Monday, 28 January 2013

முள்ளங்கி ரசம்!!!

செய்திகள், சிந்தனைகள், அனுபவங்களின் சிதறலுக்கு சற்று மாறுதலாய் நாக்கின் சுவையரும்புகளை மீட்டியிழுக்க ஒரு சமையல் முத்து இன்றைக்கு! நிறைய சமையல் குறிப்புகள் இருந்தாலும், சமையலுக்கென்றே ஒரு தளம் வைத்திருந்தாலும் இங்கே முத்துச்சிதறலில் வித்தியாசமான சமையல் குறிப்புகள் மட்டும் தான் பதிவிடுவேன். அந்த வகையல் இப்போதும் ஒரு வித்தியாசமான ‘ முள்ளங்கி ரசம்’ இடம் பெறுகிறது. நான் முன்பே இங்கே பதிவிட்டிருந்த ‘ வாழைத்தண்டு ரசம்’ போலத்தான் இதுவும். ஆனால் பிஞ்சான முள்ளங்கி மட்டும் கிடைத்து விட்டால் இதன் சுவை அதிகம்! செய்வதும் சுலபம். பித்தப்பை, சிறுநீரகக் கற்களால் அவதியுறுபவர்களுக்கு தினமும் செய்து கொடுக்கலாம். இது தனியாகவும் சாப்பிடலாம். அல்லது சூடான சாதம், முள்ளங்கி ரசம், ஏதேனும் ஒரு பொரியல் அல்லது வறுவல் இருந்தால் போதும் முழுமையான உணவு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இது செய்யும்போது தனியான குழம்பு எதுவும் செய்யத் தேவையில்லை.



முள்ளங்கி ரசம்

தேவையான பொருள்கள்:

பிஞ்சான முள்ளங்கி-2
துவரம்பருப்பு குழைவாக வேக வைத்தது- கால் கப்
நடுத்தர சைஸில் தக்காளி-2
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்- அரை கப்
துருவிய இஞ்சி- 1 ஸ்பூன்
சிறிய பூண்டிதழ்கள்- 8
எலுமிச்சம்பழம்-1
அரிந்த கொத்தமல்லி-கால் கப்
கீறிய பச்சை மிளகாய்- 3
கறிவேப்பிலை- 1 கொத்து
வெந்தயம்-அரை ஸ்பூன்
சீரகம்- அரை ஸ்பூன்
தேவையான உப்பு
நல்லெண்ணை- 1 ஸ்பூன்
நெய்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் எண்ணையையும் நெய்யையும் ஊற்றி சூடானதும் சீரகத்தைப்போடவும்.
அது பொரிய ஆரம்பித்ததும் வெந்தயத்தைப்போட்டு அது இலேசாக சிவக்க ஆரம்பித்ததும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து இளம் சிவப்பாக வதக்கவும்.
அதன் பின் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்து எண்ணெய் தெளிய ஆரம்பித்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து ஒரு வினாடி கிளறவும்.
இப்போது பருப்பையும் நாலைந்து கப் தண்ணீரையும் ஊற்றவும்.
போதுமான உப்பு சேர்க்கவும்.
பருப்பு கொதிக்க ஆரம்பிக்கும்போது முள்ளங்கியை மெல்லிய வட்டம் வட்டமாக அரிந்து சேர்க்கவும்.
முள்ளங்கி ஒரு சில நிமிடங்களில் வெந்து விடும்.
அதை சரி பார்த்துக்கொண்டு ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.
அதன் பின் எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்க்கவும்.
சுவையான முள்ளங்கி ரசம் தயார்!

பின்குறிப்பு:

எலுமிச்சை கைப்பிலாமல் நிறைய சாறு தரக்கூடிய வகையாய் இருக்க வேண்டும். எலுமிச்சை சாறு போதவில்லையென்றால் இன்னும் சில துளிகள் சேர்க்கலாம். நல்ல சுவை கிடைக்கும் வரை ருசி பார்த்து எலுமிச்சை சாறு சேர்ப்பது அவசியம்.

