கு வந்தது. இந்த உரப்படையை பலர் பலவிதமாக செய்வார்கள். சிலர் துவரம்பருப்பில் செய்வார்கள். இது பொட்டுக்கடலை மாவை உபயோகித்து செய்வது. என் சினேகிதி வீட்டில் இதை அடிக்கடி செய்வார்கள். அங்கே நான் கற்றதை இங்கே உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இதற்கு சட்னியெல்லாம் தேவையில்லை. காரம் போதிய அளவு சேர்த்திருப்பதாலும் வெங்காயம் சேர்த்திருப்பதாலும் அப்படியே சுடச்சுட சாப்பிடலாம்!!




உரப்படை

தேவையான பொருள்கள்:

புழுங்கலரிசி- 1 1/2 கப்
சோம்பு- 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் -6
பொட்டுக்கடலை -3 மேசைக்கரண்டி
தேவையான உப்பு
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்- 1 கப்
கறிவேப்பிலை
பொரிக்கத்தேவையான எண்ணெய்

செய்முறை:

புழுங்கலரிசியை நாலைந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய அரிசியை சோம்பு, மிள‌காய் வற்றல், , சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பொட்டுக்கடலையை நன்கு மிருதுவான பெளடராக்கவும்.
அரைத்த கலவையுடன் போதுமான உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து கெட்டியாகப்பிசையவும்.
வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து எலுமிச்சம்பழம் அளவு உருண்டை ஒன்றை எடுத்து ஒரு துணியில் மெல்லியதாய் தட்டவும்.
எண்ணெயை மிதமான சூட்டில் சூடாக்கவும்.
தட்டி வைத்த உரப்படையை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவ்பும்.
இது போல மீதமுள்ள‌ மாவை உரப்படைகளாய் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
சுவையான உரப்படை தயார்!!








 

21 comments:

  1. உரப்படை படங்கள் + செய்முறை விளக்கங்கள் அருமை + சுவை.;)

    ReplyDelete
  2. வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... செய்து பார்ப்போம்... நன்றி அம்மா...

    ReplyDelete
  3. அருமையான மாலை உணவு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. Pottukkadalaiyai muzhuthaaka serka venduma?

    ReplyDelete
  5. இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  6. செய்து பார்த்த பின் உரப்படை எப்படி வந்தது என்பதை அவசியம் சொல்லுங்கள் தனபாலன்!

    ReplyDelete
  7. பாராட்டிற்கு அன்பு நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  8. நீங்கள் எழுதியதைக் கண்ட பிறகு தான் பொட்டுக்கடலை பற்றி எதுவும் குறிப்பிடாத என் தவறு புரிந்தது மாதவி! அதன் பின் திருத்தம் செய்து விட்டேன் இப்போது! உங்களுக்கு என் அன்பார்ந்த நன்றி!!

    ReplyDelete
  9. உரப்படை....

    செய்து பார்க்க வேண்டும். பார்க்க நன்றாக இருப்பதால்! :)

    ReplyDelete
  10. சாப்பிட வேண்டும்போல் தோன்றுகிறது.
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  11. செய்து பார்த்துவிடுகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  12. புதிய டிபன், பேஷ்!

    ReplyDelete
  13. ரொம்ப சூப்பரான குறிப்பு மனோ அக்கா

    ReplyDelete
  14. ஈசியானஒரு மாலை நேர ஸ்நாக், பகிர்வுக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
  15. மனோம்மா நலமாக உள்ளீர்களா? நீண்ட நாட்கள் கழித்து வலைப்பக்கம்
    வருகிறேன். தங்களது உரப்படை பதிவினைப் பார்த்தேன். சுலபமான செய்முறை. பார்ப்பதற்கே நன்றாக உள்ளது. ஒரு நாள் கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும். நன்றி மனோம்மா.

    ReplyDelete
  16. அவசியம் வீட்டில் செய்யச்சொல்லுங்கள் வெங்கட்! வருகைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  17. செய்து பார்த்து சொல்லுங்கள் கோமதி! வருகைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  18. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஜனா!

    ReplyDelete
  19. பாராட்டுக்கு அன்பு நன்றி ஜலீலா!

    ReplyDelete
  20. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  21. ரொம்ப நாள் கழித்து உங்களை இங்கே பார்க்கும்போது மகிழ்வாக இருக்கிறது புவனேஸ்வரி! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி!

    ReplyDelete