Monday, 31 August 2015

முத்துக்குவியல்-38!!

மருத்துவ சமையல் முத்து:

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -:

மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.



ஒரு மருத்துவர் எனக்குச் சொல்லிக்கொடுத்ததை/செய்து கொடுத்ததை கீழே சமையல் குறிப்பாக பகிர்ந்திருக்கிறேன். இம்முறையில் செய்தால் சுவை அபாரமாக இருக்கும்!!

முடக்கற்றான் ரசம் செய்யும் முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஒரு கிராம்பு போட வேண்டும். கிராம்பு நுரைத்து வரும்போது 6 தம்ளர் தண்ணீர் ஊற்ற‌ வேண்டும். அரிந்த சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் அரை கப், அரிந்த தக்காளி ஒரு கப், நசுக்கிய இஞ்சி 1 ஸ்பூன், நசுக்கிய பூண்டிதழ்கள் 1 ஸ்பூன், புதினா இலைகள் சில, மல்லி இலைகள் சில, கறிவேப்பிலை ஒரு ஆர்க், ஒரு கை முடக்கற்றான் இலைகள் இவற்றைப் போட்டு கொதிக்க விடவும். உப்பு, மஞ்சள்தூள் போடவும். அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சோம்பு கரகரப்பாகப்பொடித்துச் சேர்க்கவும். நன்கு கொதித்து இலைகள் நிறம் மாறுகையில் தீயை நிறுத்து ரசத்தை வடிகட்டவும். இது மிகவும் சுவையாக இருக்கும்!!

உயர்ந்த முத்து:

இந்த‌ முத்துவிற்கு ஒரு சல்யூட்!




கெளசல்யா ராமசாமி திருமணமான 20 வயதில் கணவர் மூலம் எய்ட்ஸ் பரவி அதனால் வலிகளுக்கும் அல்லல்களுக்கும் ஆளானவார். தன்னை அலட்சியம் செய்த புகுந்த வீட்டுக்கெதிராக தன் நோயை வெளிப்படையாக அறிவித்து தன் உரிமைகளுக்காகப் போராடியவர். கணவரை விட்டு விலகி, நோயின் கடுமையால் கர்ப்பப்பையை நீக்கி, உயிர் வாழ மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காக தான் ப்ளஸ்டூவில் நர்ஸிங் படித்திருந்ததால் எய்ட்ஸ் குறித்த விழிப்புண‌ர்வுக்காக இயங்கிய அமைப்பில் சேர்ந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டவ‌ர். தான் பட்ட துன்பங்கள் மற்ற‌வர்கள் அனுபவிக்கக்கூடாது என்ற நினைப்பில் இவரைப்போல பாதிக்கப்பட்ட 3 பெண்களுடன் சேர்ந்து என்ற அமைப்பை நிறுவியவர். இந்தில் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்ட பெண்களுக்கான முதல் அமைப்பு இது. 20000 உறுப்பினர்கள் இயங்கிக்கொண்டிருக்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய அமைப்பும்கூட! எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்ட விதைவைகளூக்கான அரசு உதவிப்பணம் பெறும் வயது வ‌ரம்பை 45லிருந்து 18ஆகக் குறைக்கச் செய்தது, இந்தியா முழுவதும் எய்ட்ஸ் நோயாளிக்காக இலவச மருந்துகள் கிடைக்க‌ச் செய்தது போன்றவை இந்த அமைப்பின் சாதனைகள். இந்த அமைப்பிலுள்ள‌ பெண்மணிகளுக்காக வேலை வாய்ப்புக்கள் வாங்கித்தருவது, சட்ட ரீதியான சிக்கல்களைத்தீர்ப்பது, அவர்களுக்கான பயிற்சிகள் கொடுப்பது என சுறுசுறுப்பாக இயங்குகிறது இந்த அமைப்பு. இவர் இந்தியக் குடியரசுத்தலைவரால் சாதனைப்பெண்களுக்காக வழங்கப்ப‌டும் 'நாரி புரஸ்கார் விருது' வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.  ரீடர்ஸ் டைஜஸ்ட் வழங்கிய ' ஆசியாவிலேயே சிறந்த சமூக சேவகி விருது, என்று பத்துக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர்.

ரசித்த முத்து:

மறுபடியும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாட்டு. கூடவே பிடித்த, ரசித்த காட்சியும் கூட! ஜேசுதாசும் சித்ராவும்  மிகவும் அனுபவித்துப் பாடியிருக்கும் மிகவும் இனிமையான பாடல்! நீங்களும் ரசியுங்கள்!




ம‌ருத்துவ முத்து:

இதயத்தில் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்பால், இதயத்துக்கு செல்லும் ரத்தம் ஓட்டம் தடைபடுகிறது. இதனால் நெஞ்சுவலி, இதயம் பலவீன மடைதல் மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் ரத்தக் குழாய் அடைப்புக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்வதே தீர்வாக இருந்தது.

