Sunday, 26 August 2012

முத்துக்குவியல்கள்

முத்துக்குவியல்களிலிருந்து  இரண்டு அதிசய முத்துக்களும் ஒரு மருத்துவ முத்தும் ஒரு ரசித்த முத்தும் ஒரு குறிப்பு முத்தும் இன்றைக்கு சிதறுகின்றன:
முதலில் அதிசய முத்துக்கள்!!
 
கிளியின் தோழன் குரங்கு!!

கொலம்பியா நாட்டில் இந்த அதிசயம் நடக்கிறது. நீலம் மற்றும் தங்க நிறமான பெண் கிளியுடன் குரங்கிற்கு நெருக்கமாக சினேகம் ஏற்பட்டு விட, தினமும் அந்தக் கிளி தன் முதுகில் குரங்கை ஏற்றிக்கொண்டு நகரை வலம் வருகிறது. கொலம்பியா நாட்டின் அகஸ்டன் நகரில் இந்த காட்சியை நாம் காணலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குரங்கு ஒரு போதும் தவறிக்கீழே விழுந்ததில்லை!!
 
12 வயது சிறுவனுக்கு ரூ 82000 சம்பளம்!!
மலேஷிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவன் ஆதி புத்ர அப்துல் கனி. இவன் 3ஆம் வகுப்பு வரை தான் படித்தவன். அதற்கு மேல் படிப்பு ஏறவில்லை. ஆனாலும் இயற்பியல், வேதியல், கணிதம், பொறியியல், உயிரியல் போன்றவற்றில் அபிரிதமான அறிவைப்பெற்றிருக்கிறான். அவனுடைய தாயாரின் மருந்துக்கம்பெனி இப்போது அவனது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவனது அபார ஞானத்தைப்பற்றி அறிந்த மலேஷிய கல்லூரிகள் இவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன. இவனும் அதை ஏற்றி விரிவுரையாளராக பணி புரிகின்றான். தன் ஒரு மணி நேர விரிவுரைக்கு 82000 ரூ ஊதியம் பெறுகின்றான்!!
மருத்துவ முத்து:
பித்தம் தணிய:
இளநீரில் பனங்கல்கண்டு சேர்த்து அருந்தலாம்.
எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து அருந்தலாம்.
 

நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து அருந்தலாம்.
தேனில் ஊறிய பேரீச்சம்பழம் பித்தம் தெளிய வைக்கும்.
மோரில் இஞ்சி சாறு விட்டு அருந்தலாம்.

ரசித்த முத்து:

உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும்போது அறிவு வெளியே போய் விடும்.
குறிப்பு முத்து:
 

வாழை இலைகள் கெடாமலிருக்க:
அவற்றை நியூஸ் பேப்பரில் சுற்றி, ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் ஒரு வாரத்திற்கு நன்றாக இருக்கும்.

39 comments:

  1. கிளியின் முதுகில் குரங்கா?
    ஆச்சயமாக உள்ளது.

    அழகான பெண்ணை கிளி போல வளர்த்து விட்டு, எவனோ ஒருவனுக்குக் அவசரமாகக் கட்டிக் கொடுத்து விட்டு, அந்தக்காலத்தில் பிறகு புலம்புவார்கள் பெண்ணின் பெற்றொர்கள்.

    ”கிளியை வளர்த்து குரங்கு கையில் [அல்லது பூனைகையில்] கொடுத்து விட்டேனே” என்று.

    இங்கு கிளியின் முதுகினில் ஏறி சவாரி செய்கிறதே குரங்கு.

    எப்படியோ அன்பாக ஒற்றுமையாக இருந்தால் சரிதான்.

    ReplyDelete
  2. ஆதி புத்ர அப்துல் கனிக்கு வாழ்த்துகள்.

    ”படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” என்பதற்கு உதாரணம் இவர்.

    ReplyDelete
  3. மருத்துவ முத்து தேனாக இனிக்கிறது.

    உணர்ச்சிக்கும் அறிவுக்கும் ஒத்து வராது. உணர்ச்சிவசப்படும் போது அறிவு மழுங்கிவிடும் என்பது உண்மை தான்.

    வாழையிலைகளை வாடாமல் வாழ வைக்க நல்ல ஐடியா சொல்லியுள்ளீர்கள்.

    [இருப்பினும் பொறுமையாக மடித்து சுருட்டி அழகாகக் கட்டி கிழியாமல் வைக்க ஓர் ஆள் போட வேண்டியிருக்கும்.]

    அனைத்து முத்துக்களும் அருமை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பகிர்ந்து கொண்ட முத்துக்கள் அத்தனையும் அருமை.

    சிறு வயதிலேயே எத்தனை திறமை அச்சிறுவனுக்கு. நிச்சயம் பெரிய ஆளாக வருவார்.....

    ReplyDelete
  5. முதல் இரண்டு முத்துகளும் பிரமிக்க வைக்கின்றன. குறிப்புகள் உபயோகம்.

    ReplyDelete
  6. வாழை இலை....அருமையான குறிப்பு!

    ReplyDelete
  7. அன்பு வணக்கங்கள் மனோம்மா..

    அதிசயமுத்து...

    குரங்கின் எடை அதிகமாச்சே... கிளியின் மீது சுதந்திர உலாவலா? ஆச்சர்யமாக தான் இருக்கிறது. அதுவும் சண்டை போட்டுக்காம சமர்த்தா ரெண்டும் இத்தனை சினேகமா இருப்பது ரொம்ப ரொம்ப பாராட்டக்கூடிய விஷயம்... மனிதர்களுக்குள் தான் சண்டை, பொறாமை, ஈகோ இதெல்லாம்.. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இந்த பிரச்சனையே இல்லை...

    ஆதிபுத்ர அப்துல்கனி குழந்தை இத்துணூண்டு வயசுல இத்தனை பெரிய சாதனையா? இறைவனோட அருள் அந்த குழந்தைக்கு பிரம்மாண்டமா இருக்கு.... சாதனைகள் தொடரட்டும்... அன்பு வாழ்த்துகள்....

    மருத்துவ முத்து மிக அருமை... எல்லோருக்குமே பயன் தரக்கூடியது மனோ அம்மா...

    அன்பு நன்றிகள் அம்மா முத்துக்குவியல்களின் அற்புத தொகுப்புக்கு....

    ReplyDelete
  8. தொகுத்த முத்துக்கள் அருமை மனோஅக்கா.பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  9. முத்துக்கள் அனைத்தும் மிக அழகு,ரசித்தேன்..

    ReplyDelete
  10. சுவாரஸ்யமான குறிப்புக்கள்...

    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  11. மிகவும் ரசித்து விரிவான பின்னூட்டங்கள் எழுதியதற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  12. இனிய கருத்துரைக்கும் அன்பான பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  13. கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  14. பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு ந்ன்றி சகோதரர் ஜனா!

    ReplyDelete
  15. அன்பார்ந்த க‌ருத்துரைக்கு இனிய நன்றி வரலாற்றுச்சுவடுகள்!!

    ReplyDelete
  16. நீண்ட நாட்களுக்குப்பிறகு மஞ்சுபாஷிணியை இங்கே பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது! விரிவான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இதயங்கனிந்த நன்றி மஞ்சு!

    ReplyDelete
  17. கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  18. பாராட்டிற்கும் க‌ருத்துரைக்கும் இனிய நன்றி ஆசியா!

    ReplyDelete
  19. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பார்ந்த ந‌ன்றி ச்கோதரர் தனபாலன்!

    ReplyDelete
  20. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சீனி!

    ReplyDelete
  21. குரங்கு,கிளி ஒற்றுமை அதிசயமானது...12 வயது சிறுவனுக்கு இத்தனை திறமையா... அபாரம்...மிக மிக பயனுள்ள வாழை இலை குறிப்பு. பகிர்வுக்கு நன்றி மேடம்..

    ReplyDelete
  22. மனோ மேடம் நலம் தானே? இன்னைக்கு காலையில் தான் என் மனைவியிடம் சொன்னேன். நான் உனக்கு ஒரு நல்ல நண்பன் என்று. இங்க வந்து பார்த்தா கிளி குரங்கு மேட்டர். என்னை வச்சு காமெடி ஏதும் பண்ணல்லியே??

    ReplyDelete
  23. //மோகன்ஜி said...
    மனோ மேடம் நலம் தானே? இன்னைக்கு காலையில் தான் என் மனைவியிடம் சொன்னேன். நான் உனக்கு ஒரு நல்ல நண்பன் என்று. இங்க வந்து பார்த்தா கிளி குரங்கு மேட்டர். என்னை வச்சு காமெடி ஏதும் பண்ணல்லியே??//

    :) ரசித்தேன் மோகன்ஜி சிரிப்பு வந்துவிட்டது...

    ReplyDelete
  24. // மனோ சாமிநாதன் said...
    நீண்ட நாட்களுக்குப்பிறகு மஞ்சுபாஷிணியை இங்கே பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது! விரிவான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இதயங்கனிந்த நன்றி மஞ்சு!//

    எனக்கும் மனோம்மா... ரொம்ப சந்தோஷம் உங்கள் எல்லோரையும் மீண்டும் பார்த்ததில்...

    ReplyDelete
  25. அவ்ளோ பெரியதா அந்த கிளி ??

    ஏட்டு படிப்பு அவசியாமா என்ற கேள்வி எழுகிறது

    ReplyDelete
  26. ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குரங்கு ஒரு போதும் தவறிக்கீழே விழுந்ததில்லை!!//


    ஆச்சரியமாக இருக்கு !! இரண்டாவது முத்து சின்னஞ்சிறு வயதில் என்னே ஒரு அறிவு .ரசித்த முத்து மற்றும் மருத்துவ முத்து அனைத்தும் அருமை அக்கா

    ReplyDelete
  27. மிக சிறப்பான பதிவு. பாராட்டுகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  28. ச்சும்மா அசத்துறீங்க மேடம்...
    பல நேரம் அலுப்பில் இருந்து விடும் என் போன்றவர்களுக்கு உற்சாக டானிக் நீங்கள்.....

    அது சரி, எனக்கு ஒரு மருத்துவக் குறிப்பு கொடுங்களேன்... ஓயாமல் படுத்தும் வாய்ப்புண்ணில் இருந்து விடுதலைப் பெறுவது எப்படி? தாங்க முடியலை மேடம். பேசாமல் செய்ய முடியாத வேலையில் இருந்து கொண்டு, வாய்ப்புண்ணால் நான் படும் அவஸ்தையை போக்க ஒரு வழி சொல்லுங்க மேம்..

    ReplyDelete
  29. அழ‌கிய‌ முத்து மாலையாய் தொகுத்த‌ செய்திக‌ள்! ப‌ல‌வும் ஆச்ச‌ர்ய‌மூட்டும்ப‌டி!! உங்க‌ள் முத்துச் ச‌ர‌த்திலிருந்து அவ்வ‌ப்போது உற‌வுக்கும் ந‌ட்புக்கும் ப‌கிரும்ப‌டியாய் ப‌ல‌ முத்துக்க‌ள்!!!

    ReplyDelete
  30. விரிவான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி ராதாராணி!

    ReplyDelete
  31. அன்புச் சகோதரர் மோகன்ஜி!
    நீண்ட நாட்களுக்குப் பின்னான வருகைக்கும் நகைச்சுவை கலந்த பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  32. மறுபடியும் நீண்ட பின்னான வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்வான நன்றி எல்.கே!

    ReplyDelete
  33. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ஏஞ்சலின்!

    ReplyDelete
  34. இனிய கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி வேதா!

    ReplyDelete
  35. பாராட்டுக்கும் உற்சாகமான கருத்துரைக்கும் அன்பு நன்றி நிலா!

    ReplyDelete
  36. குறிஞ்சி மலர் போன்ற வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி கிருஷ்ணப்ப்ரியா!
    வாய்ப்புண்ணுக்கு:
    புழுங்கல் அரிசி- 1 கப், பாசிப்பருப்பு[ மணம் வரும் வரை வறுத்தது]- அரை கப், பொன்னிறமாக வறுத்த வெந்தயம்- 2 மேசைக்கரண்டி, உரித்த சிறிய பூண்டு ஒரு கை இவற்றை உப்புடன் குழைய வேகவைத்து, சூடாக இருக்கும்போதே ஒரு தேங்காயைப் பாலெடுத்து சாதத்துடன் கலந்து சாப்பிடவும். இப்படி அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் வராததோடு, வயிற்றுச் சூடும் சரியாகும். மணத்தக்காளி ரசமும் நல்ல பலன் தரும்.

    ReplyDelete
  37. இன்று தான் படிக்கிறேன்... அடுத்த வாய்ப்புண் வருமுன் இதை செய்து அவதியிலிருந்து விடுபட முயல்கிறேன் மேம். ரொம்ப நன்றி...
    குறிஞ்சி மலரா..? அட போங்க மேடம்..

    ReplyDelete