Tuesday, 5 June 2012

வைர முத்துக்கள்!!


தேவகோட்டையைச் சேர்ந்த திரு. சோம.வள்ளியப்பன் சிறந்த அறிஞர். BA பொருளாதாரம், மற்றும் MBA வில் மனித வளமும் படித்திருக்கும் வள்ளியப்பன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், தாஜ் இண்டர் காண்டினெண்டல் ,BHEL, பெப்சி, வெர்ல்பூல், டாக்டர் ரெட்டீஸ் பவுண்டெஷன் போன்ற் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.
தினமணி நாளிதழிளில் இவர் 4 ஆண்டுகள் தொடர்ந்து நடுப்பக்க கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன், குமுதம், நாணயம் விகடன் அமுதசுரபி, நமது நம்பிக்கை போன்ற இதழ்களில் தொடர்கள் எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய, அள்ள அள்ளப் பணம் ( 4 பாகங்கள்) என்ற பங்குச் சந்தை பற்றிய புத்தகம் விற்பனையில் சாதனை படைத்துவருகிற புத்தகமாகும்.  சன், சன் நியூஸ், ஜெயா, ஜெயாபிளஸ்,விஜய், பொதிகை தொலைக் காட்சி கலைஞர், கலைஞர் செய்திகள், நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று, பங்குச் சந்தை பற்றியும் மனிதவள மேம்பாடு குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில் இவர் எழுதிய ‘ தடையேதுமில்லை’ என்ற அருமையான புத்தகத்தைப் படித்தேன். அதனின்றும் சில துளிகள்...
1.   நாம் இன்றிருக்கும் நிலை நிச்சயமானதா? இந்த இடம், இருப்பு, சூழ்நிலை மாறினாலும் நாம் தனியாகவோ, அல்லது வேறு இடம், சூழ்நிலையிலும் பரிமளிக்க, ஜொலிக்கக்கூடியவர்களா? நாம் வெப்பத்தை தானே உமிழும் சூரியனா? அல்லது பிற கிரகத்திலிருந்து வெப்பத்தை வாங்கி உமிழும் நிலவா? நாம் வைரமா? அல்லது சாதாரணக்கல்லா? மாறி வரும் உலகில் எதுவும் நிச்சயமில்லை. அதனால் எங்கேயும் எப்போதும் மதிப்பு பெறும் வைரக்கற்களாய் நம்மைத் தயாரித்து வைத்துக்கொள்வது அவசியமல்லவா?
2.   எப்போது வேண்டுமானாலும் திடீரென்று வரக்கூடிய, தற்சமயம் கண்ணுக்குத் தெரியாத சந்தர்ப்பங்களுக்காக தன்னை தயாரித்துக்கொள்ளுகிறவர்கள் வெற்றி பெருகிறார்கள். சந்தர்ப்பம் வந்த பிறகு தான் தயாரிக்க முடியும் என்பவர்களுக்காக சந்தர்ப்பங்கள் காத்திருப்பதில்லை.
3.   Demand excellence, you will get excellence என்பார்கள். மிகச் சிறந்தவற்றையே நாம் நம்மிடம் கேட்க வேண்டும். கேட்டது நிச்சயம் கிடைக்கும்.
4.   நம்மை விடச் சிறப்பானவர்கள் மத்தியில் இருப்பது, நம்மிடம் பழகுபவர்களிடம், அவர்கள் செய்து கொண்டிருப்பதை விட மேலானவற்றைக் கேட்பது, நம்மிடமிருந்து நாமே அதிகமாய் எதிர்பார்ப்பது போன்றவை நமது செயல்பாடுகளும் அவற்றின் தரமும் அதிகரிக்க வழி வகுக்கும்.
5.   பிறர் சொல்வதைக்கேட்க 25% புரியும். செய்வதைப்பார்க்க 50% புரியும். நாமே செய்து பார்க்கும்போது தான் 75% லிருந்து 100 % வரை புரியும்.
6.   வாழ்க்கைப் பயணம் முழுவதும் தெளிவான இலக்குகளைத் தேடி வகுத்துக்கொண்டு, அவற்றை அடைய முயற்சிப்பதில்தான் வாழ்க்கை பயனுள்ளதாகவும் சுறுசுறுப்பானதாகவும் அமைகிறது.
7.   பலவீனங்களை சரி செய்வதையும் விட, அவற்றைப்பற்றிக் கவலைப்படுவதை விட, நமது பலங்களை அதிகரிக்கலாமே?
8.   எடுத்த செயலினை முடிப்பது, எத்தனை முறைகள் வீழ்ந்தாலும் தளர்வதில்லை. எத்தனை தடைகள், இடையூறுகள் வந்தாலும் விடுவதில்லை. இந்த மாதிரியான விடாமுயற்சி தான் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருக்க உதவுகிறது.
9.   செய்து கொண்டிருப்பது எதுவாக இருந்தாலும் அதை இதயப்பூர்வமாகச் செய்யும்போது, முயற்சிகள் தொடரும்போது, அதன் முடிவு வெற்றியைத்தவிர வேறு எதுவாக இருக்கும்?
10. எண்ணங்களே செயல்களாகின்றன. எந்த தாவரத்தின் விதை பூமியில் விழுகிறதோ, அந்த தாவரம் முளைத்து மரமாகின்றது. மனதின் எண்ணங்களும் அப்படியே. முளைத்து வளர்கின்றன. பிரச்சினை தரும் எண்ணங்களை ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிடித்து வெளியேற்றி விட வேண்டும்.
11. வெற்றிகரமான வாழ்க்கைக்கு முக்கியத் தேவைகள்:

எந்தக் காலக்கட்டத்திலும் நமது உணர்வுகளைத் தைரியமாகச் சொல்லுதல்.
அடுத்தவர் உணர்வுகளையும் உரிமையையும் மதித்தல்.
உதட்டளவில் இன்றி உண்மையாக அன்புடன் இருத்தல்.
மற்றவர்களின் பலவீனங்களையே கவனிக்காமல் அவர்களின் பலங்களைக் கவனித்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது.
மற்றவர்கள் நம்மைப்போலவே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் என்று எதிர்பார்க்காமல் அவர்கள் அப்படி இருப்பது அவர்களின் உரிமை என்று நம்புதல்.
மற்றவர்கள் மீது நம்பிக்கை காட்டுதல்.


25 comments:

  1. சோம வள்ளியப்பனை எனக்கு மிகவும் பிடிக்கும், பொருளாதாரம் கொண்டு சுய முனேற்றம் பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் எனக்கு பிடித்தமானவை. இட்லியாக இருங்கள் என்று அவர் எழுதிய புத்தகம் மிகவும் பிடிக்கும்.


    சென்னை டூ சென்னை படித்துப் பாருங்களேன்

    ReplyDelete
  2. அருமையான கருத்துக்களை எடுத்து
    சுருக்கமாகக் கொடுத்திருந்தது
    அவசியம் இந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும்
    என்கிற ஆவலைத் தூண்டிப் போகிறது
    பதிவிற்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  3. வைர முத்துக்கள்!!
    தங்கமான பகிர்வுகள் !

    ReplyDelete
  4. எந்தக் காலக்கட்டத்திலும் நமது உணைவுகளைத் தைரியமாகச் சொல்லுதல்.
    அடுத்தவர் உணர்வுகளையும் உரிமையையும் மதித்தல்.
    உதட்டளவில் இன்றி உண்மையாக அன்புடன் இருத்தல்.
    மற்றவர்களின் பலவீனங்களையே கவனிக்காமல் அவர்களின் பலங்களைக் கவனித்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது.
    மற்றவர்கள் நம்மப்போலவே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் என்று எதிர்பார்க்காமல் அவர்கள் அப்படி இருப்பது அவர்களின் உரிமை என்று நம்புதல்.
    மற்றவர்கள் மீது நம்பிக்கை காட்டுதல்.///


    அருமையான கருத்துக்கள்.வைர முத்துகள் கோஹினூர் வைரம் போல் ஜொலி ஜொலிக்கின்றன.

    ReplyDelete
  5. திரு. சோம.வள்ளியப்பன் அவர்களின் பேச்சுக்களை கேட்டிருக்கிறேன் அம்மா..
    ஆனால் அவரின் புத்தகம் பற்றி இப்போதுதான் அறிகிறேன்..
    நல்லதொரு அறிமுகம்..

