Monday, 15 July 2013

முத்துக்குவியல்-21!!!

பாதித்த முத்து:

மல்லிகை மகள் மாத இதழில் வந்த இந்த செய்தி என்னை பிரமிக்க வைத்ததுடன் மனதையும் மிகவும் பாதித்தது.

கேரளாவைச் சேர்ந்தவர் சுனிதா. 15 வயதில் குடிசைவாழ் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பதிலும் அங்குள்ள பெண்களுக்கு எழுத்தறிவு தருவதுமாக தன் இளம் பிராயத்தை மகிழ்வோடு கழித்தவர்.



அவரின் இந்த செயல் பிடிக்காமல் அந்தக் குடிசைவாழ் ஆண்கள் சிலரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியவர். அதோடு நில்லாமல் அவர்களின் கடுமையான தாக்குதலுக்கும் இரையானதால் இப்போது கூட அவருக்கு வலது காது கேட்பதில்லை.இடது கையை வளைக்க முடியாது. இப்படி பாதிப்புக்கு ஆளான பெண்கள் பொதுவாய் மனதளவில் சித்திரவதைப்பட்டு நரக வேதனையடைவார்கள். இவர் மனதிலும் கோபம் பொங்கியெழுந்தது. ஆனால் மற்றவர்களைப்போல அல்ல. ‘ நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? துனிச்சலாக வெளியே வந்தேன். தவறு செய்தவர்கள் தான் ஓடி ஒளிந்தார்கள்!’ என்கிறார் இவர்.

இந்த சம்பவத்திற்குப்பின் மேலும் இவர் சோஷியாலஜி, சைக்காலஜி படிப்புகளைத்தொடர்ந்து முடித்து டாக்டர் பட்டமும் பெற்றவர். அவரின் பெற்றோர்கள் ஹைதராபாத் நகரில் கால் ஊன்றியிருந்ததனால் அங்கேயிருந்து அவரின் புரட்சி ஆரம்பித்தது! ‘ அணையாத நெருப்பு’ என்ற அர்த்தம் கொண்ட ‘ பிராஜ்வாலா’ என்ற அமைப்பை பாலியல் தொழில் செய்யும் பெண்களின் புனர் வாழ்விற்காக நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை 8000 சிறுமிகளை மீட்டிருக்கிறார். 17 பள்ளிகளை இந்தப் பெண்களுக்காக இவர் நடத்தி வருகிறார். இவரின் கணவர் இவருக்கு உதவியாக கரம் கோர்த்திருக்கிறார்.

அவர் வேதனையுடன் சொல்வது.. ..

“ உலகிலேயே மிக அதிகமாகக் கடத்தப்படுவது பொன்னோ, போதைப்பொருளோ அல்ல. பெண்கள் தான் அதிகம் கடத்தப்படுகின்றார்கள். வயிற்றிலிருக்கும் பிள்ளையை ‘ பிறந்ததும் விற்று விடுகிறேன்’ என்று உத்தரவாதம் சொல்லி அட்வான்ஸ் வாங்கிக்கொள்ளும்ம் அளவு வறுமையிலிருக்கும் பெண்கள் இந்த தேசத்தில் வாழ்கிறார்கள். இரண்டு மூன்று வயதிலேயே பெண்கள் கடத்தப்படுகிறார்கள். பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த ஐந்து வயது குழந்தைகளை நானே மீட்டிருக்கிறேன். இந்தத் தொழில் செய்யும் உலகம் எவ்வளவு பரந்து பட்டது என்று தெரிந்தால் திகைத்துப்போவீர்கள். பெண்கள், தரகர்கள், குண்டர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று இந்த நெட்நொர்க் மிகவும் பெரியது!  நம் கண்ணுக்கு முன்னே ஏதாவது அநியாயம் ஒரு பெண்ணுக்கு நேர்ந்தால் மெளனமாக பார்த்துக்கொண்டிருக்காதீர்க்ள். மெளனமாக இருப்பவர்கள் அதை ஆதரிப்பவர்கள் என்று தான் அர்த்தம். பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ஏதாவது செய்யுங்கள்!”

