Sunday, 4 March 2012

முத்துக்குவியல்கள்

நெகிழ வைத்த முத்து

நேசம் பல விதங்களில் மனித வாழ்க்கையில் வெளிப்படுவதுண்டு. மனிதர்களிடம், ஐந்தறிவு படைத்த ஜீவன்களிடம் என்று மனதுக்கு மனம் வேறுபடுகின்றன. ஆனால் காகங்களிடம்கூட ஒருத்தர் பல ஆண்டுகளாய் நேசம் காட்டி வருவதைப் பற்றி படித்த போது வியப்பாக இருந்தது.




சென்னை அம்பத்தூர் அருகே, சத்யமூர்த்தி நகரில் 20 ஆண்டுகளாக குமார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிரார். 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் காலை கடையை திறக்கும்போது சுமார் 10 காக்கைகள் கடைக்கு முன்னால் கரைந்து சப்தமிட்டுக்கொண்டிருந்திருக்கின்றன. அவற்றை விரட்டியடிக்காமல் சிறிதளவு காராசேவு அள்ளிப் போட்டிருக்கிறார். சாப்பிட்ட காக்கைகள் பறந்து போய்விட்டன. ஆனால் மறு நாள் அவர் டீக்கடையைத் திறக்க வந்த போது கடை முன் மறுபடியும் அவை கூடியிருந்தன. இவரும் அவைகளுக்கு மீண்டும் இரை போட்டிருக்கிறார். இதுவே வாடிக்கையாகி, 15 வருடங்களாய் இந்த நட்பும் நேசமும் தொடர்ந்து வருகின்றது. இப்போது நூற்றுக்கணக்கான காக்கைகள் அவரது நண்பர்கள்!!! அவசரமாக வெளியூர் சென்றாலோ, வெளியில் தங்க நேரிட்டாலோ மட்டும்தான் இவர் அவைகளுக்கு உனவிடுவதில்லை. ஆனால் இவர் கடையைத் திறக்கா விட்டாலும் குறைந்தது அரை மணி நேரமாவது அவருக்காக காத்திருந்து பார்த்து, பின் மேலே வட்டமிட்டபடி கரைந்து, பறந்து சென்று விடுகின்றனவாம். இவர் அவைகளின் அருகில் போய் நின்றாலும் அவைகள் பறந்து செல்வதில்லை. சராசரி வாச்க்கை வாழ்ந்து வரும் இவர் தினமும் 3 பாக்கெட் பொரி, காராசேவு என்று அவைகளுக்கு செலவு செய்கிறார். அவைகளிடம் அதிக பாசம் வைத்திருக்கும் இவர், யாராவது காக்கைகளை விரட்டி அடித்தால் டென்ஷனாகி விடுகிறாராம்!! ‘ பறவைகளை நேசியுங்கள்’ என்று உபதேசம் செய்வாராம்!!

அசர வைத்த முத்து
 
 
 
ரொம்ப நாட்களாகவே நான் என் மகனிடமும் கணவரிடமும் அடிக்கடி ‘ இந்த கைபேசி உபயோகிக்க இப்படி தினமும் சார்ஜ் பண்ணுவது போர். என்னென்னவோ கண்டு பிடிக்கிறார்கள் உலகத்தில்- சார்ஜ் பண்ணத் தேவையேயில்லாத மொபைல் ஃபோன் கண்டு பிடிக்கவில்லையே இன்னும்!’ என்று சொல்வது வழக்கம். அது இத்தனை சீக்கிரம் பலிக்கும் என்று நான் நினைக்கவேயில்லை!!


அலைபேசியில் சார்ஜ் ஏற பேசினாலே போதும்!!


பேசினாலே பாட்டரியில் சார்ஜ் ஏறும் கைபேசிகளை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். ஒருவர் பேசும் ஒலி எலெக்ட்ரிக் பவராக மாறி கைபேசியின் பாட்டரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது. சியோல் பல்கலைக்கழக மாணவரான சாங் உகீம் இந்த கைபேசியைக் கண்டு பிடித்திருப்பதாக The Sunday Telegraph செய்தி வெளியிட்டிருக்கிறது. மின்சாரம் இன்றி, சுற்றுப்புறத்தில் ஏற்படும் ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி கைபேசியின் பாட்டரியில் சார்ஜ் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தகவல் முத்து
 
 
 
குறட்டையைத் தடுக்க புதிய வழி!!


