Wednesday, 6 April 2011

அனுபவங்களே முத்துக்களாய்.. .. ..!!!

நம் வாழ்க்கை, தினந்தோறும் சோகம், மகிழ்வு, அதிர்ச்சி, கசப்பு, -இப்படி பல உணர்வுகளை அள்ளித்தெளித்து, அனுபவங்களால் நம்மை முதிர்ச்சியடைய வைக்கிறது. இலைகளினூடே ஒளிரும் ஒளிக்கற்றைகள் போல், நெடுகச் செல்லும் இந்த அனுபவங்களிடையே சில கவிதைகள், கதைகள், சில அசத்தும் சம்பவங்கள், கொஞ்ச நேரம் நம்மை நிற்க வைத்து புன்னகைக்கச் செய்கின்றன, ரசிக்கச் செய்கின்றன!! நம்மை யோசிக்க வைக்கின்றன!!


சமீபத்தில் ரசித்த கவிதை இது. வாழ்க்கையின் நிதர்சனமும்கூட. ஒரு வாரமலரில் வெளி வந்திருந்தது.



'அச்சம் தவிர்' என்கிறான் பாரதி

'பயந்து நட' என்கிறார் அப்பா!

'துணிந்து நில் என்கிறான் பாரதி

'பணிந்து நட' என்கிறாள் அம்மா!

'ரவுத்திரம் பழகு' என்கிறான் பாரதி

கோபம் குறை என்கிறான் அண்ணன்!

'சிறுமை கண்டு பொங்குவாய்' என்கிறான் பாரதி

'நமக்கேன் வம்பு, கண்டு கொள்ளாதே' என்கிறார் கணவர்!

'நாடாளச் சொல்கிறான்' பாரதி.

'வீட்டுக்குள் ஒடுங்கச் சொல்கிறார்' மாமியார்!

'பெண்மையைப்போற்றுவோம்' என்கிறான் பாரதி.

தூற்றத் துடிதுடிக்கிறது ஊர்!

சகல் விஷயங்களிலும்

உதைபடும் பந்தாய்

அலைக்கழிக்கப்படுகிறேன் நான்!

யார் சொல்வதைக் கேட்பதாம்?

***************************************

இதுவும் கூட நான் பொக்கிஷமாக என் டைரியில் பல வருடங்களாகப் பாதுகாத்து வரும் ஒரு ஆங்கிலக் கவிதை. தமிழாக்கம் செய்திருக்கிறேன். இதுவும் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்த்தும் கவிதை! அது மட்டுமல்ல, இது ஒரு வழிகாட்டியும்கூட.. .. ..

இனி கவிதை .. ,, .. ..

“எல்லோருக்குமே நம் வாழ்வில் முன் வரிசையில் இடம் தந்து விட முடியாது.

சிலர் மட்டும் தூரத்தில் வைத்தே அன்பு செய்யப்பட வேண்டியவர்கள்.

மாறுபட்ட, கருத்திற்கு ஒவ்வாத, விரும்பத்தகாத உறவுகளை இதுபோல தூரத்தில் வைக்கும்போது, இந்தச் செயல் எந்த அளவு நம் வாழ்க்கையை மாற்றுகிறது என்பது பிரமிப்பளிக்கக்கூடிய விஷயம்!

உங்களைச்சுற்றி இருக்கும் உறவுகளை கூர்ந்து கவனியுங்கள்.

எந்த உறவு உங்களை மேல் நிறுத்துகிறது?

எந்த உறவு உங்களைக் கீழே தள்ளுகிறது?

எந்த உறவு உங்களை ஊக்குவிக்கிறது?

எந்த உறவு உங்களை அதைரியப்படுத்துகிறது?

தரம், வளர்ச்சி, அமைதி, அன்பு, உண்மை இவற்றை நீங்கள் தேடத்தேட, யாரை நம் வாழ்க்கையில் முன் வரிசையில் உட்கார வைக்க வேண்டும், யாரை பின் வரிசையில், பால்கனியில் உட்கார வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

தேடலில் கிடைக்கும் வலியை முத்துக்களாக்குங்கள்.



