Monday, 1 October 2012

ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!


பகுதி-2
இன்னொரு மிகப் பெரிய ஆச்சரியமான விஷயம் எங்குமே உயரமான, தகதகக்கும் கட்டிடங்களை ஜுரிக்கில் நான் பார்க்க இயலவில்லை. எங்குமே பழைய கட்டிடங்கள் தான். வீடுகள் எல்லாம் மரங்கள், கொடிகள் சூழ அமைந்திருக்கின்றன! பால்கனிகள் தோறும் தொட்டிகளில் வித விதமான மலர்ச்செடிகளை வளர்க்கிறார்கள்!!
மரங்களுடன் வீடு

சற்று மங்கலான வெளிச்சத்தில் ஜூரிக் ஏரி
மறு நாள் ஒரு டூர் பஸ்ஸில் ஜுரிக் சுற்றிப்பார்த்தோம். ஜூரிக் ஏரி மிக அழகு. அடிக்கடி பனியால் உறைந்து போகும் இந்த ஏரி கடைசியாக பனியாய் உறைந்து போனது 1963-ல்!! 3 கிலோ மீட்டர் அகலமும் 49 கிலோ மீட்டர் நீலமும் கொண்டது இந்த அழகிய ஏரி. இதைச் சுற்றி பல இடங்கள் பொதுமக்கள் நீந்துவதற்காக உள்ளன. 

கணவரும் மகனும் மருமகளும் பேரனுடன். இந்த இடத்தில் தான் உலகின் அத்தனை செல்வங்களும் பூமிக்கடியில் கொட்டிக்கிடக்கிறதாம்!
ஜூரிக் ஏரியின் இன்னொரு தோற்றம்!
ஜூரிக் நகரின் ரயில்வே ஸ்டேஷன்!!
 குழந்தைக்காக zoo சென்றோம். குழந்தையின் உடல் நலம் சரியில்லாததால் சுற்றிப்பார்ப்பதை அதன் பிறகு தள்ளிப்போட்டு விட்டு மறு நாள் பிரயாணத்திற்கான ஆயத்தங்களை செய்ய ஆரபித்தோம்.
மறு நாள் டிராவல் கம்பெனியின் மூலம் சக பிரயாணிகள் விமான நிலையத்தை வந்தடைய, அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு குளு குளு மிதவை பஸ்ஸில் ஸ்விட்சர்லாந்தின் மிக முக்கியமான நகரமான லுசெர்ன் [Lucerne]என்னும் மலையடிவார நோக்கி பிரயாணம் செய்ய ஆரம்பித்தோம். இந்த நகரைச் சுற்றிப்பார்த்து விட்டு, shopping செய்து விட்டு, இரவு மலையடிவாரத்திலுள்ள எங்கெல்பெர்க்[ Engel berg ] என்ற சிறு நகரை அடைந்து அங்குள்ள ஹோட்டலில் தங்குவதாகத் திட்டம்.
ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஆரம்பமாகிறது ..!!
 வழி நெடுக மரத்தினாலான பெரிய,பெரிய வீடுகள். அப்பார்ட்மெண்ட் போல பல குடியிருப்பு வசதிகள் கொண்ட , ரொம்பவும் சாதாரணத்தோற்றத்துடன் பல மாடி வீடுகள். பச்சைப்பட்டை விரித்தாற்போல  தென்பட்ட சமவெளி கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்க, உலகப்புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைத்தொடர் எங்கள் கூடவே பயணிக்க ஆரம்பித்தது. 
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் இன்னொரு முகம்!!
ஆல்ப்ஸ் மலையின் பிரமாண்டமும் அழகும் கம்பீரமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவாறு நம்மை ஆட்கொள்ள ஆரம்பித்தது!! அதன் பசுமையும் அமைதியும் தூய்மையும் இதற்கு முன் பல கவிஞர்கள் எழுதிய பாடல்களை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்தன!!
தொடரும்...!!!


14 comments:

  1. அன்பின் மனோம்மா,

    அன்பு வணக்கங்கள். தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கம்மா..

    நான் மிக ரசிக்கும் பெண்மணி இவர். இவர் பதிவுகளில் எத்தனை அனுபவங்கள் இருக்கிறதோ அவ்வளவும் நம் வாழ்க்கைக்கு அவசியப்படும் பாடங்களாகவும் இருக்கும். தொலைபேசியில் பேசியபோது இவர் மீதுள்ள மதிப்பு அதிகமானது. மறக்காமல் வாழ்த்துகள் சொல்வதிலும், அவரை விட எத்தனை வயது குறைந்தவரானாலும் மரியாதையோடு அழைக்கும் பாங்கும் அவர் என் மனதில் நீங்காது நிலைத்த அன்புக்கரசி... அன்பில் கரையவைக்கும் அற்புதமானவர் இவர். இவர் முத்துமாலையில் இருந்து சில முத்துகளை இங்கே தருகிறேன் உங்கள் பார்வைக்காக....