மூச்சு விடுகையில் மூச்சுக்குழாயின் மேற்பகுதியில் ஏற்படும் இடர்ப்பாடுகளால் சீராக மூச்சு விடமுடியாமல் போகும்போது குறட்டை ஏற்படுகிறது. இதைத்தடுக்க அமெரிக்காவில் மேயோ கிளினிக் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரிய சாதனம் இது. பிளாஸ்திரி போன்ற சிறிய கருவியான இதை உதடுகளில் பிளாஸ்டர் போல ஒட்டிக்கொண்டு, ஐபாட் போன்ற இதன் துணைக்கருவியை காதுக்கருகில் பொருத்திக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் இதை எடுத்து வைத்து விடலாம். இதனால் எந்த பாதிப்போ, பக்க விளைவுகளோ கிடையாது. இதற்கான ஆய்வை குறட்டை விடுவோரிடம் செய்து வெற்றி பெற்றுள்ளார்கள் இந்த ஆய்வாளர்கள்! இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் குறட்டை சத்தம் வந்தால் தூக்கத்தில் உள்ளவர்களை எழுப்பாமல் அதை கட்டுப்படுத்தும். இது மூளைக்கு அனுப்பும் சமிக்ஞைகள் மூலம் குறட்டை பாதிப்பு குறைகிறதாம்!!

ரசித்த முத்து

நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
படங்கள் உதவி: கூகிள்

47 comments:

  1. மற்றவர்களைக் காக்கா பிடிக்கும் மனிதர்கள் மத்தியில் காக்கைகளுக்கு தினமும் உணவிட்டு, அவைகளுடன் நண்பராக உள்ள நல்லவரைப் பற்றி கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

    சார்ஜ் செய்யத்தேவையில்லாத செல் போன் கண்டுபிடித்தால் மிகவும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.

    தாங்கள் சொல்வதைப் பார்த்தால் யாரும் இனி குறட்டை விட்டு நிம்மதியாகத் தூங்க முடியாது போலிருக்கிறதே! ;)))))

    அருகே படுத்திருப்பவர்களுக்கு நிம்மதி தான் இனிமேல்.

    கடைசியில் கூறியுள்ள ரசித்த முத்துவும் அருமை.

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  2. பறவையினங்களை தன்னையறியாமலேயே பாதுகாக்கும் குமார் மிகவும் பாராட்டுக்குரியவர்தான், சந்தேகமே இல்லை.

    பேசினாலே சார்ஜ் ஏறும் மொபைல் சூப்பர். பேசிக்கொண்டேயிருப்பவர்களுக்கு ஏற்ற மொபைல்.

    குறட்டையைக் கட்டுப்படுத்தும் கருவி! அருமை. வீட்டுக்கொன்று இப்போதே ஆர்டர் கொடுத்துவிடவேண்டியதுதான்.

    கடைசி முத்து.... என்ன சொல்ல? நட்பின் மகத்துவத்தையும் தேவையையும் இதனிலும் அழகாய்ச் சொல்ல முடியாது.

    அனைத்து முத்துக்களையும் ரசித்தேன். மிகவும் நன்றி மனோ மேடம்.

    ReplyDelete
  3. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

    ReplyDelete
  4. தலைப்பைப் போலவே அனைத்து முத்துக்களும்
    நெகிழவைத்தன ரசிக்கவைத்தன
    அரிய தகவல் தந்து அசத்தின
    அசர வைத்தன
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பகிர்ந்த முத்தான தகவல்கள் அருமை மனோ அக்கா.ரசித்த முத்து சூப்ப்ர்.

    ReplyDelete
  6. அனைத்து முத்துக்களுமே அருமை.நீங்கள் ரசித்த முத்தினை நானும் ரசித்தேன்.அருமை.

    ReplyDelete
  7. முத்துக்கள் அருமை. காக்கைகளுக்கு உணவூட்டும் வழக்கம் நாகரீக உலகில் அருகி போய் விட்டது. ரசித்த முத்தை நானும் ரசித்தேன்.

    ReplyDelete
  8. ரசித்த முத்து - பிரமாதம்!

    ReplyDelete
  9. எத்தனை முத்துக்கள் ! முத்து குவியல் என சரியான பெயர் தான் வைத்திருக்கிறீர்கள். நல்ல விஷயங்களாக இதில் நீங்கள் நிறைய பகிர்வது நன்று !

    ReplyDelete
  10. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. முத்துச்சிதறல் கள் அனைத்துமே அருமையான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. அம்பத்தூர் டீக்கடைக்காரரின் நேயம் மனதை நெகிழ்த்தியது.


    //அலைபேசியில் சார்ஜ் ஏற பேசினாலே போதும்!!
    // யப்பா..என்னே டெக்னாலஜி....!

    முத்துக்கள் அத்தனையும் அருமை!

    ReplyDelete
  13. அனைத்து முத்துக்களுமே அருமை. காக்கைகளுக்கு உணவிடும் அந்த நபர் பாராட்டுதலுக்குரியவர்.

    ReplyDelete
  14. அனைத்து முத்தும் அருமை. அதிலும் ரசித்த முத்துத்தான் என்னை அதிகம் கவர்ந்தது...

