Tuesday, 12 April 2011

பெண் எழுத்து-தொடர் பதிவு



இந்தத் தொடர்பதிவில் பங்கு பெற சகோதரி ஸாதிகா என்னை அழைத்ததற்கு என் இதயங்கனிந்த நன்றி!

எழுத்து என்பது ஆழ்ந்த மன உனர்வுகளின் அருமையான வடிகால். இலக்கியச் செறிவுக்கும் ஆழ்ந்த கருத்துக்களுக்கும் புரட்சிகரமான சிந்தனைகளுக்கும் ஆண் பெண் என்ற‌ வித்தியாசமில்லை தான். ‘ நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்’ கொண்ட ‘ பாரதி ’யின் வழி வந்த பெண்களின் உலகளாவிய பார்வையும் தீக்கனலான சிந்தனைகளும் இன்று அறிவுப்பூர்வமான எழுத்துக்களாய் ஆணுக்கு நிகராய் திக்கெங்கும் புகழ் பரப்புகின்றன! இதிலும் கருத்து பேதமில்லை. ஆனால் நிச்சயம் பெண் எழுத்துக்கும் ஆண் எழுத்துக்கும் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன!

ஒரு பெண், அவள் பெண் என்பதாலேயே அவளின் எழுத்து கண்ணியமாக, மற்றவர்கள் முகம் சுளிக்காத அளவில் தரமான எழுத்தாக இருந்தேயாக வேண்டும். புகழ் பெற்ற எழுத்தாளரான ‘ சாண்டில்யனின்’ எழுத்துக்கள் சிருங்கார ரசம் மிக்கவை. ஒரு பெண்ணால் அப்படி எழுத முடியாது, எழுத மாட்டாள் என்பது தான் நிதர்சனம். அவளைச் சுற்றி நாகரீகம், சமூகக்கட்டுப்பாடு, பண்பாடு என்ற மென்வேலிகள் இருக்கின்றன. அதை அவளால் உடைத்தெறிய முடியும். ஆனால் அவள் அதை உடைக்க விரும்ப மாட்டாள்.



அதற்கு மாறாக தன் தரம் மிக்க எழுத்தால் சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி சுப்ரமணியம், லக்ஷ்மி போன்றவர்கள் 40 வருடங்களுக்கு முன்பே ஜெயித்துக்காட்டியிருக்கிறார்கள். நிகழ்காலத்தில் சிவசங்கரி, அனுராதா ரமணன், வித்யா சுப்ரமணியம் போன்று எத்தனையோ பெண்கள் இன்று தங்களின் வித்தியாசமான எழுத்தால், வித்தியாசமான சிந்தனைகளால் புகழும் பெயரும் அடைந்திருக்கிறார்கள். முக்கிய‌மாக‌, எழுத்தாள‌ர் சிவ‌ச‌ங்க‌ரி கான்ஸ‌ர், போதைப்பொருள்க‌ளினால் ஏற்ப‌டும் சீர‌ழிவு இப்ப‌டி ப‌ல‌ ச‌மூக‌ அவ‌ல‌ங்க‌ள், வியாதிக‌ள் இவ‌ற்றை நிலைக்க‌ள‌ன்களாக‌‌க் கொன்டு ஆராய்ச்சிக‌ள் செய்து நாவ‌ல்க‌ளைப் ப‌டைத்து புக‌ழடைந்திருக்கிறார். திருமதி.விதயா சுப்ரமணியம் தனது 'உப்புக்கணக்கு' நாவலில் தேச பக்தியை நிலைக்களனாக வைத்து அன்பு என்னும் வலைகளை அதைச் சுற்றி பின்னியிருப்பார். இவர்களெல்லாம் இப்படி புகழடைந்ததற்கான அடிப்படை வேர்கள் எந்த எழுத்தில் ஆரம்பமானது என்கிறீர்கள்? குடும்ப உறவு, அன்பு, பாசம் இவற்றின் அடிப்படையில்தான்.