இவரைப்பற்றியும் இவரது சேவைகளைப்பற்றியும் அறிந்து கொள்ள:

http://www.prajwalaindia.com/founders.html

குறிப்பு முத்து:



வாழையிலையை சுருட்டிக்கட்டி படுக்க வைக்காமல் செங்குத்தாக நிறுத்தி வைத்தால் வாழை இலை பழுக்கவே பழுக்காது! 

சிரிக்க வைத்த முத்து:

இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டது:

முதலாம் மாணவன்:

எங்க வீட்டுத்தென்னை மரத்தில் ஏறிப்பார்த்தால் ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியிறாங்கடா!

இரண்டாம் மாணவன்:

மரத்து உச்சியிலிருந்து அப்படியே கையை விட்டு பாரேன். மெடிக்கல் காலேஜ்  பொண்ணுங்க எல்லாம் தெரிவாங்க!

மருத்துவ முத்து:



சதா மூக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

படங்கள் உதவி: கூகிள்

 

31 comments:

  1. சுனிதா பற்றி கேரளா ஊடகங்கள் வாயிலாக நானும் அறிந்தேன், மிகவும் மன தைரியமும் அன்பும் நிறைந்த பெண், பாராட்ட வார்த்தைகளே இல்லை அவர் தம் பணி இன்னும் சிறக்கட்டும்...!

    மாணவர்களின் ஜோக் அடடா எப்பிடியெல்லாம் சிந்திக்குறாங்க ஹா ஹா ஹா...

    வாழையிலை குறிப்பு நல்லது.

    மருத்துவம் சூப்பர்....!

    ReplyDelete
  2. thakavalukku...

    nantrimmaa...

    ReplyDelete
  3. பாரதி கண்ட புதமைப் பெண் சுனிதாவைப் போற்றுவோம் வாழ்த்துவோம்.

    ReplyDelete
  4. சுனிதா அவர்கள் பிரமிக்க வைத்தார்கள்... அவருக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    சிரிக்க, பயன் தரும் முத்துக்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  5. நல்ல முத்துகள்......

    முதலாம் செய்தி - பாராட்டுக்குரிய பெண்மணி......

    ReplyDelete
  6. சுனிதாஅவர்களைப்பற்றிய விவரங்கள் விஜய் தொலைகாட்சியில் பார்த்தேன்.
    சுனிதாவின் சேவைகள் பாராட்டுக்கு உரியன.

    வாழையிலை, ஜாதிக்காய் குறிப்பு அருமை.
    முத்துக்கள் நல்ல தேர்ந்த முத்து.

    ReplyDelete
  7. முத்துக்குவியல் அருமை...

    சுனிதா பற்றிய தகவல் இப்போது தான் அறிந்தேன்...

    ReplyDelete
  8. அருமையான முத்துக்கள் ...ஜாதிக்காய் பயன்பாட்டை செயல்படுத்திவிட வேண்டியதுதான்...

    ReplyDelete
  9. சுனிதா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.. அவருடைய மன உறுதியும், சேவை மனப்பான்மையும் மற்ற பெண்களுக்கு ஓர் முன்மாதிரி என்று சொன்னால் மிகையாகாது..

    ஜோக் முகநூலில் இன்று காலை தான் படித்தேன்..

    வாழையிலை பற்றிய தகவல் புதியது..

    ReplyDelete
  10. நல்ல தொகுப்பு. உங்கள் அனுமதியுடன் முதல் செய்தியை எங்கள் பாசிட்டிவ் தொகுப்புக்கு எடுத்துக் கொள்கிறேன் மேடம்...!

