Sunday, 31 March 2013

பாலையில் ஒரு சரணாலயம்!!

இங்கு ஷார்ஜாவில் ஒரு புகழ் பெற்ற வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த சரணாலயத்திற்கு அடிக்கடி போக வேண்டுமென்று நினைப்போமே தவிர அதை செயல்படுத்தியது கிடையாது. என் பேரனுக்காக என் மகனும் மருமகளும் நண்பர்களுடன் சென்று ரசித்து வந்து விட்டு எங்களையும் அழைத்துப்போக வேண்டுமென்று நச்சரித்துக்கொண்டேயிருந்ததால் ஒரு வழியாக இரன்டு நாட்களுக்கு முன்னால் நானும் என் கணவரும் அவர்களுடன் கிளம்பினோம்.

ஷர்ஜாவிலிருந்து 28 கிலோ மீட்டர்  தூரத்தில் அல் தாய்த் என்னும் நகரம் செல்லும் வழியில் அரேபிய பாலைவன பூங்கா அமைந்துள்ளது. 1999ம் ஆண்டு நிறுவப்பட்ட இது அரேபிய நாடுகள் முழுமைக்கும் சிறந்த சரணலயமாகக் கருதப்படுகிறது. இதில் இந்த வன விலங்குகள் சரணாலயம் தவிர, குழந்தைகளுக்கான பண்ணை, இயற்கை வள, வரலாற்று ஆய்வு மியூஸியம் ஆகியவையும் அமைந்துள்ளன.

குழந்தைகளுக்கான பண்ணையில் காட்சிப்பொருளாக பற‌வைகளின் முட்டைகள்!
நெருப்புக்கோழியின் முட்டை மிகப்பெரியது!
முதலில் குழந்தைகளுக்கான பண்ணையில் ஒட்டகம், ஆடு, மாடு, குதிரை, வாத்துக்களை கம்பி வேலித்தடுப்பிற்குப்பின்னால் பார்க்கலாம்.

வாத்துக்கள் மேயும் ஓடை!
இங்கு வேண்டும் மட்டும் புகைப்படங்கள் எடுக்கலாம்.



கட்டு கட்டாகக் கிடைக்கும் புற்களை விலங்குகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குதிரை சவாரி செய்யலாம். குழந்தைக‌ளுக்கு ஒரே குதூகலம் தான் இங்கு!

வாத்துக்களுக்கு பாப்கார்ன் போடும் பேரனும் மகனும்!
பெரியவர்களும் குழந்தைக‌ளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்!!

ஒட்டகத்துக்கு புற்களை உண‌வாககொடுக்கும் என் மருமகள்!!
பல ஏக்கர்கள் பரவிய இன்னொரு கட்டிட‌த்தில் கொடிய விலங்குகள், பாம்புகள், புலி, ஓநாய்களை முற்றிலும் குளிரூட்டப்பட்ட பாதை வழியே நெடுகிலும் நடந்த‌வாறே பார்க்கலாம்.

குளிரூட்டப்பட்ட விலங்குகள் சரணாலய முகப்பு!!
இங்கு புகைப்படங்கள் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. பாம்புகள், பல்லிகள் முதலியவை கண்ணாடித்தடுப்பிற்குப்பின்னால் செடிகள், வேர்கள் போன்ற இயற்கை சூழ்நிலைப்பின்னணியில் கண்ணாடிக்கூண்டுகளில் பாதுகாப்புடன்  வைக்கப்பட்டுள்ளன. பறப்பன, ஊர்வன என்று ஒவ்வொன்றுக்கும் முன்னால் அதன் வாழ்க்கைப்பற்றிய குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கூகிள் மூலம் பெற்ற புகைப்படம்- இது பறைவைகள் இருக்குமிடம்!
முயல்கள், பறவைகள் பரந்த வெளியில் செய‌ற்கைக்கூரை வேயப்பட்ட இடத்தில் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு கம்பி வேலித்தடுப்பிற்குப்பின்னால் ஓடிக்கொண்டும் பறந்து கொண்டும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் மணிக்கணக்காய் அமர்ந்து பார்த்து ரசிக்க இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.

அதன் பின்னர் நரிகள், முள்ள‌ம்பன்றிகள் போன்றவை ஒரு வளாகத்தில் 'இருட்டு மிருங்கங்கள்' என்ற தலைப்பில், முற்றிலும் இருட்டாக்கப்பட்டு மங்கலான ஒளியில் பின்னணித் தடுப்புகள் தாண்டி அலைந்து கொண்டிருக்கின்றன! அதை விட்டு வெளியே வந்தால் காடு போன்ற பின்னணிச் சூழலில் புலிகளும் சிறுத்தகளும் ஓநாய்களும் குரங்குகளும் தனித்தனித் தடுப்புகளில் உலவிக்கொன்டிருக்கின்றன.

