Wednesday, 18 May 2011

நெஞ்சம் மறப்பதில்லை!!

ஆசை, காதல், நேசம், பிரியம் என்று அன்பின் பல பரிமாணங்களைத் தாங்கி இது வரை நெஞ்சை நெகிழ வைக்கும் பல்லாயிரம் கவிதைகள் புத்தக வடிவில், திரையிசைப்பாடல்கள் வடிவில் வெளி வந்து மனதை உருக வைத்திருக்கின்றன. தற்போது இணையத்திலும் பல நூறு கவிதை மலர்கள் தினமும் பூத்து நறுமணத்தைப் பரப்பி வருகின்றன. ஆனால் அண்ணன்‍ தங்கை உறவுக்கிடையில் மலர்ந்த அன்பை திரைப்படங்கள் தான் கல்லில் வடித்த சிற்பங்களாய் மனதில் செதுக்கியிருக்கின்றன. அதுவும்கூட எண்பதுகளுடன் மறைந்து விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி நெஞத்தில் நீங்கா இடம் பிடித்த, என்னை மிகவும் பாதித்த‌ சில பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.



ஐம்பதுகளில் வெளி வந்த ஒரு பாடல். சின்னஞ்சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்டு அப்படியே மனதில் பதிந்து விட்டது. சகோதரர் என்று கூடப்பிறந்தவர் யாருமற்ற ஆழ்மனது ஏக்கமோ என்னவோ, இந்தப் பாடலின் வரிகளும் டி.எம்.செளந்தரராஜனின் ஏக்கமான குரலும் மனதில் ஆழப்பதிந்து விட்டடன. நல்லதங்காள் என்ற படத்தில் ஒரு அண்ணன் தன் தங்கையை நினைத்து பாடும் பாடல் இது. நிச்சயம் இதை யாரும் கேட்டிருக்க முடியாது என்று நினைக்கிறேன். கவிதை எழுதும் யாருமே இந்த எளிய பாடலை நேசிக்காமல் இருக்க முடியாது.

" பொன்னே! புதுமலரே! பொங்கி வரும் காவிரியே!
மின்னும் தாரகையே! வெண்மதியே!


கண்ணே வாவென்பேன், கை நீட்டி வந்திடுவாய்!
அண்ணா என அழைப்பாய், அள்ளி அணைத்திடுவேன்!
கன்னந்தனைக் கிள்ளி கனிவாய் முத்திடுவேன்!
உன்னையென் தோளேற்றி விண்ணமுதம் காட்டிடுவேன்!


அம்புலி வேணுமென்று அடம் பிடித்தே அழுவாய்!
பிம்பம் தனைக்காட்டி பிடிவாதம் போக்கிடுவேன்!
அந்த நாள் போனதம்மா! ஆனந்தம் போனதம்மா!
அந்த நாள் இனி வருமா? ஆனந்த நிலை தருமா?"

அடுத்த பாடல், அண்ணன் தங்கையாகவே நடிகர் திலகம் சிவாஜியும் நடிகையர் திலகம் சாவித்திரியும் வாழ்ந்த அதனாலேயே பெரும் புகழ் எய்திய 'பாச மலர்' திரைப்படத்தில் வருவது.


ஒரு அண்ணன் தன் தங்கை எப்படியெல்லாம் மன மகிழ்வுடன் எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்று தன் தங்கையின் திருமணக் கனவுகளுடன் பாடிய பாடல் இது. மறுபடியும் டி.எம்.செளந்தரராஜன் உணர்ச்சி மிகப் பாடியிருக்கும் பாடல் இது. கண்ண‌தாசனின் காவியப்புகழ் பெற்ற இந்தப்பாடலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் கைக்குட்டைகளை நனைய வைத்த இந்த அருமையான படமும் காலங்கள் பல கடந்தும் நெஞ்சில் இன்னமும் நிலைத்திருக்கின்றன.