    ஆனா, நிழல்போல அசையாமல், கொஞ்சம் மாறிக்கீறி அசைந்தால்... சில நட்புகளுக்குக் கோபம் வந்துவிடுகுதே மனோ அக்கா?

    ReplyDelete
  15. காக்கையின் மீது இப்படி ஒரு பற்றா...இனிமேல் நானும் காக்கையை கண்டம் விரட்டாமல் இருக்க பழகிகொள்கிறேன்

    ReplyDelete
  16. சுவையான முத்துக்கள்...

    மனிதர்களுக்கே ஒரு வேளை உணவிடாத மனிதர்களுக்கு மத்தியில் காக்கைகளுக்கு இவ்வளவு வருடங்களாக உணவிடும் அந்த நபர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர் தான்....

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  17. அனைத்து முத்துக்களுமே அருமை அம்மா...

    ReplyDelete
  18. /சார்ஜ் பண்ணத் தேவையேயில்லாத மொபைல் ஃபோன் கண்டு பிடிக்கவில்லையே இன்னும்/... ஹி..ஹி..நீங்களும் நம்ம கட்சிதானா... என் போனுக்கும் எங்க அய்யாதுரைதான் ஆபிஸ் விட்டு வந்ததும் 'போன் ஸ்விட்ச்-ஆப் ஆகியிருக்கு...சார்ஜ் கூட போடமுடியாதான்னு ரெண்டு டோஸ் விட்டுகிட்டே சார்ஜ் போட்டுத்தருவாங்க...

    அருமையான தகவல்களை எங்களோடு பகிர்ந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  19. முதல் முத்து நெகிழ வைத்தது. குமார் மிகவும் பாராட்டுக்குரியவர். அவருக்குக் காக்கைகள் போல நான் நாய் நேசன்! ஆனால் எனக்கு என்ன அனுபவம் என்றால் எவ்வளவுதான் காக்கைகளுக்கு உணவிட்டாலும் என் தலையில் அவ்வப்போது லொட் லொட்டென்று போடுகிறது!!
    இரண்டாவது முத்து நல்ல செய்தி. சந்தையில் கிடைத்து உபயோகிக்கும்போதுதான் சாதக பாதகங்கள் தெரிய வரும்!
    குறட்டை நியூசும் நல்ல செய்தி! ஆனால் ஆண்கள் மட்டும்தான் குறட்டை விடுகிறார்களா? (படம்) :))))

    ReplyDelete
  20. எளிய‌ வாழ்விலுள்ளோரும் த‌த்த‌ம் ஜீவ‌காருண்ய‌த்தை வெளிப்ப‌டுத்துவ‌து ச‌க‌ல‌ருக்குமான‌ ப‌டிப்பினை.

    தின‌மும் ப‌ற‌வைக‌ளுக்கு இரையிடுத‌ல் ம‌க‌த்தான‌ தான‌மாக‌ முன்னோர் கூறியுள்ள‌ன‌ர். காக்கைக‌ளை பித்ருக்க‌ளாக‌ உருவ‌கித்து அன்ன‌மிடுவ‌து ந‌ம் ப‌ழ‌க்க‌ம். சில‌ உண‌வ‌க‌ங்க‌ளில் எஞ்சிய‌வ‌ற்றை தின‌ச‌ரி வைக்குமிட‌ங்க‌ளில் வ‌ழ‌க்க‌மாக‌ காக‌ங்க‌ள் கூடுவ‌தை க‌ண்ட‌துண்டு. எங்க‌ள் வீட்டில் வெளிவாச‌லில் குருவிக‌ளுக்காக‌ இறைக்கும் தானிய‌ங்க‌ளை காக‌ங்க‌ளும் வ‌ந்து எடுக்கும்.

    இப்போதெல்லாம் ரேஷ‌னின் த‌ரும் அரிசியை இப்ப‌டியும் உப‌யோகிக்கிறோம் நாங்க‌ள். வாச‌ல் திண்ணையில் தீர‌த் தீர‌ அள்ளி வைப்ப‌த‌ற்கு செள‌க‌ர்ய‌மாக‌ இருக்கிற‌து. அவ்வ‌ப்போது த‌விட்டுக் குருவிக‌ளும் அணில்க‌ளும் காக்கைக‌ளும் வந்து த‌ங்க‌ளுக்குள் உரையாடிய‌ப‌டி கொறித்துச் செல்வ‌து வாடிக்கையாகிவிட்ட‌து. எங்க‌ள் க‌ண்க‌ளுக்கும் காதுக‌ளுக்கும் நிறைவான‌தொரு விருந்து.