கடந்த காலத்தில், நிகழ்காலத்தில் நிறைய நிகழ்வுகள் உங்களை சோர்வடைய வைத்திருக்கும், வெறுப்படைய வைத்திருக்கும், சிந்தனையைத்தூண்டியிருக்கும், உங்களையே விழுங்கியிருக்கும். இந்த பாதிப்புக்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?

ஒரு வகையான பாதிப்பு, சிப்பியினுள் நுழையும்போது, அது ஒரு திரவத்தை சுரந்து அந்த பாதிப்பை ஒரு போர்வை போல மூடுகிறது. பல மாதங்களுக்குப்பின் இது ஒரு முத்தாக மாறுகிறது.

அது போல ஒரு பாதிப்பு, உங்களுக்குள் நுழையும்போது, அது உங்களையே கரையான் போல அரித்து, பல வித நோய்களை உண்டு பண்ணுகிற அளவு அந்த பாதிப்பிற்கு நீங்கள் இடம் கொடுக்கலாம். அல்லது இந்த பாதிப்பு உங்களை எதுவுமே செய்ய இயலாதவாறு இது போன்ற விலைமதிப்பற்ற ‘முத்துக்கு’ச் சமமான அறிவு முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பெற்று எதிர்காலத்திற்குத் தேவையான நம்பிக்கையையும் புதிய பார்வையையும் பெறலாம்.

எது வேண்டும் உங்களுக்கு?

படங்களுக்கு நன்றி: http://www.tamilvu.org/

                                           http://www.appusami.com/

39 comments:

  1. இந்த கட்டுரையில், வாழ்க்கையை குறித்த பக்குவப்பட்ட புரிதலும், நல்ல தெளிதலும் தெரிகிறது. அருமையான பகிர்வு. நன்றிங்க.

    ReplyDelete
  2. தெளிவை நோக்கிய ஒரு பயணத்தில் இந்த வரிகள் ஏதோ ஒரு வடிவில் நமக்குள்ளே தோன்றும் அல்லது எங்கோ வாசித்துவிடுவோம்.

    பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,
    பிறந்து பார் என இறைவன் பணித்தான்,
    இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,
    இறந்து பார் என இறைவன் பணித்தான்,
    மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன்,
    மணந்து பார் என இறைவன் பணித்தான்,
    அனுபவித்தே வாழ்வதுதான் வாழ்க்கை எனில்
    இறைவா நீ எதற்கு என்றேன்.
    இறைவன் என் அருகில் வந்து சற்றே குனிந்து
    அந்த அனுபவமே நானடா என்றான்..

    கவியரசு கண்ணதாசனின் மகத்தான வரிகள் இவை.

    அச்சம் தவிர்ப்பதாக இருந்தாலும் சரி, பணிந்து நடப்பதாக இருந்தாலும் சரி. இரண்டையுமே செய்து பாருங்கள்.
    ரௌத்திரம் பழகுவதாக இருந்தாலும், கோபத்தைக் குறைப்பதாக இருந்தாலும் இரண்டையுமே செய்து பாருங்கள்.
    அனுபவங்கள் சொல்லித் தரும், உங்களுக்கு ரௌத்திரம் ஒத்து வருமா, கோபத்தை அடக்குவது ஒத்துவருமா என்று.

    Cheers!

    ReplyDelete
  3. முதலாவதை விட இரண்டாவது முத்து சற்று அதிகமாக ஒளி வீசுகிறது.
    வாழ்க்கைக்கு அவசியமான அனுபவ முத்துக்கள்.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  4. பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சித்ரா!

    ReplyDelete
  5. மிகவும் அருமையா சொல்லி ருக்கீங்க.

    ReplyDelete
  6. எந்த உறவு நம்மை எதற்கு பயன்படுத்துகிறது...
    மிக மிக அருமையான ஆக்கம்.

