Sunday, 27 November 2011

முத்துக்குவியல்கள்

இந்த‌ முறை முத்துக்குவியல்களில் ஒரு சுவாரஸ்யமான தகவல், சிந்திக்க வைத்த ஒரு சிறு கதை, ஆச்சரியப்பட வைத்த இரு செய்திகள் இடம் பெறுகின்றன.

முதலில் சிந்திக்க வைத்த சிறு கதை. இந்த மாதிரி ஒரு தந்தை அமைவது ஒரு குழ‌ந்தைக்கு எத்தனை பெரிய வரம்!

சிந்திக்க வைத்த முத்து:

மிகவும் கோபக்காரனாக இருந்தான் அந்த சிறுவன். அவனைக்கூப்பிட்டு கண்டித்த அவன் தந்தை, ஒரு வெள்ளை சுவரைக் காண்பித்து, நீ ஒவ்வொரு தடவை கோபப்படும்போதும் நான் இந்த சுவற்றில் ஒரு ஆணி அடிக்கப்போகிறேன் என்று சொன்னார். அதேபோல அந்த சிறுவன் கோபப்படும்போதெல்லாம் ஆணி அடித்து அந்த சுவரே ஆணிகளால் நிரம்பி விட்டது. அதைப்பார்த்த அந்த சிறுவன் குற்ற உணர்ச்சியால் மனம் திருந்தி தன் தந்தையிடம் வந்து ‘ இனி நான் கோபப்படமாட்டேன். நான் திருந்தி விட்டேன்’ என்றான். தந்தை அவனிடம் ‘ நீயே போய் அந்த ஆணிகளையெல்லாம் பிடுங்கி எடு’ என்றாராம். அவன் அந்த ஆணிகள் முழுவதையும் பிடுங்கி எடுத்த பிறகு சுவற்றைப் பார்த்தால் சுவர் முழுவதும் ஆணியின் தழும்புகள் இருந்தன. தந்தை வந்து பார்த்து விட்டு சொன்னார்,’ கோபமும் இது போலத்தான் மகனே! கோபத்தை நாம் நிறுத்தி விட்டாலும் அதன் விளைவுகளை இது போலவே அழிக்க முடியாது’ என்றாராம்!

                                                         ****************************

அடுத்தது ஒரு வித்தியாசமான தகவல். இன்றைய உலகின் விஞ்ஞான முன்னேற்ற‌த்தின் ஒரு துளி இது!                                      
விஞ்ஞான‌ முத்து:

மரவட்டையைத் தொட்டால் சுருண்டு கொள்ளும், எதிரி விலகி விட்டார் என்று தெரிந்த பிறகு தான் உடலை பழைய நிலைக்குக் கொண்டு வரும். இதை அடிப்படையாக வைத்து அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலத்தில் உள்ல டப்ஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் புழு ரோபோவை கண்டு பிடித்துள்ளார்கள். சுனாமி, வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றில் சிக்கிக்கொள்பவர்களை, அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இடிபாடுகளை அகற்றுவது எப்போதுமே கடினமாக இருந்து வருகிறது. இந்த மாதிரி சூழ்நிலைகளை புழு ரோபோ சுலமாக சமாளிக்கும். சிறிய துளை வழியே உள்ளே நுழைந்து பாதிக்கப்பட்டவர்களை தன் சிலிகான் ரப்பர் உடலுக்குள் வைத்து வெளியே கொண்டு வரும். முதல் கட்டமாக 4 அங்குல ரோபோவை உண்டாக்கி விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு


‘ கோ க்யூட் ரோபோட்’ என்று பெயர். மீட்புப்பணிகளில் ஈடுபடுகின்ற அளவில் பெரிய அளவு ரோபோக்களை உருவாக்கும் பணி இனி தொடங்கவிருக்கிறதாம்!           

                                                    ***********************

இந்த வித்தியாசமான தகவல் காலம் எந்த அளவு மாறுகிறது, சமுதாயப் பண்பாடுகளும் கலாச்சாரமும் எந்த அளவு சீர்கெடுகிறது என்பதைக் காட்டுகிறது!

வியக்க வைத்த முத்து:

மருமகள்களின் கொடுமை!

மாமியார்களின் கொடுமை மாறி மருமகள்கள் கொடுமை என்ற காலம் வந்து விட்டது. HELP AGE INDIAசார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 64 சதவிகித வழக்குகள் மருமகள்களின் கொடுமை காரனமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் 44 சதவிகிதம், ஹைதராபாத்தில் 38 சதவிகிதம், போபாலில் 30 சதவிகிதம், கலத்தா 23 சதவிகிதம், சென்னை 2 சதவிகிதம் என்று முடிவுகள் சொல்லப்பட்டுள்ளன!!!


