Monday, 11 November 2013

முத்துக்குவியல்-23!!

அறிவியல் முத்து:

பாக்கு சாப்பிடுவதால் நெஞ்சு வலி உன்டாகுமா?



வரும். பாக்கு ஒரு irritantஆக செயல்படுகிறது. அதனால் உண‌வுக்குழலிலும் இரப்பையிலும் காணப்படும் சிலேட்டுமப்படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது. இதனால் நெஞ்சு வலி உண்டாகுகிறது.

அதிர்ச்சியளித்த முத்து:

இன்றைக்கு விபத்துக்களும் மரணங்களும் நம்ப முடியாத வகையில் பல விதங்களில் ஏற்படுகின்றன. இங்கே தஞ்சையின் செல்வந்தர் ஒருவருக்கு ஏற்பட்ட மரணம் அதிர்ச்சி அளிக்கக் கூடியது. பல் செட் கட்டியிருந்த 70 வயதிற்கும் மேற்பட்டவர் அவர். சாதாரணமாக உறங்கச் செல்கையில் பல் செட்டைக் க‌ழற்றி வைத்து விட்டு உறங்குவது அவர் வழக்கம். அன்று அது போல அதை கழட்ட முயற்சித்துக்கொன்டிருக்கையில் திடீரென்று விருந்தினர் வர, அதை அப்படியே விட்டு விட்டு விருந்தினரிடம் பேசப்போய் விட்டார். விருந்தினர் சென்ற பிறகு கழட்ட முயற்சித்த பல் பற்றிய நினைவின்றி அமர்ந்தவருக்கு தூக்கக் கலக்கத்தில் தலை சாய்ந்திருக்கிறது. அந்த அதிர்வில் பல் கழன்று உள்ளே சென்று மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ள, மருத்துவரிடம் செல்வதற்குள்ளேயே மூச்சுத் திணறலால் உயிரிழந்து விட்டார் அவர். நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு தீடீர் விபத்தால் ஏற்பட்ட அவரின் மரணம் இங்கு எல்லோரையுமே பாதித்து விட்டது.

சிரிக்க வைக்க முத்து:

5 வயது பெண்:

ஏம்மா உன் முடியில் 2 முடி வெள்ளையாய் தெரியுது?

அம்மா:

அதுவா, நீ அம்மா சொல்வதைக் கேட்காமல் கத்தறப்போ ஒரு முடி வெள்ளையாயிட்டு. நீ சேட்டை பண்ணுற‌ப்போ இன்னொரு முடி வெள்ளையாயிட்டு.



குழந்தை:

அப்போ நீ ரொம்பவே சேட்டை பண்ணுவே போலிருக்கு?

அம்மா திகைப்புடன்

ஏன் அப்படி சொல்லுறே?

குழந்தை:

பாட்டியோட முடி எல்லாமே வெள்ளையா இருக்கே?

குறிப்பு முத்து:


குக்கரிலுள்ள ஸ்க்ரூ லூஸானால் குக்கர் சூடாக இருக்கும்போதே முறுக்கி விடவும். அப்படி செய்தால் பிடிகள் அடிக்கடி லூஸாகாது.

ரசித்த முத்து:

வெற்றியின் போது கைத்தட்டும் பத்து விரல்களை விட, சோதனையின் போது கண்ணீரைத் துடைக்கும் ஒரு விரலே உயர்ந்தது.
பேச வேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்து விட்டால்
அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.

மருத்துவ முத்து:



துள‌சி இலைளை தேங்காய்ப்பால் விட்டு மையாக அரைத்து நெற்றிப்பொட்டு வைக்கும் இடத்தில் ஏற்படும் அரிப்பிற்கு தொடர்ந்து தடவி வந்தால் நாளடைவில் அரிப்பு சரியாகி விடும்.

புகைப்படங்களுக்கு நன்றி: GOOGLE

 

44 comments:

  1. உயிர் போவதற்கு ஏதேனும் ஒரு காரணம்.

    பாவம்.கிழவர்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. பயனுள்ள முத்துக்கள் . குக்கர் ஸ்க்ரூ Try பண்றேன் :)

    ReplyDelete
  3. குக்கர் பற்றிய செய்தி மிகவும் உப்யோகரமானது. அடிக்கடி எனக்கு குக்கருடன் ஸ்க்றுவை முன்னிட்டு சண்டை போட்டுக் கொண்டிருப்பேன். இனி சமாதானக் கோடி காட்டி இடலாம். நன்றி.
    பல்செட் செய்தி நல்ல எச்சரிக்கை.
    ஜோக்கையும் ரசித்தேன்.
    நன்றி.

    ReplyDelete
  4. //விபத்துக்களும் மரணங்களும் நம்ப முடியாத வகையில் பல விதங்களில் ஏற்படுகின்றன//

    மிக உண்மை அக்கா. இறைவன் பாதுகாக்கணும்.

    ReplyDelete
  5. குறிப்புகள் எல்லாம் நல்ல உபயோகமாக...

    ReplyDelete
  6. முத்தான பயனுள்ள குறிப்புகள்..!

    ReplyDelete
  7. அறிவியலாய், அதிர்ச்சியாய், சிரிக்கவைத்தும்
    குறிப்பாய் மருத்துவமாய் ரசிக்கவும் வைத்த
    அற்புத வித்துக்கள்!

    அத்தனையும் பாதுகாக்கவேண்டிய சொத்துக்களே..

    பகிர்விற்கு நன்றி!
    வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
  8. பல் செற் அணிவோர்களுக்கு அதுவும் வயது முதிர்ந்தவர்களுக்குத்
    தங்களின் இத் தகவல் நிட்சயம் சென்றடைய வேண்டும் .அனைத்து
    முத்துக்களும் மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் அம்மா .

    ReplyDelete
  9. முதல் முத்து வருத்தம்.
    இரண்டாம் முத்து குழந்தைகளின் அறிவு இப்போது வியக்க வைக்கிறது...
    மற்ற முத்துக்கள் அருமை....

    ReplyDelete
  10. முத்துக்கள் அருமை.வாழ்த்த்துக்கள்

    ReplyDelete
  11. வணக்கம்
    வெற்றியின் போது கைத்தட்டும் பத்து விரல்களை விட, சோதனையின் போது கண்ணீரைத் துடைக்கும் ஒரு விரலே உயர்ந்தது.

    பதிவின் இறுதியில் அருமையான தகவல்...நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. பயனுள்ள முத்துக்கள்...பாவம் அந்த வயதானவர்....

    ReplyDelete
  13. முதல் முத்து அதிர்ச்சி அளிக்கிறது. குக்கர் முத்து எனக்கு மிகவும் தேவை...மற்ற முத்துகள் அனைத்தும் அருமை..பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  14. பொட்டு வைக்கும் இடத்தில் உள்ள அரிப்பு ...மருத்துவ முத்தை இன்றே தொடங்குகிறேன்..முத்தான தகவல்களுக்கு மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  15. ஆமாம், உயிர் போவதற்கு இது ஒரு காரணம் தான் என்றாலும் இந்த மரணம் ரொம்பவும் பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். கருத்துரைக்கு அன்பு நன்றி சுப்புத்தாத்தா!

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஜீவன் சுப்பு!

    ReplyDelete
  17. விரிவான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி ராஜலக்ஷ்மி! பல் செட் விஷயம் அதை உபயோக்கிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று தான் முக்கியமாக அதைப்பற்றிக் குறிப்பிட்டேன்.

    ReplyDelete
  18. ரொம்ப நாட்களுக்குப்பிறகு இங்கு உங்களைப் பார்ப்பதில் மிகவும் சந்தோஷம் ஹுஸைனம்மா! இந்தப்பல் செட் விஷயம் என்னை மிகவும் பாதித்தது. அவர் செல்வம் மிகுந்தவர். ஆனால் இறுதியில் அத்தனை செல்வமும் அவரது உயிரைக்காப்பதற்கு பயன்படாமல் ஒரு நொடியில் இறந்து விட்டார்.

    ReplyDelete
  19. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஜனா!

    ReplyDelete
  20. இனிய பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி ராஜராஜேஸ்வரி!!

    ReplyDelete
  21. அழகாய்ப் பின்னூட்டம் தந்ததற்கு மனம் நிறைந்த அன்பு நன்றி இளமதி!

    ReplyDelete
  22. பல் செட் அணிவோருக்கு பயன்பட வேண்டுமென்றே தான் இந்த பதிவில் எழுதினேன் அம்பாளடியாள். வருகைக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் அன்பான நன்றி!!

    ReplyDelete
  23. வருகைக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் மகிழ்வான நன்றி குமார்!!

    ReplyDelete
  24. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் கவியாழி கண்ணதாசன்!!

    ReplyDelete
  25. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ரூபன்!

    ReplyDelete
  26. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  27. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மனோ!!

    ReplyDelete
  28. ஒவ்வொரு முத்திலும் ஒரு செய்தி. அதிர்ச்சி தந்த முத்து மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

    ReplyDelete
  29. /// பேச வேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்து விட்டால்
    அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.///

    உண்மையான வார்த்தைகள்....

    ReplyDelete
  30. பதிவின் முத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வைக் கூட்டின. நன்றி சகோ...

    முள் குத்தி செத்தவருண்டு; தூக்கு மாட்டி பிழைத்தவர் உண்டு என எங்க ஊரில் அடிக்கடி சொல்வாங்க.அதற்கொரு புதுமொழியாக பல்லால் செத்தவர். எம பழிக்கு ஏதோவொரு வழி.

    குக்கர்பற்றியும் துளசி பற்றியதும் புதுக் குறிப்பு. குழந்தைகள் நம்மை அனாயசமாக மடக்கி விடுகின்றன. கேட்ட அம்மாவின் முகம் போன போக்கை நினைத்தால் நமக்கு சிரிப்பு தான். தகவல் தத்துவம் அருமை.

    ReplyDelete
  31. பயனுள்ள முத்துக்கள்

    ReplyDelete
  32. பாக்கு சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது போல இருக்கும். தண்ணீர் வேறு குடிக்கக்கூடாது என்று சொல்வார்கள். நான் பாக்கு சாப்பிடுவதே இல்லை! :))

    பல் செட்டால் இப்படி ஒரு ஆபத்தா...

    இந்தக்காலக் குழந்தைகளை ஏமாற்ற முடியுமா?

    ரசித்த முத்தும், மருத்துவ முத்தும் அருமை.

    ReplyDelete
  33. useful tips.
    Thank you.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  34. http://kovaikkavi.wordpress.com/2013/11/10/12-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/

    ReplyDelete
  35. அறிவியல் முத்தும் அதிர்ச்சியளித்த முத்து கொஞ்சம் பயத்தையும் விழிப்புணர்வையும் தந்த முத்து. சிரிக்க வைத்த முத்து சூப்பர்.குறிப்பு முத்து பயன் தர்க்கூடியது.ரசித்த முத்து நானும் ரசித்திருக்கிறேன். மருத்துவ முத்தில் பகிர்ந்த டிப்ஸ் அருமை.

    ReplyDelete
  36. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் இளங்கோ!!

    ReplyDelete
  37. முதல் வ‌ருகைக்கும் ரசித்து பின்னூட்டம் அளித்ததற்கும் அன்பான நன்றி சத்யா!

    ReplyDelete
  38. வழக்கம்போல விரிவான பின்னூட்டம்! அன்பு நன்றி சொல்கிறேன் நிலா!!

    ReplyDelete
  39. முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் இனிதான‌ நன்றி மாற்றுப்பார்வை!!

    ReplyDelete
  40. வருகைக்கும் க‌ருத்துரைக்கும் அன்பு நன்றி வேதா!!

    ReplyDelete
  41. விரிவான பின்னூட்டம் அளித்ததற்கு மனம் கனிந்த‌ நன்றி ஸ்ரீராம்!!

    ReplyDelete
  42. ரசித்து அருமையான கருத்துரை அளித்ததற்கு மனமார்ந்த நன்றி ஆசியா!!

    ReplyDelete
  43. நல்முத்துகள்.....

    பல் செட் அடைத்துக்கொண்டு உயிர் போனது அதிர்ச்சி அளித்தது.....

    ReplyDelete