Monday, 12 September 2011

இல்லத்திற்கு பயனளிக்கும் குறிப்புகள்!

குறிப்பு முத்துக்கள் பக்கம் வந்து ரொம்ப நாட்களாகின்றன. அன்றாடம் புழங்கும் விஷயங்களில் நமக்குத் தெரியாமல் எத்தனையோ நல்லவையும் தீயவையும் கலந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டறியவும் நல்லன அல்லாதவற்றை நீக்கவும் சில உபயோகமான வழிகள் இங்கே!

குறிப்பு முத்து-1

கரப்பான் பூச்சிகளைக் கொல்ல ஒரு எளிய முறை இருக்கிறது. நான் மட்டுமல்ல, நான் சொல்லி பலரும் இந்த வழியைப்பின்பற்றி வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்.

போரிக் பவுடர் 1 பங்கு, கோதுமை மாவு 4 பங்கு, சீனி ஒரு பங்கு எடுத்துக்கொண்டு, இவற்றுடன் பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகள் செய்யவும். கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில், நிலைகளின் மேல் என்று மூன்று நான்கு உருண்டைகள் போட்டு வைக்கவும். என்ன காரணமோ தெரியவில்லை, இதைப்போட்டு வைத்த பிறகு கரப்பான் பூச்சிகள் அத்தனையும் மறைந்து விடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேவைப்பட்டால் உருண்டைகள் புதியதாய் செய்து மாற்றவும்.

பின் குறிப்புகுழந்தைகள் கையில் படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.

குறிப்பு முத்து-2



பல் தேய்க்கும் பிரஷ்ஷை வாரம் ஒரு முறை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு வைத்து எடுத்தால் பிரஷ்ஷிலுள்ள பாக்டீரியாக்கள் அழியும்.

குறிப்பு முத்து-3

ஒரு துணியை சிறிது வேப்பெண்ணெயில் தோய்த்து அலமாரி, சாமான்கள் வைக்கும் பீரோக்களை வாரம் ஒரு முறை துடைத்து வந்தால் எறும்புகள் மொய்க்காது.

குறிப்பு முத்து-4


வீட்டைக் கழுவி டெட்டால் தெளித்ததும் உடனே மின் விசிறியை இயக்ககூடாது. கிருமிகள் அழிய தரையிலுள்ல ஈரம் தானாகவே தான் காய வேண்டும்.

குறிப்பு முத்து-5

பெட்ரோல் பங்க் அருகே கைபேசியை உபயோகப்படுத்தக்கூடாது. கைபேசியிலுள்ள பாட்டரிக்கு பெட்ரோலில் தீயை உண்டாக்கும் அளவு சக்தியிருக்கிறது. அதாவது கைபேசி ‘ 5 வாட் ’ அளவு மின்சார சிக்னலை வெளிப்படுத்தக்கூடியதாம்.

குறிப்பு முத்து-6


வீட்டில் வெள்லை அடித்தாலோ அல்லது பெயிண்ட் பூசினாலோ அந்த வாசம் நிறைய நாட்களுக்குப் போகாது. இரண்டு மூன்று வெங்காயங்களை நறுக்கி வைத்து அறையின் கதவை மூடி வைத்தால் ஒரே நாளிலேயே அந்த வாசம் மறைந்து விடும்.

குறிப்பு முத்து-7

பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து விடும். அதைத் தவிர்க்க, தேங்காய் எண்ணெய் பாட்டிலில் சில துளிகள் விளக்கெண்னெய் விட்டு வைத்தால் தேங்காய் எண்ணெய் உறையாது.

குறிப்பு முத்து-8

கத்தி துருப்பிடித்திருந்தால் அந்தக் கத்தியை ஒரு வெங்காயத்தினுள்ளே அழுத்தி 24 மணி நேரம் வைத்திருக்கவும். அதன் பிறகு, சில தடவைகள் முன்னும் பின்னுமாக கத்தியை வெங்காயத்தினுள்ளேயே அசைத்து பின் வெளியே எடுக்கவும். துருவெல்லாம் நீங்கியிருக்கும்.

குறிப்பு முத்து-9

வெள்ளி சாமான்கள் வைத்திருக்கும் பெட்டியில் சில கற்பூர வில்லைகலைப் போட்டு வைத்தால் அவை நிறம் மாறாது.

