Monday, 22 October 2012

டெங்கு காய்ச்சல்!!

ஸ்விட்சர்லாந்து பயணத்தின் நடுவே சிறிய இடைச்செருகல்! சில முக்கியமான மருத்துவ விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவே இந்த சிறு இடைவெளி! பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, இதைப்படிக்கும் பார்வையாளர்களுக்கும் இந்த செய்திகள் உதவியாக இருக்க வேண்டும் என்பது தான் இதை எழுதுவதன் தலையாய நோக்கம்! தஞ்சையிலிருந்து தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
சமீபத்திய தஞ்சைப்பயணம் இடையறாத மின்வெட்டிற்கிடையே பற்பல சோதனைகளைக் கொடுத்தது. எங்கும் பரவிக்கொண்டிருக்கும் ‘டெங்கு காய்ச்சல்’ பலருக்கும் பரவி அச்சத்தையும் உடல் வேதனையையும் கொடுக்கத்தவறவில்லை. இந்த காய்ச்சல் தஞ்சை, நாகை, மதுரை, மாவட்டங்களில் அதிகம். இரத்தப் பரிசோதனைக்கூடங்கள் மிகவும் பிஸியாக இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ரத்தப் பரிசோதனைக்கூடத்திலும் ஒவ்வொரு அளவு! [அந்த வேதனையை தனிப்பதிவாகத்தான் எழுத வேண்டும்!] என் தங்கையின் கணவருக்கு இந்த டெங்கு காய்ச்சல் பாதித்து அவரை படுக்கையில் தள்ளிய போது தான் இந்த நோயைப்பற்றிய சில தகவல்கள் கிடைத்தன.



சுத்தமான நீர் தேங்கிக் கிடக்கையில் கொசுப்புழுக்கள் அதில் உற்பத்தியாகி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அந்தக் கொசு கடித்தாலோ அல்லது ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரைக் கடித்து பின் வேறு ஒரு நபரைக் கடித்தாலோ, ஆர்த்ரோபோட் என்கிற வைரஸ் கிருமி உடம்பில் நுழைந்து உடம்பெல்லாம் ஒரிரு நாட்களில் பரவி, அவருக்கு டெங்கு காய்ச்சல் உண்டாகிறது. கடுமையான காய்ச்சல், கண்களில் வலி, தலை வலி, எலும்பில் வலி, வாந்தி என்று பாடாய் படுத்துகிறது. ரத்தத்தில் அணுக்கள் குறையக் குறைய மூக்கு, சிறுநீர்ப்பாதை, பற்கள், என் உறுப்புக்களில் ரத்தக்கசிவு உண்டாகி, மூளை செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு என்று கடைசியில் பாதிப்பு ஏற்பட்டு மரணம் உண்டாகிறது. இதைக் குணப்படுத்துவதற்கான தனிப்பட்ட மருந்துகள் இல்லையென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். என் தங்கையின் கணவருக்கு எந்த வித அறிகுறியும் இல்லாமல் அனல் போல திடீரென்று காய்ச்சல் ஏறியது. மருத்துவர் உடனேயே அவரை இரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார். பொதுவாய் இரத்தத்திலுள்ள ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை ஒவ்வொருத்தருக்கும் ஒன்றரை லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை இருக்க வேண்டுமாம். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக அதிகமாக ப்ளேட்லெட் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது. மிகவும் குறைந்து விட்டால் மூளையில் பாதிப்பு, உயிருக்கு ஆபத்து என்பதெல்லாம் நிகழ்ந்து விடும். என் தங்கை கணவருக்கு ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு வந்ததும் அவரை மருத்துவ மனையில் அட்மிட் ஆகச் சொல்லி விட்டார்கள். 80 வரை அவருக்கு இறங்க ஆரம்பித்தபோது, அவருக்கு ஊசிகளும் ஏற்றி சலைன் ஏற்றி பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். 50ற்கும் கீழ் இறங்கினால் புது இரத்தம் செலுத்துவது மட்டுமே உயிருக்கு பாதுகாப்பானது என்று சொல்லியிருந்தார்கள். நல்ல வேளையாக அந்த நிலைக்குச் செல்லாமலேயே, அவருடைய ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக ஏற ஆரம்பித்து ஒன்றரை லட்சத்துக்கு அருகில் வந்ததும் அவரை டிஸ்சார்ஜ் செய்தார்கள். இடையே என் மகனும் மருமகளும் கூகிளில் ஆராய்ந்து பப்பாளி இலைச்சாறு டெங்கு காய்ச்சலை குணமாக்குகிறது என்று எழுதப்பட்டிருப்பதாக எங்களிடம் சொன்னார்கள். நாங்களும் அதை உடனேயே சொல்லச் சென்றால் அங்கு எல்லோருமே பப்பாளி இலைச்சாறை குடித்துக்கொண்டிருப்பதைப்பார்த்ததும் ஆச்சரியமாகப் போய் விட்டது.

வெறும் வயிற்றில் ஒரு பப்பாளி இலையை அரைத்து அந்த சாறை மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். 2 அல்லது 3 ஸ்பூன் சாறு கிடைக்கும். காலையும் மாலையும் இப்படி குடித்து வரவேண்டும். இது டெங்கு காய்ச்சலை குணமாக்குகிறது.