    ReplyDelete
  7. //இந்த பாதிப்பு உங்களை எதுவுமே செய்ய இயலாதவாறு இது போன்ற விலைமதிப்பற்ற ‘முத்துக்கு’ச் சமமான அறிவு முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பெற்று எதிர்காலத்திற்குத் தேவையான நம்பிக்கையையும் புதிய பார்வையையும் பெறலாம்.//

    இதுவே
    ”முத்தான முத்தல்லவா.....
    முதிர்ந்து வந்த முத்தல்லவா...”
    என்று இருப்பதனால்,
    வாழ்வியலைப்புரிந்து கொள்ள
    எனக்கு இதுவே வேண்டும்.

    மிகவும் ரசித்த வரிகள்:


    //தரம், வளர்ச்சி, அமைதி, அன்பு, உண்மை இவற்றை நீங்கள் தேடத்தேட, யாரை நம் வாழ்க்கையில் முன் வரிசையில் உட்கார வைக்க வேண்டும், யாரை பின் வரிசையில், பால்கனியில் உட்கார வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

    தேடலில் கிடைக்கும் வலியை முத்துக்களாக்குங்கள்.//

    தங்களின் அனுபவ முத்துக்களைக்கண்டு களித்த, பிரியமுள்ள vgk

    ReplyDelete
  8. இரண்டு கவிதையும் சிறிது யோசிக்க வைத்தது,நல்ல பகிர்வு..

    ReplyDelete
  9. ///அச்சம் தவிர்' என்கிறான் பாரதி

    'பயந்து நட' என்கிறார் அப்பா!

    'துணிந்து நில் என்கிறான் பாரதி

    'பணிந்து நட' என்கிறாள் அம்மா!

    'ரவுத்திரம் பழகு' என்கிறான் பாரதி

    கோபம் குறை என்கிறான் அண்ணன்!

    'சிறுமை கண்டு பொங்குவாய்' என்கிறான் பாரதி

    'நமக்கேன் வம்பு, கண்டு கொள்ளாதே' என்கிறார் கணவர்!

    'நாடாளச் சொல்கிறான்' பாரதி.

    'வீட்டுக்குள் ஒடுங்கச் சொல்கிறார்' மாமியார்!

    'பெண்மையைப்போற்றுவோம்' என்கிறான் பாரதி.

    தூற்றத் துடிதுடிக்கிறது ஊர்!

    சகல் விஷயங்களிலும்

    உதைபடும் பந்தாய்

    அலைக்கழிக்கப்படுகிறேன் நான்!

    யார் சொல்வதைக் கேட்பதாம்?//

    யோசிக்க வேண்டி இருக்கே....

    ReplyDelete
  10. இரண்டு கவிதைகளுமே அற்புதமாக இருந்தது. எடுத்துச் சொன்ன தங்களுக்கு நன்றிமா.

    ReplyDelete
  11. கவிதை ரொம்ப அருமையாக இருக்கு...நினைவு வைத்து எங்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி...

    ReplyDelete
  12. சற்றே மனச் சோர்வோடு இருந்தேன். தங்கள் பதிவு யோசிக்க வைத்தது. நன்றி.

    ReplyDelete
  13. இரண்டுமே நல்ல கவிதைகள்! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி அம்மா!!

    ReplyDelete
  15. முதல் வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் செல்வகுமார்!
    க‌விஞ‌ர் க‌ண்ண‌தாச‌னின் புக‌ழ் பெற்ற‌ வ‌ரிக‌ளை ம‌றுப‌டியும் உங்க‌ள் மூல‌மாக‌ த‌ரிசிக்கிறேன்.
    உங்க‌ளின் க‌ருத்துக்க‌ளுட‌ன் நானும் ஒத்துப்போகிறேன்.
    ரெள‌த்திர‌மும் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் அவ‌சிய‌மாகிற‌து. க‌ருணையும் அன்பும் கூடிப்போகும்போது அங்கே ரெள‌த்திர‌ம் அட‌ங்கிப்போகிற‌து. வாழ்விய‌லின் எல்லா உண‌ர்வுகளுக்கும் அர்த்தங்கள் இருக்கின்றன! அனுபவங்களை மிஞ்சிய பாடங்கள் ஏதுமில்லை.