குறிப்பு முத்து-10

காஸ் அடுப்பில் வைக்கும் வெந்நீர் சீக்கிரம் சூடாக அதனுள் ஒரு கிண்ணம் அல்லது ஒரு தம்ளரைப்போட்டு வைக்கவும்.
[ இது ஒரு மாத இதழில் படித்தது. ]



60 comments:

  1. மிகவும் உபயோகமான குறிப்புகள் கொடுத்திருக்கீங்க மேடம். எல்லாருக்குமே பயன்படும் நன்றி

    ReplyDelete
  2. எல்லாமே மிகவும் தேவையான குறிப்புகள்.
    எங்க வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை உண்டு. இது மாதிரி செய்து பார்க்கிறேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. குறிப்புகள் எல்லாமே ரொம்பப் பயனளிப்பது. ஆனா, ஏன்க்கா அந்தப் படம் போட்டீங்க? அதுதான் பிடிக்கலை. :-)))))))))))

    கரப்பானுக்கு செய்யும் வைத்தியம்(!!) எனக்கு சிலசமயம் சரியா வருது, சிலசமயம் எஃபெக்டே இல்லாம இருந்துது. ஏன்னு தெரியலை. அளவுகள் தப்பாயிருக்குமோ என்னவோ. இப்ப நோட் பண்ணி வச்சுக்கீறேன்.

    இப்பல்லாம், பெஸ்ட் கண்ட்ரோல்கிட்டச் சொன்னா, ஒரு ஜெல் மாதிரி வந்து வச்சுட்டுப் போயிடுறாங்க - ஸைட் எஃபெக்ட் இல்லாதது. ஆனா அதுவும் அப்படித்தான், ஒரு சமயம் உடனே பலனளிக்குது. ஒரு சமயம், ஒருவேளை அதுகளுக்கு விருந்து வச்சோமோன்னு சந்தேகம் வருது. :-))))))

    ReplyDelete
  4. அனைத்து முத்துக்களும் மிகவும் பயனுள்ளது மனோக்கா

    கரபான் பூச்சிக்கு
    நாங்க்லும் முன்பு இதுபோல்
    உருண்டைகள் பயன் படுத்துவோம்
    6 மாதத்துக்கு கேரண்டி

    ஆனால் நான் மைதாவில் பால்பவுடர், சர்க்கரை, போரிக் பவுடர் கல்ப்பேன்



    ( ஆனால் இப்ப ஒரு மருந்து கிடைது இருக்கு

    ReplyDelete
  5. பயனுள்ள குறிப்புகள்
    தொடரட்டும்..

    ReplyDelete
  6. வீட்டை துடைத்ததும் நான் பேன் போடுவேன், இனி போடக்கூடாது

    பெட்ரோல் பங்க் நலல் தகவல் கணவ்ரிடம் சொல்லி விடுகிறேன்

    ReplyDelete
  7. அனைத்து குறிப்பும் பயந்தரக்கூடியது.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. குறித்துவைத்து கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகள்.. இதை எங்க வீட்டுக்கு அனுப்பி நல்ல பெயர் வாங்கிவிட்டேன். நன்றி மேம்...

    ReplyDelete
  9. அடடடடடா அருமையான குறிப்புகள், மிகவும் பிரயோசனமா இருக்கும்...!!!

    ReplyDelete
  10. அருமையான அவசியமான அன்றாடத் தேவைக்கான அழகிய குறிப்புகள்.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    மனமார்ந்த நன்றிகள். vgk

    ReplyDelete
  11. கத்தியிலே குத்தி வச்ச வெங்காயத்தை மறுபடி யூஸ் பண்ணலாமா? :))))

    நல்ல தகவல்கள் நன்றி மேடம்

    ReplyDelete
  12. கரப்பான் பூச்சி ஒழிய நாங்கள் (சவூதியில்)போரிக் பவுடருடன் கோதுமை மாவுக்கு பதிலாக பால் பவுடர் இடுவோம். அனைத்து குறிப்புக்களும் அன்றாட வாழ்க்கைக்கு பயனுள்ளவை! இந்த பதிவில் வருபவைகளை படித்து அதன் படி நடக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் ’சிறந்த குடும்பஸ்தன்’ எனும் பட்டம் அவரவர் துணைவியரால் வழங்கப்படும் என்பது உறுதி! ஹி. ஹி.. :)

    ReplyDelete
    Replies
    1. இந்த போரிக் பவுடர் எங்கு வாங்கலாம்? பாமசியில் வாங்களாமா? முடிந்தாள் +61470687105 ஒரு சிறிய பதில் தர முடியுமா

      Delete
  13. அத்தனையும் முத்துக்கள்.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  14. மிகவும் உபயோகமான குறிப்புகள்....

    பகிர்வுக்கு நன்றி மேடம்....

    ReplyDelete
  15. அத்தனையும் முத்துகள். கரப்புக் குறிப்பு நிறைய உபயோகமாய் இருக்கும்.