    வாழ்க்கையென்னும் விசித்திரம்
    எது நியாயமான தீர்ப்பு
    ஜாதகமும் நானும்

    அன்புநன்றிகள்
    மஞ்சுபாஷிணி

    ReplyDelete
  2. பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_4.html) சென்று பார்க்கவும்...

    ReplyDelete
  3. ப‌ட‌ங்க‌ளும் ப‌கிர்வும் எங்க‌ளையும் உங்க‌ளுட‌ன் அழைத்துச் சென்று வ‌ந்த‌து. இய‌ற்கையின் அழ‌கை ர‌சிக்க‌ ர‌சிக்க‌ பேரின்ப‌மே...! கீழே புதைந்திருக்கும் செல்வ‌ங்க‌ளை விஞ்சிய‌த‌ல்ல‌வா மேல் நிற்கும் குடும்ப‌த்தின‌ர் த‌ங்க‌ளுக்கு! ந‌ட்பும் புன்ன‌கையும் க‌சிய‌ நின்றிருக்கும் அவ‌ர்க‌ளுக்கு எதிர் நின்று ப‌ட‌மெடுக்கும் தாங்க‌ளும் அவ்வாறே!!

    ReplyDelete
  4. அருமையான சுற்றுலாத் தொகுப்பு படங்கள்..! எனக்கு தெரிந்த அக்கா ஒருவர் ஸ்வில் இருப்பதால் அவ்வப்போது இதுமாதிரியான படங்கள் பார்த்த நினைவுகளும் வந்து விட்டன.

    பகிர்ந்தமைக்கு நன்றி.!

    http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_4.html

    வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ

    ReplyDelete
  5. உங்களோடு சேர்ந்து நாங்களும் பார்த்த உணர்வு...படங்கள் அருமை. நம் அமீரகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றம் கொண்ட இடங்கள் மனதை கவர்கின்றன.

    ReplyDelete
  6. அழகிய நாட்டின் அழகிய படங்கள். செல்வங்கள் கீழே கொட்டிக் கிடக்கும் இடத்தைப் பார்த்தால் கொஞ்சம் சென்னை மவுன்ட் ரோட் மாதிரி இருக்கிறது!! ஆல்ப்ஸ் மலை அழகு. ஆல்ப்ஸ் மலை என்றதும் 'சிவந்த மண்' பாடல் நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
  7. அருமையான பதிவு சகோதரி. மிக்க நன்றி.
    அல்ப்ஸ் மலையூடு வாகனம் ஓடடிச் சென்று ரசித்தது நினைவுக்கு வருகிறது.
    அருமை...அருமை...
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. அன்புள்ள மேட்ம். படங்களும் பயணக் கட்டுரையும் வெகு அருமை.

    நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்தது போல இருந்தது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தொடருங்கள்.

    அன்புடன்

    VGK

    ReplyDelete
  9. அன்புள்ள மஞ்சுபாஷிணி!

    உங்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்கனவே வலைச்சரத்தில் எழுதி விட்டேன்! மறுபடியும் என் அன்பு நன்றி!

    ReplyDelete
  10. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்! சகோதரி மஞ்சு சொன்னது போல வலச்சரத்தில் அறிமுகம் பெற்றவர்களுக்கெல்லாம் அந்த விபரத்தை தெரிவித்து அனைவரின் நன்றிக்கும் அன்புக்கும் உரியவராகி விட்டீர்கள்! அதற்கும் என் இனிய நன்றி மறுபடியும்!

    ReplyDelete
  11. ரொம்பவும் இனிமையான பின்னூட்டம் ஆதி! அன்பு நன்றி உங்களுக்கு!!

    ReplyDelete
  12. பாராட்டிற்கும் முதல் வ்ருகைக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் அன்பார்ந்த நன்றி சிவஹரி!

    ReplyDelete
  13. வலைச்சரத்தில் என் அறிமுகம் பற்றி தெரிவித்திருந்ததற்கு மறுபடியும் அன்பு நன்றி சிவஹரி!

    ReplyDelete
  14. அழகான காட்சிகள்.

    ReplyDelete