    தேவைதான் புதுப்புது க‌ண்டுபிடிப்புக‌ளுக்கு ஆதார‌மாகிற‌து. க‌ண்டுபிடிப்புக‌ளின் தேவை தீர்ந்த‌பாடில்லை.பேசினாலே சார்ஜ் ஏறிவிடும் 'பேசி'யும், குற‌ட்டை குறைக்கும் இய‌ந்திர‌மும் இப்ப‌டியான‌ வ‌கையின்பாற்ப‌டுகிற‌து.

    ந‌ட்பைப் ப‌ற்றிய‌தான‌ க‌ருத்து அழ‌கு.

    தாங்க‌ள் சித‌ற‌விடும் முத்துக்க‌ள் எப்போதும் காத்திர‌மாக‌வே இருப்ப‌வை!

    ReplyDelete
  21. எல்லா முத்துக்களும் அருமை நல்ல தகவல்.

    ReplyDelete
  22. கதம்பக பதிவு அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. //அலைபேசியில் சார்ஜ் ஏற பேசினாலே போதும்!!


    பேசினாலே பாட்டரியில் சார்ஜ் ஏறும் கைபேசிகளை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.
    //

    புதிய தகவல் நன்றி

    ReplyDelete
  24. ஒவ்வொன்றாய் ரசித்து அழகான பின்னூட்டம் இட்டத்தற்கு இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

    ReplyDelete
  25. அனைத்து முத்துக்களையும் ரசித்து அழகான பின்னூட்டம் அளித்ததற்கு அன்பு நன்றி கீதா!

    ReplyDelete
  26. அழைப்பிற்கும் தகவலுக்கும் அன்பு நன்றி கூகிள்சிறி!

    ReplyDelete
  27. இனிய பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!!

    ReplyDelete
  28. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா!!

    ReplyDelete
  29. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ரமா!!!!

    ReplyDelete
  30. ரசித்து பின்னூட்டமளித்ததற்கு அன்பு நன்றி ரமேஷ்!!

    ReplyDelete
  31. பாராட்டிற்கு இனிய நன்றி சகோதரர் ஜனா!

    ReplyDelete
  32. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி மோகன்குமார்!!

    ReplyDelete
  33. முதல் வருகைக்கும் அன்பான பாராட்டிற்கும் இனிய நன்றி சீனிவாசன்!!

    ReplyDelete
  34. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!!

    ReplyDelete
  35. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஸாதிகா!!!

    ReplyDelete
  36. அன்புப்பாராட்டிற்கு இனிய‌ நன்றி ஆதி!!!

    ReplyDelete
  37. நீங்கள் சொல்வது சரி தான் அதிரா! சில் சமயம் அக்கறையுடனும் அன்புடனும் புத்திமதி சொன்னால் சில நட்புக்கள் அதை விரும்புவதில்லை!!
    ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  38. நல்ல விஷயங்களை உடனேயே பின்பற்ற‌ விரும்புகிற உங்கள் மனதிற்கு பாராட்டுக்கள் சேகர்! முதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  39. பாராட்டுக்கு அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  40. பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  41. அழகான பின்னூட்டமிட்டு பாராட்டியிருக்கும் உங்களுக்கு அன்பு நன்றி என்றென்றும் நீ!!

    ReplyDelete
  42. குற‌ட்டை என்றால் ஆண்கள் என்று சொல்லியே பழகி விட்டது! பாருங்கள் ஸ்ரீராம், கூகிள் தேட‌லில்கூட‌ குற‌ட்டை விடும் பெண் ப‌ட‌த்தை பார்க்க‌ முடிய‌வில்லை!
    அன்பான‌ பின்னூட்ட‌த்திற்கு இனிய‌ ந‌ன்றி!!

    ReplyDelete
  43. என்னை அன்புடன் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு அன்பு நன்றி ஸாதிகா! அன்றே அங்கு வந்து உங்களுக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து விட்டேன்!!

    ReplyDelete
  44. நீங்களும் தினமும் குருவிகளுக்கும் காக்கைகளுக்கும் அரிசியிடுவது மகிழ்வைத் தருகிறது நிலாமகள்! இங்கு அந்த சந்தர்ப்பம் இல்லை. இன்று அதிசயமாக ஒரு தவிட்டுக்குருவி சமையலறை ஜன்னல் வெளியே எட்டிப்பார்த்து ராகம் இசைத்தது. என் மருமகள் சிறிது அரிசியை வைத்ததும் உடன் ஆசையாக சாப்பிட்டத்தை ரசித்து பார்த்தோம்.
    விரிவான‌ நீண்ட‌ பின்னூட்ட‌த்திற்கு அன்பு ந‌ன்றி!!

    ReplyDelete
  45. கருத்துக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி விஜி!

    ReplyDelete
  46. முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் இனிய நன்றி சேகர்!

    ReplyDelete
  47. கருத்துக்கும் முதல் வருகைக்கும் இனிய நன்றி ராஜா!

    ReplyDelete