    ReplyDelete
  16. எல்லாமே பயனுள்ள குறிப்புகள் .தேங்காயெண்ணை குறிப்பு எங்களுக்கு பயன்படும் ஆகஸ்ட் முதல் மே வரை எப்பவுமே இங்கே உறைந்து இருக்கும் .

    ReplyDelete
  17. அருமையான டிப்ஸ் கொடுத்து அசத்திவிட்டீர்கள்!!இவையெல்லாம் உபயோகமான டிப்ஸ்.(நான் சில உருப்படாத குறிப்புகளை சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறேன்...(உ.ம்)எண்ணை தேய்த்துக் குளிக்கும்போது கண்ணில் எண்ணை விழுந்து கண்ணெரிகிறதா...கவலைப் படாதீர்...கண்ணில் ஒரு ஸ்பூன் அரப்பு/சீயக்காய் போட்டு நன்கு கசக்க போயே போய் விடும்.....எண்ணை)
    இப்படியெல்லாம் யோசித்ததால்தான் இப்போது எழுதவே கூடாது என்ற சாபம் கிடைத்திருக்கிறதோ..என்னமோ...

    ReplyDelete
  18. பயனுள்ள குறிப்புக்கள்!

    ReplyDelete
  19. வீட்டிற்கு ரொம்ப ரொம்ப உபயோகமான பயனுள்ள முத்துக்களை தான் இங்க தந்திருக்கீங்க மனோம்மா...

    அதிலும் கரப்பான்பூச்சிக்கு கொடுத்தீங்க பாருங்க.. அச்சு அசல் எங்க வீட்ல இதே தான் நாங்க செய்ததும்...

    பக்கத்துல பாகிஸ்தான்காரங்க இருக்காங்க.. என்ன ஒரு தாராள சிந்தனை.... அப்டியே வேண்டாம் வேண்டாம்னு அத்தனை கரப்பான்பூச்சியையும் தள்ளிவிடுவாங்க வெளியே... அது வத்தலும் தொத்தலுமா எங்க வீட்டு கதவை தட்டாது... நைசா நாங்க விளக்கு வைக்க தினமும் காலை கதவு திறந்து வைக்கும்போது வந்துடும் அழையா விருந்தாளியாக....

    அப்புறம் என்ன... இதோ நீங்க சொன்ன அதே விதத்தில் நாங்க விருந்து வைப்பதுண்டு....

    காக்ரோச் போயே போச்... (ஒரு வருஷம் சாலிடா க்யாரண்ட்டி இந்த வகையில் செய்தால் )

    அன்பு நன்றிகள் மனோம்மா....

    ReplyDelete
  20. சொல்லியுள்ள குறிப்புகள் அனைத்துமே
    அன்றாட வாழ்வில் அனைவருக்கும் தேவையான குறிப்புகள்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. மிகவும் தேவையான குறிப்புகள் அனைவர் இல்லம்தோரும் எழுதி வைத்துக்கொள்ளவேண்டியது . பகிர்வுக்கு நன்றி.

    Kaa.Na.Kalyanasundaram
    www.kavithaivaasal.blogpost.com
    www.haikukavithaigal.blogpost.com
    www.thesmileofhumanity.blogpost.com

    ReplyDelete
  22. குறிப்பு முத்துக்கள்
    மிகவும் உபயோகமான குறிப்புகள்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  23. அத்தனை முத்துக்களுமே பயனுள்ள குறிப்பு முத்துக்கள்.
    கரப்பானுக்கு நல்ல மருந்து. செய்து பார்க்கிறோம்.
    வெந்நீர் வைக்கும் போது கிண்ணத்தை போடுவது என் அம்மா பின்பற்றி இப்போது நானும் அப்படித் தான் செய்கிறேன்.

    ReplyDelete
  24. பயனுள்ள குறிப்புகள். தேங்காயெண்ணெய் உறையாமலிருக்க சொன்ன யுத்தி இதுவரை அறியாதது. உடனே செய்துவிடுகிறேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  25. மிகவும் உபயோகமான குறிப்புகள்; நன்றி...
    மாலி

    ReplyDelete
  26. பயனுள்ள குறிப்பு தந்தமைக்க்கு மகிழ்ச்சி!!!!!!!!!!!!

    ReplyDelete
  27. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி லக்ஷ்மி!

    ReplyDelete
  28. அவசியம் இந்த ம‌ருந்தை கரப்பான் பூச்சியை ஒழிக்கச் செய்து பாருங்கள் ராம்வி!