அதைப்பற்றித்தான் இங்கே சொல்ல வருகின்றேன். ஒரு வீடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்ற புகப்பெற்ற‌ ஒரு வாக்குண்டு. இன்றைக்கு நாடு முழுவதும் மன முறிவுகளும் சிதைவுகளும் விவாகரத்து வழக்குகளும் பரவிக்கிடக்கின்றன. குடும்ப உறவின் அடி நாதங்களான பிரியம், பாசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்றவை மெல்ல மெல்ல மறைந்து வருவதுதான் இவற்றுக்கெல்லாம் காரணம். இதற்கு தார்மீகப்பொறுப்பேற்க வேன்டியவர்கள் பெண்கள்தான் என்பேன் நான். மெல்லிய மயில் தோகை போல மென்மையானவள் பெண். குடும்பப்பொறுப்புகளை ஏற்று, அவள் அடையும் அனுபவங்கள் அவளுக்கு யானை பலத்தைத் தருகின்றன. அவளுக்கு அன்பையும் குடும்ப உறவின் நன்மைகளையும் பொறுப்புணர்வையும் சொல்லிக்கொடுக்க வேன்டிய பொறுப்பு இருக்கிறது. அவளின் எழுத்தில் முதல் நிலைக்களனாக இவையெல்லாம்தான் இருக்க வேண்டும். அதற்குப்பிறகு காற்றைச் சாடி, தீயாய் தகித்து, ஆகாய‌மாய் உயர்ந்திருக்க அவள் எழுத்திற்கு எத்தனையோ நிலைக்களன்கள் இருக்கின்றன! ஆனால் அடிப்படை வேரான அன்பிலிருந்தும் குடும்ப உறவிலிருந்தும்தான் அவள் எழுத்து ஆரம்பிக்க வேன்டும். அந்த எழுத்து பல இதயங்களை சுத்திகரிக்க வேன்டும். அதனால் நாடு நலம் பெற வேண்டும்.

பழம்பெரும் பெண் புலவர் ஒளவையார் தனது தனிப்பாடலில்

" பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம்‍ சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே- யாமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்"

என்று கூறியிருப்பதை நான் அடிக்கடி நினைத்து ஆச்சரியப்பட்டதுண்டு. ஒரு பெண்னே, 'உன் மனைவி சற்று ஏறுமாறாக இருந்தால் கூறாமல் சந்நியாசம் கொள்' என்று ஆண்களுக்குக் கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு அந்தக்காலத்தில் பெண்களுக்கான நெறி முறைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. இப்போது காலம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. ஆணுக்கு நிகரான சம உரிமை வந்து விட்டது. படிப்பில், அலுவலகங்களில், சாதனைகளில் இப்படி பல விஷயங்களில் பெண் உயர்ந்து நிற்கிறாள். ஆனால் காலச்சுழற்சியில் காணாமல் போனதென்னவோ திருமண உறவுகளும் கூட்டுக்குடும்பங்களும்தான்!

இதற்கு அடிப்படைக்காரணங்களான அன்பையும் பாசத்தையும் குடும்ப உறவுகளுக்கான வேர்களான விட்டுக்கொடுத்தல், பொறுப்புணர்ச்சி, பொறுமை இவற்றையும் முழுமையாக உயிர்த்தெழுக்கசெய்வதுதான் பெண் எழுத்தின் அடி நாதமாக இருக்க வேண்டும். வள‌‌ரும் குருத்துக்க‌ளும் செழித்து வளர்ந்திருக்கும் இளைய தலைமுறையும் இதனால் பயன் பெற வேன்டும். முதியோர் இல்லங்கள் மறைய வேன்டும்.

இந்த அடி நாதங்களைத்தான் ஆதார சுருதிகளாக தன் புதினங்களில் எப்போதும் எழுதி வருகிறார் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்! அதற்காக சக பதிவர் என்ற முறையிலும் அவரின் சினேகிதி என்ற முறையிலும் அவருக்கு இங்கே நன்றி கூறுகிறேன்!

இந்தத் தொடர் பதிவில் பங்கேற்க

அன்பிற்குரிய‌


எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்,
எப்போதும் அன்பையும் உண்மையும் தன் எழுத்தில் கொண்டு வரும் 'கற்ற‌லும் கேட்டலும்' ராஜி,
தன் கவிதைகளாலும் இலக்கிய சிந்தைனைகளாலும் எப்போதும் அசத்தி வரும் 'முத்துச்சரம்' ராமலக்ஷ்மி,

இவ‌ர்க‌ளை அன்புட‌ன் அழைக்கிறேன்!



நன்றி: கூகிள்

36 comments:

  1. மிகத் தரமான பதிவு
    தாங்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டதன்
    அர்த்தம் பதிவில் பிரதிபலிக்கிறது
    நல்ல பதிவு
    தொடர்ந்து பதிவு தர வேண்டி
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. அருமையா எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  3. தார்மீகப்பொறுப்பேற்க வேன்டியவர்கள் பெண்கள்தான் //நிதர்சனமான உண்மை. கருத்தை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  4. உங்கள் பெண் எழுத்தை அருமையாக, ஆக்கப்பூர்வமாய் பதிவு செய்துள்ளீர்கள்.

    ReplyDelete
  5. அருமையாக எழுதி இருக்கின்றிங்க...மனோ ஆன்டி...

    ReplyDelete
  6. //அடிப்படைக்காரணங்களான அன்பையும் பாசத்தையும் குடும்ப உறவுகளுக்கான வேர்களான விட்டுக்கொடுத்தல், பொறுப்புணர்ச்சி, பொறுமை இவற்றையும் முழுமையாக உயிர்த்தெழுக்கசெய்வதுதான் பெண் எழுத்தின் அடி நாதமாக இருக்க வேண்டும்.//

    வெகு அழகாகச்சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    தொடர்பதிவுக்குத் தாங்கள் அழைத்துள்ள மூன்று முத்துக்களின் முத்தான பதிவுகளையும் படிக்க மிகுந்த ஆவலுடன் உள்ளோம்.

    ReplyDelete
  7. மனோ எனது எழுத்து மீதும் உப்புக் கணக்கு புதினம் மீதும் தாங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு மிக்க நன்றி. பதிவுகளில் பல புத்தகங்கள் பலரால் விமர்சிக்கப் படுகின்றன. உப்புக் கணக்கு பற்றி ஒருவர் கூட எழுதவில்லையே என்ற குறை இருந்தது. அது பற்றி சில வரிகளாவது தாங்கள் எழுதியிருப்பது அந்த குறையை தீர்த்து விட்டது. நிச்சயம் இந்த தொடர் பதிவில் நானும் கலந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  8. இந்த அடி நாதங்களைத்தான் ஆதார சுருதிகளாக தன் புதினங்களில் எப்போதும் எழுதி வருகிறார் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்! அதற்காக சக பதிவர் என்ற முறையிலும் அவரின் சினேகிதி என்ற முறையிலும் அவருக்கு இங்கே நன்றி கூறுகிறேன்!


    ...... She is a wonderful person. :-)

    ReplyDelete
  9. மனோ அக்கா மிக அருமையான பகிர்வு.தொடர்ந்து எழுதுபவர்களுக்கு வாழ்த்துக்கள்.வித்யா சுப்ரமணியத்தின் எழுத்துக்களை வாசிக்க வேண்டும்.

    ReplyDelete
  10. ஒரு குடும்பம் சிதறாமல் இருக்க தார்மீகப் பொறுப்பு பெண்களுக்கு என்பதை ஏற்கிறேன். ஆண்களுக்கில்லையா என்றால் இருக்கிறது. ஆனால் வீட்டில் உள்ளவர்களையும் இருபக்க உறவுகளையும் குறைநிறைகள் தாண்டி அரவணைத்துக் கொண்டு செல்வது எப்போதும் பெண்கள் தான். இன்றைக்கு குடும்ப உறவுகள் பல இடங்களில் சிதறிக் கிடப்பதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பெண்களே காரணம்.

    ReplyDelete
  11. நல்ல கருத்தை அழகா சொல்லிருக்கீங்க...

    ReplyDelete
  12. அருமையாய் விளக்கி இருக்கிறீகள் மனோ மேடம்
    கட்டாயம் தொடர்கிறேன்.அழைப்பிற்கு நன்றி

    ReplyDelete
  13. @வித்யா சுப்ரமணியம்

    பதிவுலகிற்கு வந்த புதிதில் தங்கள் "உப்புக் கணக்கு"
    புதினத்தைப் பற்றி ஒரு பதிவு போடலாமா என்ற எண்ணம்
    எழுந்தது.ஆனால் ஒரு பெரிய எழுத்தாளர் எழுதிய
    ஒரு பொக்கிஷத்தைப் பற்றி எழுதும் அளவிற்கு நான் வளரவில்லை
    என்ற எண்ணாமும் உடனே தோன்றி விட்டதால் அப்பொழுதே
    அதை கைவிட்டுவிட்டேன்

    ReplyDelete
  14. நன்றியக்கா.ஆக்கப்பூர்வமான பகிர்வு.

    ReplyDelete
  15. தங்களது பெண் எழுத்தால் கட்டிப் போட்டுவிட்டீர்கள். திருமதி.வித்யா சுப்ரமணியம் அவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  16. அழைத்த அன்புக்கு மிக்க நன்றி மனோ சாமிநாதன். பலரும் நான் நினைத்த கருத்துக்களை எழுதி முடித்து விட்டிருக்க, " சமீபமாக இணையத்தில் பெண் எழுத்தைப் பற்றி தொடர் சங்கலியாகப் பலரும் எழுதி வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், பெண் எழுத்து பேசப்படவேண்டும் பலராலும் அறியப்படவேண்டும் எனும் ஆசையிலும் அக்கறையிலும்" என்று குறிப்பிட்டு ஷைலஜா அவர்களின் எழுத்தை முன் உதாரணமாக வைத்துள்ளேன் இங்கு: http://tamilamudam.blogspot.com/2011/03/blog-post_28.html !

    ReplyDelete
  17. தங்கள் பார்வையில் பெண் எழுத்தைப் பற்றி சிறப்பாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

    ReplyDelete
  18. //ஒரு பெண், அவள் பெண் என்பதாலேயே அவளின் எழுத்து கண்ணியமாக, மற்றவர்கள் முகம் சுளிக்காத அளவில் தரமான எழுத்தாக இருந்தேயாக வேண்டும்.//

    நிச்சயமாக. ஏன், நாங்கள் எழுதக்கூடாதா என்று சவாலிட்டு சில பெண்களும் அனர்த்தமாக எழுதுவது மெய்சிலிர்க்க வைக்கவில்லை; அருவெறுப்பைத்தான் தருகிறது.

    ReplyDelete
  19. எழுத்தாளர் ரமணி சந்திரனை விட்டுவிட்டீர்களே. பெண்கள் பலரை கவர்ந்த எழுத்து அவருடையது.
    நீங்கள் குறிப்பிடும் தடைகளை உடைத்தும் சிலர் எழுதுகிறார்கள். லீனா மணிமேகலை என்பவர் அதில் ஒருவர்.

    மிக அருமையான பகிர்வு.

    ReplyDelete
  20. அன்பான வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  21. பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் நாஞ்சில் மனோ!

    ReplyDelete
  22. அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  23. இனிய பாராட்டிற்கு இதயப்பூர்வமான நன்றி சகோதரர் தமிழ் உதயம்!

    ReplyDelete
  24. இனிய பாராட்டுக்கு அன்பான நன்றி கீதா!

    ReplyDelete
  25. இனிய பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ண‌ன்!!

    ReplyDelete
  26. அன்பு வித்யா!

    கருத்துக்கும் விரைவில் இந்தத் தலைப்பில் எழுதவிருப்பதற்கும் என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  27. அன்பு சித்ரா!

    கருத்துக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  28. அன்பு ராஜி!

    பாராட்டிற்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  29. அன்பு ஸாதிகா!

    கருத்துக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  30. உங்களின் அன்பான பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி ஜிஜி!!

    ReplyDelete
  31. அன்பான கருத்துக்கு இனிய நன்றி ராம‌லக்ஷ்மி!!

    ReplyDelete
  32. இனிய கருத்துக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!

    ReplyDelete
  33. கருத்துக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் சிவகுமாரன்!

    என்னை மிகவும் பாதித்த சில எழுத்தாளர்களைப்பற்றி மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன். கல்கி, ஜெயகாந்தன், ரமணி சந்திரன், சூடாமணி, அகிலன் என்று தரமான எழுத்தாளர்கள் நிறையவே நம் தமிழ் எழுத்துலகில் இருக்கிறார்கள்!

    ReplyDelete
  34. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  35. "ஒரு குடும்பம் சிதறாமல் இருக்க தார்மீகப் பொறுப்பு பெண்களுக்கு என்பதை ஏற்கிறேன். ஆண்களுக்கில்லையா என்றால் இருக்கிறது. ஆனால் வீட்டில் உள்ளவர்களையும் இருபக்க உறவுகளையும் குறைநிறைகள் தாண்டி அரவணைத்துக் கொண்டு செல்வது எப்போதும் பெண்கள் தான். இன்றைக்கு குடும்ப உறவுகள் பல இடங்களில் சிதறிக் கிடப்பதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பெண்களே காரணம்."

    உண்மைதான். குடும்ப உறவுகளில் பெண்களுக்குத்தான் நிறைய பொறுப்புகள் இருக்கின்றன.அதே சமயத்தில் பெண்ணின் மன வலிகளையும் சுமைகளையும் பகிரவோ, அல்லது புரிந்து கொள்ளாமலோ பல காரண‌ங்களால் விலகி நிற்கும் ஆண்களினாலும்கூட குடும்ப உறவுகள் சிதைந்து போகத்தானே செய்கின்றன!!

    ReplyDelete
  36. இண்ட்லியில் என் பதிவில் இணைந்து ஓட்டளித்த அன்புத் தோழமைகள்
    Venkatnagaraj, Nanjilmano, KarthikVK, Sriramanthaguruji, Chithra, Bsr, RDX, MVRS, Boopathee, Jegadheesh, Vilambi, Janavin, Kosu, Ganpath, VGopi, Swasam, Easylife, Bhavaan, Sidhu

    அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!!

    ReplyDelete