Tuesday, 23 September 2014

அவ்வையார்!!!

திருவள்ளுவருக்கு நிகராக கருதப்படுபவர் ஒளவையார். 'ஞானக் குறள்கள்' பலவற்றை எழுதியதுடன் அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் போன்ற அழியா முத்துக்களைத்தந்தவர் அவர்.
உண்மையில் நாடு அறிந்த ஒளவையார் மூவர். சமய ஒளவையார் இருவர்.
சங்க கால அவ்வையார் ஒருவர். இவர் பாலையைப்பாடியவர். அதியமானுடன் வாழ்ந்தவர். தகடூர் மன்னன் அதியமானிடம் பேரன்பு கொண்டவர். நீண்ட நாள் வாழும் வகையில் தான் பெற்ற நெல்லிக்கனியை தான் உண்ணாது அவ்வையார் நீண்ட நாள் வாழ வேன்டும் என்று அதியமான் தன் நண்பர் அவையாருக்குக்கொடுத்ததாக வரலாறு. இந்த நெல்லிக்கனியின் பெருமை அறியாது உண்டு, அதன் பின் அதன் பெருமை அறிந்து, அதிய‌மானைப்புகழ்ந்து அவ்வையார் பாடிய‌ பாடல் புறநானூற்றில் இடம் பெற்றிருக்கின்றது. இவர் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைப் பாடியுள்ளார். இவை சங்க கால இலக்கியமான எட்டுத்தொகையில் அடங்குகின்றன. போரொன்று நடவாதிருக்க, அதியமானின் விருப்பதிற்கிண‌ங்கி தொண்டைமானிடம் தூது சென்றவர். "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்'
என்று திருக்குறளை சிறப்பித்து பாடியது இவர்தான்
பக்தி நூல்களில் முதல் நூலாகக் கருதப்படும் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது அவ்வையார்.
சமய அவ்வையார் சோழ நாட்டினர் என்றாலும் பாண்டிய நாடு, சேர நாடு என்று எல்லா நாட்டினரும் வணங்கப்பட்டவராக  இருந்தார். மூதுரை, கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, நல்வழி போன்ற பல நூல்களை எழுதியவர்.



சங்க கால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர். இரண்டாவது அவ்வையார் பக்தர்களுடன் வாழ்ந்தவர். மூன்றாவது அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்து குழந்தைகளுக்காக பல நூல்களை இயற்றியவர். நான்காவது அவ்வையார் தான் 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று முருகன் வினவிய கதையில் இடம் பெற்றவர். இவர் தனிப்பாடல்கள் பலவற்றை எழுதியவர்.
நம் தமிழகத்தில் அவ்வைக்கு பல இடங்களில் கோவில்கள் உள்ளன. தஞ்சையை அடுத்துள்ள‌ திருவையாற்றில் உள்ள‌ அவ்வை கோவில் மிகவும் பிரசித்தமானது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துனை வேந்தர் அவ்வை நடராசன் அவர்கள் தலைமையில் அவ்வை கோட்டம் நிர்மாணித்து அதனுள் அவ்வை கோவிலையும் கட்டினர். கிழக்கு நோக்கி அமைந்துள்ள‌ இந்த ஆலயத்தில் கருவறையும் விமானமும் இணைந்து 15 அடியில் கம்பீரமாக நிற்கிறது. கருவறையில் இரண்டே காலடி உயரத்தில் வலது கையில் செங்கோலும் இடது கையில் ஓலைச்சுவடியும் கொண்டு கம்பீரமாக அவ்வையார் நிற்கிறார்.
நெல்லிக்கனி பிரசாதத்துடன் தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது.
அவ்வையை வணங்கினால் படிப்பு வரும், திருமண‌ம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் உலவுவதால் பெண்கள் கூட்டத்திற்கு பஞ்சமில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டம் திரண்டு வருகிறது.