21 comments:

  1. சிந்திக்க வைத்த சிறுகதை சூப்பர்.

    விஞ்ஞான‌ முத்து:இப்படி நடப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது


    வியக்க வைத்த முத்து: காலத்தின் கொடுமை.

    மத்த ஊரை விட சென்னையில் குறைவு என்பது துளியூண்டு ஆறுதலா இருக்கு

    ReplyDelete
  2. விஞ்ஞான முத்து உண்மையிலேயே வியக்க வைத்துவிட்டது அம்மா..

    ReplyDelete
  3. கோபம் மறைந்தாலும் கோபத்தினால் ஏற்பட்ட வடுக்கள் மறைவது இல்லை தான். அதைச்சொல்லும் இந்தக்கதையை நானும் எதிலோ சமீபத்தில் படித்தேன். தாங்கள் சொல்லியவிதம் இன்னும் அழகு. எங்களையும் சிந்திக்க வைக்கும் முத்து தான்.

    விஞ்ஞான முத்து வெற்றிபெறட்டும். உயிர்கள் காப்பாற்றப்படட்டும். ))))

    உங்களை வியக்க வைத்த முத்து, தமிழ்நாட்டின் தலைநகரில் குறைவாக இருப்பதில் சற்றே ஆறுதல் ஏற்படுகிறது.

    அன்புடன் vgk

    ReplyDelete
  4. சிந்திக்க வைத்த முத்துவில் நீங்கள் பகிர்ந்த கதையும், விஞ்ஞான முத்துவில் செய்திப் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. மூன்று வித்தியாசமான பயனுள்ள தகவல்கள்.

    ReplyDelete
  6. மூன்று முத்துக்களுமே அருமை. அதிலும் முதல் முத்து சிறப்பாக இருக்கு.கோபத்தின் விளைவுகளை அழிக்க முடியாது என்பது அருமை.நன்றி மேடம், பகிர்வுக்கு.

    ReplyDelete
  7. ஹைத‌ராபாத் முத்து!

    தூத்துக்குடி முத்து!

    செய‌ற்கை முத்து:(

    ReplyDelete
  8. தமிழ்நாட்டில் மருமகளின் கொடுமை குறைந்த சதவிகிதம் என்பது எனக்கும் ஆறுதலாகத்தான் இருந்தது ராஜி!
    கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  9. கருத்துரைக்கு அன்பு நன்றி மகேந்திரன்!

    ReplyDelete
  10. உங்களின் விரிவான கருத்துரையைப் பெற்ற‌து என் பதிவிற்குப் பெருமை! அன்பான பின்னூட்டத்திற்கு உளமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

    ReplyDelete
  11. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  12. இனிய கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி SRIRAM!

    ReplyDelete
  13. அன்பான பாராட்டிற்கும் அழகான கருத்துரைக்கும் இனிய நன்றி ரமா!!

    ReplyDelete
  14. Arumaiyaana pathivu... sinthikka vaikkum sitharal..:)
    Reva

    ReplyDelete
  15. கருத்துக்கு அன்பு நன்றி நிலாமகள்!!

    ReplyDelete
  16. சிறுகதை அருமையாக இருந்தது.

    விஞ்ஞான முத்து உபயோகப்பட்டால் நன்றாக இருக்கும்.

    வியக்க வைத்த முத்து :((((

    ReplyDelete
  17. //சென்னை 2 சதவிகிதம்// ரொம்பவும் நல்ல பெண்கள் போலும். இந்த மாமியார்கள் பாவம், அவர்களுடைய மாமியாரிடமும் அனுபவித்திருப்பார்கள் இப்போது மருமகளிடமும் அனுபவிக்கிறார்கள். விஞ்ஞான முத்து பகிர்விற்கு நன்றி மேடம்

    ReplyDelete
  18. மூன்று வித்தியாசமான பயனுள்ள தகவல்கள்.

    ReplyDelete
  19. வித்தியாசமான மூன்று தகவல்கள்....

    கடைசி விஷயம் - கஷ்டம்.... :(

    ReplyDelete
  20. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என மற்றுமொறு முறை நிருபித்த கதை கோபத்தை கோழையாக்கியது.அற்புதம்.

    ReplyDelete
  21. முதல் செய்தி என்றுமே கோபம் ஆகாது என்று அழகாய் உணர்த்துகிறது. இரன்டாவது இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சி கண்டு பெருமிதப்படச் செய்கிறது. மூன்றாவதோ இன்றைய பெண்களின் வளர்ப்பு கண்டு மனம் வெதும்பி, அவர்களால் உருவாகிக் கொண்டிருக்கும் நாளைய சந்ததியை எண்ணி அச்சம் அளிக்கிறது.

    ReplyDelete