இங்கேயும் நம் இந்திய சகோதரர்கள் விதி மீறல் செய்தார்கள். புகைப்படம் ரகசியமாக எடுத்தவர்களை காவல்காரர்கள் வந்து அப்புறப்படுத்தி காமிராவைப் பிடுங்கி வைத்துக்கொண்டு உள்ளே மறுபடியும் அனுமதித்தார்கள். மனசில் ஒரு நிமிடம் வேதனை எழாமலில்லை. வருகிற வெளிநாட்டினர் எல்லாம் பேசாமல் விதிகளின் படி நடந்து கொள்ளும்போது, இவர்கள் மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள்?

சுத்தமான சூழ்நிலை! ரசிக்கும்படியான அமைப்புகள்!!
 இது ஒரு வித்தியாசமான அனுபவமக அமைந்து விட்டது!!!



 

30 comments:

  1. நல்ல அனுபவம். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஷார்ஜாவில் புகழ் பெற்ற வன விலங்குகள் சரணாலயத்தை உங்கள் பதிவின் மூலம் நன்கு சுற்றிப்பார்த்துவிட்டோம்.
    மகன், மருமகள், பேரனுடன் பயணம் இனிதானது அல்லவா!
    வாத்துக்களுக்கு பாப்கார்ன் தரும் பேரன் வாழ்க வளர்க!

    ReplyDelete
  3. நல்ல அனுபவப்பகிர்வு.வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
  4. வனவிலங்கு சரணாலயத்தை சுட்டிக்காட்டிட்டீங்க. ரொம்ப ரசிக்க முடிந்தது.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. விலங்குகளுக்கு குளிர்சாதன அறையா?
    ஆச்சர்யமாக உள்ளது.
    குடம்பத்துடன் போவது என்பது குதூகலம் தானே!
    நானும் இந்த சரணாலயத்தை ஓரளவு சுற்றிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

    உங்கள் பேரனுக்கு என் ஆசிகள் பல.

    ReplyDelete
  6. குடும்பத்துடன் இனிய அனுபவம்...

    படங்கள் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. மிகவும் அழகான பதிவு. நன்கு ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. புகழ் பெற்ற வன விலங்குகள் சரணாலயத்தை உங்கள் பதிவின் மூலம் நன்கு சுற்றிப்பார்த்துவிட்டோம்.பகிர்வுக்கு நன்றி.....

    நலமா மனோஅம்மா .... தங்கள் பேரன் மிகவும் அழகாக இருக்கிறார்.... உங்கள் பயணத்தை எங்களிடம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....

    ReplyDelete
  9. வனவிலங்குகள் சரணாலயத்தை அழகா படங்களோட சுத்திக் காட்டிட்டீங்க மனோம்மா! நேர்ல பாக்கலையேங்கற குறையே தோணலை. எனக்கு ஒட்டகம்னாலே பயம்...! தைரியமா அது பக்கத்துல போய் புல்லு கொடுக்கற உங்க மருமகளோட தைரியத்துக்கு ஒரு ஓ..!

    ReplyDelete

  10. தகவலுக்கு நன்றி. அழகிய புகைப்படங்கள்.

    ReplyDelete
  11. செலவின்றி ஓரு சரணாலயம் பார்த்தேன்.
    மிக்க நன்றி.
    இ.னிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. பல வருடங்களுக்கு முன்பே பார்த்தது தான் என்றாலும் உங்கள் பகிர்வு சுவாரசியம்.குழந்தைகளுக்கு எப்பவும் வனவிலங்குகள் என்றால் மிகக் கொண்டாட்டம் தான்...

    ReplyDelete
  13. பல ஏக்கர்கள் பரவிய ..!!

    ஒருசேர பறவைகள் முட்டைகளைப் பார்க்கையில், சிறகு விரித்து வான் அளக்கும் பறவைகளின் தோற்றுவாய் எவ்வளவு பதவிசாய்...!

    பேரன் கொடுத்து வைத்தவர். வளர்ந்த பின் தம் குழந்தைகளுக்கு அன்புப் பாட்டியின் பதிவுகளை காண்பிப்பார்.

    குழந்தைகள் நடக்கும் காலமும் தாயின் சுமை குறைவதில்லை என்பதை மருமகளின் தோள் பை சுட்டியது.

    ReplyDelete
  14. அடுத்த முறை அமீரகம் வரும்பொழுது பார்க்க வேண்டிய லிஸ்ட் எக்கசக்கமாக இருக்கும் போலிருக்கே!