    ReplyDelete
  11. முதல் முத்து படிக்க வேதனையளித்தாலும், அதில் சொல்லியுள்ளவை எல்லாமே உண்மைகள் தான். மிகப்பெரிய நெட் ஒர்க் இதன் பின்னனியில் இருக்கக்கூடும் என்பதே உண்மை.

    வாழையிலை பாதுகாப்பு, ஜாதிக்காய் உபயோகம், ஜோக்குகள் எல்லாமே சூப்பர் தான். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. பிறர் செய்யும் தவறுகளுக்கும் பரிகாசங்களுக்கும் ஆளான மனதில்
    எப்போது துணிவு பிறக்கிறதோ அது நிட்சயமாக ஒரு சாதனையில் தான்
    முடியும் .இதுவும் ஓர் அனுபவக் கருத்தே .வாழ்த்துக்கள் அந்த சிறந்த
    பெண்மணிக்கு .நீங்கள் கொடுத்த முத்துக்கள் மனதில் நின்றாடும் சொத்துக்களே இனி .உங்களுக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் அம்மா என் வீட்டில் உங்களுக்கும் இன்று விருந்து வைத்துள்ளேன் :)

    ReplyDelete
  13. முத்துக்குவியல் மிகச்சிறப்பு அக்கா!

    முதலாவது முத்து மனதுள் விண்ணென இருந்தாலும் அவரின் விவேகத்தை மெச்சியே ஆகவேண்டும்.

    பகிர்விற்கு மிக்க நன்றி அக்கா!

    ReplyDelete
  14. சுனிதாவுக்கு மாம் நிறைந்த பாராட்டுக்கள்,அவரது சேவை தொடரட்டும்!! வாழை இலை+ஜாதிக்காய் டிப்ஸ் புதுசு+நன்றிம்மா!!

    ReplyDelete
  15. வருகைக்கும் தனித்தனியாகக் குறிப்பிட்டு அழகாய் பின்னூட்டமளித்ததற்கும் இனிய நன்றி சகோதரர் மனோ!!

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் சீனி!

    ReplyDelete
  17. புதுப் புது குறிப்புகள் வியக்க வைத்தன. எத்தனை நுட்பங்கள் நாம் அறியப்படாமல்...!

    //நம் கண்ணுக்கு முன்னே ஏதாவது அநியாயம் ஒரு பெண்ணுக்கு நேர்ந்தால் மெளனமாக பார்த்துக்கொண்டிருக்காதீர்க்ள். மெளனமாக இருப்பவர்கள் அதை ஆதரிப்பவர்கள் என்று தான் அர்த்தம். பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ஏதாவது செய்யுங்கள்!”//

    பெண்கள் அதிகம் படிக்கிற, அதிகமாக வேலைக்குச் செல்கிற, பொருளாதார ரீதியாக தன்னிச்சையாக வாழ முடிகிற இந்நாட்களில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், குற்றவியல் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன.
    25.11.2012 தினமணிக்கதிரில் பிஞ்சுகளின் மீதான பாலியல் வன்முறை பற்றியும் ஃப்ரீடம் பார்ம் (Freedom Firm) என்ற அமைப்பின் மூலம் (பார்க்க: www.freedom.firm.in) இத்தகைய குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஊட்டியைச் சேர்ந்த ஜெனிதா என்பவரைப் பற்றியும் படித்து கலங்கிப் போனேன். சமூகப்பணி - முதுநிலை படித்த ஜெனிதா, இவ்வமைப்பில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியதிலிருந்து உறவும் நட்பும் அவரைப் புறக்கணித்து பயந்து ஒதுங்கியது தான் விநோதம்.

