Wednesday, 22 May 2019

வியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்!!!


இன்று காலை நகரின் முக்கியமான இரு இடங்க‌ளுக்கு வழிகாட்டி கூட்டிச் சென்றார். 

முதலாவது:

Ho Chi Minh Central Post Office:




பிரான்ஸ்  நாட்டு ஆதிக்கத்தின்போது ஹோசிமின் நகரில் [ சைகோனில் ] இந்த தபால் நிலையம் 1981ல் கட்டப்பட்டது. ஈஃபில் டவரைக்கட்டிய Gustave Eiffel என்ற கலைஞரே இதையும் நிர்மாணித்தார்.  பிரான்ஸ் நாட்டு கட்டிடக்கலையின் அழகு இதிலும் சிறப்பாகத்தெரியும்.

போஸ்ட் ஆபீஸ் உட்புறம்
இரண்டாவது:

Saigon Notre Dame Cathedral:

நகரின் Paris Squareல் இதுவுமே வியட்நாம் பிரான்ஸ்  நாட்டு ஆதிக்கத்தின் கீழ் இருந்த சமயம் 1980களின் இறுதியில் கட்டப்பட்டது. 


வர்ஜின் மேரி சிலையுடன்


புத்த மதத்தை முழுமையாக பின்பற்றும் வியட்நாம் நாட்டில் கிறிஸ்து மதத்தை ஞாபகப்படுத்தும் சில சின்னங்களில் இதுவும் ஒன்று. Saigon Notre Dame Cathedral என்றழைக்கப்படுகிறது.60 அடி உயரமுள்ள இந்த கதீட்ரல் பிரெஞ்சு ரோமானிய கலையழகுடன் ஆறு வெண்கல மணிகளுடன் திகழ்கிறது. மிகப்பெரிய வர்ஜின் மேரி சிலையும் அதற்கு முன்னால் நிறுவப்பட்டிருக்கிறது. 1975ல் இந்த சிலை கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததாகச் சொல்லப்படுகிறது.

மாலை சில கடைகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்து வந்தோம். மறு நாள் காலை வியட்நாமிலிருந்து கிளம்பி 2 மணி நேர பயணத்தில் சிங்கப்பூர் சென்று அங்கே 4 நாட்கள் தங்கி பின் திருச்சி சென்ற‌டைந்தோம். சிங்கப்பூரை ஏற்கனவே 2 முறை சுற்றிப்பார்த்திருப்பதால் இந்த முறை அவ்வளவாக சுற்றிப்பார்க்கவில்லை. உறவினர்கள் வீடு சென்று வந்தோம். இந்தப்பயணத்தில் பல மறக்க முடியாத அனுபவங்கள்! 

உறவினர் இல்லத்தில் வற்றல் குழம்பு சாப்பிட்ட பிறகு தான் ஜன்ம‌ம் சாபல்யமானது போலிருந்தது. 

சில நாட்கள் கழித்து பயண அனுபவங்களைப்பகிர்கிறேன்.

15 comments:

  1. மிக அழகாகப் படங்கள் எடுத்திருக்கிறீங்க மனோ அக்கா. டொட்டடாம் கோயில் அங்கும் இருக்கோ.. நாம் ஃபிரான்ஸ் இல் இருப்பது[இருந்ததை] போய்ப் பார்த்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. அழகிய காட்சிகள்...

    ReplyDelete
  3. படைகள் அனைத்தும் அழகோ அழகு....

    ReplyDelete
  4. படங்களும் பகிர்வும் அருமை

    ReplyDelete
  5. படங்களும் பகிர்வும் அருமை. பிரமாண்டமான தபால் நிலையம், பெங்களூர், மும்பை தலைமைத் தபால் நிலையங்களை நினைவூட்டியது.

    ReplyDelete
  6. அருமையான ரசிக்கும்படியான உலா.

    ReplyDelete
  7. கண்டு கொண்டோம்.நன்றி.

    ReplyDelete
  8. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    ReplyDelete
  9. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி அதிரா!

    ReplyDelete
  10. இனிய பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி அனுராதா பிரேம்குமார்!!

    ReplyDelete
  11. இனிய பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி தனபாலன்!

    ReplyDelete
  12. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராமலட்சுமி!

    ReplyDelete
  13. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  14. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மாதேவி!

    ReplyDelete
  15. படங்கள் அனைத்தும் மிக மிக அழகாக இருக்கின்றன.

    தகவல்களும் அறிந்து கொண்டோம்.

    துளசிதரன், கீதா

    கீதா: உறவினர் இல்லத்தில் வற்றல் குழம்பு சாப்பிட்ட பிறகு தான் ஜன்ம‌ம் சாபல்யமானது போலிருந்தது. // ஹா ஹா ஹா ஹா.. தென் கிழக்கு நாடுகளி இது ஒரு பிரச்சனை இல்லையா? ஆனால் நீங்கள் அங்குள்ள உணவுவகைகளையும் ருசித்து எஞ்சாய் செய்து செய்யவும் முயன்றிருப்பீர்களே அக்கா உங்கள் உணவகத்திற்குப் பயன்படுமே இல்லையோ?!!

    ReplyDelete