Monday, 9 August 2010

நலமுடன் வாழ

மறுபடியும் சில மருத்துவக்குறிப்புகள். ஒரு சிலருக்காவது இவை பயன்பட்டால் எழுதிய நோக்கத்திற்கு பலன் கிடைத்து விடும்.


முதலாம் மருத்துவ முத்து:




5 மிளகுகளின் பொடி, 10 உலர்ந்த கருப்பு திராட்சை, ஒரு ஸ்பூன் சோம்புத் தூள்- இவற்றை ஒரு கப் நீரில் இரவு ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் கசக்கிக் குடித்து வந்தால் பித்தப்பை கற்கள் அழிந்து விடும்.


இரண்டாம் மருத்துவ முத்து:


நோயாளிகள் உபயோகப்படுத்தும் வென்னீர்ப்பையில் சிறிது உப்பைச் சேர்த்தால் வெகு நேரத்திற்கு சூடு குறையாமல் இருக்கும்.


மூன்றாம் மருத்துவ முத்து:


வெந்நீரின் நன்மைகள்:


வெந்நீர் இரத்ததிலுள்ள நஞ்சை வெளியேற்றுகிறது. அடிக்கடி வெந்நீர் சாப்பிடுபவர்களுக்கு தலைவலி வருவதில்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள்வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடித்தால் உடனே வலி குறையும்.


நான்காம் மருத்துவ முத்து:




காலையில் வெறும் வயிற்றில் அரை கப் முட்டைக்கோஸ் சாறு குடித்து வந்தால் முற்றிய அல்சர்கூட முழுவதும் குனமாகும்.


ஐந்தாம் மருத்துவ முத்து:


தேள் கொட்டினால்:


கடித்த இடத்தின் மேல் பகுதியில் ஒரு கயிறால் உடனேயே கட்டு போட வேண்டும். 9 மிளகுகளை ஒரு சுத்தமான வெற்றிலையில் வைத்து மடித்து நன்கு மென்று விழுங்கும்படி செய்து சிறிது தண்ணீரும் குடிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு அரை மூடி முற்றிய தேங்காயைக் கீற்று போட்டு நன்கு மென்று தின்று சக்கையைத் துப்ப வைக்க வெண்டும். அரை மூடி தேங்காயைத் தின்பதற்குள் வலியும் விஷமும் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து விடும். ஒன்றரை மணி நேரத்தில் வலி முழுவதுமாக நீங்கி விடும்.


ஆறாம் மருத்துவ முத்து:


காய்ந்த மகிழம்பூவை நல்லெண்ணையில் போட்டு தொடர்ந்து வெய்யிலில் வைத்து வந்தால் மகிழம்பூவின் சாறு முழுவதும் நல்லெண்ணையில் இறங்கி விடும். தலை கனம், தொடர்ந்த ஜலதோஷம் இவற்றால் அவதியுறும்போது இதைத் தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

20 comments:

  1. அனைத்தும் அருமையான முத்துக்கள்....

    ReplyDelete
  2. பயனுள்ள குறிப்புகள். மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நல்ல குறிப்புக்கள்..

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள குறிப்புகள்.

    ReplyDelete
  5. அனைத்தும் அருமையான முத்துக்கள்....

    ReplyDelete
  6. நல்ல பயனுள்ள குறிப்புகள்..

    ReplyDelete
  7. அன்பு நன்றி மேனகா!!

    ReplyDelete
  8. அன்பார்ந்த பதிவிற்கு மிக்க நன்றி புவனேஸ்வரி!!

    ReplyDelete
  9. அன்புச் சகோதரர் ஜெய்லானி!
    பாராட்டுக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  10. அன்புச் சகோதரர் தூயவன்!

    அன்பான கருத்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  11. அன்புச் சகோதரர் குமார்!

    அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  12. அன்பு சகோதரர் ரியாஸ்!

    பாராட்டிற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  13. மிக உபயோகமான குறிப்புகள். ஊருக்கு போயிட்டு வந்துட்டீங்களா மேடம்

    ReplyDelete
  14. thanks for the tips, please keep posting...

    ReplyDelete
  15. ஆஹா..ப்ரமாதம்! ’தலைவலியா சுக்கை அரைத்து நல்லா பத்துப் போடு’ என்று சொன்ன வீட்டுப் பெரியவர்கள் இல்லாத வீடுகளில் இந்த மாதிரி ப்ளாக்குகள் தான் கதி.இந்த மாதிரி படிக்கும் போது, படிக்கும் எங்களுக்கு ஒரு பாதுகாப்பு உண்ர்வு வருகிறது!அதற்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  16. மனோ மேடம்...

    மிக மிக அருமையான மருத்துவ முத்துக்களை எங்களுக்காக அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி...

    கடைசி வரைக்கும் பார்த்தேன்... அதில் துளசி இல்லையே... துளசி இலைகள் தான் மருத்துவத்தின் அரசி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்... தெரியப்படுத்தவும் / தெளிவு படுத்தவும்....

    (உங்கள் மெயில் ஐடி எனக்கு வேண்டுமே மேடம்..)

    ReplyDelete
  17. அன்புச் சகோதரர் மோகன்குமார்!

    பாராட்டுக்கு அன்பு நன்றி!! சென்ற வாரம் திரும்பி வந்து விட்டேன். இந்த தடவை நீடாமங்கலம் பக்கம் செல்ல முடியவில்லை.

    ReplyDelete
  18. Thanks a lot for the encouragement as well as the appreciation, krishnaveni!

    ReplyDelete
  19. அன்புச் சகோதரர் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி!

    தங்களின் மனந்திறந்த பாராட்டு இன்னும் பல அரிய, உபயோகமான தகவல்களை இங்கு எழுத வேண்டும் என்ற உற்சாகத்தைத் தருகிறது! தங்களுக்கு என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  20. அன்புள்ள கோபி அவர்களுக்கு!

    அன்பான பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி!

    துளசி பற்றி விரைவில் எழுதுவதாகத்தான் இருக்கிறேன். ஆனாலும் அதுதான் மருத்துவத்தின் அரசி என்றழைக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.

    என் ஈமெயில் முகவரி:
    smano26@gmail.com

    ReplyDelete