Monday, 29 October 2012

ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!-பகுதி-4!!


அடுத்த நாள் "டிட்லிஸ்" மலை உச்சிக்குப் பயணம். இந்த மலை ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ளது. நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு கேபிள் கார்களில் பயணித்து மலை உச்சியை அடைய வேண்டும்.
மகனும் பேரனும் டிட்லிஸ் மலை அடிவாரத்தில்!! பின்னால் கேபிள் கார்கள் மிதந்து கொண்டிருக்கின்றன! 
 
முதல் கேபிள் காரிலும் இரண்டாவது கேபிள் காரிலும் நாங்கு பேர்கள் மட்டுமே ஏறலாம். நகர்ந்து கொண்டே இருக்கும் கேபிள் காரில் மின்னல் போல ஒரு விநாடியில் ஏறி அமர்வது தான் சிரமமாக இருந்தது.
கேபிள் கார்!
முதல் கேபிள் காரில் பயணம் செல்லும்போது இரு பக்கங்களிலும் பச்சைக் கம்பளம் விரித்தது போல பசுமை.
கேபிள் காரில் நானும் என் மகனும்!
மேலே ஏற ஏற, இரண்டாவது கேபிள் காரில் பயணித்த போது வெள்ளைப்பனியால் இரு பக்கங்களும் முழுவதுமாக மூடிய பனிப்பாறைகள், பனி மூடிய மரங்கள்!!
பனியால் மூடிய மலை!
சில நூறு கேபிள் கார்கள் அங்கும் இங்குமாக மிதந்து கொண்டு சென்றவாறே இருந்தன. அதில் உலக நாடுகள் அனைத்தின் கொடிகளும் பறந்தன. அதில் நம் இந்தியக் கொடியையும் பார்த்த போது மனதில் பெருமிதமும் மகிழ்வும் ஏற்பட்டது!!
போகும் வழியில் பனியால் மூடிய கட்டிடம்!
மூன்றாவது சற்று பெரிய கேபிள் கார் பயணம்! 30 பேர் அதில் பயணித்து இன்னும் மேலே ஏறினோம். நான்காவதாக நாங்கள் பயணித்த கேபிள் கார் 360 டிகிரி சுற்றும் வசதி கொண்டது. இது போன்ற வசதி உலகில் வேறெங்கும் இல்லை என்று வழிகாட்டி சொன்னார். பயணங்கள் முடிந்து டிட்லிஸ் மலை உச்சியில் இறங்கினோம்! டிட்லிஸ் கடல் மட்டத்திலிருந்து 3020 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மலைஉச்சியில் ஐஸ் மழையை குனிந்தவாறே சமாளிப்பது என் மருமகள்!
உணவு விடுதிகளும் ஸ்விட்சர்லாந்து நாட்டின் உடைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதியாக ஒரு ஃபோட்டோ ஸ்டூடியோவும் எல்லோரும் அமைதியாக அமர்ந்து ஓய்வெடுக்க ஒரு பெரிய கட்டிடமும், கட்டிடத்தி    ற்கு வெளியே போய் பனிக்கட்டிகளுடன் விளையாட பனி கொட்டிக்கொண்டேயிருக்கும் ஒரு திறந்த வெளியும் இருக்கின்றன! அங்கே நம்ம ஊர் நடிகர்கள் புகைப்படங்கள் இருப்பது ஆச்சரியமாக இருந்தன!
சில மணி நேரங்கள் கழித்து கீழே இறங்கி பேருந்தில் பயணித்து மீண்டும் மதியம் ஒரு இந்திய உனவு விடுதியில் வட இந்திய உணவு சாப்பிட்டு சில மணி நேரப்பயணங்கள் செய்து ஜெனீவா சென்றடைந்தோம்.
ஜெனீவா லேக்!
ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கும் ஜுரா மலைத்தொடருக்கும் இடையே அமைந்துள்ள ஜெனீவா ஸ்விட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய நகரம் என்பதோடு, உலகத்தின் அமைதித் தலைநகர் எனஅழைக்கப்படுவதும் இது மட்டுமே. Red Cross, United Nations இவற்றின் முக்கிய தளங்களாக விளங்குவது ஜெனீவா.  
உடைந்த நாற்காலி!
உடைந்த நாற்காலி
5.5 டன்கள் எடையுள்ள மரத்தால் செய்யப்பட்ட இந்த நாற்காலி 12 மீட்டர் உயரம் உடையது. போர்களாலும் அணுசக்தியாலும் வெடிகுண்டுகளாலும் பாதிக்கப்படும் வாழ்க்கை இது போலத்தான் இருக்கும் என்பதை நினைவூட்ட ஜெனீவா நகரின் நாற்சந்தியில் இது வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நபர் மட்டும் பயணம் செய்ய புதுமையான ஆட்டோ!
தொடர் மழைத்தூறலினால் சில முக்கிய இடங்கள் தவிர்க்கப்பட்டு, இரவு ஒரு நல்ல ஹோட்டலில் தங்கிய பிறகு, மறு நாள் கிளம்பி பாரிஸ் சென்றடைந்தோம்.    

27 comments:

  1. அஹ்..ஹ்ஹ்ஹ்ஹ............இங்கேயும் குளிர்... அதை அனுபவித்துக்கொண்டே பதிவை படித்தேனா.. ஆல்ப்ஸ் மலைக்கு சென்று அனுபவித்த திருப்தி கிடைத்தது மேடம்.. நல்ல குளுமையான பதிவு.

    ReplyDelete
  2. படித்தாயிற்று அக்கா. அடுத்த பாகம் எப்போ!

    ReplyDelete
  3. போட்டோவில் நல்லா அழகா இருக்கீங்க... கொஞ்சம் குண்டாயிட்டீங்க போல.. இல்ல புரபைல் போட்டோல மெலிவா தெரியறீங்க..:)

    ReplyDelete
  4. மிகவும் அழகான பதிவு.

    நான் உங்களை நேரில் பார்த்துள்ளேன்.

    அப்படியே சிறிதும் மாற்றமில்லாமல் இருக்கின்றீர்கள். [என் மனவி அன்று போர்த்திய பொன்னாடையுடன் ?????] மகிழ்ச்சி.

    தங்கள் மகனையும், தங்களின் அருமைப் பேரனையும் பார்க்கும் பாக்யம் பெற்றேன், இப்போது இந்தப்பதிவினில்.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    வாழ்த்துகள்.

    அன்புச்சகோதரன்
    VGK

    ReplyDelete
  5. "பொன்னாடை" என என் போன பின்னூட்டத்தில் ஓர் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதியிருந்தேன், மேடம்.

    குளிருக்கும் பனிக்கும் கோட் [COAT] அணிந்துள்ளீர்கள்.

    மிகச்சிறப்பான, சுவையான பதிவு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    VGK

    ReplyDelete
  6. படங்கள் அழகு அம்மா...சீக்கிரம் இப்போழுது நான் வசிக்கும் பாரீஸ் நகரத்தையும் எழுதுங்க.....

    ReplyDelete
  7. படங்களுடன் பயணம் மிகச்சிறப்பாக சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  8. அருமையான பயண அனுபவங்கள்.

    ReplyDelete
  9. இனிய பயண பகிர்வு... படங்கள் அருமை... நன்றி...

    ReplyDelete
  10. மிக அழகிய படங்களுடன் அருமையாக உங்கள் பயண அனுபவத்தை சொல்லியிருக்கீங்க மேடம்.சிறப்பான பயணம்.

    ReplyDelete
  11. அருமையான தகவல்களுடன் சிறப்பான பயணம்.

    ReplyDelete
  12. அருமையான பயண அனுபவங்கள்...அழகான படங்களுடன்.

    ReplyDelete
  13. இது என் முதல் வருகை...