இது தவிர பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் அதிகம் அலையாமல் இருப்பது டெங்குக் காய்ச்சலில் விழாமல் தப்பிக்க உதவும். காய்ச்சிய தண்ணீர் அதிகம் குடிப்பதும் பழங்கள் அதிகம் உண்பதும் அயர்ச்சியாக இருக்கும் உடம்பிற்கு தெம்பை ஏற்படுத்தும்! டெங்கு காய்ச்சல் குணமானதும் உடம்பு முழுவதும் களைப்பாக இருக்கும். அந்த நேரத்தில் அதிகம் நடமாடுவதே ஆபத்தாய் முடியும். பொதுவாய் இதன் பாதிப்புகளிலிருந்து மீண்டவர்களுக்கு இரத்த அழுத்தப்பரிசோதனையை அடிக்கடி செய்து மானிட்டர் பண்ணிக்கொண்டிருக்க வேண்டும். குறைவான இரத்த அழுத்தம் திடீரென்று பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

அனைவரும் இந்த மாதிரி மரண வேதனை தரும் அனுபவங்களை கொஞ்சம் கூட அனுபவிக்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்!!!

32 comments:

  1. இங்கேயெல்லாம் கொசு தொல்லை பயங்கரம் மேடம்.. மிக மிக பயன் தரும் பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி.. பப்பாளி இலை சாற்றின் மருத்துவ பயனை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  2. இங்கேயெல்லாம் கொசு தொல்லை பயங்கரம் மேடம்.. மிக மிக பயன் தரும் பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி.. பப்பாளி இலை சாற்றின் மருத்துவ பயனை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. உங்களின் உடனடியான பின்னூட்டம் மனதிற்கு உற்சாகமும் திருப்தியும் தந்தன ராதா! என் மனங்கனிந்த நன்றி உங்களுக்கு!

    ReplyDelete
  4. உங்களின் உடனடியான பின்னூட்டம் மனதிற்கு உற்சாகமும் திருப்தியும் தந்தன ராதா! என் மனங்கனிந்த நன்றி உங்களுக்கு!

    ReplyDelete
  5. பீதியில் இருக்கும் மக்களுக்கு ஒரு எளிமையான மருத்துவ முறையை சொன்னீர்கள்.
    உறவினர் பட்ட துன்பங்களை விளக்கி, நோயின் கொடுமையை அறிய செய்தீர்கள்.
    உங்கள் தங்கையின் கணவர் விரைவில் முற்றிலும் நலமடைய வேண்டும்.
    நன்றி தங்களின் பதிவுக்கு.

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல். நன்றி அக்கா.

    ReplyDelete
  7. இங்கு ஈ(கொசு தான்) தொல்லை அதிகம்... போன வாரம் எனது உறவினர் பட்டபாடு சொல்லி மாளாது...

    மிகவும் பயன் தரும் பகிர்வு...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள பதிவு.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. மிக‌ மிக‌ உப‌யோக‌மான‌ த‌க‌வ‌ல்...! ந‌ம் முன்னோரின் அறித‌ல் திற‌ன் மெச்ச‌த் த‌க்க‌து.

    ReplyDelete
  10. இந்த மாதிரி மரண வேதனை தரும் அனுபவங்களை கொஞ்சம் கூட அனுபவிக்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்!!!

    ReplyDelete
  11. பயன் தரும் பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி..நன்றி..நன்றி.. பப்பாளி இலை சாற்றின் மருத்துவ பயனை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  12. பப்பாளி இலைசாறின் பயன்பாடு பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி,சின்ன வயசுல இலையை ஒடிச்சு வீணாக்கி விளையாடுவோம்....

    ReplyDelete
  13. தில்லியிலும் டெங்கி காய்ச்சல் பரவிக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு வருடமும்....

    பப்பாளி இலைச் சாறு மிகவும் நல்லது. இங்கே இப்போது அதற்கு தட்டுப்பாடு! தேடித்தேடி கொண்டு வருகிறார்கள்....

    ReplyDelete
  14. மிக அவசியமான விழிப்புணர்வுப் பதிவு. பெங்களூரிலும் டெங்குவினால் பலர் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  15. உபயோகமான தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  16. தற்போதய நிலைமையில் மிகவும் பயனுள்ள பதிவு.மிக்க நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  17. மிகவும் பயனுள்ள தகவல் அம்மா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. எதைதின்றால் பித்தம் தீரும் என அலைபவர்களுக்கு
    சரியான மருந்தைச் சொல்லியுள்ளீர்கள்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. தங்களின் விரிவான கருத்துரைக்கும் என் சகோதரியின் கணவரின் நலம் விழைதலுக்கும் அன்பு நன்றி சகோதரர் மாணிக்கம்!!

    ReplyDelete
  20. கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!

    ReplyDelete
  21. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் தனபாலன்!

    ReplyDelete
  22. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  23. கருத்துரைக்கு இனிய நன்றி நிலாமகள்!

    ReplyDelete
  24. கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி ராஜராஜேஸ்வரி!!

    ReplyDelete
  25. ஆமாம் மேனகா! எங்கள் வீட்டில்கூட ஒரு பப்பாளி மரம் இருந்தது. பறவைகள் அடிக்கடி பழத்தைக்கடித்து கடித்து துப்பிக்கொண்டேயிருந்ததால் சுத்தம் பண்ணிக்கொண்டேயிருக்க முடியாமல் அந்த மரத்தை வெட்டிப்போட்டு விட்டோம். அதை இப்போது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!

    ReplyDelete
  26. பப்பாளி இலை டெல்லியிலும் தட்டுப்பாடு என்பதை அறிந்து ஆச்சரியமாக இருக்கிறது!
    கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!!

    ReplyDelete
  27. பெங்களூரிலும் டெங்கு காய்ச்சல் பரவிக்கொண்டிருப்பதாக அங்குள்ள உற‌வினர்களும் சொன்னார்கள். கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  28. பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜனா!

    ReplyDelete
  29. கருத்துரைக்கு அன்பு நன்றி ரமா!

    ReplyDelete
  30. பாராட்டிற்கு அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  31. கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!!

    ReplyDelete
  32. எளிமையான வைத்தியத்தில் உபயோகமான பதிவு.

    ReplyDelete