தற்போது அறுவை சிகிச்சையின்றி ஒரு புதிய தீர்வொன்று வந்துள்ள‌து. இந்த புதிய சிகிச்சை முறையின் மூலம் ரூ.80 லட்சத்தில் வாங் கப்பட்ட நவீன கருவியின் (Enhanced External Counter Pulsation - E.E.C.P) மூலமாக கால்களில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி இதயத்தை நோக்கி ரத்தம் செலுத்தப்படும். தினமும் ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து 35 நாட்கள் இவ்வாறு சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் ரத்தக்குழாய் அடைப்பை சுற்றி புதிதாக ரத்த நாளங்கள் உருவாகும். இந்த புதிய ரத்த நாளங்கள் மூலமாக இதயத்துக்கு சீராக ரத்தம் செல்லும். இதனால் நெஞ்சுவலி, இதய பலவீனம், மாரடைப்பு போன்ற அனைத்து பிரச்சினைகளும் தீரும். நோயாளி கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற வேண்டியதில்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 600 நோயாளிகளுக்கு இந்த புதிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் இந்த புதிய சிகிச்சை முறை தொடங்கப்படுகிறது. விரைவில் படிப்படியாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் புதிய சிகிச்சை முறை தொடங்கப் படும்.தனியார் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை, அரசு மருத்து வமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்படுகிறது.


 

28 comments:

  1. நிறைவான தகவல்கள்..

    மருத்துவ முத்து பயனுள்ளது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  2. உயர்ந்த முத்துவுக்கு உங்களுடன் நானும் ஒரு வணக்கம். பதிவுகளை ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எல்லா முத்துக்களும் அருமையான முத்துக்கள் அக்கா. ரசித்தமுத்தினை நானும் கேட்டு ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  4. உயர்ந்த முத்து கௌசல்யாவை ..போற்றுவோம் வாழ்த்தி பாராட்டுவோம்
    அனைத்தும் முத்தான தகவல்கள் .

    ReplyDelete
  5. முடக்கற்றான் ரசம் கேள்விப்பட்டது இல்லை! அனைத்தும் சிறந்த முத்துக்கள்! நன்றி!

    ReplyDelete

  6. தகவல்கள் அனைத்தும் நன்று பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  7. அனைத்தும் சிறந்த தகவல்கள். முத்துவுக்கு ஒரு சல்யூட் முடகத்தான் ரசம் பற்றி யறிந்தேன்.மிக்க நன்றி தகவலுக்கு ....!

    ReplyDelete
  8. சிறு வயதில் முடக்கற்றான் தோசை சாப்பிட்டிருக்கிறேன். அப்புறம் அந்தக் கீரையை நான் பார்க்கவே இல்லை!

    கௌசல்யா ராமசாமி - பாசிட்டிவெ பெண். பாராட்டுகள்.

    மருத்துவ முத்து நானும் படித்தேன்.

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  10. அத்தனையும் சொத்தெனக் கொள்ள்ளும் முத்துக்கள்!
    முடக்கொத்தான் அண்மையில் எனக்கு வந்த
    முடக்கு வாத நோய்க்கு நல்ல தீர்வுதரும் என்று சொல்லக் கேள்விப்பட்டேன்.
    ஆயினும் இங்கு வெளிநாட்டில் அதற்கு எங்கு போவேன் நான்?..

    அனைத்தும் அருமை அக்கா!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. முடக்கத்தான் ரசம் செய்முறை வியக்க வைத்தது. முற்றிலும் புதுமை! இத்தனை பொருட்களை பக்குவமாய் கலந்து செய்ய அமிர்தமாக மருந்தாக ஆகிவிடும் தான்!

    உயர்ந்த முத்து செய்தியில், விதைவைகளூக்கான அரசு உதவிப்பணம் பெறும் வயது வ‌ரம்பை 45லிருந்து 18ஆக என்ற வரியின் உள்ளர்த்தம் மனசை வலிக்கச் செய்தது. கெளசல்யாவுக்கு ஒரு ராயல் ஸல்யூட்!

    ரத்தக் குழாய் அடைப்புக்கான நவீன சிகிச்சை முறை அறியத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  12. ஒவ்வொரு முத்தும் அற்புதமான சொத்தை இருக்கிறதே!! அருமை மேடம்:)

    ReplyDelete
  13. அனைத்து முத்தும் அருமை அம்மா...

    ReplyDelete
  14. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

    ReplyDelete
  15. பதிவுகளை ரசித்ததற்கும் இனிய வாழ்த்துக்கள் அளித்ததற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  16. பதிவினை ரசித்ததற்கும் பாராட்டியதற்கும் இனிய நன்றி பிரியசகி!

    ReplyDelete
  17. வருகைக்கும் பாராட்டுடன் கூடிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ஏஞ்சலின்!

    ReplyDelete
  18. உங்கள் வலைத்தளம் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்புமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இது வலைப்பதிவர் விழா! வலைப்பதிவர்களே திரண்டு வாருங்கள்!
    http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.html

    ReplyDelete
  19. அழைப்பிற்கு அன்பு நன்றி கிரேஸ்!

    ReplyDelete
  20. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி தளிர் சுரேஷ்!

    ReplyDelete
  21. வருகைக்குக் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  22. விரிவான கருத்துரைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி இனியா!

    ReplyDelete
  23. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  24. இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  25. ஆற்றாமையை வெளிப்படுத்தும் வரிகள் மிக அழகு இளமதி! பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  26. இந்த முடக்கத்தான் ரசத்தை வாரம் இருமுறை செய்து அருந்துகிறேன் நிலாமகள்! வயிறு நலமாக இருக்கிறது அதனால்! விரிவான கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி!

    ReplyDelete
  27. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி மைதிலி கஸ்தூரி ரங்கன்!

    ReplyDelete
  28. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி குமார்!

    ReplyDelete