Wednesday, 30 July 2014

முத்துக்குவியல் -29!!

தகவல் முத்து:
:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி சந்தை, தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தை எனக் கூறப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை கூடுகிறது. இந்த சந்தையில் காய்கறி, தானியங்கள், தங்கம், வெள்ளி, இரும்பு சாமான்கள் மட்டுமல்லாது ஆடு, மாடுகள் என அனைத்து பொருட்களும் விலை மலிவாக கிடைக்கின்றன. 
ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு விற்பனை நடக்கின்றது. அந்தந்த இடங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களுக்கு தேவையானதை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ வாங்கி செல்வது வழக்கம். இதன்மூலம், கணிசமாக பணம் மிச்சமாகும் என்கின்றனர் அந்த சந்தை பற்றி தெரிந்தவர்கள்.
இதற்கப்புறம் புகழ் பெற்றிருப்பது நாமக்கல்லிருந்து 30 கி.மீ தொலைவில் பேளுக்குறிச்சியில் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவு நேரத்தில் நடக்கும் சந்தை. கடுகு, சீரகம், மிளகு, போன்ற பலசரக்குகள் முதல் சோம்பு, ஏலம், கசகசா போன்ற மசாலா பொருள்களும் துவ்ரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், புளி, போன்றவைகளும்  மிகவும் மலிவாகக் கிடைக்கிறது.

அதிசய முத்து:

ஆப்கானிஸ்தான் நாட்டில் ' கார்டெஸ்' என்ற இடத்தில் நின்ற நிலையில் நான்கு கைகளுடனும் பாம்பை பூணூலாக அணிந்தும் கழுத்தில் ருத்திராட்ச மாலை தரித்தும் இடத்தந்தம் ஒடிந்தும் ஒரு பெரிய விநாயகர் காட்சி அளிக்கிறார். இதைப்படித்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கடந்த கால சரித்திர நிகழ்வுகள் நமக்கு அவ்வப்போது ஆச்சரியங்களை அளித்துக்கொண்டிருக்கின்றன!!

எச்சரிக்கை முத்து:

' ஆண்டிபயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை உலகம் நோக்கிச் சென்று கொன்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. மக்கள் சாதாரண தொற்றுக்களாலும் சிறிய காயங்களாலும் உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை மீண்டும் உருவாகலாம் என்றும் கூறுகிறது. சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள் உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகளிடம் இருந்தும் கூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருக்கிறதாம். இது இப்போது உலக அளவில் ஒரு பெரிய அபாயத்தை எட்டியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் அதிக அளவில் பரிந்துரைக்கப்படுவதும் முக்கியகாரணமாக கூறும் உலக சுகாதார நிறுவனம் புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவில் உருவாக வேண்டும் என்றும் அவை பயன்படுத்த வேண்டிய முறைகளையும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

மருத்துவ முத்து:

சர்க்கரை நோய்க்கு எளிமையான மருந்து:



தேவையானவை:

வெந்தயம்‍ 50 கிராம், கருஞ்சீரகம்‍ 25 கிராம், ஓமம்‍ 25 கிராம், சீரகம்‍ 25 கிராம்
இவற்ரை ஒன்றாகச் சேர்த்து வறுத்துப்பொடி செய்யவும். இதில் ஒரு சிறு ஸ்பூன் எடுத்து தினமும் வெறும் வயிற்றில் காலை சுவைத்து சாப்பிடவும். வேன்டுமானால் சிறிது தண்ணீர் அதன் பிறகு குடித்துக்கொள்ளலாம். ஒரு வாரம் இப்படி செய்து வந்தால் சர்க்கரையின் அளவு நிறைய குறையும்.

ரசிக்கும் முத்து:




மொகலாயச் சக்கரவர்த்தி அக்பருக்கும் ஆமிர் நாட்டு  இந்திய ராஜப்புத்திர இளவரசி ஜோதாவிற்கும் இடையே மலர்ந்த காதலை மிக அழகாக வெளியிட்டுக்கொன்டிருக்கிறது ' ஜோதா அக்பர்' என்னும் சீரியல். இது ஜீ தொலைக்காட்சியில் தினமும் மாலை ஒளிபரப்பிக்கொன்டிருக்கிறார்கள். மொகலாயர்களின் கட்டிடக்கலையின் பிரமிக்க வைக்கும் அழகும் இந்து அரசர்களின் வீரமும் சிறந்த நடிப்பும் இரு மதங்களின் பல்வேறு வேற்றுமைகள் அன்பென்ற ஒன்றினால் அழகாய் இணையும் காட்சிகளும் என்னை தினமும் ஈர்க்க வைத்துக்கொன்டிருக்கின்றன. ஹிந்தியில் ஏற்கனவே ஒளிபரப்பிக்கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ப தமிழ் உரையாடல்கள் இருக்கின்றன. தமிழ்ச்செறிவோடு கூடிய வசனக்களும் அக்பரின் கம்பீரமான குரலும் இந்த சீரியலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அப்படியே ஒன்றிப்போய் ர்சித்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!










 

30 comments:

  1. எனக்குத் தெரிந்ததெல்லாம் தஞ்சாவூர் சாயங்கால மார்க்கெட் (ஹெட் போஸ்ட் ஆபீஸ் அருகே) பல்லாவரம் சந்தை, மதுரை B4 போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள சந்தை... அவ்வளவுதான்!

    தமிழகத்தின் வியாபாரத் தொடர்புகள் அந்தக் காலத்தில் கடல் கடந்து இருப்பதைக் காட்டுகின்றன.

    எச்சரிக்கை முத்து பயமுறுத்துகிறது.

    நாவல் மரத்தில் செய்த கோப்பைகளை ஒருவர் செய்து விற்கிறாராம். அதில் ஒரு மணி நேரம் தண்ணீர் வைத்துக் குடித்து வந்தாலே சர்க்கரை நோய் குறைகிறதாம். விகடனில் படித்த நினைவு. இதுபோல வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மரத்தில் செய்த கோப்பைகள் விற்பனை செய்வதாய்ப் படித்தேன்.

    ஜோதா அக்பர் ஐஸ்வர்யா-ஹ்ரித்திக் நடித்துத் திரைப்படமாக வெளிவந்தது இல்லையோ...

    ReplyDelete
  2. அன்புள்ள ஸ்ரீராம்!

    இப்போதும் தஞ்சை ஹெட் போஸ்ட் ஆபீஸ் அருகே காய்கறி மார்க்கெட் இருக்கிறது! ஆனால் அதை விடவும் பெரியது திலகர் திடலில் இருக்கும் சாயங்கால மார்க்கெட் தான்! நாவல் பழம், பச்சை வேர்க்கடலை, கடாரங்காய், நார்த்தங்காய் எல்லாம் கிடைக்கும்! சில சமயம் கொடுக்காப்புள்ளி கூட கிடைக்கும்!

    நாவல் மரக்கோப்பைகள் செய்தி சுவாரசியமாக இருக்கிறது! நான் எப்படியோ இந்த விகடனைத் தவற விட்டு விட்டேன் போலிருக்கிறது! அவை எங்கு கிடைக்கின்றன என்று எழுதினால் எல்லோருக்கும் பயனளிக்கும்!

    ஜோதா அக்பர் ஐந்து வ‌ருடங்களுக்கு முன் ஐஸ்வர்யாராய், கிருத்திக் ரோஷன் நடித்து வெளிவந்தது! ஒரே மூச்சில் நான் பார்த்த மிகச்சில படங்களில் அதுவும் ஒன்று! இது சீரியல் என்பதால் இன்னும் நுணுக்கமாக, அழகாக செதுக்கிக் காண்பிக்கிறார்கள்!

    வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!!

    ReplyDelete
  3. முத்துக்குவியல் ரசிக்கவைக்கிறது..!

    ReplyDelete

  4. எச்சரிக்கை முத்து பயமுறுத்துகிறது.

    மருத்துவ முத்து மிகவும் பயனுள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. அக்கா!...

    முத்துக் குவியலில் மோது(ம்) எழில்கண்டேன்!
    சித்தத்தில் சேர்த்தேன் சிலிர்த்து!

    என்னவெனச் சொல்ல எல்லாம் அருமை!
    ஆண்டிபயோட்டிக் பயமுறுத்துகிறது...

    நல்ல பகிர்வு + பதிவு அக்கா!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அம்மா,

    தங்களின் வலைப்பூவினை இன்றுதான் காண நேர்ந்தது.

