Monday, 1 September 2014

முத்துக்குவியல்-30!!!

குறிப்பு முத்து:

அயர்ன் பாக்ஸில் பழுப்பு நிறக்கறை இருந்தால்:



ஈரத்துணி கொன்டு சோடா மாவை ஒத்தி எடுத்து அந்தக் கரையைத்துடைத்தால்  கறை முழுவதுமாக நீங்கி விடும்.

சிரிக்க வைத்த முத்து:

சமீபத்தில் படித்தது இது! எப்படியெல்லாம் யோசித்து எழுதி சிரிக்க வைக்கிறார்கள் என்று தோன்றினாலும் படித்ததும் புன்னகைக்க்காமல் இருக்க முடியவில்லை!! நீங்களும் படித்து ரசியுங்கள்!




நம்மோட ரெண்டு கண்களுக்கும் உள்ள உறவு உங்களுக்குத் தெரியுமா?
ரெண்டும் ஒண்ணை ஒண்ணு பாத்துக்காது.
ஆனால்
ரெண்டும் ஒன்றாகத்தான் பார்க்கும்.
ஒன்றாகத்தான் சிமிட்டும்.
ஒன்று சேர்ந்து தான் கண்ணீர் விடும்!ஒரேபக்கம் தான் பார்க்கும்.
ஒரே நேரம் தான் கண்கள் மூடித்தூங்கும்!
இரு கண்களுக்கும் உள்ள உறவு அந்த அளவு ஆழமாக வேரோடிய உறவு!
ஆனால்...
ஒரு பெண்ணைப்பார்த்தால் மட்டும் ஒண்ணு மட்டும் தான் கண்ணடிக்கும்.. மற்றது சும்மா இருக்கும்!
இதிலிருந்து ஒரு விஷயம் தெள்ளத்தெளிவா தெரியுது...

ஒரு பெண் நினைச்சா எந்த உறவையும் வெட்டி எறிஞ்சிட முடியும்!!


அபாய முத்து

:
சிகிரெட்டில் புற்று நோயை வரவழைக்கக்  கூடிய 43 காரணிகள் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது தற்போது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை காட்மியம், பூச்சிக்கொல்லி மருந்தான டி.பிடி தயாரிக்கப்பயன்படும் பென்சீன், கழிவறை சுத்தம் செய்யப்பயன்படும் அம்மோனியா, இறந்த உயிரினங்களை பாதுகாக்கப் பயன்படுகிற பார்மால்டிஹைடு, மற்றும் விஷ வாயுக்கள், காற்றை மாசுபடுத்தும் துகள்கள் போன்றவை உள்ளன!!

புகைப்பட முத்து:

நாங்கள் ஷார்ஜாவில் பல வருடங்களாக எங்கள் உண‌வகத்திற்காக காய்கறிகள் வாங்கிக்கொண்டிருக்கும் கடையிலிருந்து ஒரு விசேஷ நாளில் அதன் நிறுவனர் எங்கள் இல்லம் வந்து கொடுத்த பழ வகைகள் இவை!!

பழங்களுடன் என் கணவர்
வருத்தப்பட வைத்த முத்து:

சமீபத்தில் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து பேசிக்கொன்டிருந்த போது, பேச்சு இன்றைய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள், பள்ளிகளின் நடைமுறைகள், குழந்தைகளின் படிப்பு சுமைகள் பற்றி சரமாரியாய் அவரவர் தங்களின் அபிப்பிராயங்களை சொல்லிக்கொன்டிருந்தோம். பேச்சுக்கிடையே சமீப காலத்தில் ஒரு ஆசிரியை ஸ்கேலால் அடித்து ஒரு பையனுக்கு கண் பார்வை பிரச்சினை ஆனதைப்பற்றிய செய்தி விவாதமாக வந்தது. அப்போது அங்கு அமர்ந்திருந்த, அரசுப்பள்ளியில் பணி செய்கிற என் உறவுப்பெண்மணி  சொன்னார். ' மன அழுத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. நாங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் முன் அவர்களுக்கு கவுன்சிலிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாடத்தில் கவனம் இல்லாத ஒரு மாணவனை தினமும் பார்க்க நேர்ந்தால் அவனை தனியே கூப்பிட்டு விசாரித்து, அவன் மனதிலுள்ள‌தை வெளியே வரவழைத்து, ஆறுதல் அளித்து, உற்சாகத்தை ஏற்படுத்தி அவனை பாடங்கள் படிப்பதில் உற்சாகத்துடன் செயல்படுத்தும்போது நாங்கள் களைப்படைந்து விடுகிறோம். நாங்களும் காலை 4 மணிக்கு எழுந்து சமைந்து, வீட்டில் பெரியவர்களை கவனித்து, எத்தனையோ கிலோ மீட்டர்கள் பயணித்து பள்ளிக்கு வருகிறோம். என் சினேகிதி ஒரு நாள் வகுப்பில் பாடம் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் எதற்கோ ஸ்கேலை எடுத்தாராம், உடனே ஒரு பையன் எழுந்து ' என்ன டீச்சர், ஜெயுலுக்கு போக ஆசையாக இருக்கிறதா?' என்று கேட்டானாம். இத்தைகைய மாணவர்களை எப்படி சமாளிப்பது?'  என்றார். எங்களுக்கு உடனேயே பதில் சொல்ல முடியவில்லை!!

மருத்துவ முத்து:

உடம்பில் தோன்றும் மருக்களை நீக்க:

கட்டிப்பெருங்காயத்தை நீரில் ஊறவைத்து அது பசை போல ஆனதும் தினமு அதை மருவில் தடவி வந்தால் சிறிது நாட்களில் அந்த மரு மறையும்.

31 comments:

  1. அழகான முத்துக்கள் !

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா.

    இஸ்திரில் பெட்டியில் துருப்பிடித்தால் எப்படி அகற்றுவது.
    கண்ணைப்பற்றி குறிப்புக்கள் புகைத்தல் பற்றி கருத்துக்கள் எல்லாம் நல் முத்துக்கள். பகிர்வுக்கு நன்றி அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அனைத்து முத்துக்களும் அருமை.

    சிரிக்க வைத்த முத்து [நம் இரு கண்களைப்பற்றியது] மிகவும் ரஸிக்கவும், சிரிக்கவும் வைத்தது என்னை.

    >>>>>

    ReplyDelete
  4. பழங்களுடன் தங்களின் கணவர்
    இதுவரை எனக்குக்
    காணக்கிடைக்காத முத்து ! :)

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  5. பல்சுவை முத்துக்களைப் பகிர்ந்து எம் மனதைத் தன் சொத்தாக்கி கொள்ளும் சிறந்த படைப்பாளி தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    அம்மா ! இப்போது தாங்களும் எங்களை வாழ்த்தவேண்டிய காலம் இது புரியலையா ?இதோ இந்த இரண்டு இணைப்புகளையும் காண வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றேன்
    அம்மா ?..
    http://rupika-rupika.blogspot.com/2014/08/2014.html

    http://rupika-rupika.blogspot.com/2014/08/2014-2.html

    ReplyDelete
  6. முத்துக்கள் அனைத்தும் அருமை :)

    ReplyDelete
  7. ஒளிரும் முத்துகளை கோர்த்து காட்சியதற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. எல்லாமே அருமை. ஆசிரியர்களின் கஷ்டம் நமக்கெல்லாம் புரிகிறது. புரிய வேண்டியவர்களுக்குத்தான் புரிவதில்லை.

    ReplyDelete
  9. எல்லாமே நன் முத்துக்கள்!

    ReplyDelete
  10. அருமையான முத்துகள்...

    ஆசிரியர் பணியிலும் இப்போது நிறைய பிரச்சனைகள்.....

    ReplyDelete
  11. பயனும், பலனும், பக்கத்துணையாக
    நல்ல நகைச்சுவையும் அத்தனையும்
    ஒருங்கே ஒளிருகின்ற நன் முத்துக்கள்!