    ReplyDelete
  16. அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றி ராஜி!

    ReplyDelete
  17. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!

    ReplyDelete
  18. இனிய பாராட்டிற்கு மகிழ்வான நன்றி சகோதரர் தமிழ் உதயம்!

    ReplyDelete
  19. மனமார்ந்த பாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

    ReplyDelete
  20. வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்த்தும் கவிதை! அது மட்டுமல்ல, இது ஒரு வழிகாட்டியும்கூட.. .. ..//
    ஒளி வீசும் அனுபவ முத்துக்கள்.பாராட்டுக்கள் பகிர்வுக்கு.

    ReplyDelete
  21. பாராட்டுக்கு அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  22. கருத்துக்கு அன்பு நன்றி நாஞ்சில் மனோ!

    ReplyDelete
  23. பாராட்டுக்கு அன்பு நன்றி அமைதிச்சாரல்!!

    ReplyDelete
  24. முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் குணசீலன்!

    ReplyDelete
  25. அன்பான கருத்துக்கு இனிய நன்றி ஆதி!

    ReplyDelete
  26. பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி கீதா!

    ReplyDelete
  27. உங்களின் மனச்சோர்வை அகற்றி, யோசிக்க வைத்த பதிவை வெளியிட்டதற்காக நானும் மகிழ்ச்சி அடைகிறேன் வித்யா! கருத்துக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  28. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  29. கருத்திற்கு அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  30. பாராட்டுக்களுக்கும் முதல் வருகைக்கும் அன்பான நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  31. நல்ல பகிர்வு.. madam.

    ReplyDelete
  32. //அது போல ஒரு பாதிப்பு, உங்களுக்குள் நுழையும்போது, அது உங்களையே கரையான் போல அரித்து, பல வித நோய்களை உண்டு பண்ணுகிற அளவு அந்த பாதிப்பிற்கு நீங்கள் இடம் கொடுக்கலாம். அல்லது இந்த பாதிப்பு உங்களை எதுவுமே செய்ய இயலாதவாறு இது போன்ற விலைமதிப்பற்ற ‘முத்துக்கு’ச் சமமான அறிவு முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பெற்று எதிர்காலத்திற்குத் தேவையான நம்பிக்கையையும் புதிய பார்வையையும் பெறலாம்.//

    - உண்மைதான்....நிகழ்வன அனைத்தையும் அனுபவமாகக் கொள்ளாமல், அது தந்த படிப்பினையை அனுபவமாகக் கொண்டு வாழத்தலைப்படுகையில் புதிய பார்வை தென்படுவது சாத்தியமே.. மிக நல்ல பகிர்வு..

    ReplyDelete
  33. இரண்டு கவிதைகளும் சூப்பர். நல்ல பதிவு.

    ReplyDelete
  34. இப்பகிர்வில் தங்களை இண்ட்லியில் இணைத்து அன்புடன் ஓட்டுமளித்த இனிய தோழமைகள்
    karthikVK, Chithra, Ramalakshmi, Anand15, Olm1971, sriramanandhaguruji, Vai.Gopalakrishnan, hihi12, jolleyjegan, Tamilz, bsr, idukaimaan, kiruban, vadivelan, Mounakavi, nanban, rajesh, Jntube, rootoutcongress, Vimalind, Aadhi, vnekatnagaraj, geetha
    அனைவருக்கும் அன்பு நன்றி!!‌

    ReplyDelete
  35. அன்பான கருத்துக்களுக்கு இனிய நன்றி சகோதரர் லக்ஷ்மி நாராயணன்!

    ReplyDelete
  36. பாராட்டிற்கு அன்பு நன்றி விஜி!

    ReplyDelete
  37. அன்பான பாராட்டிற்கு மகிழ்வான நன்றி கீதா6!

    ReplyDelete