    பல அறிய தகவல் முத்துக்கள் கோர்த்த உங்கள் மாலை நல்முத்து மாலையாக ஜொலிக்கிறது !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    ReplyDelete
  7. வணக்கம்

    தாங்கள் பதிவில் சொல்லிய அத்தனை விடயங்களும் முத்துக்கள்தான்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. உங்கள் அதிசய முத்து அந்த விநாயகரைத் தேடிப் பார்க்க வைத்தது அக்கா. கிடைத்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
    http://en.wikipedia.org/wiki/Hinduism_in_Afghanistan

    ReplyDelete
  9. முத்துக்குவியல் மிக அருமை.
    ஜோதா அக்பர் தமிழில் என்றால் நல்லது. நேரம் சொல்லவில்லையே!
    மாலை பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. ரசிக்க வைத்த அனைத்து முத்துக்களும் அருமை!!

    ReplyDelete
  11. ஆழ்கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களாய் ஒவ்வொரு தகவலும் சிறப்பு சேர்த்தது. ஜோதா அக்பர் சீரியல் நானும் ஒரு நாள் பார்த்தேன்! நன்றாக இருந்தது!

    ReplyDelete
  12. இந்த முத்துக்குவியலில் எச்சரிக்கை முத்துதான் எனது கவனத்தை இழுத்தது. காரணம் உயிர்மேல் ஆசைதான்.

    ReplyDelete
  13. கோர்த்த முத்துக்கள் எல்லாமே அழகான முத்துக்கள் அக்கா. அதிசய முத்து ஆச்சர்யம். நன்றி அக்கா.

    ReplyDelete
  14. கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  15. முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சாமானியன்!
    விரைவில் உங்கள் வலைத்தளம் வருவேன்!!

    ReplyDelete
  16. கவிதையுருவில் வந்த க‌ருத்துரைக்கும் பாராட்டிற்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி இளமதி!!

    ReplyDelete
  17. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!!

    ReplyDelete
  18. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ரூபன்!

    ReplyDelete
  19. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி!

    ஜோதா அக்பர் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30க்கு ஒளிபரப்புகிறார்கள்! மார்ச் மாதம் ஆரம்பித்திருக்கிறது என்று நினைக்கிறேன். நான் யதேச்சையாக ஜூன் மாதம் தான் ஒரு நாள் பார்த்தேன். மிகவும் ரசித்து பிடித்துப்போனதால் கணினியில் மார்ச் மாதம் ஆரம்பித்ததிலிருந்து பின்னோக்கியும் பார்த்து முடித்து விட்டேன்!!

    ReplyDelete
  20. எல்லா முத்துக்களுமே நல்ல முத்துக்கள். எங்க ஊரு சந்தையைப் பற்றிச்(போச்சம்பள்ளி) சொன்னது மகிழ்வு.. நாங்களும் ஒரு காலத்தில் சென்றோம் இப்போது நேரமில்லாமையால் செல்வதில்லை.

    ReplyDelete
  21. எல்லாம் புதிய புதிய தகவல்கள். சர்க்கரை நோய்க்கு மட்டும் இலட்சக் கணக்கான இயற்கை மருந்துகள்! நாவல்மரக் கோப்பை ரொம்ப சுலபம் இல்லையா...

    ReplyDelete
  22. பதிவை மிக ரசித்தேன் பயனுடையதும் கூட..
    இந்தப் பதிவைக் கட்டாயம்வந்து பாருங்கள் ஆச்சரியம் ஒன்று நான் முன்னர் குறிப்பிட்டபடி.
    http://kovaikkavi.wordpress.com/2014/08/02/50-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/
    Vetha.Elanagthilakam.

    ReplyDelete
  23. போச்சம்பள்ளி உங்கள் ஊரா எழில்? தகவலுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  24. ஆமாம் நிலாமகள், சர்க்கரை குறைய நாவல் மரக்கோப்பைகள் பற்றி இன்னும் செய்திகள் தெரிந்தால் நன்றாயிருக்கும்! கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  25. வருகைக்கும் பாராட்டிற்கும் உங்கள் பதிவில் என் கவிதையை வெளியிட்டிருப்பதற்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  26. பகிர்வுக்கும் புதிய தகவலுக்கும் அன்பு நன்றி இமா!

    ReplyDelete
  27. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  28. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  29. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் இளங்கோ!

    ReplyDelete
  30. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி பிரிய சகி!

    ReplyDelete