Wednesday, 11 May 2016

பூம்புகாரின் சிலப்பதிகார கலைக்கூடம்!!!

ரொம்ப நாட்களுக்கு முன் பூம்புகார் பற்றி படித்ததிலிருந்து அங்கே சென்று வ‌ர வேண்டுமென்ற ஆசை அவ்வப்போது வந்து போகும். ஆட்சி மாறுதலால் அதற்கப்புறம் பூம்புகார் கவனிக்கப்படாமல் பாழாகி விட்டது என்று கேள்விப்பட்டதும் அந்த ஆசை பின்னுக்குப்போய் விட்டது. ச‌மீபத்தில் தான் ஒரு விசேஷ நாளில் எங்கு செல்லலாம் என்ற தேடுதலில் பூம்புகார் பக்கம் என் கணவர் ஓட்டுப்போடவே தயக்கத்தை விரட்டி சம்மதித்தேன். பூம்புகார் செல்வதற்கு முன் அதைப்பற்றி சில வரிகள்.....
 


பண்டைய காலத்தில் சோழப்பேரரசின் தலைநகராக விளங்கிய பூம்புகாருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரும் உண்டு. பூம்புகார் நாகை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் கருவி என்ற இடத்திலிருந்து ஆறு கற்கள் தொலைவில் உள்ளது. 11500 வருடங்களுக்கு முன்பே தோன்றிய பழமையும் உலக வர்த்தக வர்த்தகத்திற்கான சந்தையையும் மகதம், அவந்தி, மராட்டா நாட்டு கைவினைக்கலைஞர்களின் கலைக்கூடங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த சிறப்புடையது பூம்புகார். இதன் பெருமை மணிமேகலை, சிலப்பதிகாரம், பட்டிணப்பாலை போன்ற நூல்களில் மட்டுமல்ல, வெளிநாட்டிலிருந்து வந்த தாலமியின் குறிப்புகளிலும் பிராகிருத மொழியிலிருக்கும் புத்தர் பற்றிய கதைகளிலும்கூட பாடப்பட்டிருக்கிறது. இதன் முக்கிய சிறப்பு காவிரி நதி இங்கு தான் கடலில் கலக்கிறது. ஹரப்பா, மொகஞ்சாதோரோ நாகரீகத்தைக்காட்டிலும் தற்போதைய ஈராக்கிலுள்ள மெசபடோமியா பகுதியிலிருந்த சுமேரியர்கள் நாகரீகத்தைக்காட்டிலும் தொன்மையானதும் சிறப்பானதுமானது பூம்புகார் நாகரிகம்!   

இத்தைகைய சிறப்பு வாய்ந்த பூம்புகாரில் 1973ல் சிலப்பதிகார கலைக்கூடம் என்ற பெயரால் ஒரு நினைவுக்கூடம் எழுப்பப்பட்டுள்ளது.  மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி மாணவர்களால் வடிக்கப்பட்டது. மிகப்பெரும் துறைமுகமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம் நகரத்தின் 7 தெருக்களை நினைவுப்படுத்தும் விதமாக 7 அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடனும், கலைநயத்துடனும் இந்த சிலப்பதிகாரக் கலைக்கூடம் உருவாக்கப் பட்டிருக்கிறது. இங்கே கற்சிற்பங்களாக உருவாக்கி வைத்துள்ளார்கள்! அதைத்தான் பார்த்து ரசிக்க முடிவெடுத்தோம்.
 
மயிலாடுதுறையிலிருந்து 22 கிலோ மீட்டர் பயணம் சென்று பூம்புகாரை ஒரு நாள் பகல் 11 மணியளவில் சென்றடைந்தோம். சிலப்பதிகார கலைக்கூட வாயில், மாதவி தோரண வாயில், மாதவி தோரண வாயில், கண்ணகி தோரண வாயில்கள் வழியே நகருக்குள் சென்றோம். அழகுற நிர்மாணிக்கப்பட்ட இந்த வாயில்கள் எல்லாம் இன்றைய சுவரொட்டிகளாலும் விளம்பரங்களாலும் பொலிவிழந்து கிடந்தன. வாயில்களின் அழகை நீங்களே
பாருங்கள்!   
 


 








சிலப்பதிகாரக்கூட நுழைவாயில். கதவில் சிலம்பு!!






 



கலைக்கூடத்தின் உள்ளே கோவலன் கண்ணகியின் வாழ்க்கையை முழுவதுமாக சிற்பங்களாக செதுக்கியிருக்கிறார்கள். அதில் ஒன்று இந்த சிலை! இது கோவலன் கண்ணகியின் திருமண அறிவிப்பை சொல்லும் சிற்பம்! கீழே உள்ளது அத்தனை சிற்பங்களையும் அடக்கியுள்ள‌ சிற்பக்கூடம்!


வெளியே வந்து கடலைப்பார்க்க நடந்து சென்றோம். வழியெல்லாம் குப்பைகள்! குப்பைகளுக்கு நடுவே சிற்றுண்டி கடைகள்! அதையும் தாண்டிச் சென்றால் கருவாடு விற்கும் கடைகள் கடல் வரை நீண்டிருந்தன!


நன்றி கூகிள்:
நாசியில் மோதும் நாற்றம் கடற்காற்றில் எங்கும் பரவியிருக்க மனது சொல்லொணாத வேதையில் ஆழ்ந்தது! முத்தும், பவளமும், பட்டும், ரத்தினமும் கடைவிரிக்கப்பட்ட இடத்தில் கருவாடும், மீனும் குப்பைகளும்!!
பெருகியிருந்த கூட்டம் காரணமாய் கடற்கரையை கிட்டத்தில் பார்க்க முடியவில்லை.



கலங்கரை விளக்கத்தைப் பார்த்து விட்டு அதே குப்பைகள் ந‌டுவே திரும்பி நடந்தோம் !
 

28 comments:

  1. அருமையான பகிர்வு.
    போய் பார்க்க வேண்டிய
    இடங்கள்....
    பகிர்வுக்கு நன்றிகள்...
    ஒவ்வொரு படங்களின்
    கீழும் எது எதுவென்று
    எழுதியிருந்தால் இன்னும்
    தெரிந்து கொள்ள ஆவலை தூண்டும்...

    ReplyDelete
  2. பல ஆண்டுகளுக்கு முன் சென்றிருக்கின்றேன்..

    அரசியல் சித்து விளையாடல்களுக்குள் சிக்கிக் கொண்ட இடங்களுள் -
    பூம்புகாரும் சிலப்பதிகாரக் கலைக்கூடமும் ஒன்று!..

    பல மண்டபங்கள் - அப்போதே குடிகாரர்களின் ஆக்ரமிப்புக்கு உள்ளாகியிருந்தன..

    பதிவு மழைய நினைவுகளைத் தூண்டி விட்டது.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு மேம். நான் இதை எழுத நினைத்து பல நாட்களாக ஒத்திப்போட்டு வந்துள்ளேன். இனி உங்கள் இடுகையின் இணைப்பைப் பகிர்ந்து ஃபோட்டோக்கள் மட்டும் போட்டால் போதும் என நினைக்கிறேன். :)

    ReplyDelete
  4. நம் நாட்டில் பல சுற்றுலாத் தலங்களின் நிலை இது தான். சரியான பராமரிப்பு இல்லை.... நானும் பூம்புகார் செல்ல நினைத்திருக்கிறேன். எப்போது என்பது தான் தெரியவில்லை.

    ReplyDelete
  5. அழகிய புகைப்படங்கள். நானும் இதுவரை பார்த்ததில்லை. இதன் அருகிலேயேதான் எங்கள் குலதெய்வம் கோவில் உள்ளது. அங்கு போய்க்கூட 19 வருடங்களாகி விட்டன. ஒருமுறை சன்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  6. நாங்கள் மயிலாடுதுறையை விட்டு வந்தவுடன் அந்த பக்கம் வந்து இருக்கிறிரீகள்.
    1973, 1974 லில் நன்றாக இருந்தது பூம்புகார் கலைக்கூடம். இந்திரவிழா நடக்கும்.
    பட்டினத்தார் திருவிழா நடக்கும். (பட்டினத்தார் அம்மாவை தகனம் செய்யும் காட்சி பூம்புகாரில் நடைபெறும்) பக்கத்தில் இருக்கும் பல்லவனிச்சரத்தில் பிள்ளை நிறுத்தல் விழா நடை பெறும்(பட்டினத்தார் குழந்தை மருதவாணருக்கு எடைக்கு எடை பொன் கொடுத்து வாங்கிய காட்சி நடத்திக் காட்டபடும்.) பூம்புகார் முன்பு எல்லாம் மிக அழகாய் இருக்கும். நெடுங்கல் மன்றம் ,பாவை மன்றம், இலஞ்சிமன்றம் எழுநிலை மாடம் எல்லாம் அழகாய் இருக்கும். கடல் இப்போது உள் வந்து விட்டதால் கற்களை போட்டு தடுத்து இருப்பதால் கடலின் அழகை பார்க்க முடியாது. கடலை பார்த்துக் கொண்டு இருக்கும் கண்ணகி சிற்பம் மிக அழகாய் இருக்கும். எங்கள் வீட்டுக்கு உறவினர் வரும் போதெல்லாம் அங்கு அழைத்து செல்வோம் கலைக்கூடத்திற்கு. இப்போது கவனிப்பு இல்லாமல் பாழ்பட்டு போனது வருத்தமே. தை அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்பாய் இருக்கும் பூம்புகார் கடற்கரை. ஆடி மாதம் காவிரியும், கடலும் சங்கமம் ஆகும் இடத்தில் நீராட கூட்டம் நிறைய வரும்.

    ReplyDelete
  7. கடந்த ஆண்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் சென்று வந்த நினைவலைகள்
    மீண்டும் நெஞ்சில் மோதுகின்றனசகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  8. படங்களும் தகவல்களும் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு அழகான புகைப்படங்களுடன்..நேரில் சென்று பார்க்கவேண்டிய இடம்..

    ReplyDelete
  10. பூம்புகாரில் பார்க்கவேண்டிய மிக முக்கியமான இடத்தை விட்டுவிட்டீர்களே. தமிழகத்தில் ஆயிரமாண்டு கால வரலாற்றைக் கொண்டிருக்கும் புத்த விகாரை இருந்தததற்கான சான்று தமிழகத்தில் பூம்புகாரில் மட்டுமே உள்ளது. நீங்கள் பார்த்த இடங்களுக்கு அருகேதான் இவ்விடம் உள்ளது. பரவாயில்லை. அடுத்த முறை செல்லும்போது பாருங்கள்.

    ReplyDelete
  11. படங்களும் வர்ணனையும் அருமை

    ReplyDelete
  12. நமது கலாச்சார பண்பாட்டு மையங்களை பாதுகாக்கும் முனைப்பே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறோம். மிகவும் கவலைக்குரிய விஷயம்.

    ReplyDelete
  13. மயிலாடுதுறை தான் என் மனைவியின் ஊர். இன்றுவரை பூம்புகார் சென்றதில்லை
    பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  14. அருமையான தகவல்
    சிறந்த பதிவு

    ReplyDelete
  15. பாராட்டிற்கு இனிய நன்றி அஜய்! பதிவிட்டுக்கொண்டிருக்கும்போது கணினியில் சிறிது பிரச்சினை. அதனால்தான் ஒவ்வொரு படத்திற்கும் கீழே சரியாக குறிப்பிட முடியவில்லை.

    ReplyDelete
  16. வருகைக்கும் தகவல்களுக்கும் இனிய நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

    ReplyDelete
  17. பாராட்டிற்கு அன்பு நன்றி தேனம்மை! என் இடுகையைப்பகிர்ந்து கொள்ள‌லாம்! உங்களின் புகைப்படங்களைக் காண ஆவலாயிருக்கிறேன்!

    ReplyDelete
  18. கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  19. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  20. நிறைய தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள் கோமதி! அன்பு நன்றி!

    ReplyDelete
  21. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  22. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  23. பாராட்டிற்கு இனிய நன்றி அருள்மொழி வர்மன்!

    ReplyDelete
  24. புத்த விஹார் பற்றி எனக்குத்தெரியவில்லை. அடுத்த முறை சென்றால் அவசியம் பார்க்க வேண்டும். தகவலுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  25. பாராட்டிற்கு இனிய நன்றி நாகேந்திரபாரதி!

    ReplyDelete
  26. கருத்துரைக்கு அன்பு நன்றி மோகன்ஜி!

    ReplyDelete
  27. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சிவகுமாரன்!

    ReplyDelete
  28. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

    ReplyDelete