    ReplyDelete
  6. //வாழ்க்கைப் பயணம் முழுவதும் தெளிவான இலக்குகளைத் தேடி வகுத்துக்கொண்டு, அவற்றை அடைய முயற்சிப்பதில்தான் வாழ்க்கை பயனுள்ளதாகவும் சுறுசுறுப்பானதாகவும் அமைகிறது//
    சொல்லும் வரிகளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் அருமை நண்பர் சோம.வள்ளியப்பன் பற்றிய பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. திரு சோம வள்ளியப்பன் எனது இனிய நண்பர் !

    அவர் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  8. அத்தனையும் அருமையான முத்துகள்......
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. தடையேதும் இல்லை புத்தகத்திலிருந்து வைர முத்துக்களைக் கோர்த்துத் தந்துள்ளது மிகவும் நன்றாகவே உள்ளது.

    திரு சோம வள்ளியப்பன் அவர்களை நான் நேரில் சந்தித்துள்ளேன். எங்களுடன் BHEL திருச்சியில் கொஞ்சகாலம் வேலை பார்த்தவர் தான்.

    நல்ல மனிதர். சிறந்த அறிவாளியும் கூட.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  10. உங்கள் பதிவு பற்றி வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.
    நேரமிருப்பின் பார்க்கவும்.
    http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
  11. நல்ல புத்தகம் குறித்த பதிவுக்கு நன்றிகள்..
    “ மற்றவர்கள் நம்மைப்போலவே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் என்று எதிர்பார்க்காமல் அவர்கள் அப்படி இருப்பது அவர்களின் உரிமை என்று நம்புதல். ”
    மிகவும் உண்மையான வரிகள்... நம்மைச் சுற்றியிருப்பவர்களின் செயல்களால் நாம் பாதிக்கப்படாமல் இருக்க இது மிகவும் முக்கியம்... சமீபகாலமாக நான் பின்பற்றுகின்ற ஒரு நல்ல விசயம்.....

    ReplyDelete
  12. எப்படி இருக்கிறீர்கள் மேடம்....? என்னுடைய கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.. நீங்கள் அடுத்த முறை தஞ்சை வரும் போது உங்களை நேரில் சந்தித்துத் தருகிறேன். உங்கள் விமர்சனம் எனக்கு மிகவும் முக்கியம் மேடம்..

    ReplyDelete
  13. தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள எனது வலைப்பூவிற்கு தங்களை அழைக்கிறேன்!
    http://dewdropsofdreams.blogspot.in/

    ReplyDelete
  14. கருத்துரைக்கு அன்பு நன்றி சீனு! நீங்கள் குறிப்பிட்ட 'இட்லியாக இருங்கள்' புத்தகத்தை அவசியம் படித்துப்பார்க்கிறேன்!

    ReplyDelete
  15. விரிவான பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் இதயப்பூர்வமான நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  16. சோம வள்ளியப்பன் புத்தகம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி.
    வைரம் போல மதிப்புமிக்க கருத்துக்கள் அத்தனையும்.

    ReplyDelete
  17. வைர முத்துக்களுக்கு தங்க கிரீடம் சூட்டியதற்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  18. வைரமுத்துக்களை கோஹினூர் வைரமென்று புகழாரம் சூட்டியதற்கு இனிய நன்றி ஸாதிகா! ‌

    ReplyDelete
  19. கருத்துரைக்கு இனிய நன்றி மகேந்திரன்!

    ReplyDelete
  20. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரிஷபன்!

    ReplyDelete
  21. கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி!

    ReplyDelete
  22. பாராட்டுக்கு இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  23. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  24. அன்புள்ள கிருஷ்ணப்ரியா!

    அழகான வார்த்தைகளைக் கோர்த்து பின்னூட்டமிட்டதற்கு அன்பு நன்றி !

    விரைவில் த‌ஞ்சையில் உங்க‌ளை நேரில் சந்தித்து உங்களின் கவிதைத் தொகுப்பைப் பெற்றுக் கொள்கிறேன்! இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கு!

    ReplyDelete
  25. அன்புள்ள யுவராணி!

    விருதிற்கு இதயங்கனிந்த நன்றி! தமிழ்நாட்டில் பல வேலைகளாய் அலைந்து கொண்டிருப்பதால் உடனேயே பதிலிறுக்க இயலவில்லை. மன்னியுங்கள்!

    ReplyDelete