" மலர்களைப்போல் தங்கை உற‌ங்குகிறாள்!
அண்ணன் வாழவைப்பான் என்றே அமைதி கொண்டாள்!
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்! -அண்ணன்
கற்பனைத் தேரில் பறந்து சென்றான்!


மாமணி மாளிகை, மாதர்கள் புன்னகை!
மங்கல மேடையில் பொன்வண்ணம் கண்டான்!
மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்!
மணமகன் வந்து நின்று மாலை சூடக் கண்டான்!


ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்!
வாழிய கண்மணி, வாழிய என்றான்!
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்!


பூமணம் கொண்டவள் பால் மணம் கொண்டாள்!
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்!
மாமனைப்பாரடி கண்மணி என்றாள்!
மருமகள் கண்கள் தம்மில் மாமன் தெய்வம் கண்டான்!"

இந்த மூன்றாவது பாடல் எண்பதுகளில் டி.ராஜேந்தர் இயக்கிய 'என் தங்கை கல்யாணி ' என்ற திரைப்படத்தில் வெளி வந்தது. சித்ராவும் எஸ்.பி.பாலசுப்ரமண்யமும் சோகமும் வலியும் மிகுந்த இந்தப்பாடலுக்கு உயிர் கொடுத்து பாடியிருப்பார்கள். ரொம்பவும் எளிமையான வரிகளாலான, ஆனால் ஆழ்ந்த கருத்துக்களுடைய பாடல் இது.

அண்ணன் பாடுவது:


தோள் மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ தூங்கு!
தாய் போலத்தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு!
நிலவைக் கேட்டா புடிச்சுத்தருவேன் மாமன்!
உலகைக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன்!


மண்ணுக் குதிரை அவனை நம்பி வாழ்க்கை என்னும் ஆற்றில் இறங்க‌
அம்மா நினைச்சாளா! உன்
மாமன் தடுத்தேண்டா!
வார்த்தை மீறி போனா பாரு!
வாழ்க்கை தவறி நின்னா கேளு!
வந்தது பொறுக்கலைடா! என் மானம் த‌டுக்குதடா!
தங்க ரதமே தூங்காயோ? தாழம் மடலே தூங்காயோ?
முத்துச்சரமே தூங்காயோ? முல்லைவனமே தூங்காயோ?


தங்கை பாடுவது:


நெருப்பைத் தொட்டா சுடுமே என்று
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்!
மீறித்தொட்டேன் நான், கதறி அழுதேன் நான்!
ஓடி வந்து அண்ண‌ன் பார்க்கும்!
தவறை மறந்து மருந்து போடும்!
இப்பவும் நெருப்பைத் தொட்டேன்!
அதை ஆற்ற யாருமில்லே!


தோள் மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ தூங்கு!
தாய் நெஞ்சம் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு!"

என்றுமே இந்த இனிய பாடல்களை நெஞ்சம் மறப்பதில்லை!!

படங்களுக்கு நன்றி: கூகிள்

29 comments:

  1. அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் 3 பாடல்களுமே அருமை. இருப்பினும் பாசமலருக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதி, டி.எம்.எஸ் பாடியது தான் மிகவும் பிரபலமாகி என்றும் என் நெஞ்சை விட்டு நீங்காத இடம் பெற்றதாகும்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  3. மூன்றும் அருமை. தமிழில் நிறைய அண்ணன் - தங்கை திரைப்படங்கள் வந்திருந்தாலும், சமீபத்தில் தொலைக்காட்சியில் M.G.R நடித்த "என் தங்கை" படம் பார்த்தேன். கலங்க வைத்து விட்டது.

    ReplyDelete
  4. //நிச்சயம் இதை யாரும் கேட்டிருக்க முடியாது என்று நினைக்கிறேன்.//

    உண்மைதான். பாசமலர் பாடல் மட்டுமே அறிவேன்.அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  5. அருமையான பகிர்வுங்க.... நன்றி.