    மிக அருமை அக்கா!
    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  12. இன்றைய ஆசிரியர் பணி என்பது மிகவும் சிக்கலான பணி ஆகிவிட்டது சகோதரியாரே. ஒரு தொழிற்சாலை நடத்தினால், அதன் உற்பத்திகு இலக்கு நிர்ணயிக்கலாம் தவறில்லை. ஆனால் பள்ளி மாணவர்களின் தேர்ச்சிக்கு இலக்க நிர்ணயிக்கலாமா?
    வகுப்பில் இருக்கும் ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு விதமான பிரச்சினைகளுடன், வேவ்வேறு விதமான சூழலில் வளர்ந்தவர்களாய்,
    படித்த பெற்றோரைப் பெற்றவர்களால், படிப்பறிவில்லாத பெற்றோரைப் பெற்றவர்களாய் வருகிறார்கள்.
    மாணவர்களை அடிக்கக் கூடாது. எனக்குத் தெரிந்து எந்த ஆசிரியரும்இ வேண்டமென்றே மாணவரை அடிப்பதில்லை. ஆனால் இன்று மாணவனின் மனம் நோகும்படி பேசக்கூடாது என்கிறார்கள். ஆனால் தேர்ச்சி மட்டும் வேண்டும். அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பவர்கள் இன்றைய ஆசிரியர்களே

    ReplyDelete
  13. அருமையான நன் முத்துக்கள்.

    ReplyDelete
  14. எல்லா முத்துக்களும் மிக அருமையான முத்துக்கள் மனோஅக்கா. விதவிதமான பழங்கள் கண்ணைக்கவர்கின்றன.

    ReplyDelete
  15. அனைத்து முத்துக்களும் அருமை மனோ அக்கா.

    வருத்த பட வைத்த முத்தை படிச்சி மிகவும் வருத்தமாக் இருக்கு, பாவம் அந்த டீச்சருக்கு எவ்வளவு கழ்டமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  16. மருவுக்கான மருத்துவத்தை முயற்சிக்கிறேன்.

    எல்லா முத்துக்களும் கருத்துச் சுவை நிரம்பி.

    ஆசிரியர்-மாணவர் நிலை அவரவர் பக்க நியாயங்களோடு. ஆனால் வீட்டுச் சூழலின் மனப்போக்கை பள்ளி நுழைந்ததும் எத்தனை ஆசிரியர்கள் ஒதுக்கி வைக்கும் பக்குவத்தில் இருக்கிறார்கள்?

    ReplyDelete
  17. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ரிஷபன்!

    ReplyDelete
  18. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ரூபன்!!

    ReplyDelete
  19. ரசித்ததற்கும் பாராட்டியதற்கும் இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

    ReplyDelete
  20. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி அம்பாளடியாள்!!
    உங்கள் வலைத்தளத்திற்கு சென்று என் அன்பு வாழ்த்துக்களை அங்கே அளித்து விட்டேன்!


    ReplyDelete
  21. வாருங்கள் தேனம்மை! ரொம்ப நாட்கள் கழித்து நீங்கள் இங்கே வந்திருப்பது மகிழ்வாக இருக்கிறது! உங்களின் பாராட்டிற்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  22. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  23. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  24. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

    ReplyDelete
  25. கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  26. பாராட்டுக்கவிதைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி இளமதி!

    ReplyDelete
  27. உண்மை தான் சகோதரர் ஜெயக்குமார், இன்று அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பவர்கள் ஆசிரியர்கள் தாம்! என் உறவினர் வாயிலாக அவரது அனுபவங்களைக் கேட்கும்போது, 100 சதவிகிதம் என்று இலக்கு நிர்ணயித்து நிர்வாகம் நிர்ப்பந்திப்பதால் அவரைப்போன்ற ஆசிரியர்கள் படும் சிரமங்களைக்கேட்டபோது ரொம்பவும் பரிதாபமாக இருந்தது அவர்கள் நிலையை உணர்ந்த போது! நீண்ட கருத்திற்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  28. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  29. கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி பிரியசகி!

    ReplyDelete
  30. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஜலீலா!

    ReplyDelete
  31. உங்களின் கேள்வி நியாயமானது தான் நிலாமகள்! அந்த மாதிரி மனப்போக்குள்ள‌ ஆசிரியர்கள் நிச்சயம் தங்களை மாற்றிக்கொள்ள‌ வேண்டும்.

    கருத்துரைக்கு அன்பு நன்றி !!


    ReplyDelete