    உங்களின் பயண அனுபவத்தை புகைப்படங்களுடன் பகிர்ந்தமை மேலும் பயணத்தை அழகுப்படுத்தி உள்ளது

    ReplyDelete
  14. குளுமையான பதிவு என்று சொன்னதற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராதா! கொஞ்சமே கொஞ்சம் குண்டாகியிருக்கிறேன் என்பது உண்மை தான்!

    ReplyDelete
  15. பாரீஸ்ஸில் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்க முடிந்தது இமா! சீக்கிரம் பாரீஸ் புகைப்படங்கள் தொடரும்! ரசித்ததற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  16. கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்னன்!
    உங்கள் இல்ல விசேடத்துக்கு சென்ற வருடம் வந்தது இப்போது தான் வந்த‌து மாதிரி அத்தனை பசுமையாக இருக்கிறது. உங்களின், உங்கள் இல்லத்தரசியின் அன்பும் கவனிப்பும் என்றுமே இனிமையாக நினைவில் நிற்கும்!

    ReplyDelete
  17. பாரீஸ்ஸிலா இருக்கிறீர்கள் மேனகா? இது தெரியாமல் போய் விட்டதே என்று உண்மையிலேயே வருத்தமாக இருக்கிற‌து. தெரிந்திருந்தால் சந்திக்க முயற்சி செய்திருப்பேன். பாரீஸ்ஸில் இரண்டு நாட்கள் தான் இருந்தோம். அதிகம் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் இன்னும் இருக்கிறது!

    ReplyDelete
  18. பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி லக்ஷ்மிம்மா!

    ReplyDelete
  19. முதல் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!!

    ReplyDelete
  20. அழகிய படங்களுடன் பகிர்வு சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  21. இதையும் வாசித்தேன் அருமை.
    உறவு- படங்கள் மிக்க நன்று.சகோதரி.
    மிக்க நன்றி.பணி தொடர வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  22. அட்ட‌காச‌மான‌ ப‌திவு! இம்மானிட‌ப் பிற‌ப்பில் இன்னும் அனுப‌வித்து ம‌கிழ‌ எத்த‌னையெத்த‌னை கோடி இன்ப‌ங்க‌ளிருக்கின்ற‌ன‌!! க‌ண்க‌ளும் ம‌ன‌தும் குளிர்ந்த‌து. உங்க‌ ம‌க‌னோடிருக்கும் ப‌ட‌மும் அவ‌ர் த‌ன் ம‌க‌னோடிருக்கும் ப‌ட‌மும் உண‌ர்வுக‌ள் த‌தும்ப‌த் த‌தும்ப‌ பூர‌ண‌மாயிருக்கின்ற‌ன‌. அம்மா பிற‌ந்த‌ நாளுக்கு இதை விட‌ சிற‌ந்த‌ ப‌ரிச‌ளிப்பு இருக்க‌ முடியுமா?!

    ReplyDelete
  23. அந்த‌க் காலில்லா நாற்காலி உண‌ர்த்தும் த‌த்துவ‌ம் அபார‌ம்.

    ReplyDelete
  24. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/8.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  25. படங்களும் பயண அனுபவங்களும் மிகச் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் ! அருமை! நன்றி!

    ReplyDelete
  26. அக்கா நீங்க பதிவே போடலைன்னு நினைச்சிட்டிருந்தேன்,நேற்று தான் 5 ஆம் பாகம் பார்த்தேன்,சோ இன்று பின்னாடி வந்தாச்சு.பார்க்கவே குளுமையாக அழகான படங்களுடன் பகிர்வு.

    ReplyDelete
  27. படங்கள் எல்லாம் சூப்பராக இருக்கு

    உங்கள் எல்லாரையும் பார்த்தாச்சு. டெங்கு பதிவு வரை படித்தேன், நீங்கள் போட்ட டிப்ஸை என் பதிவிலும் லின்க் கொடுத்து எல்லோருடனும் பகிர்ந்துள்ளேன்

    ReplyDelete