Thursday, 3 June 2010

வீட்டு மருத்துவம்!!

முன்பே நான் எழுதியிருந்தது போல வீட்டிலிருக்கும் பொருள்களைக் கொண்டு நமக்கு நாமே சிறு சிறு உடல் நலக்குறைவுகளுக்கு வைத்தியம் செய்து கொள்ளக்கூடிய குறிப்புகளின் இரண்டாவது பகுதி இது. இவை எல்லாமே என் இல்லத்தில் நான் செய்து பார்த்து பலனடைந்த குறிப்புகள்தான்! பார்வையாளர்கள் அனைவருக்கும் நிச்சயம் உபயோகமாக இருக்குமென நம்புகிறேன்.
 பகுதி-2

1. கடுமையான தலைவலி இருக்கும்போது கட்டை விரலால் வலப்பக்க மூக்கை மூடிக்கொண்டு இடப்பக்க மூக்கால் சுவாசிக்கவும். 10 நிமிடங்களிலேயே பலன் தெரியும். தொடர்ந்த தலைவலிக்கு தினமும் காலையும் மாலையும் 10 நிமிடங்கள் இந்த மூச்சுப்பயிற்சியை செய்து வந்தால் விரைவில் தொடர் தலைவலி நீங்கி விடும்.

2. மிகவும் களைப்பாக இருந்தால் இதையே மாற்றி இடப்பக்க மூக்கை விரலால் மூடிக்கொண்டு வலப்பக்க மூக்கால் 10 நிமிடங்கள் சுவாசிக்கவும். விரைவிலேயே களைப்பு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

3. தொடர்ந்து விக்கல் இருக்கும்போது மூச்சை இழுத்துக்கொண்டு மனதிற்குள் ஒன்றிலிருந்து 50 வரை சொல்லி பிறகு மூச்சை விடவும். இப்போது விக்கல் நின்றிருக்கும்.

4. தொடர்ந்த கடும் வயிற்றுக்கடுப்பிற்கு, உலர்ந்த திராட்சையை 50 கிராமை எடுத்து முதல் நாளிரவு வெந்நீரில் ஊறப்போடவும். மறு நாள் காலை அதைப் பிசைந்து காய்ச்சிய பசும்பால் அரை கப்பில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். ஓரிரு முறைகள் இது போல செய்தால் வலி அகன்று விடும்.

5. வெய்யில் காலங்களில் நெல்லிக்காய்களை கழுவி துடைத்து வெய்யிலில் நன்கு காய வைக்கவும். ஒரிரு நாட்களிலேயே விரல்களினால் அழுத்தினால கொட்டை இலகுவாக அகன்று விடும். மறுபடியும் நெல்லிக்காய்களை வற்றலாக கறுப்பாக ஆகும்வரை காய வைத்து எடுக்கவும். இந்த நெல்லி வற்றல் ‘நெல்லி முள்ளி’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிலோ நெல்லி முள்ளிக்கு 100 கிராம் மிளகை எடுத்துக்கொண்டு நன்கு பொடிக்கவும். இந்தப்பொடியை தினமும் காலை அரை ஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். சப்பிட்ட 1 மணி நேரத்திற்கு தண்ணீர் தவிர எதையும் சாப்பிடக்கூடாது. இவ்வாறு சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற கடும் வியாதிகளின் தாக்கம் வெகுவாகக் குறையும்.

6. வெந்தயம் 100 கிராம், மிளகு 4 மேசைக்கரண்டி-இவற்றை இலேசாக வறுத்துப்பொடிக்கவும். இதை காலையும் இரவும் 1 ஸ்பூன் வீதம் சாப்பிட்டு இளஞ்சூடான வென்னீர் அருந்தி வந்தால் சர்க்கரையைக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கலாம்.

7. தினமும் 2 நெல்லிக்காய்களை அரைத்து சாறு பிழிந்து தேனில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்.

8. சூட்டினால் திடீரென்று அதிகமாய்க் கஷ்டப்படுத்தும் வயிற்று வலிக்கு, இளம் சூடான வென்னீரில் 2 ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் சீனி கலந்து குடித்தால் 10 நிமிடங்களில் வலி நிற்கும்.

9. சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு, இதோ இன்னொரு மருத்துவம். ஒரு தம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு உப்பு சரியான அளவில் கலந்து குடித்தால் வெகு விரைவில் வலி சரியாகி விடும்.

10. தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவி மஸாஜ் செய்வதும் இந்த வலி வெகுவாகக் குறைய வழி வகுக்கும்.

33 comments:

  1. அருமையான குறிப்புகள்..!!

    எந்த ஒரு வயிற்று வலிக்குக்கும் இன்னெரு சூப்பர் மருந்து , ஓமம் + உப்பு சிறிது மிக்ஸியில் பவுடராக்கி இரண்டு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் வேறு எதுவும் தேவையில்லை ..

    வலது மூக்கு , இடது மூக்கு என்ன சம்பந்தம் என்று சொன்னால் தேவலாம் .(யோகாசனம் தவிர )

    ReplyDelete
  2. பவுடர் ஏனென்று கேட்டால் பல்லில் மாட்டாது . சிலருக்கு சொத்தை பல் இருக்கும். பிறகு வயித்து வலி போய் பல் வலின்னு அழுவாங்க அதுக்குதான்..

    :-))

    ReplyDelete
  3. அன்புள்ள ஜெய்லானி அவர்களுக்கு!

    இந்த மூச்சுப்பயிற்சிகளும் கிட்டத்தட்ட யோகாசனம் மாதிரிதான். யோகாசனப்பயிற்சியின் முடிவில் பிரணாயாமத்தில் இந்த மாதிரி பயிற்சி இருக்கும்.

    அவர்கள் நம்பிக்கைப்படி நம் வலப்பக்க மூக்கு சூரியனையும்[ உஷ்ணத்தையும்] இடப்பக்க மூக்கு சந்திரனையும்[குளிர்ச்சியையும்]
    தன்னுள் அடக்கியிருக்கிறது.

    தலைவலி வரும்போது வலப்பக்க மூக்கை மூடுவதன் மூலம் உஷ்ணத்தை தடுத்தி நிறுத்தி குளிர்ச்சியை சுவாசிப்பதன் மூலம் தலைவலி போகிறது.
    உடல் சோர்வடையும்போது வலப்பக்க மூக்கினால் சுவாசிக்கும்போது உடம்பில் சக்தி கிடைத்து புத்துணர்ச்சி பிறக்கிறது..

    ஓமம் உபயோகித்து வயிற்று வலியைப் போக்குவது பற்றி எழுதியிருந்ததற்கு என் நன்றி!! ஊரில் அதனால்தான் முன்பெல்லாம் எல்லோருடைய வீட்டிலும் ஓம வாட்டர் இருக்கும்!!

    ReplyDelete
  4. பிரணாயாமம் மற்றும் சில யோகாசனம் செய்வதுண்டு . தகவலுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  5. அனைத்தும் பயனுள்ள குறிப்புகள்....

    ReplyDelete
  6. அனைத்து டிப்ஸும் அருமை.லெமன் டிப்ஸ் இப்ப இருக்கிற சூட்டுக்கு நல்ல மருத்துவம்.

    ReplyDelete
  7. அனைத்தும் அருமையான குறிப்புக்கள்.

    ReplyDelete
  8. இது எல்லாத்தையும் விட , நல்லா வாய் விட்டு சிரிக்க சொல்லுங்க எல்லாம் சரியாப் போகும்

    ReplyDelete
  9. அருமையான தகவல்கள். இல.1,2 புதுமையாக இருக்கு எனக்கு. எனக்கு முன்பு பயங்கரமாக அடிக்கடி தலையிடி வரும்... அப்போ இது தெரியாமல் போச்சு. இனி வந்தால் பார்ப்போம்.

    ReplyDelete
  10. பயன் உள்ள தகவல்கள்....

    ReplyDelete
  11. அன்பு நன்றி, மேனகா!!

    ReplyDelete
  12. Thanks a lot for the nice words, Krishanveni!!

    ReplyDelete
  13. அன்பு பதிவிற்கு மனமார்ந்த நன்றி, மேனகா!!

    ReplyDelete
  14. அன்பு நன்றி, ஸாதிகா!

    ReplyDelete
  15. “இது எல்லாத்தையும் விட , நல்லா வாய் விட்டு சிரிக்க சொல்லுங்க எல்லாம் சரியாப் போகும்”

    நீங்கள் சொல்வது சரி தான்! ‘வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்’ என்று பழமொழியே இருக்கிறது!

    ReplyDelete
  16. அன்புப் பதிவிற்கும் வருகைக்கும் அன்பு நன்றி, அதிரா!

    ReplyDelete
  17. பதிவிற்கு அன்பு நன்றி, ஜெயா!!

    ReplyDelete
  18. பயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  19. குறிப்புகளனைத்தும் பயனுள்ள குறிப்புகள்மேடம்..

    ReplyDelete
  20. சின்ன சின்ன கை பக்குவங்களை மிக இலகுவாக தெரிந்து கொள்ள சொன்ன விதம் அருமை அக்கா!!

    ReplyDelete
  21. எல்லோருக்கும் பயன் உள்ள குறிப்பு. இன்று ஆங்கில மருத்துவத்தால் எத்தனை வகை பிரச்சினைகளை நாம் காண்கின்றோம். இன்னும் சிலர் இன்றும் இருக்கிறார்கள் ஒரு சிறிய தலைவலிக்கு கூட மாத்திரை உபயோகப்படுத்துகிறார்கள். வலி மாத்திரையினால் ஏற்படும் விளைவுகளையும் முடிந்தால் தெரியபடுத்துங்கள்.

    ReplyDelete
  22. பாராட்டுப்பதிவுக்கு என் அன்பு நன்றி, ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  23. வருகைக்கும் பாராட்டுக்கும் என் அன்பு நன்றி, மலிக்கா!

    ReplyDelete
  24. அன்பு சகோதரர் அப்துல் காதர் அவர்களுக்கு!

    தங்களது முதல் வருகைக்கும் பாரட்டுப்பதிவிற்கும் என் உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  25. அன்புள்ள இலம் தூயவன் அவர்களுக்கு!

    தங்களது கருத்துக்கு மிக்க நன்றி!

    சின்ன சின்ன உடல் நலக்குறைவுகளுக்கு மாத்திரைகளையும் டாக்டரையும் தேடி ஓடாமல் நமக்கு நாமே வீட்டிலிருக்கும் பொருள்களை வைத்து கை வைத்தியம் செய்து சரியாக்கிக் கொள்ள வேண்டுமென்ற உந்துதலில் தான் நான் இந்த குறிப்புகளை எழுதி வருகிறேன். தங்களைப்போன்றோரின் தொடர்ந்த பாராட்டுகளும் ஊக்கப்பதிவுகளும்தான் என்னை உற்சாகத்துடன் எழுத வைக்கிறது. மறுபடியும் தங்களுக்கு என் நன்றி!!

    ReplyDelete
  26. அன்பு நன்றி, இர்ஷாத்!

    ReplyDelete
  27. அன்பு நன்றி, காஞ்சனா!

    ReplyDelete
  28. சொல்வதுக்கு தப்பா நினைக்காதீங்க!! இந்த வகை டெம்லேட்டுகள் ஐ இ மற்றும் ஃபயர் பாக்ஸ் ல் சரியாக படிக்க முடியாது ( பேக்ரவுண்ட் உள்ள டெம்ப்லேட் ) இது குரோம் பிரவுசரில் மட்டுமே சரிவரும் . இல்லாவிட்டால் மொத்த பக்கமும் ஸ்குரோல் ஆகும்...வாசகர்கள் படிக்காம எஸ்கேப் ஆகிவிடும் வாய்ப்பு இருக்கு... நன்றி.

    ReplyDelete
  29. அன்புள்ள ஜெய்லானி அவர்களுக்கு!

    தங்களுடைய விளக்கங்களுக்கும் அக்கறைக்கும் என் மனமார்ந்த நன்றி!

    விரைவில் டெம்ப்ளேட்டை மாற்றி விடுகிறேன்.

    ReplyDelete
  30. Nice blog,this post is very useful! Thanks for sharing the tips!

    ReplyDelete
  31. My heartiest thanks for the compliment, Raji!!

    ReplyDelete