Monday, 16 July 2012

முத்துக்குவியல்கள்!!

அறிந்து கொள்ள வேண்டிய முத்து-1



ஒரு ஆப்பிளை தினமும் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதேயில்லை என்பது பழைய மொழி. இன்றைய புதிய ஆய்வில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சக்கூடியது என்று அமெரிக்காவின் சால்க் ஆராய்ச்சி நிறுவனம் சொல்கிறது. இந்த பழத்தில் உள்ள பிளேலனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்திக்கு இணையாக செயல்படுகிறதாம். உடலில் சர்க்கரை நோய், புற்று நோய் ஏற்படுவதை தடுக்கிறதாம் இந்த ஸ்ட்ராபெரி பழம்!

ரசித்த முத்து:

உறவுகள் பலப்படுவதற்கான இந்த யோசனைகள் மிகவும் சிந்திக்க வைத்தன.

உறவும் நட்பும் உன்னதமாக 9 முக்கியமான சொற்கள்:

1.மிக்க நன்றி

2.நாம்

3.தாங்கள் மனது வைத்தால்

4. இதில் தங்கள் கருத்து என்ன?

5. தங்கள் பணி இதில் சிறப்பானது.

6.மனமார்ந்த பாராட்டுக்கள்

7. ஒப்புக்கொள்கிறேன்

8. இது என்னுடைய தவறு தான்.

9. நானே பொறுப்பு.

ஆச்சரியப்பட வைத்த முத்து!

மக்களுக்கு நன்மை தரக்கூடிய விஞ்ஞானக் கண்டு பிடிப்பு இது.



இப்போதைய சைக்கிள்களைக்காட்டிலும் அதிவேகமாக செல்லக்கூடிய மின்சார சைக்கிள்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. TURBO EBIKE என்றழைக்கப்படும் இந்த மின்சார சைக்கிள் மணிக்கு 28 மைல்கள் வேகம் செல்லக்கூடியவை. இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் உதவியுடன்தான் இந்த சைக்கிள் இத்தனை வேகம் செல்கிறது. இன்னும் மூன்றே வருடங்களில் இந்த மோட்டார் 250 வாட் மின்சக்தி கொண்ட மோட்டாராக மாற்றப்படும் என்றும் இதையும்விட அதிக வேகத்தில் இந்த சைக்கிளை அப்போது செலுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. இது மிகவும் எடை குறைவானது என்பது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிற செய்தியாக இருக்கிறது.

அறிந்து கொள்ள வேண்டிய முத்து-2

பாலை உபயோகிக்கும் விதம்:



கிராமப்புறங்களிலிருந்து வரும் பாலை காய்ச்சும்போது, அது பொங்கியதும் உடனேயே தீயை அணைக்காமல் சுமார் 8 நிமிடங்கள் வரை அதைக் கரண்டியால் கிளறியவாறே காய்ச்ச வேண்டும். அப்போது தான் பால் 100 டிகிரி செல்ஷியஸ் வரை சூடாகி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழியும். பதப்படுத்த பால் ஏற்கனவே காய்ச்சப்பட்டிருப்பதால் அவற்ரை 6 நிமிடங்கள் வரை காய்ச்சினால் போதும். காய்ச்சிய பாலை அடிக்கடி சுட வைக்ககூடாது. இரண்டு தடவைகளுக்கு மேல் சுட வைக்கும்போது அதிலுள்ள விட்டமின்கள் B1, B2, B12 போன்றவை ஆவியாகி விடுகின்றன. அவசரமும் தேவையும் ஏற்படும்போது, மொத்த பாலையும் சூடாக்காமல், எவ்வளவு தேவையோ, அதை மட்டும் சூடாக்குவது நல்லது.

ஆச்சரியப்பட வைத்த முத்துக்கள்-2



1. தலையில் இதயம் உள்ள உயிரினம் இறால்!

2. அணுக்கதிர் வீச்சுக்கு சாகாத உயிரினம் கரப்பான் பூச்சி!!

31 comments:

  1. அனைத்து முத்துக்களும் அருமை .., குறிப்பாக பால் பற்றிய தகவல் அருமை.!

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள முத்துக்கள்.

    1.அருமையான பகிர்வுக்கு
    “மிக்க நன்றி”.

    2.”நாம்”
    இத்தகைய சிறப்பான பதிவுகளைத் தான் மிகவும் விரும்புகிறோம்.

    3.”தாங்கள் மனது வைத்தால்”
    தான் இது போன்ற முத்துக்களை அவ்வப்போது எங்களுக்குத் தர இயலும்.

    4.நான் ஏதோ இதுபோன்ற ஓர் பின்னூட்டம் கொடுத்து விட்டேன்!
    ”இதில் தங்கள் கருத்து என்ன?”

    5.அவ்வப்போது அரிய பெரிய முத்துக்களாகத்தந்து எங்களை வியக்க வைக்கும்
    ”தங்கள் பணி இதில் மிகச்சிறப்பானது”.

    6.முத்தான முத்தல்லவோ!
    ”மனமார்ந்த பாராட்டுக்கள்”

    7.தங்களின் மிகச்சிறப்பான அனைத்து கருத்துக்களையும் நானும் அப்படியே ”ஒப்புக்கொள்கிறேன்”

    8.சமயத்தில் உடனுக்குடன் வருகை தந்து பாராட்ட முடியாமல் போய் விடுகிறது....
    ”இது என்னுடைய தவறு தான்”.

    9.இதில் நான் ஏதாவது தவறாகக் கூறியிருந்தால் அதற்கு முற்றிலும்
    ”நானே பொறுப்பு”.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  3. அரிய அறிய வேண்டிய அவசிய
    ஆச்சரியப்படத் தக்க அருமையான தகவல்கள்
    அடங்கிய பதிவு அருமை
    பயனுள்ள பதிவு
    தொடர்ந்து தர வேண்டுகிறேன்

    ReplyDelete
  4. ஆஹா. அருமையான முத்துக்கள்...

    பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. -ஆப்பிளை விட ஸ்ட்ராபெர்ரி பழம் நல்லது என்கிற தகவல் புதியது. மாறிவரும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப, வரும் புதிய நோய்களைத் தடுக்கும் சக்தி இந்தப் பழங்களுக்குக் கிடைத்து விட்டதோ...!

    -ரசித்த முத்தாக வந்திருக்கும் உறவுகளை மேம்படுத்தும் சொற்களின் அணிவகுப்பு அருமை. மொத்தத்தில் அடுத்தவர்களை மதிக்கும் பண்பு இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு வரியும் சொல்கிறது.

    -எடைகுறைந்த மின் சைக்கிள் பெட்ரோல் போன்ற எரிபொருட்களை எதிர்பார்க்காது என்பது சந்தோஷம் தரும் தகவல்!

    -பால் பற்றிய தகவல் உபயோகமானது. பொங்கியவுடன் அணைத்தே பழக்கம்!

    -ஆச்சர்ய முத்து அருமை. கரப்பான் பொறாமை கொள்ள வைக்கிறது!

    ReplyDelete
  6. எல்லாமே நல் முத்துக்கள்

    ReplyDelete
  7. அத்தனை முத்துகளும் அருமை. அதிலும் “மிக்க நன்றி” தொடங்கி “நானே பொறுப்பு” வரையிலான ஒன்பதும் மிக மிக அருமை.

    ReplyDelete
  8. அருமையான பதிவு!

    ஒரு சந்தேகம் !!

    இறால் மீனுக்கு மூளை

    எங்கே இருக்கு?

    ReplyDelete
  9. முத்துக்கள் அருமை...
    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  10. அறிந்து கொள்ள வேண்டிய முத்துக்கள் அருமை சொந்தமே!!!பட இணைப்பு சிறப்பு.சந்திப்போம் சொந்தமே!
    ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

    ReplyDelete
  11. சில மாதங்கள் முன் புற்றுநோய்க்காக ஒரு பதிவு எழுதியபோது, “பெர்ரி” வகைப் பழங்கள் புற்றைத் தடுக்கும் என்று அறிந்தேன். ராஸ்ப்பெர்ரி, ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி எல்லாமே அவசியம் உண்ண வேண்டியவை.

    ஆனால், எனக்கொரு சந்தேகம். இவையெல்லாம் வேலைநாட்டுப் பழங்கள். இந்தியாவில் தோன்றியவை அல்ல. எனில், இந்தியாவிலும் இவற்றிற்கு ஈடான சத்துக்கள் கொண்ட பழங்கள் இரு(ந்திரு)க்குமல்லவா? அவை என்னவாயிருக்கும்?

    ReplyDelete
  12. நல்ல தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  13. mikk nantri!

    nalla thakvalkal!

    thodarnthu varuven!

    ReplyDelete
  14. ஒளிரும் முத்துகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. அறியாத விஷயங்களை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி மேடம்.

    ReplyDelete
  16. இனிய கருத்துரைக்காக, வரலாற்றுச்சுவடுகளுக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  17. அசத்தி விட்டீர்கள் வை.கோபாலகிருஷ்ணன் சார்! என் முத்துக்களை வைத்து அழகிய முத்துமாலையையே கோர்த்து விட்டீர்கள்! அன்பு நன்றி!!

    ReplyDelete
  18. இனிய கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  19. அன்புள்ள சகோதரர் தின்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு!

    இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!
    தங்களின் வலைத்தளத்தை என்னால் திறக்க முடியவில்லை. எப்போதுமே, திறக்க முயலும்போது, internet explorer cannot open this page என்றே வருகிறது.

    ReplyDelete
  20. விரிவான கருத்துரைக்கு மனம் கனிந்த நன்றி ஸ்ரீராம்!
    நானும் ஸ்ட்ராபெரியைப் பற்றிப்படித்த போது ஆச்சரியப்பட்டேன். அவ்வளவாகப் பிடிக்காத பழம் என்றாலும் இப்போது சாப்பிடத் தொடங்கி விட்டேன்!!

    ReplyDelete
  21. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி லக்ஷ்மிம்மா!!

    ReplyDelete
  22. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்! நானும் மிகவும் ரசித்த முத்து அது தான்!!

    ReplyDelete
  23. ராமமூர்த்தி சார், உங்களுக்கு நன்றாகவே சந்தேகம் வருகிறது! இறாலுக்கு மூளை என்று தனியாக எதுவுமில்லை. கொத்தான நரம்பு செல்கள் சேர்ந்து மூளை போன்ற அமைப்பு ஒன்று அதற்கு இருக்கிறது!

    ReplyDelete
  24. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  25. அன்பான கருத்துரைக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றி அதிசயா!!

    ReplyDelete
  26. ஹுஸைனம்மா! புற்று நோயை அழிக்க வல்ல, தடுக்க வல்ல அருமையான விஷயங்கள் நம்மிடமும் இருக்கிறது! கீழே ஒரு லிஸ்டே தந்திருக்கிறேன்!!

    மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது

    சோயா பீன்ஸ் (Soya Beans) உள்ளே உள்ள Isoflavones Genistein என்ற கெமிக்கல் மார்பக புற்று நோய் (Breast cancer), குடல் புற்று நோய் (Colon Cancer) மற்றும் ப்ராஸ்டேட் புற்று நோய் (Prostate Cancer) வரவிடாமல் தடை செய்கிறது.

    கடல் உணவுகள் (Sea Foods), இறைச்சி (Meat) , தானியங்கள் (Grains) , முட்டை (Egg), வெள்ளைப் பூண்டு (garlic) ஆகியவைகளில் உள்ள செலினியம் (Selenium) வயிற்றுப் புற்று நோய் (Gastric Cancer) மற்றும் ப்ராஸ்டேட் புற்று நோய் (Prostate Cancer) வரவிடாது தடை செய்கிறது.

    கீரைகள் (Spinach), பீன்ஸ் (Beans), கொட்டைகள் (Nuts), தீட்டப்படாத தானியங்கள் (Unrefined Grains) வாழைப் பழம் ஆகியவைகளில் உள்ள மக்னீஷியம் (Magnesium) குடல் புற்று நோய் (Colon Cancer) வரவிடாமல் தடை செய்கிறது.

    ஆரஞ்சுப் பழம் (Orange) , பப்பாளிப் பழம் (Papaya), அன்னாசிப் பழம் (Pineapple), செர்ரிப் பழம் (Cherries) ஆகியவைகளில் உள்ள வைட்டமின் சி (Vitamin C) குடல் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது.

    பச்சை வெள்ளைப் பூண்டில் உள்ள (garlic) Allicin என்பதும் Ajoene என்பதும் குடல் புற்று நோய் மற்றும் வயிற்றுப் புற்று நோய்யும் தடை செய்து, புற்று நோய் செல்களை அழிக்க உதவுகிறது.

    கருப்பு திராட்சைப் பழத்தில் உள்ள Reservertatol என்ற Poluphenol புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்கிறது.

    மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    ReplyDelete
  27. பாராட்டுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ராமலக்ஷ்மி!!

    ReplyDelete
  28. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சகோ சீனி!

    ReplyDelete
  29. பாராட்டுக்களுக்கு இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!!

    ReplyDelete
  30. இனிய கருத்துரைக்கும் முதல் வ‌ருகைக்கும் அன்பு நன்றி ராதாராணி!!

    ReplyDelete
  31. ஸ்ட்ராபெர்ரிக்கு இணையாக‌ ந‌ம்மிட‌ம் இவ்வ‌ள‌வு இருக்கிற‌தே!! 'ர‌சித்த‌ முத்து' அனைவ‌ரும் கைக்கொள்ள‌ வேண்டிய‌து.'பாலை உப‌யோகிக்கும் வித‌ம்' ப‌ய‌னுள்ள‌ செய்தி! பொதுவாக‌வே காய்ச்சிய‌ பாலை ம‌றுப‌டி ம‌றுப‌டி சூடு செய்து க‌ல‌க்கும் காபியின் சுவை ம‌ட்டுப்ப‌ட்டுவிடுகிற‌து...

    ReplyDelete