Thursday, 31 December 2015

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப துன்பங்களும் மனக்கவலைகளும் விலகி புத்தாண்டில் அனைவருக்கும் நன்மைகளும் மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் அனைத்து செல்வங்களும் பல்கிப் பெருக

மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!




புத்தாண்டு தொடங்கிய இந்நாளில் அனைவருக்கும் ஒரு இனிப்பை வழங்குகிறேன். ஒரு மாறுதலுக்கு இந்த முறை ஒரு கேரளாத்து இனிப்பு.

பொதுவாய் கேரள மக்கள் தங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு நேந்திரம்பழத்தை அவித்து வெல்லம் கலந்து உண்ணக்கொடுப்பார்கள்.



நேந்திரன்பழம் அத்தனை சத்துக்கள் நிறைந்தது. நேந்திரம்பழ சிப்ஸ் அனைவருக்கும் தெரிந்தது தான்.




இந்த நேந்திரம்பழத்தில் குறுக்கே அரிந்து உள்ளே தேங்காய் வெல்லப்பூரணம் வைத்து மைதா மாவுக்கரைசலில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுப்பது பழம் பொரி என்ற இனிப்பு. இதை பலரும் பலவிதமாகச் செய்வார்கள்.

இப்போது நான் எழுதப்போவது நேந்திரம்பழ அல்வா பற்றி! இந்த அல்வாவின் தனி சிறப்பு இதை செய்த பிறகு ருசிக்கும்போது நேந்திரம்பழத்தினால் செய்தது என்பதை கண்டு பிடிக்க முடியாது என்பது தான். நேந்திரன் பழத்தை உபயோகித்து பலகாரங்கள் செய்யும்போது அவை பதமான பழங்களாக இருக்க வேண்டும் அதிகம் பழுத்திருந்தால் பலகாரங்கள் செய்வது நன்றாக வராது.




நேந்திரம்பழ அல்வா

தேவையானவை:

நேந்திரன் பழம்-           இரண்டு
சீனி-                                   4 மேசைக்கரண்டி
நெய்-                                 4 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல்-   கால் கப்
முந்திரிப்பருப்பு         - 10
ஏலப்பொடி-                    கால் ஸ்பூன்

செய்முறை:

நேந்திரன் பழங்களை தோலுரித்து நீட்ட வாக்கில் இரண்டாக கத்தியால் நறுக்கவும். உள்ளே கறுப்பாக உள்ள பகுதியை நீக்கி விட்டு பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி இந்த பழத்துண்டுகளைப்போட்டு சிறு தீயில் சிறிது நேரம் சமைக்கவும். அவை மசிந்து வரும்போது சீனியை சேர்த்துக் கிளறவும். பழம் நன்கு மசிந்து திரண்டு வரும். தேங்காய்த்துருவலையும் முந்திரிப்பருப்புகளையும் தனித்தனியே நெய்யில் வறுத்துக்கொட்டி, மீதி நெய்யையும் ஏலப்பொடியையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். அல்வாப்பதமாகத் திரண்டு வரும்போது தீயை அணைக்கவும். நெய் மணக்க மணக்க சுவையான அல்வா தயார்!!

49 comments:

  1. இனிய 2016 புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  2. வணக்கம்

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மிகவும் அருமை !

    வளர்பிறை வண்ணம் போலே
    ........வாழ்மனை சிறக்க! மக்கள்
    இளமையின் பூரிப் பாக
    .......எழிலுற நெஞ்சம் எல்லாம்
    அளவிலாச் செல்வம் சேர்த்தும்
    .......அறிவுடன் அன்பைச் கோர்த்தும்
    வளமுடன் வாழ்க வென்று
    .......வாஞ்சையாய் வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  4. ருசித்தேன், ரசித்தேன். மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    ReplyDelete
  5. சகோதரிக்கு நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. புத்தாண்டுச் சிறப்பு ரெஸிபி அருமை
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நேந்திரம்பழம் அவ்வளவாய் வாங்குவதோ, உபயோகிப்பதோ இல்லை! :))))

    கடையில் நேந்திரங்காய் சிப்ஸ் வாங்குவது உண்டு.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete

  9. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்







    ReplyDelete
  10. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்மா ...!

    ReplyDelete
  11. தங்களுக்கும் குடுமத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  12. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. வாவ்...

    ஊருக்குப் போகும்போது செய்து தரச்சொல்லி சாப்பிடவேண்டும்.


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாழ்க நலமுடன்..
    அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. படிக்கவே சுவையாக இருக்கு... உங்கள் குடும்பத்தினருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  17. சுவையான அல்வாவுடன் புத்தாண்டினை வரவேற்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! என் வலைத்தளத்திற்கு வந்து வாழ்த்து கூறியதற்கு எனது மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  18. வணக்கம் அக்கா!

    இனிப்போடு தந்த புத்தாண்டு வாழ்த்திற்கு மிக்க நன்றி!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மனோக்கா.

    ReplyDelete
  20. இனிப்போடு வாழ்த்து பரிமாறியமைக்கு நன்றி! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. இனிய புத்தாண்டு வாழ்த்தகள்.

    (வேதாவின் வலை)

    ReplyDelete
  22. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அல்வா சூப்பராக வந்திருக்கு அக்கா.

    ReplyDelete
  23. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ரூபன்!

    ReplyDelete
  24. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!!

    ReplyDelete
  25. இனிய வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சீராளன்!!

    ReplyDelete
  26. வலைத்தளம் வந்து பதிவினை ரசித்து எழுதியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  27. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் தமிழ் இள‌ங்கோ!!

    ReplyDelete
  28. வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  29. கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    ReplyDelete
  30. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  31. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  32. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி இனியா!

    ReplyDelete
  33. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

    ReplyDelete
  34. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சாரதா!

    ReplyDelete
  35. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி குமார்

    ReplyDelete
  36. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    நேந்திரம்பழ அல்வா நன்றாக இருக்கு.ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  37. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்
    எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
  38. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

    ReplyDelete
  39. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சொக்கன் சுப்ரமண்யம்!!

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள்ளுக்கும் கருத்துக்களுக்கும் அன்பு நன்றி எழில்!

    ReplyDelete
  41. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  42. இனிய வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ரஞ்சனி நாராயணன்!

    ReplyDelete
  43. அன்பார்ந்த வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி இளமதி!

    ReplyDelete
  44. வாழ்த்துக்களுக்கு அன்பார்ந்த நன்றி பிரியசகி!

    ReplyDelete
  45. அன்பார்ந்த வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  46. வாழ்த்துக்களுக்கு அன்பார்ந்த நன்றி வேதா!

    ReplyDelete
  47. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  48. அவசியம் அல்வாவை செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் ஷாமீ! வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  49. அழகிய வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சாமானிய்ன்!!

    ReplyDelete