தமிழகத்தில் நாகர்கோவில் நெல்லை சாலையில் முப்பந்தல் என்னும் இடத்திலும் நாகர்கோவிலிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள பூதப்பாண்டியிலும் நாகை மாவட்டம் துளசியாப்பட்டிணத்திலும் அவ்வை கோவில்கள் அமைந்துள்ள‌ன. குமரி மாவட்டத்தில் ஒரே தாலுகாவில் மூன்று கோயில்கள் இருக்கின்றன. இங்குள்ள தோவாளை தாலுகாவில் ஆண், பெண் பாகுபாடின்றிப் பலரது பெயரும்கூட அவ்வையார்தான்! அவ்வை மூதாட்டியை தெய்வமாக்கி, நோன்பிருந்து வணங்குகிற வழக்கம் நாஞ்சில் நாட்டில் இருந்து வருகிறது. இதற்கு அவ்வை நோன்பு என்று பெயர். ஆரல்வாய்மொழி - பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழாக்குடியை அடுத்து ஒரு அவ்வையார் அம்மன் கோயில் உள்ளது. இதற்கு நெல்லியடி அவ்வை என்று பெயர். அழகியபாண்டியபுரம் பக்கத்தில் உள்ள குறத்தியறை மலைச்சரிவில் உள்ள குடைவரைக் கோயிலையும் அந்தச் சுற்றுவட்டார மக்கள் அவ்வையார் அம்மன் கோயில் என்றே சொல்கிறார்கள். இந்தச் கோயில்களில் எல்லாம் ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் கூடி, கூழும் கொழுக்கட்டையும் படைத்து வழிபடுவார்கள்.

தமிழுக்குத்தொண்டு செய்த அவ்வையாரை நம் பெண்கள் இன்னும் தெய்வமாகப்பாவித்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

22 comments:

  1. வணக்கம்
    அம்மா

    அறிய முடியாத முத்துக்கள் ஔவையார் பற்றி மிகச்சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  2. ஔவையாரைப்பற்றி தெரியாத விசயங்கள் தெரிந்து கொண்டேன் அம்மா,,, நன்றி
    இன்று ஔவையாரைப்பற்றி மூன்று பதிவுகள் படித்து விட்டேன் என்னவென்று தெரியவில்லை
    அம்மா நானும் ஔவையாரைப்பற்றிய தலைப்பில் இன்று ஒருபதிவிட்டிருக்கிறேன் வருகை தரவேண்டுகிறேன்
    அன்புடன்
    கில்லர்ஜி
    அபுதாபி.

    ReplyDelete
  3. பல்வேறு ஒளவையார்கள் பற்றி பல செய்திகள் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. அவ்வை, பெண்ணின் பெருமை.

    தொடர்பதிவு தங்கள் வருகைக்காக எனது வலைப்பூவில் காத்திருக்கிறது.

    ReplyDelete
  5. ஔவை பற்றி அறியாத பல செய்திகள் அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. தமிழ் மூதாட்டி....
    ஔவை பற்றிய அழகான
    தவல்களுக்கு நன்றிகள் பல அம்மா...

    ReplyDelete
  7. அவ்வையார் பற்றிய சிறப்பான பல(தெரியாத)தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது.பகிர்விற்கு நன்றி மனோஅக்கா.

    ReplyDelete
  8. ஔவையாரைப் பற்றி இத்தனை விடயங்கள் இன்றுதான் அறிகிறேன் அக்கா!..

    மிக அருமையான பதிவும் பகிர்வும்!

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் அக்கா!

    ReplyDelete
  9. நல்ல பதிவு சகோதரி.
    இன்னும் பல தகவல்கள் நிறைந்தது. டாக்டர் தாயம்மாள் அறவாணன் எழுதிய
    ''...அவ்வையார் அன்று முதல் இன்று வரை..'' நூல். - 396 பக்கங்கள்.
    சுமார் 6-7 ஒளவையார் இருந்ததாக வாசித்த நிநைவு.
    முனைவர் தாயம்மாள்- (வேராசிரியர் தமிழ்த் துறைத் தலைவர்.
    அன்ளை தெரேசா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. ஔவையார் ஒருவரே அல்ல என்று அறிந்திருக்கிறேன். இவ்வளவு விளக்கமாக இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  11. ஓளவை பற்றி அருமையான பகிர்வு அம்மா...

    ReplyDelete
  12. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ரூபன்!!

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி! எனக்கும் நிறைய பேர் அவ்வையார் பற்றி பதிவு போட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது! விரைவில் உங்கள் பதிவிற்கு வருகிறேன்.

    ReplyDelete
  14. பாராட்டுக்களும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  15. கருத்துரைக்கு இனிய நன்றி நிலாமகள்!

    ReplyDelete
  16. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி மகேந்திரன்!

    ReplyDelete
  17. கருத்துரைக்கு இனிய நன்றி பிரியசகி!

    ReplyDelete
  18. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி இளமதி!!

    ReplyDelete
  19. பாராட்டிற்கு அன்பு நன்றி வேதா! அவ்வையார் பற்றிய கூடுதல் தகவலுக்கும் நன்றி!

    ReplyDelete
  20. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  21. பாராட்டிற்கு இனிய நன்றி குமார்!!

    ReplyDelete
  22. அவ்வை பற்றி பல தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

    ReplyDelete