Thursday, 24 October 2019

45 வருடங்களுக்கு முன்!

இது நாங்கள் 1975ல் மும்பையை அடுத்த பன்வேல் என்னும் கிராமத்திலிருந்த போது வரைந்தது. கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்!!! திருமணமான புதிது. அங்கு தான் ஹிந்தி, மராத்தி மொழிகள் பழக்கமாயின!

ஹிந்தி திரைப்படங்கள் புரிந்து ரசிக்க ஆரம்பித்த காலம். பக்கத்து வீடு கேரளத்தினர். எதிர் வீடு பீஹாரைச்சேர்ந்த குடும்பம். முன் மதிய நேரங்களில் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போய் விடுவார்கள். அவர்கள் வீட்டில் தான் சப்பாத்தி செய்ய கற்றுக்கொண்டேன். தினமும் சப்பாத்தி தானென்பதால் அது அவர்களுக்கு அனாயசமாக செய்ய வரும். நிறைய கோதுமை மாவை ஒரு பெரிய கல்லில் கொட்டி நடுவில் ஒரு பள்ள‌ம் பறித்து உப்பும் தண்ணீரும் ஊற்றி ஒரு நீளமான கட்டையால் அந்த காலத்தில் குளத்தில் குளிக்கும்போது துணிகளை அடித்து துவைப்பது போல அந்த கட்டையால் மாவை அடிப்பார்கள். அந்த மாவு அப்படியே திரண்டு உப்பி வரும். அதில் போடும் சப்பாத்தியோ பூரி போல உப்பி வரும். தொட்டுக்கொள்ள நெத்திலி மீன் கறி செய்வார்கள். அதையும் கற்றுக்கொண்டேன். சமையலில் அங்கே தான் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. சற்று தள்ளி மராத்தி குடும்பம் இருந்தது. அங்கே இனிப்பு சாதம், பேடா என்று கற்றேன். சமையலுக்கு எல்லைகள் ஏது?



இது அப்போது வெளி வந்து கொண்டிருந்த ஃபிலிம் ஃபேர் ஒன்றில் வெளியாகியிருந்த புகைப்படத்தைப்பார்த்து வரைந்தேன். பென்சில் ஓவியம். 

18 comments:

  1. ஓ நீங்க வரைந்ததோ மனோ அக்கா.. சூப்பராக இருக்குது.

    ReplyDelete
  2. ராஜேஸ் கன்னா, சர்மிளாடாகூர் 'ஆராதனா 'படம் இல்லையா?

    நன்றாக வரைந்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. நீங்கள் வரைந்த படம் அருமையாக வந்திருக்கிறது நானும் உங்களை போல புத்தகங்களை பார்த்து படம் வரைவேன் ஆனால் அப்படி வரைவதை விட்டு 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது ஹும்ம்

    ReplyDelete
  4. இனிய நினைவுகளும் ,அழகான படமும் ....

    ReplyDelete
  5. அழகா வரைந்திருக்கிறீங்க மனோக்கா. மறக்கமுடியா இனிமையான நினைவுகள் கூடவே..

    ReplyDelete
  6. இனிய தீபாவளி வாழ்த்துகள் அம்மா...
    ஓவியம் அழகு

    ReplyDelete
  7. பழைய நினைவுகள்
    அடிக்கடி உள்ளத்தில் உருளுமே!

    ReplyDelete
  8. நான் வரைந்த ஓவியம் தான் அதிரா! பாராட்டுக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  9. சரியாகச் சொல்லி விட்டீர்கள் கோமதி! ஆராதனா தான்! பாராட்டிற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  10. பாராட்டுக்கு அன்பு நன்றி மதுரைத்தமிழன்! ஏன் வரைவதை நிறுத்தி விட்டீர்கள்?

    ReplyDelete
  11. பாராட்டுடன் கூடிய கருத்துரைக்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!

    ReplyDelete
  12. மனமார்ந்த பாராட்டுக்கு அன்பு நன்றி பிரியசகி! உண்மை தான்! கூடவே இனிமையான நினைவுகளும் இருக்கின்றன!

    ReplyDelete
  13. தீபாவளி வாழ்த்துக்களுக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி ஆச்சி!

    ReplyDelete
  14. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

    ReplyDelete
  15. அழகாக வரைந்துள்ளீர்கள் பாராட்டுகள்.

    ReplyDelete
  16. படம் மிக மிக அருமை! பாராட்டுகள்! இனிய நினைவு கூரத்தக்க நினைவுகள்.

    துளசிதரன்

    மனோ அக்கா ஹையோ படம் செமையா இருக்கு!! என்ன அழகா வரைஞ்சுருக்கீங்க. நிறைய கற்கும் அனுபவங்களும் இல்லையாக்கா. நானும் ஒவ்வொரு ஊர் மாற மாற ஒவ்வொரு இடத்திலும் நிறைய நட்புகள், மற்றும் அவங்க சமையல் கலைகள் என்று நிறைய கற்றேன்.

    நானும் ஒருகாலத்தில் பார்த்து படம் வரைந்துகொண்டிருந்தேன். அது விட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டது.

    செமையா வரைஞ்சுருக்கீங்க பாராட்டுகள் மனோ அக்கா

    கீதா

    ReplyDelete
  17. இனிய பாராட்டுக்கு அன்பு நன்றி மாதேவி!

    ReplyDelete
  18. மனமார்ந்த பாராட்டிற்கு அன்பு நன்றி துளசிதரன்!
    மனம் நிறைந்த பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா!

    ReplyDelete