 

37 comments:

  1. அருமையாக இருக்கும்போலுள்ளதே...:)
    எமது வீட்டிலும் ரசப் பிரியர்கள்தான். சுலபமான குறிப்பு. செய்து பார்த்திடவேண்டும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி மனோ அக்கா!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி! ஆனால் என்னை பொறுத்தவரையில் ரசம் என்பதில் காய்கறிகளை சேர்ப்பது ஒத்துக் கொள்ள முடியவில்லை! தக்காளியும் தான்! நன்றி!

    ReplyDelete
  3. வின்சன்ட் அய்யாவின் பதிவு வழியாக வருகை.

    அருமை, இந்த வகை ரசம் கேள்விப்பட்டதே இல்லை. செய்து பார்க்க ஆவலாக உள்ளது.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. Rasam romba nalla iruku mano akka..

    ReplyDelete
  5. நமக்கு இது சரி வாராதுங்க .. சமையல் என்றாலே பத்தடி தூரம் ஓடுறவன் நான்

    ReplyDelete
  6. முள்ளங்கி சூப் மாதிரி இருக்கிறது ...

    ReplyDelete
  7. சூப் போல அப்படியே குடிக்கலம் போல இருக்கு...

    ReplyDelete
  8. பார்க்கவே நல்லா இருக்கு! அம்மணிட்ட சொல்லிட வேண்டியதுதான்!

    ReplyDelete
  9. இது முள்ளங்கி சூப் போல இருக்குமோ? செய்து பார்த்திட வெட்டியது தான்.
    நன்றி பகிர்விற்கு.

    ராஜி

    ReplyDelete
  10. வழக்கமாய் முள்ளங்கியில் சாம்பார், கூட்டு, இட்லி பொடி செய்வதுண்டு. நாளைய சந்தையில் வாங்கும் முள்ளங்கியில் ரசம்தான் செய்யப் போகிறேன்.

    ReplyDelete
  11. முள்ளங்கி சாம்பார்தான் தெரியும்.இப்ப ரசமும் எப்படி பண்ணுவது என்று உங்க பதிவிலிருந்து தெரிந்து கொண்டுவிட்டேன். நன்றி மேடம் பகிர்வுக்கு.

    ReplyDelete
  12. முள்ளங்கி சாம்பார் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ரசம் புதுமையா இருக்கு...

    முயற்சிக்கலாம்...

    ReplyDelete
  13. இன்று எங்கள் வீட்டில் முள்ளங்கி சாம்பார் தான்.....ரசம் வித்தியாசமாக இருக்கு. செய்துட வேண்டியது தான்.

    ReplyDelete
  14. புதுமையாக இருக்கிறது முள்ளங்கி ரசம் செய்து பார்த்து விடுகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  15. குடடிக்குட்டியாக ஃப்ரெஷ்ஷாக ஜில்லென்று இருக்கும் கேரட் அல்லது முள்ளங்கி தான் நான் விரும்பி வாங்குவேன்.

    இவை இரண்டிலும் தடித்தடியாக உள்ளவைகள் எனக்கென்னவோ ருசிப்படுவது இல்லை.

    வாங்குவதும் இல்லை.

    உங்கள் துபாயில் ஒருநாள் [சிட்டி சென்ட்ரில்] குழந்தையின் குட்டி விரல்கள் போன்ற மிகச்சிறிய அளவில் கேரட்களை, கால் கிலோ அளவுக்கு ப்ளாஸ்டிக் பையில் போட்டு, ஜில்லென்ற நிலையில் மிகவும் ஃப்ரெஷ்ஷாக ஏ.ஸி. யில் வைத்திருந்து கொடுத்ததை வாங்கினேன்.

    அங்கேயே அப்படியே அத்தனையையும் பச்சையாகவே சாப்பிட்டு முடித்தேன்.

    ஸ்வீட்டாக மிகவும் ருசியோ ருசியாக இருந்தது. ;)))))

    அதுபோல ருசியானதோர் கேரட்டை நான் இதுவரை என் வாழ்க்கையில் சாப்பிட்டதே இல்லை.

    >>>>>>>

    ReplyDelete
  16. பொதுவாக முள்ளங்கியை சாம்பாரில் தானாக மிதக்கவிட்டுத்தான் சாப்பிட்டு வருகிறோம்.

    வேறு சில முறைகளிலும் முள்ளங்கியைப் பயன் படுத்தி சாப்பிடுவது உண்டு தான்.

    வேகும்வரை அதிலிருந்து புறப்படும் அதன் வாடை எனக்கென்னவோ பிடிப்பது இல்லை.

    அதுபோல மிளகு ரஸம், தக்காளி ரஸம், எலுமிச்சம்பழ ரஸம் போன்ற
    பலவகையான ரஸ்ங்களை மிகவும் விரும்பி வாங்கி தெளிவாக அப்படியே குடித்து விடுவதும் உண்டு.

    முள்ளங்கி ரஸம் என்று கேட்கவே புதுமையானதாகவே உள்ளது.

    இதென்ன பிரமாதம் ... ஒரு நாள் அதையும் செய்து பார்த்தால் போச்சு.

    மாத்தியோசித்து எழுதியுள்ளீர்கள். ;) நன்றி.

    ReplyDelete
  17. சமையலில் நான் கொஞ்சம் சுமார்தான். இனி உங்கள் குறிப்புகளை பார்த்து செய்து கற்று கொள்கிறேன். ஆரோக்கிய சமையல் என்று தலைப்பிட்டு நிறைய சத்தான சமையல் விஷயங்களை சொல்லி தாருங்கள்.

    ReplyDelete
  18. நல்ல குறிப்பு அக்கா..முள்ளங்கி எங்க வீட்டில் ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  19. செய்து பாருங்கள் இளமதி! வருகைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  20. உங்கள் ரசனை வித்தியாசமாக இருக்கிறது சுரேஷ்! மற்ற‌ காய்கறிகள் பிடிக்கவில்லையென்றால் பரவாயில்லை, தக்காளி இல்லையென்றால் ரசத்தில் சுவை ஏது?

    ReplyDelete
  21. முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி பட்டு ராஜ்! அவசியம் இந்த ரசத்தை செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்!

    ReplyDelete
  22. பாராட்டுக்கு அன்பு நன்றி ஃபாஸியா!

    ReplyDelete
  23. கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி அரசன்!

    ReplyDelete
  24. கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  25. செய்து பாருங்கள் மேனகா!

    ReplyDelete
  26. வருகைக்கு அன்பு நன்றி வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  27. இது ரசம் மாதிரி தான் இருக்கும் ராஜி! செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்!

    ReplyDelete
  28. செய்து பார்த்தீர்களா நிலா? எப்படியிருந்தது?

    ReplyDelete
  29. கருத்துரைக்கு அன்பு நன்றி குமார்! செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்!

    ReplyDelete
  30. செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் ஆதி!

    ReplyDelete
  31. செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் கோம‌தி!

    ReplyDelete
  32. நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ச்ச‌ரி ச‌கோத‌ர‌ர் வை.கோபால‌கிருஷ்ன‌ன், அந்த‌‌ குட்டி கார‌ட் மிக‌வும் சுவையான‌து. அடிக்க‌டி வாங்குவ‌து உன்டு. பேபி கார‌ட் என்று பெய‌ர். பொதுவாய் சால‌ட் செய்யும்போது ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து. முள்ள‌‌ங்கி ர‌ச‌ம் செய்து பார்த்து விட்டு சொல்லுங்க‌ள். நீங்களே செய்ய‌லாம், அத்த‌னை சுல‌ப‌ம்!

    ReplyDelete
  33. க‌ருத்துரைக்கும் வ‌ருகைக்கும் அன்பு ந‌ன்றி உஷா! செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் !

    ReplyDelete
  34. பாராட்டுரைக்கு அன்பு ந‌ன்றி ஆசியா!

    ReplyDelete
  35. சுவையான குறிப்புகள். குறித்து வைத்துக் கொண்டேன். ஆனால் ரசத்தில் வெங்காயம் இது வரை போட்டதில்லை. சூப் போல இருக்கும் என்று நினைக்கிறேன். செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  36. அக்கா உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது பகிருங்கள்.
    http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html

    ReplyDelete
  37. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

    அறிமுகம் செய்தவர்-காவியகவி


    பார்வையிடமுகவரி-வலைச்சரம்


    அறிமுகம் செய்த திகதி-25.07.2014

    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    ReplyDelete