Thursday, 21 May 2020

முத்துக்குவியல்-56!!!!


அசத்தும் முத்து:


டெனித் ஆதித்யா என்னும் 16 வயது தமிழக மாணவர் சாதனைகள் படைத்திருக்கிறார். நான்காம் வகுப்பு படிக்கும்போது கணினி பயில ஆரம்பித்தவர் இந்த பதினாறு வயதில் 35 computer applications முடித்திருப்பதுடன் 6 மொழிகளையும் கற்றுத்தேர்ந்திருக்கிறார்.
19 கண்டுபிடிப்புகளுக்கு  சொந்தக்காரராய் இருப்பதுடன் 17 சர்வ தேசீய விருதுகளையும் 10 தேசீய விருதுகளையும் 10 மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார். 3 கின்னஸ் சாதனைகளுக்கு முயன்றவர். ஒரு கின்னஸ் சாதனையை தன் வசம் வைத்திருப்பவர்.
5 நிறுவனைங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர். சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு.

வாழையிலை யை வெட்டி விட்டால் சாதாரணமாக 3 நாட்களில் வாடி விடும். 3 ஆண்டுகள் வரை வாழையிலை வாடாமல் காக்கும் அறிவியல் தொழில் நுட்பத்தை இவர் தன் 11வது வயதில் கண்டு பிடித்தார். இவர் கண்டுபிடிப்பால் வாழையிலையின் உறுதித்தன்மையும் நெகிழ்வுத்தன்மையும் அதிகரிக்கும். இதைக்கொண்டு தட்டுகளும் குவளைகளும் செய்யலாம் என்கிறார். இதில் வேதியல் பொருட்கள் பயன்படுத்துவதில்லை என்பதால் இந்த வாழையிலைகள் ஆரோக்கியமானவை மட்டுமல்ல, மலிவானதும் கூட. மேலும் பிளாஸ்டிக் பிரச்சினைக்கு இதுவே சரியான தீர்வு என்கிறார் இவர். இதற்கு இவர் காப்புரிமை பெற்றிருக்கிறார். இந்த கண்டு பிடிப்பிற்காக 2 தேசீய விருதுகளையும் 7 சர்வ தேச விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் ‘ innovation scholar’ விருதை முதன்முறையாக பெற்றவரும் இவரே. 45 நாடுகளுக்கு இவர் சென்றுள்ளார். ஐந்து சர்வதேச அறிவியல் நிகழ்வுகளில் நடுவராகவும் இருந்திருக்கிறார்.
தகவல் முத்து:
பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காகக் காவல் துறையை அழைக்க தங்கள் கைபேசிகளில் `KAVALAN SOS APP' (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை சார்பில் தொடர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் தமிழக காவல்துறை சார்பில் வடிவமைக்கப்பட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவலன் SOS கைபேசி செயலியை அறிமுகப்படுத்தினார். இந்தச் செயலியை வைத்திருந்தால் பொதுமக்கள், தங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது காவல்துறையைத் தொடர்புகொள்ள 100 என்ற எண்ணை டயல் செய்ய  வேண்டாம். இந்தச் செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் போதும். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்று சம்பவ இடத்துக்குக் காவல்துறை ரோந்து வாகனம் விரைந்து வரும். சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற ஆப்கள் அவர்களுக்கு அவசர காலங்களில் உதவிகரமாக இருக்கும். பெண்கள் அல்லது வயது முதியவர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும்போது தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் காவலன் SOS செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும். உடனடியாக ஜி.பி.எஸ். மூலம் நாம் இருக்கும் இடத்தை காவல்துறை அறிந்துகொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்த பிறகு, அப்ளிகேஷனை ஓபன் செய்தால், பயனாளர்களின் வசதிக்கேற்ப ஆங்கிலம் / தமிழ் என்று இரு மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மொழியைத் தேர்வு செய்த பிறகு, ரிஜிஸ்டர் என்ற பட்டனை அழுத்த வேண்டும். ரிஜிஸ்டிரேஷன் (registration) என்ற பக்கத்தில், பயனாளர்கள் தங்கள் அலைபேசி எண், பெயர், மாற்று அலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பின் நெக்ஸ்ட் (NEXT) பட்டனை அழுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து, பயனாளர் முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்து சைன் அப் (sign up) என்ற பச்சை நிற பட்டனை அழுத்தினால் காவலன் செயலி பயன்படுத்தத் தயாராகி விடும். பயனாளர்கள் ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது. பிறகு செயலியை எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். செயலியில், பயனாளர்கள் ஆபத்தில் இருக்கும் போது மூன்று நபர்களுக்குத் தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் வசதியும் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குப் பிரச்னை ஏற்படும் போது, அவசரத்தில் காவல்துறையை அழைப்பதற்குச் செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் SOS என்ற பட்டனை ஒரு முறை தொட்டாலே அழைப்பவரின் இருப்பிடம் ஜிபிஎஸ் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று விடும்.
அழைப்பவரை உடனடியாக திரும்ப அழைக்கும் வசதி காவல் கட்டுப்பாட்டறையில் உள்ளது. மேலும், அழைப்பவரின் அந்த நேர இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் ரியல்டைம் டிராக்கிங் வசதியும் உள்ளது. அழைப்பவரின் இருப்பிடத் தகவல் மற்றும் வரைபடம் இந்தச் செயலியில், பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்குத் தானாகவே பகிரப்படும். காவலன் Kavalan SOS app பட்டனைத் தொட்டவுடன் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து அலைபேசி கேமரா தானாகவே 15 விநாடிகளில் ஒலி-ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பிவிடும். அதிர்வுத் தூண்டல் (shake trigger) வசதியின் மூலமும் தொடர்பு கொள்ளலாம். இணைய இணைப்பு இல்லாத (Data not available) இடங்களிலும் கூட தானியங்கி எச்சரிக்கை (Auto SMS Alert) மூலமாகச் செயல்படும். 

Kavalan SOS app செயலி மிகவும் அவசர நிலையில் இருக்கும் பெண்கள், முதியோர்கள் மற்றும் குடிமக்களின், பாதுகாப்புச் செயலியாக 24 மணி நேரமும் இயங்குவதால் இந்த வசதியை தங்கள் கைபேசிகளில் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகரக் காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்திவருகிறது.
காவலன் SOS செயலியைப் பெற: 
ஆண்ட்ராய்டு: https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kavalansos
ஐ-போன்களில் காவலன் செயலியைப் பெற: https://itunes.apple.com/in/app/kavalan-sos/id1388361252?mt=8
மேலே குறிப்பிட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி, ஸ்மார்ட் போன்களில் காவலன் SOS செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கசப்பு முத்து:
எங்கள் பொறியாளர் நேற்று தாமதமாக வந்தார். ஒரு துக்கத்துக்கு போய் வந்ததாகச் சொன்னார். இறந்தது அவர் நண்பராம். நல்ல வேலையிலிருந்தவர். மனைவி, ஒரு மகன் இருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்தே மதுவிற்கு அடிமையானவர். உற்றவர்களின் புத்திமதி, தனக்கிருக்கும் பொறுப்புகள், உடல் பாதிப்புகள் எதுவுமே அவரை பயமுறுத்தவோ, திருத்தவோ முடியவில்லையாம். குடல்கள் நிறைய இடங்களில் வெட்டப்பட்டும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லையாம். லாக் டவுன் நேரத்தில் மது கிடைக்காமல் தவித்து விட்டாராம். டாஸ்மாக் மீண்டும் திறந்தவுடன் முதல் ஆளாய் சென்று வாங்கிக் குடித்திருக்கிறார். ரத்தம் வாயிலிருந்து வழிய ஆரம்பித்ததும் ‘ எப்படியும் சாகத்தான் போகிறேன். இன்னும் கொஞ்சம் குடித்து விட்டு சாகிறேன்’ என்று அனைவரையும் எதிர்த்துப்பேசி, கெஞ்சி, மேலும் குடித்து இரத்தம் வழிய வழிய இறந்து போனாராம். எப்படிப்பட்ட குடிகாரனாக இருந்தாலும் மரணம் அருகில் வந்து விட்டது தெரிந்தால் ஒரு பயம் வந்து விடும். அதைக்கண்டு கூட பயப்படாத மது வெறியர்கள் பற்றி என்ன சொல்வதென்று புரியவில்லை!
இசை முத்து
இந்தப் பாட்டு கொஞ்ச நாட்களாக மனதிலேயே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எங்கே சென்றாலும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. சிலர் இந்தப்பாட்டை முன்னாலேயே கேட்டிருக்கலாம். திரைப்படப்பாடல்தான் என்றாலும் முதிர்ச்சியான ஒரு இளைஞர் பாடும்போது அது வேறு விதம். அதையே ஒரு சிறிய குழந்தை பாடும்போது மெய் சிலிர்க்கிறது. கண்ணீர் கசிகிறது!! அந்தப்பாடல் வரிகள் அற்புதம். இந்த மாதிரி வரிகளை ஒரு அருமையான இசையில் இனிமையான குரலில் கேட்கும்போது, மனம் மயங்கி விடுகிறது. அதை விட்டு வெளியில் வந்தாலும் மனது அதை விட்டு வெளியில் வர மறுக்கிறது.
நீங்களும் கேட்டுப்பாருங்கள்.

26 comments:

  1. அனைத்து முத்துக்களுமே அருமை...

    எனக்குப்பிடித்த இசை முத்து மிகவும் அருமை...

    ReplyDelete
  2. கசப்பு முத்தை படித்து மனம் வேதனை அடைந்தேன். இப்படியும் குடி மேல் மோகமா! தன் உயிரை கொடுத்து விட்டரே விலையாக அவர் குடும்பம் எவ்வளவு வேதனை அடைவார்கள் தன் இழப்பால் என்று உணரவில்லையே .



    மற்ற அனைத்து முத்தும் அருமை. பாடல் கேட்டேன். சிறு வயதில் எவ்வளவு திறமை

    வாழ்த்துக்கள் சிறுவனுக்கு.

    ReplyDelete
  3. அழகான முத்துக்களை கோர்த்து அருமையான  மாலையாக்கி விட்டீர்கள். டெனித் ஆதித்யாவின் சாதனைகள் மலைக்க வைக்கின்றன. கசப்பு முத்து மன வருத்தம் அளிக்கிறது.  காவலன் செயலி பற்றி ஏற்கனவே படித்திருக்கிறோம். 'உயிரும் நீயே...' ஒரு அருமையான பாடல். முதிர்ந்த குரலில் கேட்கும் பொழுது மிகவும் நன்றாக இருக்கும். முதிராத குரல் என்னும் ஒரு குறையாத தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது. அருமை!  

    ReplyDelete
  4. முத்து சிதறலில் பல முத்துக்கள்

    ReplyDelete
  5. அனைத்து முத்துக்களும் அருமை. அந்தப் பையன் ரொம்பவே அசத்துகிறார். குடி காரர்களைத் திருத்தவே முடியாது போலும். எஸ் ஓ எஸ் ஆப் மிகவும் பயனுள்ளதாகத் தெரிகிறது

    துளசிதரன்

    ReplyDelete
  6. அனைத்து முத்துக்களும் அருமை. அந்தப் பையன் ரொம்பவே அசத்துகிறார். குடி காரர்களைத் திருத்தவே முடியாது போலும். எஸ் ஓ எஸ் ஆப் மிகவும் பயனுள்ளதாகத் தெரிகிறது

    துளசிதரன்

    ReplyDelete
  7. மனோ அக்கா எல்லா முத்துகள்ளும் அருமை இசை முத்தை ரொம்பவே ரசித்தேன். குடி பற்றி என்ன சொல்ல? ம்ம்ம்.

    கீதா

    ReplyDelete
  8. ஆதித்யா அசத்துகிறார். காவலன் sos அவசியமான தகவல்.

    /தனக்கிருக்கும் பொறுப்புகள், உடல் பாதிப்புகள் எதுவுமே அவரை பயமுறுத்தவோ, திருத்தவோ முடியவில்லையாம்./ சோகம். இவரைப் போலவே முடிவைத் தேடிக் கொள்கிறார்கள் பலரும்:(.

    இசை முத்து இனிமை.

    ReplyDelete
  9. அத்தனை முத்துக்களும் சிறப்பு, முதல் முத்து உண்மையில் அசரச் செய்கிறது, நம்ப முடியவில்லை.

    மதுக்குடித்தே இறந்தவர்.. என்ன சொல்வது இப்படியும் மனிதர்கள், இவர்கள் எதுக்கு திருமணம் முடிக்கின்றனர், மதுவுடனேயே வாழ்ந்திருக்கலாமே.

    ReplyDelete
  10. கடுப்பேற்றும் கசப்பு முத்து.  முதல் செய்தியை எங்கள் பாசிட்டிவ் பகுதிக்கு எடுத்துக் கொள்ளலாம்.  பாடல் பிறகு கேட்கவேண்டும்.

    ReplyDelete
  11. முத்துக்கள் அருமை
    டெனித் ஆதித்யா போற்றுதலுக்கு உரிவர்

    ReplyDelete
  12. கசப்பு முத்து - என்ன சொல்ல... இப்படியும் சிலர். மதுவுக்கு அடிமை ஆகி என்னவெல்லாம் செய்கிறார்கள்.

    மற்ற முத்துகள் சிறப்பு.

    ReplyDelete
  13. வருகைக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  14. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு! பாராட்டுக்களுக்கும் கூட!

    ReplyDelete
  15. விரிவான கருத்துரைக்கும் இனிய பாராட்டுரைக்கும் அன்பு நன்றி பானுமதி வெங்க‌கடேஸ்வரன்!

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மதுரைத்தமிழன்!

    ReplyDelete
  17. ரசித்து கருத்துரை சொன்னதற்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி துளசிதரன்!

    ReplyDelete
  18. இசையை ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி கீதா!

    ReplyDelete
  19. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  20. அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி அதிரா!

    ReplyDelete
  21. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    ReplyDelete
  22. பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!

    ReplyDelete
  23. பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  24. கசப்பு முத்தை தவிர்த்து ஏனையவை சிறப்பு.

    ReplyDelete
  25. மதுவெறியர் மனம் வருந்தவைத்தார்.

    குட்டிப் பையனின் பல பாட்டுக்களையும் சென்றவாரம் கேட்டு ரசித்தேன்.

    இளம் சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்.

    காவலன் செயலி பற்றிய விவரம் விரிவாக இருந்தது. தொகுப்பு அருமை.

    ReplyDelete
  26. அனைத்து முத்துகளும் அருமை
    தொடருங்கள்

    ReplyDelete