Wednesday, 28 April 2010

பிரியமான விருதுகள்!!


விருதுகள் வழங்கிய சகோதரி கிருஷ்ணவேணிக்கு என் இதயங்கனிந்த நன்றி!

இதில் கீழுள்ள ராணி விருதை

சகோதரிகள் கெள்சல்யாவிற்கும் பிரபாவிற்கும்,
கீழுள்ள ராஜ விருதை
சகோதரர்கள் குமார், மோகன்குமார், அஹமது இர்ஷாத் ஆகியோருக்கும்,
கீழுள்ள ‘சிறந்த உணவு வலைத்தளத்திற்கான’ விருதை
சகோதரி ஆசியாவிற்கும்
அன்புடன் பகிர்ந்தளிக்கிறேன்!

17 comments:

  1. Congratulations!!!


    உங்களிடம் இருந்து விருது பெறுவோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மனோ அக்கா இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.அக்கா நீங்கள் தந்த இந்த விருது பொக்கிஷத்தை ஆனந்தக்கண்ணீருடன் பெற்றுக்கொள்கிறேன்.ஒரு அனுபவ சமையற்கலை நிபுணரிடம் விருது பெறுவது என்பது எவ்வளவு மகிழ்ச்சி என்பதை சொல்ல வார்த்தைகள் இல்லை.விருது பெற்ற மற்ற வலையுலக அன்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி மேடம். மகிழ்கிறேன். நெகிழ்கிறேன்

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சி அக்கா...உங்கள் சகோதரன் ஆனதற்கு முதல் மகிழ்ச்சியும், உங்களிடம் விருதை பெறுவதற்கும் இரண்டாவது மகிழ்ச்சியுமாக இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு காரணமான உங்களுக்கு மிக்க நன்றி. அதே போல் விருது பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. விருது பெற்ற உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் அம்மா!!

    ReplyDelete
  6. மேடம் மனோ சாமிநாதன் அவர்களுக்கு, நீங்கள் அன்புடன் அளித்த விருதை நேரடியாக பெற்றதுபோல் சந்தோசம் அடைகிறேன். உங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை, அம்மா என்று அழைக்கலாமா? எனது தமிழ் சுமாராகத்தான் இருக்கும், தவறு இருந்தால் உரிமையுடன் சுட்டி காட்டுங்கள். விருது கிடைத்த மற்றவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மனோ அக்காவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அவரிடமிருந்து விருது பெற்றோர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. அன்புள்ள சித்ரா!

    அனைவருக்கும் வாழ்த்து சொன்ன உங்களின் அன்புக்கும் பெருந்தன்மைக்கும் என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  9. அன்பு ஆசியா!

    உங்களின் ஆர்வத்திற்கும் சுறுசுறுப்புக்கும் இன்னும் நிறைய அவார்டுகளைத் தரலாம்!

    ReplyDelete
  10. முதல் பதிவிற்கு நன்றி, மோகன்குமார்!

    ReplyDelete
  11. அன்புள்ள இர்ஷாத்!

    உங்களின் மகிழ்ச்சி எனது மகிழ்வை இன்னும் அதிகரிக்கிறது!
    என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  12. வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றி, மேனகா!!

    ReplyDelete
  13. அன்புள்ள கெளசல்யா!

    வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் என் அன்பு நன்றி!
    நீங்கள் என்னை தாராளமாக ‘அம்மா’ என்றே அழைக்கலாம்! அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே!
    தமிழ் சுமாராக வரும் என்று தன்னடக்கத்துடன் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் அருமையான எழுத்தும் அழகான தமிழ் நடையும் ஆழமான கருத்துக்களும் தான் என்னன அடிக்கடி உங்கள் வலத்தளத்திற்கு வரச்செய்கிறது. மேலும் வளர என் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றி, இமா!

    ReplyDelete
  15. வணக்கம்.

    கல்லூரி காலத்தில் எழுத ஆரம்பித்து பின்னர் பல்வேறு காரணங்களால் எழுதுவதை விட்டு விலகியிருந்து தற்போது அபுதாபியில் வேலை, அறை என்று இருந்த சூழ்நிலை மீண்டும் எழுதும் ஆவலைத் தூண்ட, வலைப்பூ ஆரம்பித்து ஆறு மாத காலத்திற்குள் எத்தனையோ நட்புகள் (அம்மா, நண்பர்கள், தோழிகள், சகோதரர்கள், சகோதரிகள்). எல்லாம் எழுத்தால் கிடைத்தவை.

    உங்கள் கையால் எனக்கு விருது. மிகுந்த சந்தோஷம். உங்களிடம் விருது பெருமளவுக்கு வளர்ச்சியா என்றால் கண்டிப்பாக இல்லை. உங்கள் விருதால் இனிதான் வளர வேண்டும்.

    உங்கள் அன்புக்கு முன்னால் என்னால் வேறு எதுவும் சொல்ல இயலவில்லை.

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா.

    விருது கொடுத்த உங்கள் மனதுக்கும் வாங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    என்றும் நேசத்துடன்,
    சே.குமார்.

    ReplyDelete
  16. அன்புள்ள குமார் அவர்களுக்கு!

    உங்கள் எழுத்தில் நிச்சயம் ஒரு spark இருக்கிறது. அதை நீங்களே உங்கள் பதிவில் ‘கல்லூரிக்காலத்தில் எழுதியதாக’ வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். பாருங்கள், நான் அதை முதலிலேயே கண்டு பிடித்து விருதும் கொடுத்து விட்டேன்.

    தங்களின் நேசமான பதிவிற்கு என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  17. என் தளத்துக்கு விருது வழங்கிய மனோ அம்மாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete