Friday, 19 February 2016

அல் ஜுபைல் வளாகம் !!

இந்த முறை ஷார்ஜாவில் இருந்த போது கடந்த டிசம்பர் மாதம் கடல் வாழ் உயிரினங்கள் விற்க‌வும், காய்கறிகள், பழங்களுக்கெனவும் 195 மில்லியன் திர்ஹாம்ஸ் செலவில் ஒரு மிகப்பெரிய வளாகம் திறக்கப்பட்டது.[  திர்ஹாம் என்பது ஐக்கிய அரபுக்குடியரசின் நாணயத்தின் பெயர். ஒரு திர்ஹாம் தற்போதைய இந்திய ரூபாய்கள் ஏறக்குறைய பதினெட்டிற்கு சமமானது]  முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த  வளாகத்தின் பெயர் அல் ஜுபைல் ஸூக் என்பதாகும். இஸ்லாமிய கலாச்சார பாணியில் 37000 சதுர மீட்டர்களில் 370 கடைகளை தன்னுள் அடக்கி பரந்து விரிந்து மிக அழகாய் நிற்கிறது இந்த வளாகம்! கீழ்த்தளம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி பழங்கள், காய்கறிகளுக்கென்று 212 கடைகளை தன்னுள் அடக்கியுள்ளது. புலாலுக்கு மற்றொரு பகுதி 67 கடைகளையும், கடைசிப் பகுதி கடல் வாழ் உயிரினங்களுக்காக 91 கடைகளையும் கொண்டிருக்கிறது.
இந்த வளாகத்தை நீங்களும் கண்டு ரசியுங்கள்!! 

முகப்பு!
வளாகம் அருகே முகப்பு!
 
உள்ளே நுழைந்ததும்....


பழக்கடைகள்!!
மீன் கடைகள்!!




மீன்கள் வாங்கிய பின் அவற்றை சுத்தம் செய்ய பணம் கொடுத்து அதற்கான ரசீதை இங்கே கொடுத்தால் மீன்களை சுத்தம் செய்து தருவார்கள்!
மீன்களை சுத்தம் செய்யும் இடம்!!
காய்கறி கடைகள்!!
 

17 comments:

  1. புகைப்படங்கள் அனைத்தும் அருமை இது எந்த ஏரியாவில் ?

    ReplyDelete
  2. அல் ஜுபைல் வளாக முகப்பும், பழக்கடைகளும், காய்கறிக் கடைகளும் படத்தில் பார்க்கவே பளிச்சென்று ஜோராக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. பதிவும் படங்களும் நல்லா இருக்கு

    ReplyDelete
  4. பிரமிக்க வைக்கிறது......

    ReplyDelete
  5. வியந்தேன் சகோதரியாரே
    நமது ஊர் மீன்மார்க்கெட் பற்றி நினைத்தேன்
    என்றுதான் நம் நிலை மாறுமோ
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. ஷார்ஜாவில் பழைய மீன் மார்க்கெட் அருகே தான் இந்த புதிய வளாகம் திறக்கப்பட்டிருக்கிறது கில்லர்ஜி! வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  7. ரசித்துப் பாராட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபா;அகிருஷ்ணன்!

    ReplyDelete
  8. முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி !

    ReplyDelete
  9. அழகிய பின்னூட்டத்திற்கு இனிய நன்றி வெங்கட்!

    ReplyDelete
  10. உள்ளதை சுரண்டும் அரசியல்வாதிகள் உள்ள‌வரை நம் நாட்டின் பல இடங்களீன் தரம் எப்படி உயரும்? இந்தப் பொருமலும் ஏக்கமும் உங்களைப்போலவே எனக்கும் எப்போதும் இருக்கிறது சகோதரர் ஜெயக்குமார்! கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  11. சுத்தமும் பிரமாண்டமும்
    மலைக்க வைக்கிறது
    படத்துடன் விளக்கமும்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ( முன்பு ஒருமுறை ஒரு அருமையான
    படத்தைப் பதிவிட்டு அதைத் தங்கள்
    கடையின் முகப்பில் வைக்க இருப்பதாகச்
    சொன்ன ஞாபகம்.முடிந்தால்
    படத்துடன் கடையைப் பதிவிடுங்களேன் )

    ReplyDelete
  12. இவ்வளவு பெரிய வளாகம்... மிக அருமையான படங்கள்...
    அருமை அம்மா...

    ReplyDelete
  13. அழகான புகைப்படங்கள் அம்மா,ரசித்தேன்..

    ReplyDelete
  14. அழகான படங்கள்.. தனித் தன்மையுடன் கூடிய வணிக வளாகங்கள்..
    இத்தனை பெரிதாக இல்லாவிடினும் - தரமான வளாகங்கள் குவைத்திலும் உள்ளன..

    ReplyDelete
  15. படங்களைப் பார்க்கும்போதே அங்குள்ள சுத்தம், சுகாதாரத்திற்காகவே அங்குள்ள பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது.

    ReplyDelete
  16. எல்லா படங்களுமே அருமையா இருக்கு மனோக்கா.

    ReplyDelete
  17. ரசித்தேன். அருமை.

    ReplyDelete