    “உலகத்தில் வருடம் முழுவதும் இருபது லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அதில் ஐந்து லட்சம் இந்தியக் குழந்தைகள். ஆண்களின் வக்கிரத் தனம்தான் இந்த அக்கிரமங்களுக்குக் காரணம். தன் மனைவியிடம் காட்ட முடியாத பாலியல் வன்முறைகளை அவர்கள் இந்தப் பிஞ்சுகள் மீது காண்பிக்கின்றனர். உளவியல் ரீதியாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இது. சின்னப் பிஞ்சுகளோடு உறவு கொள்ள உலகம் முழுவதும் காமுகர்கள் காத்திருக்கின்றனர்... கழுகுகள் போல்... பையில் பணத்தை வைத்துக் கொண்டு. பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை இதில் ஈடுபடுத்தும் பெற்றோர், சித்தி, பாட்டி எனப் பலரும் இப்படுகுழியில் அவர்களைத் தள்ளுகின்றனர். ஆறேழு வயதிலேயே விலைக்கு வாங்கப் படும் சிறு பெண்கள் பல கைகள் மாறுகின்றனர். ஒரு பெண் முதல் நாலு நாட்கள் மாறிமாறி ரயிலிலேயே அழைத்துச் செல்லப்பட்டு பல கைகள் மாறி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாள். அவள் உடம்பில் சதைப் பற்று ஏற பன்றிக்கும் முயலுக்கும் கொழுப்பு சேர ஏற்றப்படும் ஊசி ஏற்றப்பட்டதுதான் கொடுமை...”

    இறுதியில் அவர் வைக்கும் கோரிக்கை மிக உலுக்கக் கூடியது. “சென்னை போன்ற நகரங்களிலும் இது சர்வ சாதாரணமாக நடக்கிறது. எங்களுக்கு தகவல் தெரிவித்தால் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.திறந்த கண்களோடும் பனித்த இதயத்தோடும் இருங்கள். உங்களால் ஒரு பெண் காப்பாற்றப்படலாம்.”

    ReplyDelete
  18. கொடூரமான பாதிப்பிற்குப் பிறகும் போராட்டத்தில் திடமாய் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள சுனிதாவின் துணிவு வியக்கவைக்கிறது. அவருக்குத் தேவையான மனோதிடத்தையும் சமூகத்தின் பக்கபலமும் என்றும் நிலைத்திட ஆண்டவனை பிரார்த்திப்போம்.

    பகிர்ந்த முத்துக்கள் அனைத்துமே மனம் தொட்டன. நன்றி மேடம்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  20. பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட்!

    ReplyDelete
  21. ஏற்கனவே இந்த விபரம் விஜய் தொலைக்காட்சியில் வந்திருப்பது உங்கள் மூலமாகத்தான் தெரிய வந்தது கோமதி. கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி!!

    ReplyDelete
  22. வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி சங்கவி!

    ReplyDelete
  23. வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி எழில்!

    ReplyDelete
  24. அருமையான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி கோவை ஆவி!

    ReplyDelete
  25. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்! சுனிதா பற்றி உங்கள் வலையில் வெளியிட்டிருப்பது மிகவும் மகிழ்வைத்தந்தது.

    ReplyDelete
  26. வருகைக்கும் விரிவான பாராட்டுரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  27. அருமையான கருத்திற்கும் விருந்திற்கும் அன்பு நன்றி அம்பாளடியாள்!

    ReplyDelete
  28. பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி இளமதி!

    ReplyDelete
  29. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  30. உங்கள் தகவல் இன்னும் மனதைக் கலங்க வைக்கிற்து நிலா! பெண் குழந்தைகளை மிருகங்கள் போல எண்ணி கீழ்த்தரமாக நடத்தும் மனிதர்கள் நம் இந்திய நாட்டில் இருக்கிறார்கள் என்றெண்ணும்போது அவமானமாக இருக்கிறது.
    வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி!

    ReplyDelete
  31. அருமையான கருத்து கீதமஞ்சரி! பிரார்த்தனை என்றுமே பலன் அளிக்கக்கூடிய ஒரு உயர்ந்த விஷயம்!!

    ReplyDelete