    ReplyDelete
  29. நான் கூட படம் போட்ட பின் இந்த கரப்பான் பூச்சி படத்தை முதலில் போட்டிருக்க வேண்டாமோ என்று நினைத்தேன் ஹுஸைனம்மா!
    ம‌றுப‌டியும் மாற்றிப்போட‌ அலுப்பாக‌ இருந்த‌‌து!

    இங்கே எல்லா உணவகங்களுக்கும் வீட்டிற்கும் ஜெல் வைக்கிறார்க‌ள். பெரும்பாலும் ப‌ல‌ன‌ளிக்கிற‌து. இது அதிக‌ செல‌வில்லா வைத்திய‌ம். அவ்வளவு தான்!

    ReplyDelete
  30. கருத்துரைக்கு அன்பு நன்றி ஜலீலா! அந்த ஜெல் பற்றித்தானே எழுதியிருக்கிறீர்கள்?

    ReplyDelete
  31. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் குணசீலன்!

    ReplyDelete
  32. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ராஜா!

    ReplyDelete
  33. கருத்துரைக்கு இனிய நன்றி ஆசியா!

    ReplyDelete
  34. உங்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது எனக்கும் நல்ல பெயர் கிடைத்த மாதிரி தான் சகோதரர் பத்மநாபன்!‌

    ReplyDelete
  35. பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் மனோ!

    ReplyDelete
  36. இனிய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  37. வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சகோதரர் நெல்லி மூர்த்தி!

    ReplyDelete
  38. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரத்னவேல்!

    ReplyDelete
  39. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  40. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  41. என் குறிப்புகள் உபயோகரமாக இருப்பது மகிழ்வாய் இருக்கிறது ஏஞ்ச‌லின்!!

    ReplyDelete
  42. உங்களின் அசத்தலான பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் லக்ஷ்மி நாராயண‌ன்!

    ReplyDelete
  43. கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் கே.பி.ஜனா!

    ReplyDelete
  44. நான் சொன்ன குறிப்பைத்தான் நீங்களும் உபயோகிக்கிறீர்கள் என்று அறிந்ததும் மகிழ்வாக இருந்தது மஞ்சுபாஷிணி! ரொம்பவும் நகைச்சுவை உண‌ர்வோடு அதை வ‌ர்ணித்திருப்பதற்கு எனது பாராட்டுக்கள்!

    ReplyDelete
  45. வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  46. இனிய கருத்துரைக்கும் முதல் வ‌ருகைக்கும் நிறைந்த நன்றி சகோதரர் கல்யாணசுந்தரம்!

    ReplyDelete
  47. வருகைக்கும் க‌ருத்துக்கும் அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  48. கரப்பான்பூச்சிகளை ஒழிக்க இது ரொம்பவும் நல்ல மருந்து ஆதி! அவசியம் செய்து பாருங்கள். வெந்நிர் வைக்கும்போது அதனுள் பாத்திரம் போடுவது மட்டும் நான் செய்து பார்த்ததில்லை. ஒரு சினேகிதி சொல்லி நான் எழுதியிருந்தேன். நீங்கள் இந்த விஷயத்தை ரொம்ப நாளாக செய்து வருவதை அறிந்து மகிழ்ச்சியாக உள்ள‌து.

    ReplyDelete
  49. வருகைக்கும் க‌ருத்துக்கும் மகிழ்வான நன்றி கீதா!

    ReplyDelete
  50. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி மாலி!

    ReplyDelete
  51. அன்பான கருத்துக்கு இனிய நன்றி கார்த்தி!

    ReplyDelete
  52. பயனுள்ள குறிப்புகள்.பகிர்வுக்கு நன்றி.

    //வீட்டை துடைத்ததும் நான் பேன் போடுவேன், இனி போடக்கூடாது.//

    ReplyDelete
  53. அனைத்தும் பயனுள்ள குறிப்புகள் அக்கா. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  54. அனைத்து முத்துக்களும் அருமை...ஒவ்வொன்றையும் முயற்சிக்கிறேன்.பகிர்வுக்கும், வலைச்சர அறிமுகத்திற்க்கும் மிக்க நன்றிம்மா..

    ReplyDelete
  55. athanaiyum muthu muthana karuthukkal.

    use pannikirom.

    mikka nanri.

    ReplyDelete
  56. எல்லா குறிப்புகளுமே பயனுள்ளவை.
    எங்க வேலை ஈசி.. உங்க பிளாக் பார்த்து நோட் பண்ணி வச்சுகிட்டா போதுமே..

    ReplyDelete
  57. எல்லாக் குறிப்புகளும் பயனுள்ளவை. நான் கடைப்பிடிக்க வேண்டியதாக பலவும். மிக்க நன்றி.

    ReplyDelete