    ReplyDelete
  6. நல்லதங்காள், பாசமலர், என் தங்கை கல்யாணி படங்களின் பாடல்களின் அணிவகுப்பு மிகவும் அருமை...

    ReplyDelete
  7. மூன்று பாடல்களுமே நல்ல பாடல்கள். நல்ல தெரிவு….

    ReplyDelete
  8. நெஞ்சம் மறப்பதில்லை!!

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. பாசமலர் மட்டும் தான் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  10. பாசமலர் மட்டும்தான் கேட்டிருக்கிறேன். மற்றவை புதியவை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. நல்ல பாடல்கள். பாடல் இணைப்பும் தந்திருக்கலாம். நல்ல தங்கள் பாடல் கேட்டதில்லை. அண்ணன் ஒரு கோவில் படத்தில் டி எம் எஸ் பாடும் 'மல்லிகை முல்லை' பாடல் கூட அருமையான ஒன்று..

    ReplyDelete
  12. என் அம்மாவுக்கு பழைய திரை இசை பாடல்களின் மீது அலாதி பிரியம், அதனாலேயே எனக்கும் , நான் அண்ணன் தங்கை பாடல்கள் பல கேட்டிருந்தாலும் இந்த நல்லதங்காள் பாடல் எனக்கு புதிது , மற்ற இரண்டும் எனக்கு சமீபமான பாடல்கள். உங்களின் முத்தான பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  13. என்றும் நினைவில் நிற்கும் பாடல்கள் பகிவுக்கு நன்றி.

    ReplyDelete
  14. அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு!

    உண்மைதான்! 'மலர்களிலே த‌ங்கை" பாடல் என்றுமே மனதை விட்டு நீங்காத பாடலாகத்தான் இன்று வரை இருக்கிறது!
    அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  15. இனிய கருத்துக்கு அன்பு நன்றி அதிரா!

    ReplyDelete
  16. அன்புள்ள தமிழ் உதயம்!

    'என் தங்கை' திரைப்படம் பல வருடங்களுக்கு முன் பார்த்தது. மறந்து விட்டது என்றாலும் அதன் பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக 'இரவினிலே என்ன நினைப்பு?" என்ற பாடல் மிக இனிமையாக இருக்கும்!

    கருத்துக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  17. அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  18. இனிய பாராட்டிற்கு அன்புன் நன்றி சித்ரா!

    ReplyDelete
  19. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் லக்ஷ்மி நாராயணன்!

    ReplyDelete
  20. இனிய பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  21. கருத்திற்கு இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  22. அன்பான கருத்திற்கு மனமார்ந்த நன்றி ஆதி!!

    ReplyDelete
  23. கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி வித்யா!

    ReplyDelete
  24. கருத்துப்பகிர்வுக்கு அன்பான நன்றி சகோதரர் எல்.கே!

    ReplyDelete
  25. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ' மல்லிகை முல்லை' பாடலும் அருமையான பாடல்தான் சகோதரர் ஸ்ரீராம்!
    கருத்திற்கு இனிய நன்றி!
    அடுத்த முறை பாடல்களின் இணைப்பைத் தருகிறேன்!!

    ReplyDelete
  26. முதல் வருகைக்கும் அன்பான கருத்துப் பகிர்வுக்கும் உள‌மார்ந்த நன்றி சகோதரர் ராஜகோபாலன்!!

    ReplyDelete
  27. இப்பதிவில் தங்களை இணைத்து இண்ட்லியில் ஓட்டுமளித்த அன்புத் தோழமைகள்
    RDX, Chithraa, Sriramanandhaguruji, Dhuvazen, KarthikVK, Bsr,ramalakshmi அனைவருக்கும்
    இதயங்கனிந்த ந்னறி!!

    ReplyDelete
  28. அண்ணன் தங்கை பாடல்கள் அனைத்துமே மிக நன்றாக இருந்தது............
    உங்கள் பதிவிற்கு நன்றி..............

    ReplyDelete