    ReplyDelete
  15. நல்லதொரு அனுபவமாக இருந்திருக்கும். எங்களையும் சுற்றிக் காட்டியதற்கு நன்றிம்மா.

    ReplyDelete
  16. கருத்துரைக்கு அன்பு நன்றி சிவகுமாரன்!

    ReplyDelete
  17. என் பேரனுக்கான உங்கள் வாழ்த்துக்கள் மனதுக்கு நிறைவை அளித்தது கோமதி அரசு! க‌ருத்துரைக்கு இனிய‌ ந‌ன்றி!

    ReplyDelete
  18. வாழ்த்துக்க‌ளுக்கும் பாராட்டுக்க‌ளுக்கும் வருகைக்கும் அன்பு ந‌ன்றி விம‌ல‌ன்!

    ReplyDelete
  19. ர‌சித்த‌த‌ற்கு அன்பார்ந்த‌‌ ந‌ன்றி பூந்த‌‌ளிர்!!

    ReplyDelete
  20. என் பேர‌னுக்கான‌ உங்க‌ள் வாழ்த்துக்க‌ள் ம‌ன‌துக்கு ம‌கிழ்வை அளித்த‌து ராஜ‌ல‌க்ஷ்மி!

    இங்கு எல்லாமே உல‌க‌த்திலேயே சிற‌ந்த‌‌ சாத‌னைக‌ளாக‌த்தான் செய்ய‌ முய‌ற்சிப்பார்க‌ள். அவ‌ற்றில் இதுவும் ஒன்று!! அத‌னால் தான் வ‌ன‌வில‌ங்குக‌ள் த‌ங்குமிட‌த்தை குளிர்சாத‌ன‌ வ‌ச‌தியூட்டியிருக்கிறார்க‌ள்!
    க‌ருத்துரைக்கு இனிய‌ ந‌ன்றி!

    ReplyDelete
  21. கருத்துரைக்கும் பாராட்டுக்க‌ளுக்கும் அன்பு ந‌ன்றி த‌ன‌பால‌ன்!

    ReplyDelete
  22. ப‌திவை ர‌சித்த‌த‌ற்கு இனிய‌ ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் வை.கோபால‌கிருஷ்ண‌ன்!

    ReplyDelete
  23. ரொம்ப‌ நாளாயிற்று உங்க‌ளை இங்கு பார்த்து விஜி! என் பேர‌னைப்ப‌ற்றிக்குறிப்பிட்டிருப்ப‌த‌ற்கு அன்பார்ன்த‌ ந‌ன்றி !!

    ReplyDelete
  24. உங்க‌ள் பாராட்டை என் ம‌ரும‌க‌ளிட‌ம் சேர்ப்பித்து விட்டேன் சகோதரர் பால‌க‌ணேஷ்!

    என் ம‌ரும‌க‌ளுக்கு பொதுவாக‌வே வில‌ங்குக‌ளிட‌த்தில் மிக‌வும் பிரிய‌ம்! அத‌னால் தான் தைரிய‌மாக‌ ஒட்ட‌க‌த்துக்கு புல் கொடுக்கிறார்!

    ReplyDelete
  25. முத‌ல் வ‌ருகைக்கும் பாராட்டுக்க‌ளுக்கும் ம‌ன‌மார்ந்த‌‌ ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் செல்ல‌ப்பா!

    ReplyDelete
  26. வாழ்த்துக்க‌ளுக்கும் வ‌ருகைக்கும் அன்பு ந‌ன்றி வேதா!

    ReplyDelete
  27. க‌ருத்துரைக்கு ம‌ன‌மார்ந்த‌‌ ந‌ன்றி ஆசியா!

    ReplyDelete
  28. ச‌ரியாக‌ச் சொல்லி விட்டீர்க‌ள் நிலா! பிள்ளைக‌ள் வ‌ளர்ந்து கொண்டிருந்தாலும் தாயின் சுமைக‌ள் எப்போதுமே குறைவ‌தில்லை!!
    சுவார‌ஸ்ய‌மான‌ க‌ருத்துரைக்கு இனிய‌ ந‌ன்றி!!

    ReplyDelete
  29. உண்மை தான்! நிச்ச‌ய‌ம் அடுத்த‌ முறை நீங்க‌ள் அமீர‌க‌த்திற்கு வ‌ரும்போது இது போல‌ பார்க்க‌ வேண்டிய‌ இட‌ங்க‌ள் நிறைய‌ ஆகி விடும் ஸாதிகா!

    ReplyDelete
  30. க‌ருத்துரைக்கு அன்பு ந‌ன்றி ஆதி!!

    ReplyDelete